Originally Posted by
venkkiram
ஏங்க இப்படி கொளுத்திப் போடுறிங்க? ஒருவர் தனது துறையில் சிறப்பாக வந்துகொண்டிருந்தால் கமலின் நட்பு வட்டம் அவரைப் பற்றி நல்லதாக எடுத்துச் சொல்ல.. இப்படி வந்ததே ஹிப்றான் - கமல் கூட்டணி. மேலும் இப்போது பெருகி வரும் பின்னணிப் பாடகர்களில் நிறைய இளைஞர்கள் திறமையானவர்கள். அதனால் தேவையான பாடகரே இல்லை, நான் பாடினால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என உத்தம வில்லன் போன்ற மசாலாப் படத்திற்கு தேவை இருக்காது என நினைக்கிறென். அனுபமில்லாத இளைஞர்கள் என்று நீக்கினாலும் பாலு, மனோ, ஷங்கர் மகாதேவன், கார்த்திக், ஹரிஹரன், உன்னி மேனன் என அனுபவப் பட்டியல் நீளம்.