சி.க.
அப்புறம் ஒரு கேள்வி கேட்டீங்களே பாருங்க. நான் அசந்துட்டேன். பதில் சொல்ல மறந்துட்டேன்.
"கொக்கரக் கொக்கரக் கோ சேவலே" பாட்டு எந்த படத்திலன்னு. அது 'பதிபக்தி' படமுங்கோ!!!
Printable View
சி.க.
அப்புறம் ஒரு கேள்வி கேட்டீங்களே பாருங்க. நான் அசந்துட்டேன். பதில் சொல்ல மறந்துட்டேன்.
"கொக்கரக் கொக்கரக் கோ சேவலே" பாட்டு எந்த படத்திலன்னு. அது 'பதிபக்தி' படமுங்கோ!!!
கலைவேந்தன்,
என்னிடம் போய் ராகத்தைப் பற்றி கேட்கிறீர்களே? நான் சங்கீதம் கற்றவன் அல்ல சின்ன வயதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போனது. இப்போதும் அந்த ஏக்கம் உண்டு. ஆனால் சிறு வயது முதலே வார இதழ்களிலும் நாளேடுகளிலும் வரும் கர்நாடக சங்கீத விமர்சனங்களை தவறாமல் படிப்பவன். என்ன புரிகிறதோ இல்லையோ படித்து விடுவேன். அதனால் அந்த துறையின் சில டெக்னிகல் அம்சங்கள் பற்றி சின்ன பரிச்சயம் உண்டு.
நீங்கள் குறிப்பிடுவீர்களே ஒரு சில பாடல்களின் ராகம் தெரியும், அதே சாயலில் வேறொரு பாடல் கேட்கும்போது ஒப்பிட்டு பார்ப்பேன் என்று, அதே கேஸ்தான் நானும். இரவும் நிலவும் வளரட்டுமே ஹமீர் கல்யாணி என்றால் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்-னும் ஹமீர் கல்யாணி என்று தெரியும். (இந்த ராகத்தை சாரங்கி என்றும் சொல்லுவார்களாம்).
அன்றொரு நாள் இதே நிலவில் பாடலின் சரணத்தில் அந்த ஒரு நாள் ஆனந்த திருநாள் என்ற வரி தேஷ் ராகத்தின் கிளாசிக் உதாரணம் என்று படித்ததை நினைவில் கொண்டு ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல பாடலும் தேஷ் ராகம் என்று தெரிந்துக் கொள்வேன். தங்க ரதம் வந்தது ஆபோகி எனும்போது அதே போல் ஒலிக்கும் வணக்கம் பலமுறை சொன்னேன் என்பதும் ஆபோகி என்று நினைத்துக் கொள்வேன்.
மாதவி பொன் மயிலாள் கரகரப்ப்ரியா,, மறைந்திருந்து பார்க்கும் ஷண்முகப்ரியா, தூங்காத விழிகள் இரண்டு அமிர்தவர்ஷிணி, யார் தருவார் இந்த அரியாசனம் அடானா என்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன்.
கோபால், ராகவேந்தர், கிருஷ்ணாஜி, சுவாமி(பம்மலார்) போன்றவர்கள் சங்கீதத்தை முறையாக தெரிந்தவர்கள். சுவாமி கச்சேரியே செய்வார். வாசு, கார்த்திக், சாரதி போன்றவர்கள் இசைக் கருவிகளை பற்றி அறிந்தவர்கள். பாடல்களில் எவை எவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லி விடுவார்கள். நான்தான் இரண்டிலும் சேர்த்தி இல்லை.
நிற்க, உங்களின் சந்தேகத்திற்கு விடை, கற்பனைக்கு மேனி தந்து பாடல் சக்ரவாகம் ராகம்தான். தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டதைதான் உங்களுக்கு சொல்கிறேன்.
அன்புடன்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்....
தகவலுக்கு நன்றி முரளி. உங்களுடைய பழைய பதிவு ஒன்றை படித்ததில் ஒரு பாடலைப் பற்றியும் அதன் ராகம் பற்றியும் மிக சிறப்பாக விளக்கியிருந்தீர்கள். சங்கீதம் முறையாக கற்றுக் கொள்ளாமல் அந்த அளவு எழுதியது வியப்பே. பாராட்டுக்கள்.
