-
6th January 2013, 10:59 AM
#2681
Junior Member
Newbie Hubber
இரும்பு திரை-1960 -பகுதி-3
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , சுமாரான வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரிசித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
(முற்றும்)
Last edited by Gopal.s; 6th January 2013 at 12:39 PM.
-
6th January 2013 10:59 AM
# ADS
Circuit advertisement
-
6th January 2013, 12:03 PM
#2682
Junior Member
Devoted Hubber
[QUOTE=Gopal,S.;996315]இரும்பு திரை- 1960- பகுதி-2
இரும்பு திரை- 1960- பகுதி-2
யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
நிச்சயமாக .
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)
ஆஹ்! இது நல்ல கோணம். அம்பிகாபதி, புதியபறவை சரி. ஆனால் தில்லானா மோகனாம்பாள்?? ம்ம்ம்.... யோசிக்கவேண்டிய விடயம். there are many pluses and minuses. இதை ஒரு தனியான பதிவாகவே இடலாம் போல!! :
அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
நான் அண்மையில் தான் இந்தப்படத்தைப்பார்த்தேன். உடனே "ஏன் சிவாஜி -வைஜயந்தியை வைத்து இன்னும் பல படங்கள் எடுக்கவில்லை என்று தோன்றியது. ஆனால் ஒரு slight defect. வைஜயந்தி ஏனைய சிவாஜி ஜோடிகளையும் விட உயரம். படத்தில் சில இடங்களில் சிவாஜியின் உயரத்திற்கு தெரிவார். ஆனால் புதிய பறவையில் அவரைப்போட்டிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். சரோவின் over make up ஐ பார்த்திருக்கத் தேவையில்லை.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
(தொடரும்)
சகோதரர் கோபால்! உங்கள் பதிவு மிகவும் அருமை. அடுத்த
தொடரை எதிர்பார்க்கிறேன். .
Last edited by Vankv; 6th January 2013 at 12:08 PM.
-
6th January 2013, 12:13 PM
#2683
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள்.
மற்ற வருடங்களில் அவர் படங்கள் தரமற்ற படங்களா...
யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம்.
புதிய மந்தையில் பழைய கள்ளு என்பது போல்... தங்கள் கருத்தை இங்கு திணிக்கிறீர்கள். நடிப்பு என்பதே செயற்கை.. இதில் யதார்த்த நடிப்பு என்று தனியாக உள்ளதா... மற்ற காலங்களில் அவர் நடிப்பில் யதார்த்தம் இல்லையா... மற்றவர்கள் சொல்லும் ஓவர் ஆக்டிங் குற்றச் சாட்டையே தாங்களும் மறைமுகமாக சொல்கிறீர்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th January 2013, 12:14 PM
#2684
Senior Member
Devoted Hubber
Parasakthi vaira vizavukku vazthukal
NT rasiga ithayangalukku, iniya puthandu vazthukal
-
6th January 2013, 12:15 PM
#2685
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் ஆனந்த்,
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்
படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...
தொடரும்...
கரும்பு தின்ன கூலியா ராகவேந்தர சார். தொடருங்கள். அணு அணுவாக ரசித்தேன்.ரசிக்கிறேன். ரசிப்பேன்.
-
6th January 2013, 12:24 PM
#2686
Senior Member
Seasoned Hubber
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மை தான் புலப்படுகிறது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்களடைய பெருந்தன்மை அல்ல. நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம்.
Last edited by RAGHAVENDRA; 6th January 2013 at 12:27 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th January 2013, 12:29 PM
#2687
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மையும் கலந்துள்ளது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்கள் பெருந்தன்மை அங்கே இரண்டாம் பட்சம் தான். நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தசம் தந்தவர் நடிகர் திலகம்.
சிவாஜி என்ற மகாசக்தி இன்றி படங்களை தயாரிக்கமுடியாமல் அவர்கள் எப்போதாவது ஒருநாள் சிவாஜியிடம் வந்து தானிருக்கவேண்டும். அவர்கள் வராததனால் சிவாஜிக்கு நட்டமிருந்திருக்காது. அதை உணர்ந்ததனால்தான் சிவாஜியைப் போற்றியிருக்கிறார்கள்.
