-
7th January 2013, 12:31 AM
#11

Originally Posted by
Vankv
நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?
மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.
இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!
சகோதரி வனஜா அவர்களே,
நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை
ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.
அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.
ஆனந்த்
-
7th January 2013 12:31 AM
# ADS
Circuit advertisement
Bookmarks