-
nadippukku goodbye solla irukkiraar lakshmi viswanath.......
thamilil Ezham uyir seriyalilum, malayalathil Nila Vizhakku seriyalilum nadithu varugiraar. MA padithu teacher aavathea avarin latchiyamaam. so indha 2 seriyalum viraivil mudiya pogiradhaam. podhuvaga ,,,,,,,,,,,,,,,,,,,,
http://cinema.dinamalar.com/tamil-tv...uit-cinema.htm
Nandri. Dinamalar.
-
Thamil TVkku varum Priyamani......
Bharathi raja mulam Kangalal kaithu sei padam mulam thamilukku vanthavar.adhan piragu balu mahendra mulam thanushudan athu oru kanakalam padathil nadithaar Priyamani.pinbu malaikottai, thotta pondra niraiya moviesil nadithu tholvi kandathaal THELUNGU,MALAIYALAM, KANNADAM movies-il niraiya nadithu kondirundhaar. thamilil munnukku varamudiyavillai. tharpothu vijay tv-yil king Of dance nigalchiyil naduvaraga varugiraar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Television.htm
Nandri. Dinamalar.
-
Nirvanamaga nadikka kuda thayaar solgiraar saaisakthi.
thanathu pathaavathu vayathil nadika thodangiyavar saisakthi. nadhasvaram,saravarnan meenakshi utpada 60 thodaril nadithavar.
kalaijar tv-yil 63 kalaijarin vasanathil Nayanmaargal thodaril sekilaragavum,ramanujarin Kurathaalvaar keraktarilum nadikiraar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Sai-Sakthi.htm
Nandri.Dinamalar.
-
Prammaandam nam paarambariyathai keduthu vidum nadigai Nalini peatti.
Krishnadhasi thodar mulam chinnathiraikku vandhar.ipodhu seriyalil busyaaga nadithu varugirar.
tharpothu nadithu varum seriyal patri solgiraar. china papa periya papa, thelungil ammana kodana thodarilum nadithu ,,,,,,,,,,,,,
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri. Dinamalar.
-
BEST COMEDIYANAAGA VENDUM NADHASWARAM PUGAZH MUNISHRAJA INTERVIEW.......
http://cinema.dinamalar.com/tamil-tv...unish-raja.htm
NANDRI.DINAMALAR.
-
VAKEEL AAGIRAAR AARTHI.
MakkaTholaikatchiyil china china aasaigal nigalchi mulam pugazh petravar Aarthi.intha nigalchiyai 5 varudamaaga thodarnthu nadithu sadhanai padaithulaar aarthi.......
http://cinema.dinamalar.com/tamil-tv...-as-lawyer.htm
Nandri.Dinamalar.
-
madhumithavukku dhruthi kodutha rolegal
oru kal kannadi padathil santhanathukku jodiyaaga nadithavar.
http://cinema.dinamalar.com/hindi-ne...-Madhumita.htm
Nandri.Dinamalar.
-
kanpaarvai illatha vedathil nadikka veandumchinnathirai nadigar jeyaraam peati.
Vani rani serial mulam prablamaanavar jeyaram. Adhaiyaduthu en iniya thozhi, kealadi kanmani ippadi niraiya serialil nadithu kondirukkum ivar,,,,,,,,
http://cinema.dinamalar.com/hindi-ne...t-in-Blind.htm
Nandri . Dinamalar.
-
நாடகத்துறைதான் என்னை தயார்படுத்தியது! -வின்சென்ட்ராய்
சக்தி, சித்தி, ஆலயம், அர்ச்சனைப்பூக்கள், பைரவி, அழகி, பொம்மலாட்டம் உள்பட பல மெகா சீரியல்களில் நடித்திருப்பவர் வின்சென்ட்ராய். நாடகத் துறையில் இருந்து வந்த இவர், நாடகம்தான் என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது என்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
உங்களது நாடகத்துறை அனுபவத்தைப்பற்றி சொல்லுங்கள்?