-
6th January 2013, 12:31 PM
#2688
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மற்ற வருடங்களில் அவர் படங்கள் தரமற்ற படங்களா...
புதிய மந்தையில் பழைய கள்ளு என்பது போல்... தங்கள் கருத்தை இங்கு திணிக்கிறீர்கள். நடிப்பு என்பதே செயற்கை.. இதில் யதார்த்த நடிப்பு என்று தனியாக உள்ளதா... மற்ற காலங்களில் அவர் நடிப்பில் யதார்த்தம் இல்லையா... மற்றவர்கள் சொல்லும் ஓவர் ஆக்டிங் குற்றச் சாட்டையே தாங்களும் மறைமுகமாக சொல்கிறீர்கள்...
ராகவேந்திரா சார்,
எல்லா பிறவி மேதைகளும்,தாங்கள் பண்ணியதையே, திரும்ப திரும்ப செய்ய விரும்ப மாட்டார்கள். இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் சிவாஜி, ஏ .ஆர்.ரகுமான்,போன்றோர். சிவாஜியின் நடிப்பு, 1952 முதல்- 1960 வரை (அன்னையின் ஆணை விதிவிலக்கு) யதார்த்த நடிப்பின் பாற்பட்டும் , 1961 முதல் 1968 வரை stylised method -acting பாணியிலும்(k T , I U ,M S P ,T M விதிவிலக்கு), 1969 முதல் 1974 வரை தானே வகுத்து கொண்ட ஈர்ப்பு அதிகம் மிகுந்த சிவாஜி school என்று சொல்ல தக்க பாணியிலும் நடித்துள்ளார்.
அத்தனை பாணியிலும் சிறந்த படங்கள்,மிக சிறந்த படங்கள், மிக மிக சிறந்த படங்களை கொடுத்துள்ளார். தலைவரின் சிறப்பே அதுதானே?
உங்களுக்கு இனி,அடங்கியே ,பதிலுரைப்பேன். நீங்கள் எவ்வளவுதான் ,என்னை இகழ்ந்த போதும் . நான் இனி ரியாக்ட் செய்து,இந்த திரியின் ஒற்றுமையை குலைக்க மாட்டேன். இதை விட்டு அகலவும் மாட்டேன். underplay -natural acting - exaggerated over -play மூன்றிலும் சிவாஜியை மிஞ்ச பிறந்ததில்லை,பிறக்க போவதில்லை.
-
6th January 2013, 12:36 PM
#2689
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
நான்;
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு ரசிகை
நடிகர் திலகத்தின் style ஆன சண்டைக்காட்சிகளுக்கும் இளமையான காதல் கட்சிகளுக்கும் ரசிகை
நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்புக்கும் ரசிகை
இந்த மூன்றிலுமே அவர்தான் top!
Sister Vanaja,
I am in 1000000000000% agreement with you. Serious acting, youthful romance, songs and graceful execution, Stunt scenes,entertainment quotient - Sivaji tops in all the Dept.
-
6th January 2013, 12:38 PM
#2690
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மற்ற வருடங்களில் அவர் படங்கள் தரமற்ற படங்களா...
புதிய மந்தையில் பழைய கள்ளு என்பது போல்... தங்கள் கருத்தை இங்கு திணிக்கிறீர்கள். நடிப்பு என்பதே செயற்கை.. இதில் யதார்த்த நடிப்பு என்று தனியாக உள்ளதா... மற்ற காலங்களில் அவர் நடிப்பில் யதார்த்தம் இல்லையா... மற்றவர்கள் சொல்லும் ஓவர் ஆக்டிங் குற்றச் சாட்டையே தாங்களும் மறைமுகமாக சொல்கிறீர்கள்...
அப்படி நினைப்பதாகத் தோன்றவில்லை எனக்கு, சகோதரர் ராகவேந்தர். குறிப்பிட்ட படங்கள் வித்தியாசமானவை என்பதையே சகோதரர் கோபால் வலியுறுத்துகிறார். தேர் நேராக ஓடுகிறது, தயவுசெய்து சறுக்க விடவேண்டாம்.
Bookmarks