Originally Posted by
sivajidhasan
திரு. பம்மலார் அவர்களுக்கு,
"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!
நட்புடன்!