நான் சுமார் 300 நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதோடு இந்த மாதிரிதான் என்றில்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அன்றைய தினத்தில் நடிக்க வரவேண்டிய வில்லன் வரமுடியாமல் போனால் அவரது வேடத்தில் நான் நடிப்பேன். அதேபோல் காமெடியன் வரவில்லையென்றால் அந்த ரோலில் நடிப்பேன். இப்படி எந்த வேடம் கிடைத்தாலும் நான் நடித்தேன். அதனால் நாடகத்துறை என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது. பின்னர் சினிமா-சின்னத்திரை என்று நடிக்க வந்தபோதும் இப்படித்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கிடைக்கிற எந்த வேடமாக இருந்தாலும் நடித்து வருகிறேன்.
இதுவரை என்னென்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்கள்?
சூர்யவம்சம் தொடரில் வில்லனாக நடித்தேன். ஆலயம், அர்ச்சனைப்பூக்கள் தொடர்களில் சாப்ட்டான வேடங்களில் நடித்தேன். என்றாலும் அதிகப்படியாக வில்லனாகத்தான் நடித்திருக்கிறேன். மேலும், 40 படங்களில் நடித்து விட்டேன். விஜயகாந்த் நடித்த சத்ரியன், ஏழைஜாதி, கேப்டன் பிரபாகரன் மற்றும் விஜய் நடித்த தமிழன் உள்ளிட்ட படங்களில் இன்ஸ்பெக்டர் மற்றும் அரசியல்வாதி, வக்கீல் வேடங்களில் நடித்தேன். பல சீரியல் மற்றும் சினிமாக்களில் அப்பா வேடங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது அழகி, பொம்மலாட்டம் சீரியல்களில் நடித்து வருவதோடு, 4 பேய் படங்களிலும் நடித்து வருகிறேன். இதையடுத்து ஒரு படம் இயக்கும் வேலைகளிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.
எந்தமாதிரியான கதையில் படம் இயக்குகிறீர்கள்?
1964-ல் அன்னை வேளாங்கண்ணி என்றொரு படம் வந்தது. அதன்பிறகு மாதாவைப்பற்றி எந்த படமும் வரவில்லை. அதனால் பூண்டி மாதா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறேன். இது எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கக்கூடிய கமர்சியல் படமாக இருக்கும். பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
35 வருடங்களாக நடிப்புத்துறையில் இருக்கும் நான் சினிமா, சீரியல்களில் பத்து வருடங்களாக உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். மேலும், மீட் பரின் தாய் என்ற பெயரில் முன்பு ஜெயா டிவிக்காக ஒரு சீரியல் இயக்கினேன். எல்லோருக்கும் கல்வி, எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட பல குறும் படங்களையும் இயக்கியிருக்கிறேன். அதோடு, பிலிப்பைன்ஸ் நாட்டு வானொலியில் நான் எழுதிய 1600 தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பாகியிருக்கிறது. ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு கருத்து சொல்லியிருந்தேன். அதை வீடியோ வடிவில் டெலிபிலிமும் பண்ணினேன்.
இப்படி இயக்கத்தில் எனக்கு பல அனுபவங்கள் உள்ளது.
http://img1.dinamalar.com/cini//CNew...2540000000.jpg
சீரியல் இயக்கும் ஐடியா உள்ளதா?
கண்டிப்பாக, இந்த பூண்டி மாதா படத்தை இயக்கியதும் மெகா சீரியல் இயக்கும் முயற்சியில் இறங்குவேன். அப்படி நான் இயக்கும் சீரியல் கண்டிப்பாக சமுதாயத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லக்கூடியதாக இருக்கும் என்கிறார் நடிகர் வின் சென்ட்ராய்.
-
Quote:
வில்லி வேடத்தில் நடிக்க வெறியாக இருக்கிறேன்!- சீரியல் நடிகை ஜீவிதா பேட்டி
பாசமலர் தொடரில் நான் நடித்து வரும் உமா கேரக்டர், சிந்து பைரவி படத்தில் சுகாசினி நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். நான் ரியல்லயும் அப்படித்தான், ரீல்லயும் அப்படித்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் சின்னத் திரை நடிகை ஜீவிதா.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு நேர்காணல்...
