http://i61.tinypic.com/14ccvmf.jpg
Printable View
An explanation sent to 'NAKKHEERAN' - Tamil Bi-weekly, in reply to their article published in the recent issue.
For the kind information of the Viewers and the Thread Hubbers.
மதிப்பிற்குரிய நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கங்கள் பல !
தங்களின் பிப்ரவரி 14-17 இதழில் பிரசுரமான "இடைத்தேர்தல் கிளைமாக்ஸ்" கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட ஒரு சிறு வாக்கியம் குறித்து, எங்கள் விளக்கத்தை அளிக்க விரும்புகிறோம்.
எங்கள் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் , திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியையும் , அதன் மூலம் எம். ஜி. ஆர். அவர்களது சக்தி என்னவென்று, அப்போதைய ஆளுங்கட்சியாக விளங்கிய தி. மு. க. வும், மத்தியில் ஆட்சி புரிந்தும் டெபாசிட் தொகையை பறிகொடுத்த இ. காங்கிரஸ் கட்சியும் புரிந்து கொண்டன, என்று எழுதியமைக்கு எங்களது முதற்கண் பாரட்டுக்கள் கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து எழுதப்பட்ட "எம். ஜி. ஆர். ஆட்சி காலத்தில் 1984ம் வருடம் அண்ணா நகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, உப்பிலியாபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. எம். ஜி. ஆர். நேரடியா நாலு தொகுதியிலும் பிரச்சரம் செஞ்சாரு, தேர்தல் முடிவு வந்தப்ப அண்ணா நகரிலும், மயிலாடுதுறையிலும் தி. மு. க. ஜெயிச்சுது. உப்பிலியாபுரம் அ. தி.மு. கவுக்கு, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தஞ்சாவூரு இரண்டு தொகுதிகளில் தி,மு.க. ஜெயிச்சதை தாங்க முடியாம ஊட்டிக்கு போய் 15 நாள் ரெஸ்ட் எடுத்தாரு எம். ஜி. ஆரு"
என்ற வாக்கியத்தில் சிறு திருத்தம் : :
1. எங்கள் கலியுக கடவுள் எம். ஜி. ஆர். ஆட்சி செய்த 1984ம் வருடத்தில், இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் , அரசு எந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படவில்லை. அடக்குமுறைகள் கையாளப்படவில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை. சென்னை அண்ணா நகரில் 9000 கள்ள வாக்குகள் போடப்பட்டன என்ற செய்தியும், அப்போது பரபரப்பாக பேசப்பட்டு, பேட்டிகளும் வெளிவந்தது.
2. அந்தந்த கட்சிகள், இந்த 4 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டனவேயன்றி, எந்த கட்சியும் எந்த தொகுதியையும் இழக்கவில்லை. அந்த வகையில், எங்கள் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். தோற்றுவித்த அ. தி.மு. க. தோல்வியே பெறவில்லை.
3. மேலும், எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் எந்த காலத்திலும் ஊட்டிக்கு சென்று " ரெஸ்ட் " எடுத்தது கிடையாது. உடல் நலம் குன்றிய போதிலும் ஓய்வு எடுக்காதவர்தான் ஒப்பற்ற எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள். மக்கள் நலனே பெரிது என்று நினைத்து, அவர்களுக்காகவே ஒய்வின்றி பாடுபட்ட எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள், அவ்வப்போது ஓய்வு எடுத்திருந்தால் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்திருப்பார்.
4. 1984 மே மாதம் 16ம் தேதி நடைபெற்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களின் முடிவுகள் 20ம் தேதி வெளியாயின. அதே மே மாதம் 25ம் தேதியன்று மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார். நடிகர் ராதாரவி அவர்களுக்கு விரலில் மோதிரம் அணிவித்து கவுரவித்தார். வெற்றியை கண்டு மமதை கொள்வது, தோல்வியை கண்டு துவண்டு விடுவது என்பது எங்கள் வள்ளலுக்கு என்றுமே இருந்தது கிடையாது.
எனவே, "ஊட்டிக்கு சென்று 15 நாள் ரெஸ்ட் எடுத்தார் எம். ஜி. ஆர்." என்ற தவறான தகவல், "நக்கீரன்" என்ற பெயரில் வரும் தங்கள் பத்திரிகையில் பிரசுரமானது வருந்தத்தக்கது.
இன்றைய தலைமுறையினருக்கு, இந்த தவறான தகவல், மனதில் பதியக்கூடாது என்ற எண்ணத்தில், மேற்கூறிய எங்கள் விளக்கத்தை, தயவு செய்து , உடனடியாக தங்களின் அடுத்த இதழில் பிரசுரிக்கும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எங்களது இந்த பணிவான வேண்டுகோளை தாங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டு, எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி !
