https://www.youtube.com/watch?v=cVWuW67Xo_Y
லிங்க் தவறாக இணைத்து விட்டேன்
handsome srikanth
Printable View
https://www.youtube.com/watch?v=cVWuW67Xo_Y
லிங்க் தவறாக இணைத்து விட்டேன்
handsome srikanth
ஸ - ஸட்சமம், ரி- ரிஷபம்,க- காந்தாரம்,ம-மத்யமா, ப-பஞ்சமா,த-தைவதா,நி-நிஷாடா ,என்று ஓரளவு சங்கீதம் தெரிந்த எனக்கு சவுக்கடி கொடுத்தது கொடுங்குரல் கொடியோன், வல்லிசை வேந்தர் சேர்ந்து அளித்த ட ட டா என்ற புதிய ஸ்வரம். உலகத்தின் எந்த சங்கீதத்திலும் காண முடியாத அதிசய கண்டு பிடிப்பு. ட என்ற டகரம் எட்டாவது சுரம்.(ஜுரம்????) இதில் சுத்த டகரம் வேறு. ஹூம்... ருபுதேரா பாட போனேன் ,ஹிந்தி எதிர்ப்பை கை விட்டு.
முன் ஜாக்கறதை முத்தண்ணா
கிருஷ்ணா சார்,
மிஸ்டர் x படிச்சிருப்பீங்க. ஒருநாள் பஸ்ல போனாராம். மழை வந்து டிரைவர் வைபர் போட்டாராம். ஆனால் வைபர் லூஸாகி அடிக்கடி கீழே விழுந்துதாம். டிரைவர் ஒவ்வொரு முறையும் என்ஜினை நிறுத்திவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி வெளிப்பக்கம் போய் வைபரை முடுக்கிவிட்டு வந்தாராம். இதைப் பார்த்து எரிச்சலடைந்த மிஸ்டர் x டிரைவரை கேட்டாராம்.
"யோவ்! உனக்கு அறிவிருக்கா இல்லையா? வெளியே போய் அடிக்கடி வைபரை முடிக்கிட்டு வர்றியே! அதையே உள்பக்கம் கண்ணாடியிலே வச்சு முடுக்கியிருந்தா கீழே விழுந்தாலும் உக்கார்ந்த இடத்திலேயே அப்படியே எடுத்துக்கலாமில்லே!"
புரியுதா சார்?
http://www.youtube.com/watch?v=xWAzQ75Sj5k
லிங்க் தவறாக இணைத்து விட்டேன் sorry
handsome srikanth[/QUOTE]
http://www.youtube.com/watch?v=ddcUDbK-8Yg
"இதழில் கதை எழுதும் நேரமிது "
இசை : இசைஞானி
பாடியவர் : பாலு, சித்ரா
எழுதியவர் : முத்துலிங்கம்
இதே பாடல் தெலுங்கில் ருத்ர வீணா படத்தில் கே.ஜே , சித்ரா "லலிதா பிரியா கமலம்" என்று பாட, அதே மெட்டில் தமிழில் பாலுவும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். ருத்ரவீணா என்ற படம் கே.பி இயக்கிய படம். இப்படம் இளையராஜாவுக்கு 1988 இற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கொடுத்த படம்.
மிக மிக அழகான வரிகள் கொண்ட பாடல்!! கூடவே எஸ்.பி.பி யின் துல்லியமான உச்சரிப்போடு கூடிய இனிமையான குரல்,சின்னக்குயில் சித்ராவின் தேன்குரலோடு சேர்ந்து தெவிட்டாத விருந்து படைத்து விடும்!!
தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம்.
அந்த பொக்கிஷ மலையில் கடைந்தெடுத்த முத்துச்சரம் இந்தப்பாடலின் இசை என்று சொல்லலாம்.
இரண்டு பாடல்களும் இங்கே .......
http://www.youtube.com/watch?v=KkSOUrTMet8
http://www.youtube.com/watch?v=-s3cdlJFhes
யார் நன்றாக பாடியிருக்கிறார்கள் ? எது நல்ல ஜோடி - SPB/KJ - CHITRA ?
பயணம் 1976
நம்ம V .வீடு சுந்தரம் direction
மீண்டும் handsome ஸ்ரீகாந்த்
பாலாவின் இனிய குரல்
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ
வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு எந்நாள திருநாளோ
மின்னல் மேனி மேக குழலாள் தன்னை அறிவாளோ
பால் வண்ண பூ முல்லை பார்த்தால் போதாதோ
பாலை வனத்தில் காவிரி ஆறு பைரவி பாடாதோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ
கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தி தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
தழுவ போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி
http://www.youtube.com/watch?v=nINe0IgR0c8
http://asokarajanandaraj.blogspot.co...og-post_5.html
காலம் எனக்கொரு பாட்டு எழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீரலைகள்
தாவி பாயும் நினைவலைகள்
மேல உள்ள லிங்க் இல் ஒரு நல்ல அருமையான பாடல்
பாலாவின் 1970 குரல் போல் உள்ளது
படம் பௌர்னமி என்று இந்த லிங்க் இல் உள்ளது
இசை சங்கர் கணேஷ் போல் உள்ளது
ஜெய்/ரவி க்கு பாடுவது போல் உள்ளது
இந்த பாட்டை நிறய தடவை கேட்டு இருக்கிறேன்
ஆனால் படம் பெயர் தெரியவில்லை
நெட் இல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை
வேந்தர் சார்/முரளி சார்/கார்த்திக் சார்/கோபால் சார் ப்ளீஸ் ஹெல்ப்
எனக்கு பிடித்த பல பாடல்கள் படத்தில் நீக்க பட்டவை இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். பாலும் பழமும் படத்தில் இடம் பெற வேண்டியது.