இதுவரை நடித்துள்ள தொடர்கள் பற்றி?
நான் சீரியலுக்கு வந்து 3 வருடங்கள் ஆகப்போகிறது. ஏவிஎம் தயாரித்த மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலில்தான் முதன்முதலாக அறிமுகமானேன். சதாசிவம் இயக்கியிருந்தார். அந்த வகையில், நான் ஏவிஎம்மின் அறிமுகம் என்பது எனக்கு பெருமையான விசயம். அதைத் தொடர்ந்து மீண்டும் ஏவிஎம்மின் வைராக்கியம் தொடரில் பட்டாகத்தி பத்மினி என்ற ரோலில் நடித்தேன். சீரியஸ், பைட், காமெடி எல்லாம் கலந்த வித்தியாசமான ரோல் அது. எனக்குள்ளே யும் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தும் ரோல். பாசிட்டிவான வேடம்தான். அதன்பிறகு ஆபீஸ், தேவதை, பைரவி, 63 நாயன்மார்கள், சித்திரம் பேசுதடி என தொடர்ந்து வந்த நான், இப்போது பாசமலர், கைராசி குடும்பம் ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
பாசிட்டீவ்-நெகடீவ் எந்த மாதிரியான ரோல்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
பாசிட்டிவான வேடங்கள்தான் எனக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. என்னைப்பொறுத்தவரை ஒன்று நெகடீவாகிட வேண்டும், இல்லையேல் பாசிட்டீவாகிவிட வேண்டும். இப்படி முழுசாக மாறி நடிக்கும்போதுதான் அந்த கேரக்டர் பேசப்பட்டு பிரபலமாக முடியும். மேலும், எனக்கு பிடித்த ரோல் என்றால் நெகடீவ்தான். காரணம், நாலு பேர் நம்மை திட்டுகிறார்கள் என்றால்தான் அது ரீச். அழுது கொண்டிருந்தால் அது பெரிய ரீச் கிடையாது. அழுறதை விட அழ வைக்கிறவங்களைத்தான் அதிகமாக நோட்டீஸ் பண்ணுவார்கள். அதனால் எனக்கு வில்லி வேடங்கள் பண்ண வேண்டும் என்பது பெரிய வெறியாக உள்ளது.
அதேபோல் போலீஸ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது கைராசி குடும்பம் தொடரில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடிக்கிறேன். இந்த மாதிரி இன்னும் பெரிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும், எனது உயிர்மூச்சு உள்ளவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
டைரக்டர்களின் பார்வையில் எந்த மாதிரி நடிகையாக இருக்கிறீர்கள்?
என்னை முதலில் பார்க்கும் டைரக்டர்கள் இந்த ரோலுக்கு இந்த பெண் செட்டாவாளா என்று சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் அவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு நான் பூர்த்தி செய்து கொடுத்து விடுவேன். அதனால் என் நடிப்பை பார்த்த பிறகு இந்த ரோலுக்கு ஜீவிதாவை சரியாகத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறோம் என்று பின்பு நினைப்பார்கள்.
உங்கள் நடிப்பில் அதிக ரீச் கொடுத்த வேடம் எது?
எந்த வேடம் கொடுத்தாலும் அதில் நேயர்களின் பாராட்டு கிடைக்கும் வகையில் நான் நடித்து விடுவேன். அதில் எந்த குறையும் வைத்ததில்லை. அந்தவகையில, தற்போது பாசமலர் தொடரில் நான் நடித்து வரும் உமா கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களது நடிப்பைப்பார்த்து விட்டு நாங்களெல்லாம் அழுதோம் என்று என்னை வெளியிடங்களில் பார்க்கும் நேயர்கள் சொல்கிறார்கள். சிந்துபைரவி படத்தில் சுகாசினி மேடம் நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். நான் ரியல்லயும் அப்படித்தான், ரீல்லயும் அப்படித்தான் நடிக்கிறேன். அதனால்தான் இந்த ரோலில் எனது நடிப்பு ரொம்ப இயல்பாக வெளிப்பட்டு நேயர்களை கவர்ந்து வருகிறது.
