புரட்சி தலைவரின் 'விவசாயி' திரைப்பட பாடலிருந்து சில வரிகள்...
'கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
...
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
...
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்'
இப்பாடலின் வரிகளை மட்டுமே கொண்டு, நாளிற்கு ஒரு பதிவு என்று ஒரு வருடம் முழுவதும், 365 நாட்கள், எழுவதற்கு வேண்டிய கருத்துக்கள் அடங்கியுள்ளது.
அத்தனை விஷயங்கள் இவ்வொரு பாடலில் மட்டுமேயுள்ளது.
'கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து'
வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள 'கட்டுப்பாடு' எவ்வளவு அவசியம் என்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறது இப்பாடலின் வரிகள்.
'கட்டுப்பாடு' எனும் பொழுது, 'சுய' கட்டுப்பாட்டை குறிக்கிறது, பிறரால் கட்டாயப்படுத்தப்படும் கட்டுப்பாட்டையல்ல, அத்தகைய கட்டுப்பாடு நிலைக்காது.
குறிப்பாக, 'கன்னியற்க்கும், காளையற்கும்' எனும் பொழுது, அந்த பருவத்தில்தான் அறிவு முதிற்ச்சி பெற பக்குவமடையும் தொடக்க நிலையை அடைய தொடங்குகிறது.
அதே சமயம், சூழ்நிலைக்கு எளிதில் வயப்படும் நிலையையும் எதிர் கொள்கிறது.
சுய கட்டுபாட்டை வேறூன்றி நட்டுவிட்டால் கவலையில்லை.
கன்னி மற்றும் காளைப்பருவம் வருவதற்கு முன்னரே, அதாவது பிள்ளைப் பருவத்திலே வேறூன்றி நடுவது மிகவும் அவசியம், 'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது' என்கிற பழமொழிக்கேற்ப.
வேறூன்றி நடுவதன் பொறுப்பு, அன்னை தந்தையினறது, என்பதை அடுத்த வரிகள் அழகாக எடுத்துரைக்கிறது.
'அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து'
பெற்றோர்கள், 'இதை செய்யாதே', 'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று வற்புருத்தத் தேவையில்லை, அது நிலைப்பதில்லை என்பது அனுபவத்தில் பலரறிந்த உண்மை.
கொண்ட படிப்பினையையும், பெற்ற அனுபவத்தையும் 'பகிர்ந்து' கொண்டு பிள்ளைகளை வளர்க்கும் பொழுது, நல்லது கெட்டதை பற்றி அறிந்து முடிவெடுக்கும் திறனையும், அதற்கு தேவையான அறிவு வளர்ச்சிக்கு 'வேறூன்றி நடும்' வாய்ப்பினை பெறுகிறார்கள், பெற்றோர்கள்.
இத்தகைய நல்வழிகளை பின்பற்றும் பொழுது, 'பின் வரும் சந்ததியினர்' ஏன் போற்றத்தக்கவர்களாக இருக்க மாட்டார்கள்?
பாடலின் வரிகளிலிருந்து கிடைக்கும் படிப்பினை...
பின் வரும் போற்றத்தக்க சந்ததியினரை 'சுய கட்டுப்பாடுடன்' உருவாக்குவதில் பெற்றோர்களின் பொறுப்பு பெரும்பொறுப்பு.
'நெருப்பு சுட்டால், தானாக புரியும்' எனும் முறையை கையாளும் பொழுது, ஏற்கனவே பெற்ற அனுபவத்திற்கு வேலையில்லாமல் போய்விடும்.
இத்தகைய சந்ததியினரை உருவாக்கும் பணியை, மனித வாழ்வின் தொடக்க காலகட்டத்திலிருந்தே தொடங்க வேண்டுமேயோழிய, காலம் கடந்த பின்னர் அல்ல.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy venkat rao fb