என்றும் தங்கள் நிரந்தர வாசகன்
சௌ. செல்வகுமார்
செயலாளர், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்,
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
54TH ANNIVERSARY
MAKKAL THILAGAM MGR IN ''MADAPPURA'' TO DAY.
http://i61.tinypic.com/30usf0m.jpghttp://i57.tinypic.com/2retfzr.jpg
நக்கீரன் இதழில் இடம் பெற்ற தவறான தகவலை சுட்டி காட்டி முழு விளக்கத்துடன் மறுப்பு கடிதம் எழுதிய தகவலை திரியில் பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்
ஸ்ரீ ரங்கம் இடைதேர்தல் -2015
நீங்கள் முன் கூட்டியே நேற்று 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தீர்கள் . எப்படியோ சற்று முன் கிடைத்த செய்தி- வாக்கு வித்தியாசம் 70,000 தாண்டி விட்டது .
இன்னும் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது .அநேகமாக இதே நிலை தொடர்ந்தால் 80,000 வாக்குகள் மேல் வித்தியாசம் செல்ல வாய்ப்பு உள்ளது .
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தை பற்றிய நக்கீரனில் வெளியான தவறான கட்டுரைக்கு நீங்கள் அனுப்பிய விரிவான விளக்க கடிதம் மிகவும் அருமை . உடனுக்குடன் நீங்கள் அளித்த பதில் பாராட்டுக்குரியது
நன்றி .
புரட்சித்தலைவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் ."இரட்டை இலை " வெற்றியும், முக்கிய பிரமுகரின் பிர்ச்சாரமில்லாமல், "மதுரை கிழக்கு" மற்றும் "மருங்காபுரி " (1989) இடைத் தேர்தல்களை தொடர்ந்து, திருவரங்கத்திலும் தொடர்கிறது.
பொதுவாக, " இடைத்தேர்தல்" என்றால் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிதான் வெற்றி பெறும் என்பது, தமிழகத்தை பொருத்தவரை, வழக்கத்திலிருந்து வருகிறது. இதற்கு ஆதாரமாக,
================================================== =======================
2006-2011 (ஏப்ரல்) காலத்தில், தி.மு. க. ஆட்சியிலிருந்த பொழுது, நடைபெற்ற
1. மதுரை (மத்திய தொகுதி) (அக்டோபர் 2006)
2. திருமங்கலம் (09-01-2009)
3. கம்பம் (18-08-2009)
4. ஸ்ரீ வைகுண்டம் (18-08-2009)
5. இளையான்குடி (18-08-2009)
6. பர்கூர் (18-08-2009)
7. தொண்டாமுத்தூர் (18-08-2009)
8. திருசெந்துர், வந்தவாசி (19-12-2009)
9. பெண்ணாகரம் (27-03-2010).
சட்டமன்ற தேர்தல்களில், தி. மு. க. வே வெற்றி பெற்றது .
2011 - 14 (மே 2011 முதல் ஏப்ரல் 2014 வரை) நடைபெற்று வரும் அ தி. மு. க. ஆட்சியில்
1. திருச்சி - மேற்கு (13-10-11)
2. சங்கரன்கோவில் (18-03-12)
3. ஏற்காடு (09-12-13)
4. ஆலந்தூர் (24-04-14)
சட்டமன்ற தேர்தல்களில், அ. தி. மு. க. வே வெற்றி பெற்று வந்துள்ளது.
================================================== ============================
வாக்கு வித்தியாசங்கள்தான் மாறுபாடே தவிர, ஆட்சியிலிருக்கும் கட்சிகள் வெற்றி பெறுவது சகஜமாகிவிட்ட ஒன்று.
ஆளுங்கட்சி சந்தித்த இடைத்தேர்தலில், எதிர்கட்சி சார்பில், முதன் முதலில், வெற்றிக்கனியை பறித்த பெருமை, பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.
1963 ல் "திருவண்ணாமலை" தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழநி பிள்ளை அவர்கள் காலமானதால் ஏற்பட்ட இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி. மு. க. வேட்பாளர் திரு. ப. உ. சண்முகம் அவர்கள், நம் மக்கள் திலகத்தின் தீவிர பிரச்சாரத்தாலும், பேரறிஞர் அண்ணாவின் எழுச்சி மிக்க உரைகளினாலும் இந்த வெற்றியை பெற முடிந்தது.
அவருக்கு பின்பு, அந்த பெருமையை, பேரறிஞர் அண்ணாவின் உண்மைத்தம்பியாக அவரின் வழி வந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் "திண்டுக்கல்" பாரளுமன்ற இடைத்தேர்தல் (1973) மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் (1974) மூலம் பெற்றார்.
புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின்பும், அவர் உருவாக்கிய "இரட்டை இலை " சின்னம், மதுரை கிழக்கு (1989) , மருங்காபுரி (1989) மற்றும் நத்தம் (1999) ஆகிய தொகுதிகளில், கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது, அ.தி.மு.க. விற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
இரட்டை இலை, வெற்றி தந்த இலை, உயர் லட்சியம் காத்திடும் இரட்டை இலை.
எல்லாப்புகழும் நான் வணங்கிடும் எங்கள் குல தெய்வம் ஆலயம் கண்ட ஆண்டவன் மக்கள் திலகத்துக்கே !
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தின் காந்த சக்தி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 27 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் அவருடைய புகழ் ,அவருடைய படங்களின் மறு வெளியீடுகளின் வசூல் தாக்கம் , அவர் பெயரால் வெளிவரும் புத்தகங்களின் அமோக விற்பனை , தினசரி , வார , மாத இதழ்களில் எம்ஜியாரை பற்றிய குறிப்புகள் மற்றும் எம்ஜிஆரை பற்றிய புதிய தகவல்கள் , அவர் துவக்கிய கட்சியின் தொடரும் வெற்றிகள்
என்று எங்கும் எதிலும் எம்ஜிஆர் என்ற நிலை உலகில் எந்த ஒரு நடிகருக்கும் , அரசியல் தலைவருக்கும் கிடைத்திராத இமாலய புகழ் என்பதை அறிய முடிகிறது .
திரு.வினோத் சார்,
நண்பர் திரு.ரவிகிரண் சூரியா ஏன் இப்படி அநியாயம் செய்கிறார்? இது நியாயமா? அவர் வந்து விளக்கம் கேட்டால் சொல்லத் தயார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i60.tinypic.com/1ya9mt.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''இரட்டை இலை ''
மீண்டும் நிரூபணம் .
இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் 96417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .
கலைவேந்தன் சார்
நீங்கள் மிரண்டு போய் இருப்பது தெரிகிறது .
வாய் மொழி தகவலை உள் வாங்கி தினத்தந்தி யில் வரும் நேரில் பார்த்த எமது நிருபர் செய்தியை போல் வார்த்தை அலங்காரத்துடன் எழுத நமக்கு தெரியாது ..விட்டு விடுங்கள் நண்பரே .
வினோத் சார்,
இல்லை சார். நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. ஆனால், இதை விட முடியாது. எப்படியும் நண்பர் திரு.ஆர்.கே.எஸ். வந்தால் அதை கேட்டே தீர வேண்டும். வரட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வினோத் சார்,
நண்பர் ஆர்.கே.எஸ். லாக் இன்னில் இருந்தார். வருவார் என்று பார்த்தேன். கவனிக்கவில்லை போலிருக்கிறது. சரி வரும்போது வரட்டும். கேட்கலாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i60.tinypic.com/1ya9mt.jpg
‘அலையல்ல, இமயமலை’
மக்கள் தலைவர் ,பொன்மனச் செம்மல் தோற்றுவித்த இயக்கம் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்ததுதான். நேற்று கூட குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இவ்வளவு பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.
வாக்குகள் விவரம்
அதிமுக வேட்பாளர் வளர்மதி ---- 1,51,561
திமுக வேட்பாளர் ஆனந்த் ------- 55,045
பா.ஜ.க.வின் சுப்பிரமணியம் ------------- 5,015
மார்க்சிஸ்ட்டின் அண்ணாதுரை ----------- 1,552
அதிமுக வேட்பாளர் வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ், மதிமுக, பாமக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்தும் கூட, திமுக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அந்தக் கட்சிகள் போட்டியிட்டிருந்தால் திமுக இன்னும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும். பா.ஜ.கவும், மார்க்சிஸ்ட் கட்சியும் டெபாசிட்டை இழந்துள்ளன.
அதிமுக என்ற இயக்கமும், இரட்டை இலை சின்னமும் தலைவரின் புகழும் செல்வாக்கும் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னணி. நேற்று நான் கூறியதைப் போல 27 என்ன? 270 ஆண்டுகள் ஆனாலும் தலைவரின் புகழும் செல்வாக்கும் குறையாது. அவரது புகழ் வெறும் அலையல்ல, இமயமலை.