ஹோம் ஒர்க் பண்ணி நடித்த வேடம் உள்ளதா?
எத்தனை வெயிட்டான வேடமாக இருந்தாலும், அதைப்பற்றி நான் முன்பே யோசிப்பதில்லை. ஸ்பாட்டுக்கு வந்தபோது டைரக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைக்கேட்டு அப்படியே நடிப்பேன். அப்போது என்ன நடிக்கிறேனோ அதுதான். மற்றபடி முன்பே ஐடியா பண்ணிக்கொண்டு வந்து நடிப்பதெல்லாம் என்னிடம் இல்லை.
மேலும், சிவரகசியம் என்ற தொடரில் ஒரு பைத்தியம் போன்ற வேடத்தில் நடித்தேன். பிரம்மை பிடித்தவள் போன்ற கண்களைகூட அசைக்காமல் நடித்தேன். மூச்சு விடுவதைகூட அளவோடு விடுவேன். அதில் நடிக்கத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். மற்றபடி, விளையாட்டு, நடிப்பு, டான்ஸ் என எதுவாக இருந்தாலும் சரி முதலில் நார்மலாக இருக்கும் நான், அதை பண்ணும்போது இதை நான்தான் பண்ண வேண்டும் என்று வெறியாகி விடுவேன். விளையாட போறேன் என்றால் கால், கையில் அடிபடும் என்றெல்லாம் நான் நினைக்க மாட்டேன். அதில் வின் பண்ணுவது மட்டும்தான் எனது நோக்கமாக இருக்கும்.
சின்னவயதில் இருந்தே நான் ரொம்ப பிடிவாதமானவள். தப்போ ரைட்டோ அதை நான் செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பேன். அதேமாதிரி என்னை நம்பி வாய்ப்பு கொடுக்கும் டைரக்டர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்கிற கடமையும் எனக்கு உண்டு. அதை உணர்ந்தே ஒவ்வொரு வேடங்களிலும் நடிக்கிறேன். அதேமாதிரி என்னோட ஹேர் ஸ்டைலக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுவேன். இப்படித்தான் ஒவ்வொரு கேரக்டர்களுக்கேற்பும் என்னை பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். ஏனோதானோவென்று செயல்படவே மாட்டேன்.
பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் ரோல்களில் நடித்துள்ளீர்களா?
வைராக்கியம் தொடரில் அந்த மாதிரி ரோலில்தான் நடித்தேன். பேமிலியை எப்படி நடத்த வேண்டும். கணவரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளை எப்படி அட்டாக் பண்ண வேண்டும் என்பது போன்ற வேடத்தில் நடித்தேன். மற்ற சீரியல்களில் எல்லாம் விட்டுக்கொடுத்து நடிக்கும் வேடத்தில் நடித்த நான், இந்த சீரியலில் மட்டும்தான் எதிர்த்து போராடும் வேடத்தில் நடித்தேன். மாமியார், கணவன்கிட்ட எந்தெந்த மாதிரி நடந்துக்கனும் என்பதை அந்த சீரியலில் வெளிப்படுத்தி நடித்தேன்.
வடஇந்திய சீரியல்களைப் போன்று நம்முடைய சீரியல்களில் பிரமாண்டம் இல்லையே?