https://www.youtube.com/watch?v=ptyn9VWa_MA
வெளிவராத ஞாயிறும் திங்களும் படத்தில் (சிவாஜி-தேவிகா இணை)
https://www.youtube.com/watch?v=ZjiRKDmIDjk
நடிகர்களை நான் வெறுத்தாலும் இரட்டையர்களின் இசை என் மனதை துள்ள வைக்கிறதே. என்னுடைய டி.எம்.எஸ் -பீ.எஸ் இணைவில் முதல் பத்தில் என்றும் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=0Lm7i6Dp9yY
இளைய தலைமுறை படத்தில் நான் ஆவலோடு எதிர்பார்த்து இடம் பெறாத பாடல். சிவாஜி-வாணிஸ்ரீ விளையாட்டு எப்படி இருந்திருக்கும்?ஆடியோ மட்டுமே கேட்டு மகிழவும். கேட்டாயே ஒரு கேள்வி.(Go to sight and right hand side you get song list numbered and click kettaye oru kelvi)
http://www.thatstamilsongs.com/songs...%20Thalaimurai
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.S .P .B பாடி பூவை செங்குட்டுவன் எழுதி, R .குலசேகர்(நம்ம திலிப் cum ரகுமான் அப்பாதான்) இசையமைத்த படம் பௌர்ணமி. படம் வெளியாகவில்லை. ஆனால் பாடல் படு popular சிலோன் புண்ணியம்.தமிழ் சேவை.
R .K .சேகர் மலையாளத்தில் பல அபூர்வ பாடல்களை தந்த திறமைசாலி.(ஏ.எம்.ராஜா வும் மலையாளத்தில் ஒதுங்கினார்)
மாப்பிள்ளா இசை என்ற பாணியில் பின்னியுள்ளார்.சுமார் 50 நல்ல பாடல்கள்.
வீ.குமாருக்கு associate ஆக பல படங்கள்.இவர் இசை கோர்ப்பு கவனித்தார். என்னதான் பாடுவது ,நாணலில் முழுக்க இவர் பணி என்று கேள்வி.அதிர்ஷ்டமில்லாமல் சிறு வயதில் அடைய வேண்டிய உயரம் தொடாமல்,முழு பலனையும் மகனுக்கு தந்து ,அகால மரணம் தழுவினார்.
என்னுடைய வேண்டுகோளையேற்று
'கல்லில் பூவெடுப்போம்' (துணிவே துணை) பாடலை காணொளியாக தந்த அன்பு வாசு சார் அவர்களுக்கும்,
'தேவன் வேதமும் கண்ணன் கீதையும்' (ராஜநாகம்) பாடலை காணொளியாக தந்த அன்பு கிருஷ்ணா சார் அவர்களுக்கும்,
பல்வேறு பாடல்களை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் அன்பு பாலா சார் அவர்களுக்கும்,
படங்களில் இடம்பெறாத பாடல்களைத் தேடிக்கொண்டுவந்து பதிப்பிக்கும் அன்பு கோபால் சார் அவர்களுக்கும்,
நன்றி... நன்றி... நன்றி....
'கேட்டாயே ஒரு கேள்வி' என்ற இந்தப் பாடலுக்கு பதிலாகத்தான் 'ஒரு அறை கொடுத்தால் தெரியும்' என்ற பாடல் படத்தில் இடம்பெற்றது.
இதுபோல 'பொம்பளையா லட்சணமா பொடவைய கட்டு' பாட்டுக்குப் பதிலாக 'சிங்காரத் தேர்கூட திரைமூடிப் போகும்' பாடல் இடம்பெற்றது.
இவையெல்லாம் நீக்கப்பட்டது கூட வருத்தமில்லை. ஆனால் அவன் ஒரு சரித்திரத்துக்காக இயற்றி இசையமைத்து பாடி ரெக்கார்ட் செய்த 'என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்' பாடலை நடிகர்திலகத்தின் வேறு ஒரு படத்தில் உபயோகப்படுத்தியிருக்கலாம்.
அந்தப்பாடலை 'பெருமைக்குரியவள்' படத்தில் சிவகுமாரும், பத்மப்ரியாவும் நடிக்கும்போது, டி.எம். எஸ். நடிகர்த்திலகத்துக்காகப்பாடும் வாய்ஸிலேயே பாடியிருப்பது நன்றாகத் தெரியும்.
