Originally Posted by
anm
சகோதரி வனஜா அவர்களே,
நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை
ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.
அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.
ஆனந்த்