அங்குள்ள சீரியல்களில் நடிப்பவர்கள் எந்த அளவுக்கு பிரமாண்டமான உடைகளை அணிந்து நடித்தாலும் அதற்கேற்ற தொகையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் அப்படியல்ல. பட்ஜெட்டுக்கள் அடக்கி விடுகிறார்கள். அதோடு அவர்களுக்கு நிறைய டயம் கொடுப்பார்கள். இங்கே அப்படியில்லை. இத்தனை நாளுக்குள் இத்தனை எபிசோடு எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆக, போதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இந்தி சீரியல்களில் நடிகர் நடிகைகள் நடிப்பது போன்று நம்ம ஊர் நடிகர் நடிகைகளாலும் பிரமாண்டமாக உடை, நகைகளை அணிந்து நடிக்க முடியும். மற்றபடி அவர்களை விட, அழகிலும், திறமையிலும் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.
மேலும், வடஇந்திய சீரியல்களில் நிறைய பில்டப் இருக்கும். காபி கேட்டால் கிளாசை எடுப்பதில் இருந்து ஒவ்வொரு விசயத்தையும் காட்டுவார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் காபி என்றால் காபியை எடுத்து கொடுப்பது போல் மட்டுமே காட்டுவார்கள். காரணம் பட்ஜெட்தான். இந்தி சீரியல்களை மாதிரி தமிழ் சீரியல்களுக்கும் பெரிய பட்ஜெட்டாக இருந்தால் நம்ம டைரக்டர்களாலும் அந்த அளவுக்கு பிரமாண்டமாக படமாக்க முடியும். அந்த வகையில், தமிழ் சீரியல் டைரக்டர்களும் பெரிய திறமைசாலிகள்தான்.
உங்களது ரோல் மாடல் யார்?
நதியா, ராதா எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகைகள். ஹோம்லியாக பண்ணி அனைவரையும் கவர் பண்ணுவார்கள். இதில் நதியா கிளாமர், செக்ஸியாக நடிக்காதவர். தனது அடக்கமான அழகு, நடிப்பாலேயே அனைவரையும் கவர்ந்தவர். அவரை மாதிரி ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த பாட்டுக்கு செக்ஸியாக வேண்டும் என்றால்கூட அவர் அதை உடம்பில் காட்டாமல் முகபாவணையில் காட்டியிருப்பார்.
எதிர்காலத்தில் சீரியல் இயக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதா?
சதாசிவம் சார் என்னை ஒரு நடிகையாக்கினார். இப்போதுவரை அதை தொடர்ந்து வருகிறேன். கடவுள் நமக்கு என்ன என்று எழுதி வைத்திருப்பார். அது நடக்கும். அதுதான் இப்போது வரை நடந்து வருகிறது. இனிமேலும் அப்படித்தான் நடக்கும். அதனால் எதிர்காலத்தில் நான் டைரக்சன் பண்ண வேண்டும் என்று அவர் எழுதி வைத்திருந்தால் அது நடக்கும். நடிகைதான் என்றால் இதே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பேன்.
சினிமா வாய்ப்புகள் வருகிறதா?
பாரதிராஜா அசோசியேட் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கும் என்று தணியும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் மயில்சாமி அந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறேன். முன்னதாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். ஆக, சின்னத்திரை தொடர்களில் நடிக்க பிரச்சினை ஏற்படாத வகையில் படங்களுக்கு கால்சீட கொடுத்து நடிக்கிறேன்.
அவசியப்பட்டால் கிளாமராக நடிப்பீர்களா?
அந்த மாதிரி கதைகள் வரும்போதுதான் முடிவெடுப்பேன். இப்போது சொல்லிவிட்டு பின்னர் மறுத்தால் தவறாகி விடும். அது அப்போதைய மனநிலை சூழ்நிலைகளைப் பொறுத்தது. அப்படி நடிப்பது அந்த வேடத்துக்கு தேவை. அது சரியாக இருக்கும் என்கிறபட்சத்தில் யோசித்து முடிவெடுப்பேன். மேலும், இந்த மாதிரியான ரோல்களில்தான் நடிக்க வேண்டும் என்று நான் சில பாலிஸிகளை வைத்திருக்கிறேன். அக்கா ரோலாக இருந்தாலும் என் ரோல் தனியாக தெரியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் ஜீவிதா.
http://img1.dinamalar.com/cini//CNew...3800000000.jpg
நன்றி: தினமலர்