Originally Posted by
KCSHEKAR
டியர் ஆனந்த்,
தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.