சின்னக் கண்ணன், கல்நாயக் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்திரா சார் விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். வாசு சார், ரவி சார், கிருஷ்ணா சார்களை எங்கே காணோம்?
----------------
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ மக்களவை தொகுதி பாரதிய ஜனதா எம்.பி. சாக்க்ஷி மகராஜ். இந்துக்கள் 5 குழந்தைகளை பெற வேண்டும். கோட்சேக்கு நாடு முழுவதும் சிலைகள் வைக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் இப்போது கூறியுள்ள கருத்து இவரை மேலும் பிரபலமாக்குகிறது. இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் பிரதமர் மோடி படகு ஓட்டத்தான் செல்ல வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு, ‘நான் சக்தி வாய்ந்தவன். நான் நினைத்தால் அரசுகளை அமைப்பேன். அரசுகளை கவிழ்ப்பேன்’ என்று அவர் கூறியிருப்பது, எப்படி?... இப்படி?... என்று அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை எல்லாருமே, குறிப்பாக அதிகாரத்தில் இருப்போர் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலே கூட இந்த எண்ணம் இருந்தால்.... வரலாற்றில் வாழ்க்கை எனும் ஓடம் தந்த பாடங்களை பார்த்தால் ... முடிவில் அடக்கமாகி விடுவாம் என்பதை உணர்ந்தால்... அடக்கமாக இருப்போம்.
பூம்புகார் திரைப்படத்தில் கவுந்தி அடிகளாக வரும் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிய ‘வாழ்க்கை எனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்...’ நான் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று.
வாழ்க்கையில் அடிபட்டு ஏமாந்து கோவலனும் கண்ணகியும் படகில் செல்லும்போது இந்தப் பாடல்.
‘துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அடிக்கின்ற திசையெலாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்..’
அற்புதமான வரிகள். இந்த வரிகளைப் போலவே தன் வாழ்க்கை ஆனதை நினைத்து கோவலனாக வரும் திரு.எஸ்.எஸ்.ஆர். தலையை கவிழ்ந்து கொண்டு தன்னையே நொந்து கொள்வதை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
பாடலை எழுதியவர் கலைஞர் திரு.மு.கருணாநிதி. அந்த வயதிலேயே இந்த வயதில் கிடைத்த அனுபவத்தைப் போல வாழ்க்கையை விளக்கியிருக்கிறார். மெல்லச் செல்லும் ஓடத்துக்கேற்ப நீந்தும் திரு. சுதர்சனத்தின் இசை. ரசிப்பது மட்டுமல்ல, உணர வேண்டிய பாடலும் கூட.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன்,
பூம்புகார் திரைப்படத்தை பற்றி சொல்லி ஒரு அருமையான பாடலையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் இந்த பாடலை விரும்பி கேட்பதுண்டு. K.B.சுந்தராம்பாள் பாடல்கள் என்றால் என்னவோ தெரியவில்லை, எனக்கு அவ்வளவு பிரியம். கலைஞரும் நன்றாகவே இந்த பாடலை எழுதியிருந்தாலும் பகுத்தறிவுவாதிகள் சிலப்பதிகாரத்தைப் பற்றி சொல்வது எனக்கு சற்று முரண்பாடாக உள்ளது. அது கிடக்கட்டும். நீங்கள் சொல்வது போலவே இந்த பாடலில் தத்துவமான கருத்துக்கள் உண்டு . சிறு வயதில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். இப்போதும் பார்க்கலாம்.
சரி ஆகட்டும். பாடலை இப்போது பார்க்கலாமா?
https://www.youtube.com/watch?v=B1cVrNWWrHA
நன்றி கல்நாயக்,
சிறுவயதில் மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்களைப் பற்றி சிலம்புச் செல்வர் என்று முதலில் கேள்விப்பட்டபோது விவரம் தெரியாமல் நன்கு சிலம்பு சுற்றுபவர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.அவரது முரட்டு மீசையும் ஒரு காரணம். தாயைக் காத்த தனயன் படம் பார்த்திருந்த பாதிப்பு வேறு. (ம.பொ.சி. அபிமானிகள் மன்னிக்கவும். இப்போது அவரது பெருமையை உணர்ந்திருக்கிறேன்.)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கல்நாயக்,
ஒரு முக்கிய விஷயம் விடுபட்டுபோய் விட்டது. தாயைக்காத்த தனயன் படத்தை அப்போது நான் பார்த்தது மறுவெளியீட்டில். முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறேன் போலிருக்கிறது என்று நினைத்து வயதை கணக்கிட வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் படம் எத்திக்கும் பரவட்டும்
ரமேஷ், சுரேஷ் – இரு வாலிபர்கள்.. அப்புறம் நீலாவதி – யெஸ் அழகி…ரோஜா இதழோரப் பனித்துளியிலிருந்து வார்த்தாற்போல் ச்சிலீர் மென்மையான மேனி மென்மையான மனம்.. தெரிந்திருக்குமே ர, சு இருவருக்குமே போட்டி.. நீலாவதியின் காதலைப் பெறுவதில்..
