Quote:
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மை தான் புலப்படுகிறது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்களடைய பெருந்தன்மை அல்ல. நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம்.