அரசியலிலும் சரி, திரைப்படத் துறையிலும் சரி வெற்றிகள் நமக்கு புதிதல்ல. என்றாலும், ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும்போதும் தலைவரின் ஆளுமையையும் மக்கள் அவர் மீது கொண்டுள்ள பேரன்பையும் நினைத்தால் பிரமிப்பே ஏற்படுகிறது. நம் எல்லாருக்கும் வெற்றிகள் தொடர அந்த வெற்றி தேவனை வேண்டுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமது சகோதரர்களுக்கு,
நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு பதில் அளித்துள்ள திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. நக்கீரன் கோபால் அவர்கள் திமுக அனுதாபி. அவர் மட்டுமல்ல, பத்திரிகைத் துறையில் பெரும்பாலோர் திமுக அனுதாபிகளே.
இது தவிர, திமுக எதிர்ப்பாளர்கள் கணிசமாக உண்டு. இவர்கள் திமுக எதிர்ப்பாளர்களே தவிர, தலைவரை ஆதரிப்பவர்கள் அல்ல. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் திமுகவை வீழ்த்த அதிமுகவை பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, திராவிட இயக்கத்தை வெறுக்கும் இவர்களுக்கு தலைவர் மீதும் உள்ளூர காரணமில்லா வெறுப்பு உண்டு. ஏதோ திரு.மணியன் போன்று தலைவர் மீது அன்பு கொண்ட சிலர், வெகு அபூர்வமாக இங்கொன்றும் அங்கொன்றுமாக உண்டு.
இவற்றையெல்லாம், பொய்யான புரளிகளை, கட்டுக்கதைகளை தாண்டித்தான் மக்கள் சக்தியோடு புரட்சித் தலைவர் வெற்றி பெற்றார். இன்னமும் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார் என்பதற்கு இன்றைய ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளே சான்று.
இதுபோன்ற பொய்யான செய்திகள் வரும்போது எம்.ஜி.ஆர். மன்றங்கள், அமைப்புகள், சார்பில் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும் கூட பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதை பிரசுரிக்கிறார்களோ இல்லையோ? நமது சகோதரர்கள், திரியை பார்வையிடும் தலைவரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு கடிதம் மூலம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
பல்வேறு பணிகள் காரணமாக நமது திரியில் தலைவரைப் பற்றி பதிவிட முடியாவிட்டாலும் ஒரு இன்லேண்ட் லெட்டர் மூலம் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளையில் எனது கண்டனக் கடிதத்தை டைப் செய்து ஆபிஸ் பாயிடம் கூரியரில் அனுப்ப சொல்லிவிட்டுதான் இதை எழுதுகிறேன். தலைவரைப் பற்றிய பொய் பிரசாரங்களுக்கு மறுப்பு சொல்வது அவசியம். தலைவருக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். எதற்காகவும் தலைவரை விட்டுக் கொடுக்க முடியாது.
நக்கீரனுக்கு மறுப்பு அனுப்பிய திரு.செல்வகுமார் சாருக்கு மீண்டும் நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நம் தலைவருக்கு அம்மாவாக நடித்தவர்களின் பதிவு
http://i59.tinypic.com/33uwox3.jpg
adimaipen pandaripaai amma
http://i58.tinypic.com/207umno.jpg
Adimaipen pandaripaai Amma
http://i59.tinypic.com/2mcu9ma.jpg
Annamittakai pandaripaai Amma
http://i58.tinypic.com/2h3u2yw.jpg
Anthaman kaithi S.D.Subbulakshmi Amma
http://i59.tinypic.com/2hrn79e.jpg
Avasara Police pandaribaai Amma
http://i62.tinypic.com/24q5nq8.jpg
Kudiyiruntha Kovil Pandaripaai Ammal
http://i60.tinypic.com/2u4sxgo.jpg
Ithayakani Pandaribaai Amma
http://i59.tinypic.com/2byvee.jpg
Kavalkaran Pandaribaai Amma
http://i60.tinypic.com/sni26q.jpg
Kulebahavali S.D.Subbulakshmi Amma
http://i57.tinypic.com/ivdcp1.jpg
Mannaathi mannan Lakshmi Praba Amma
http://i60.tinypic.com/2ylts14.jpg
Asai Mugam Lakshmi Praba Amma
http://i60.tinypic.com/24y7die.jpg
Nallavan Valvan Lakshmi Praba Amma
http://i61.tinypic.com/2u6mz2a.jpg
Neethikku Pin Pasam P.Kannampa Amma
http://i61.tinypic.com/314zgwg.jpg
Navarathinam S.Varalakshmi Amma
http://i59.tinypic.com/120gnrd.jpg
Paasam T.R.Rajakumari Amma
http://i61.tinypic.com/au8ig3.jpg
Parakkum Pavai S.D.Subbulakshmi Amma
http://i61.tinypic.com/ing2sh.jpg
Pattikkaattu Ponnaiya S.N.Lakshmi Amma
http://i62.tinypic.com/258p1nd.jpg