ரமேஷ்.. – நீலாவதி, சந்த்ராயன் ராக்கெட் எத்தனை வேகத்தில் பயணிக்கும் தெரியுமா இத்தனை வேகம்… கங்கை நதி இப்படி இந்த இந்த மானிலங்களில் எல்லாம் பயணிக்கிறது.. வேகமான ஜெட் விமானம் மணிக்கு…இத்தனை மைல் தொலைவில் பயணிக்கும்.. அப்புறம்… நிறைய இருக்கின்றன எனக்குத் தெரிந்த விஷயங்கள்
நாளைக்கு ரிலீஸாகும் என்னை அறிந்தால் இவ்வளவு அடி நீளம் இவ்வளவு நிமிடங்கள் ஓடும் போகலாமா நீலாவதி..
நீலாவதி பதில் எதுவும் சொல்லவில்லை..ரமேஷ் செல்ல சுரேஷ் வந்தான்.
சுரேஷ்: நீல்ஸ்.. ஹாய் எப்படி இருக்க அப்படியே இந்த கரு நாவற் பழம் இருக்கு பாரு அதெல்லாம் அலம்பி அம்மா கிஷ்ணா ஒம்மாச்சிக்குக் கொடுக்கணும்னு ஒரு ப்ளேட் ல போட்டு வச்சுருப்பா. அப்படி அந்த க. நா பழம் மாதிரியே உன் கண்கள் இருக்கு…
இந்த ஸ்பான்ச்ங்கறாங்க், ஃபோம்ங்கறாங்க, இதெல்லாம் விட ஒன்னோட செம்பருத்திப் பூக்கன்னம் சாஃப்ட்னு எனக்குப் படுது..
வேற வழி தெரியலை எனக்கு நீல்ஸ்… திடீர்னு இடைத்தேர்தல் வந்து ஒரே ஊர்ல கூடி மீட்டிங்க்கா போடற அரசியல் வாதிகள் மாதிரி வானில் கன்னங்கரேல் மேகங்கள் ஒன்று சேர்ந்தாப்போல இருக்கே உன்னோட அடர் கூந்தல்.. அதுவும் நெளி நெளியா எலியட்ஸ் பீச் கடலலை மாதிரி மெளனமா அதிர்வலைல்ல்லாம் கொடுக்குதே.. எந்தப் பார்லர் போற நீல்ஸ்..
ம்ம் ஒன்னோட டிரஸ்ல எனக்கு எது பிடிச்சுருக்குன்னா. அதெப்படிச் சொல்றது நீ வானம் மாதிரிம்மா. கருக்கல் வேளைல இருக்கற மெல்லிய நிறங்கள், பகலுச்சில்ல இருக்கற பளீர் நீலம் அந்திவேளை வானம் மாதிரி உனது உதடோட போட்டி போடற அதிரடிச் சிகப்பு – சேலையோ, முக்கா ஜீன்ஸ் டிஷர்ட்டோ, பொலிரோ ஸ்பாகட்டி டாப்ஸோ எது போட்டாலும் உனக்குப் பொருத்தமாத் தான் இருக்கு..
எனக்கு வேற விஷயங்கள் அவ்வளவா தெரியாது… மன்னிச்சுக்கோ நீல்ஸ்..
நீலாவதி புன்னகையுடன், “சுரேஷ், உங்களை மாதிரி விஷயம் தெரிந்தவர் எனக்கு க் கிடைத்தால் போறாதா” என்றாள் (இது தேவன் 1955 இல் எழுதிய விஷயம் தெரிந்தவர் என்ற கதையின் ரீ மிக்ஸ் எனலாம்!)
அது போல முரளீ, கலை (ஹப்பாடா கண்ணா விஷயத்துக்கு வந்துட்டான்) எனக்கும் ராகங்கள் லாம் தெரியாது.. தெரிஞ்சதெல்லாம் ரசிப்பது மட்டும் தானாக்கும்.! ( அப்பப்ப கேள்விப் படறத மட்டும் மனசுல வச்சுக்குவேன்.. நண்பர் ராகதேவனும் அப்பப்ப சொல்வார் கேட்டுக்குவேனாக்கும்!)
*
கலை வேந்தன்.. வாழ்க்கையிலும் ஓடம் வழங்குகின்ற பாடம் நல்ல பாட்டுதான்.. ஆனால் பூம்புகார் பார்த்ததில்லை.. வழக்கம் போல நன்னாயிட்டு எழுதறேள்..
கல் நாயக். பதிபக்தின்னு சம்சயம் இருந்திச்சு..ஏனெனில் நான் பார்க்காத படம் அது.. தாங்க்ஸ்..
*
ராஜேஷ் பாட்ஸ்க்கு தாங்க்ஸ்ங்கோவ்..
மதுரைக்குச் சென்றால் மேகங்களே மங்கை மீனாட்சி கூறுங்களே. வாணி.ஸ்ரீ.. ஏதோ துள்ளித் துடிக்க கிடுகிடுன்னு கலர்ல ஓடிப் பாடற பாட்டோட படம் மட்டும் நினைவுக்கு வருது..இருளும் ஒளியும்.. பாடல் நினைவுக்கு வரலியே..
கற்பனையில் மிதந்தபடி கண்ணுறங்கும் பருவக்கொடி – முழிச்சுப்பாடுற்து சுஜி தூங்கறது யாராக்கும்?
காவியங்கள் பாடுவதும் நான் நடத்தும் சம்சாரமே.. யாராக்கும் அது
தெலுங்கு பாட் யூட்யூப் வொர்க் ஆகலை
*
நீலாவதிய அவ்வளவு வர்ணிச்சாச்சா.. சரி பரவாயில்லை இந்தப் பாட்டு போட்டுக்கலாம்..!
(சங்கர், சித்ரா)* ஜெய். மணிவிளக்கே மாந்தளிரே.. உன்னைத் தான் தம்பி ந்னு படம் போட்டிருக்கு.... சுசீலாம்மா தான் ஹம்மிங்க்கா..படம் எப்படி இருக்கும்…
https://www.youtube.com/watch?featur...&v=i_cVw-FfGc0
http://www.prachidanewswing.com/GenI...=250&width=300
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை எனப்படும் சென்ன பட்டணம் தான் திரு.(சங்கர்) கணேஷ் பிறந்த ஊர். கிராமத்தில் பிறந்து நகரத்தில் வந்து சாதனை புரியும் மனிதர்களுக்கு முன்னால் சென்னையிலே பிறந்து சென்னையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக இன்று வரை சாதனை படைத்து கொண்டிருப்பவர். இந்த வார “நான் பிறந்த மண்”ணுக்காக உங்களோடு அவர் பேசுகிறார்.
எனது தந்தை கே.சின்னசாமி அவருக்கு எல்லையம்மாள், சுந்தரம்மாள் என்று இரு மனைவிகள். எல்லையம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தவன் நான். எனக்கு ஜெகதாம்பாள் என்ற அக்காவும், செல்வம், கோபால் என்று இரண்டு தம்பிகள் என்னோடு பிறந்தவர்கள். பத்தாம் வகுப்பு வரை படித்த நான் ஸ்டண்ட் சோமு, அவருடைய உதவியாளர் டி.கே.பரமசிவம் போன்றவர்களுடன் வாகினி ஸ்டுடியோவுக்கு போனால் அங்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி ஒரு பக்கம் நடித்து கொண்டிருப்பார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஒரு பக்கம் நடித்து கொண்டிருப்பார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் படப்பிடிப்பு ஒருபக்கம், மலையாளத்தின் பிரேம் நசிர் படபிடிப்பு ஒருபக்கம் என்று திரையுலகில் பிரபல நட்சத்திரங்களின் படப்பிடிப்புகளை பார்க்கும்போது சினிமாவில் நுழைய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். எனது விருப்பத்தை அறிந்த என்னுடைய தந்தை, திரு.ரங்கன் இசைகுழுவில் இசை கற்றுக்கொள்ள சேர்த்துவிட்டார். பின்பு தன்ராஜ் மாஸ்டரிடமும் இசையை கற்றுக்கொண்டேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் அவரது இசைக்குழுவில் பணியாற்ற வாய்ப்பு கேட்டபோது முறையாக கற்று வாருங்கள் வாய்ப்புகள் கட்டாயம் இருக்கிறது என்று கூறினார். அங்கிருந்து கொஞ்ச காலம் நானும் சங்கர் அண்ணாவும் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றினோம். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை குழுவில் சேர்ந்து மணப்பந்தல், பாசமலர் போன்ற படங்களில் பணியாற்றினோம்.
மறைந்த கவியரசர் கண்ணதாசன் பரிந்துரையின் பேரில் பிரபல தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ஜி.ஆர்.நாதன் அவர்கள் இயக்கி ஜெய்சங்கர், குமாரி சச்சு இணைந்து நடித்த “நகரத்தில் திருடர்கள்” என்ற படத்தை இசையமைத்தோம். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அடுத்ததாக கண்ணதாசன் அவர்கள் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் பிரமுகரான சின்ன அண்ணாமலை அவர்கள் தயாரித்து ஜெய்சங்கர் நடித்த “நான் யார் தெரியுமா” என்ற படத்திற்கு இசையமைத்தோம். அதற்கடுத்தபடியாக தேவர் பிலிம்ஸ் தயாரித்து ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த “மகராசி” என்ற படத்திற்கு இசையமைத்தோம். மூன்றாவதாக இசையமைத்த இந்த “மகராசி” திரைப்படம்தான் முதன் முதலில் வெளியானது. இரண்டாவதாக இசையமைத்த “நான் யார் தெரியுமா” இரண்டாவதாக வெளியானது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த மகராசி முதன் முதலில் வெளியானதால் படத்தின் டைட்டிலில் கவிஞர் கண்ணதாசன் வழங்கிய தேவர் பிலிம்ஸின் சங்கர் கணேஷ் என்று பின்னர் வந்த படங்களுக்கெல்லாம் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக எங்கள் பெயரை டைட்டிலில் போடவைத்தோம்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த “இதய வீணை”, “நான் ஏன் பிறந்தேன்” போன்ற படங்களுக்கு இசையமைத்தோம். நாங்கள் மூன்றாவதாக திரு எம்ஜிஆர் அவர்களுக்கு “நல்லதை நாடு கேட்கும்” என்ற படத்திற்கு இசை அமைக்கும்போது தான் அவர் முதன் முதலில் தமிழ் நாட்டின் முதல்வரானார். அதனால் அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டு, அந்த படத்தை தயாரித்த திரு.ஜேப்பியார் அவர்களே கதாநாயகனாக நடித்து பின்னர் வெளியானது. அடுத்ததாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அவர் சொந்தமாக தயாரித்த படங்களுக்கும், ஏவிஎம் நிறுவனம், கே.ஆர்.ஜி.பிலிம்ஸ் போன்றவர்கள் தயாரித்த படங்களுக்கும் பணியாற்றினோம். தமிழில் மட்டும் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளோம்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், அவருடைய மகன் சிவராஜ் குமார், குமார் பங்காரப்பா, ரவிச்சந்திரன் போன்றவர்கள் நடித்த சுமார் 35க்கும் மேற்பட்ட கன்னட படங்களுக்கும், மலையாளத்தில் சுமார் 40 படங்களிலும் இசையமைத்து அங்கு பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறோம். தெலுங்கில் ஷோபன் பாபு, தாசரிநாராயண ராவ், ராஜ்பாபு போன்றவர்களின் படங்கள் என்று 40&க்கும் மேல், இந்தியில் 2 படங்கள் என்றும் பிறமொழிகளிலும் இசையமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளோம்.
நான் கதாநாயகனாக பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் தயாரித்த “ஒத்தையடிப்பாதையிலே” என்ற படத்தில் நடித்தேன். அடுத்ததாக ரகு என்ற தயாரிப்பாளர் தயாரித்த “அஸ்திவாரம்” என்ற படத்தில் நான் கதாநாயகனாகவும் எனக்கு அண்ணனாக ஜெய்சங்கரும், அண்ணியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். நாகர்கோவில் சுயம்பு என்பவர் தயாரித்த “ரிக்ஷா தம்பி” என்ற படத்தில் கதாநாயகனாக நானும், கதாநாயகியாக கோழி கூவுது விஜியும், சங்கிலி முருகன் போன்றவர்கள் நடித்தார்கள். பின்னர் தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட “நெருப்பு நிலா” என்ற படத்தில் நான் கதாநாயகன், முதல் மரியாதை ரஞ்சனி கதாநாயகி.
பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த “சட்டம் ஒரு இருட்டறை” படத்தில் நான் இரண்டாவது கதாநாயகனாக ரிக்ஷாகாரன் வேடத்தில் நடித்தேன். பின்னர் இந்த படம் இந்தியில் “அந்தாகானூன்” என்ற பெயரில் தயாரான போது அந்த படத்தில் நான் நடித்த ரிக்ஷாகாரன் பாத்திரம்தான் வேண்டும் என்று அமிதாப்பச்சன் கேட்டு நடித்தாராம். மலையாளத்தில் இதே “சட்டம் ஒரு இருட்டறை” படம் தயாரான போது அந்த வேடத்தில் நடித்தவர் பத்மவிபூஷன் கமலஹாசன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக எனது மாமியார் ஜி.வி.ராஜம்மாள் தயாரித்து, எனது மைத்துனர் ஜி.வி.சரவணன் இயக்கிய “நான் உன்ன நெனச்சேன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தேன்.இந்த படத்தில் எனக்கு கதாநாயகி அப்போது கவர்ச்சி நடிகையாக பிரபலமாக இருந்த சில்க்ஸ்மிதா தான்.
எனது மனைவி ஜி.வி.ரவிச்சந்திரிகா சரவணா பிலிம்ஸ், ஜி.என்.வேலுமணியின் புதல்வி. பாகப்பிரிவினை, பாதகாணிக்கை, பாலும் பழமும், பணத்தோட்டம், குடியிருந்த கோவில், நாணல், இது சத்தியம், நம்ம வீட்டு தெய்வம், நான் ஏன் பிறந்தேன் என்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர் எனது மாமனார் ஜி.என்.வேலுமணி. அவருடைய மகளை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எனது மகள் ஸ்ரீதேவி, அவரை “இதுதாண்டா போலீஸ்” டாக்டர் ராஜசேகர் அவருடைய தம்பி குணசேகருக்கு திருமணம் செய்துவைத்தேன். இன்று அவர்கள் தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் நகை கடை நடத்தி வருகிறார்கள். என்னுடைய மகன் ஸ்ரீகுமரன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் கணேஷ். சினிமா டைட்டிலில் நானும் எனது நண்பர் சங்கர் அண்ணனும் இணைந்து இரட்டையர்களாக பலவெற்றி படங்களை தந்து உலாவந்தோம். என்பெயரோடு இணைந்திருக்கின்ற திரு.சங்கர் அண்ணா அவர்கள் மறைந்து ஆண்டுகள் பலவானாலும் இந்நாள் வரை சங்கர் கணேஷ் என்ற பெயரில்தான் இதுவரை நான் இசையமைத்து வருகிறேன். நட்பின் பெருமையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், அதற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் தான் இதுவரை நான் அவ்வாறு செய்து வருகிறேன்.
இசையால் வசமாகா இதயம் எது என்பார்கள். தனது இசையால், நட்பால், வயது கூடிக்கொண்டே போனாலும் இன்று வரை இளமையாகவே இருக்கும் திரு. (சங்கர்) கணேஷ் அவர்கள் கலையுலக மார்கண்டேயனாக இருந்து கொண்டு மேலும் பல சாதனைகள் இசைத்துறையில் படைக்கட்டும்.
- மிட்டாளம் சே.மனோகரன்
கலைவேந்தன், சிகா, கல் நாயக் நன்றி.
இதோ இன்னொரு அற்புத கானம்.
விஜயபாஸ்கரின் இசையில் இசையரசியுடன் ஜாலியாக ஜாலி ஆப்ரஹாம், வாணிஜெயராம் மற்றும் பாலு
இரவில் இரண்டு பறவைகள்
https://www.youtube.com/watch?v=Zk4gVD7ZLww