ராஜகோபால் குலசேகர் என்கிற ஆர் .கே.சேகர் ,ஹிந்து வெள்ளாளர் .(1933-1976). இசை தொகுப்பாளர், உதவி இசை அமைப்பாளர்,இசை அமைப்பாளர் என பல பணிகள்.தக்ஷினாமூர்த்தி, குமார் என்று பலருக்கும் உதவியாளர். மலையாளத்தில் 53 படங்களுக்கு இசை 1964 தொடங்கி 1976 வரை.முதல் படம் பழசி ராஜா (1964)
மகன் திலீப் குமார் 1966 இல் பிறந்த prodigy .மகன் 10 வயதை கடக்குமுன்பே அமரராகி விட்டார்.
அவர் இசையமைத்த ,முதல் பாடல். கே.ஜே .யேசுதாசின் பொம்மை கால இளமை குரலில்.
http://www.youtube.com/watch?v=asnNjcTbDaQ
மாமா, காதல் கிளிகள் என்று ஒரு படம் 1979 இல் செய்ததாக ஞாபகம்.
நல்ல பாடல்கள்.(கொஞ்சம் பழைய வாடை. ஏணி படிகள் போல)
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0000980.jpg
1. செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
2. காதல் கிளியே... நீ ஏன் பேச மறந்தாய்
3. நதிக்கரையோரத்து நாணல்களே
என் நாயகன் புகழைக் கேளுங்களேன்
சுசீலா பின்னி எடுக்கும்
4. கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
இதுதான் நான்கிலும் டாப்.
சிவக்குமார், கமல், ரதி அக்னிஹோத்ரி நடித்திருப்பார்கள். டிராஜடி அதிகம். படம் போகவில்லை. ஆனால் கோபால் சார் சொன்னது போல் மாமாவின் மந்திர டியூன்கள் எப்போதும் போல இனிக்கும்.
காதல் கிளியே மாமாதான்.
Thanimayile from Sattam oru Irruttarai - Vijayakanth movie - Nice song.
Mr Neyveliar can upload the song.
Regards
கிருஷ்ணா சார்,
கண்களில் ஆனந்த்தத்தால் கண்ணீரே வந்து விட்டது சார்.
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை.
எப்போதோ கேட்டு கேட்டு ரசித்த 'காலம் எனக்கொரு பாட்டெழுதும்' பாடலை நினைவூட்டி பாடலுக்கான லிங்க் கொடுத்து அப்படியே நெஞ்சில் நிறைந்து விட்டீர்கள். கேட்கிறேன் கேட்கிறேன் மாலை முதல் கேட்கிறேன் சலிக்கவே இல்லை சார்.
http://www.youtube.com/watch?v=baKLFc_BSXg
ஜனகராஜ் - நகைச்சுவை நடிகராக இருந்தாலும் குணசித்திர பாத்திரங்களிலும் சிறந்து நடித்தவர். நான் புடிச்ச மாப்பிளே திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அளவில் பேர் பெற்றுத் தந்தது. இவர் ஓரிரு படங்களில் கதாநாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று பாய்மரக்கப்பல். இப்படத்திலும் அவருடைய நடிப்பு நம் நெஞ்சைத் தொடும்.
பாய்மரக் கப்பல் கே.வி.எம். அவர்களின் அருமையான பாடல்களைக் கொண்ட திரைப்படம். குறிப்பாக எஸ்.பி.பாலாவின் குரல் நம்மைக் கிறங்கடிக்கும். அதற்கு சான்று ஈரத்தாமரைப் பூவே பாடல்.
கேளுங்கள் பாருங்கள்
டியர் கார்த்திக் சார்,
தங்களது அன்புப் பாராட்டுதல்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள்.
தங்களுக்கு நாளை ஒரு அதிசயம் காத்திருக்கிறது.
வருக அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களே!
தங்கள் ஆசை நிறைவேறும் இப்போது.
சுரேந்தர், ஜானகி பாடும் இந்தப் பாடல் என் விருப்பப் பாடலும் கூட.
http://www.youtube.com/watch?feature...&v=n73Hio6QCHM
ராகவேந்திரன் சார்
'ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை' பாடல் நான் முற்றிலும் எதிர்பாராத அசத்தல்.
பல சந்தர்ப்பங்களில் திரைப்படங்களில் இடம் பெறாத, அல்லது வெளிவராத திரைப்படப் பாடல்கள் நம்மை மிகவும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் பாலு மகேந்திராவின் பஞ்சமி. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மாலை முரசு நாளிதழில் விரிவாக ஒரு பக்கம் முழுதும் எழுதியிருந்தார்கள். படிக்கும் போது படம் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டியது. அதற்கேற்றார்போல் இளையராஜாவின் இசையில் பாடல்கள் முன்கூட்டியே பிரபலமாகி விட்டன. இறுதி வரை திரையைக் காணாத பஞ்சமி திரைப்படத்தின் பாடல்கள் எப்போது கேட்டாலும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அதில் மிகப் பிரபலமானது உதயகாலமே பாடல் நம்மில் பெரும்பாலானோர் கேட்டிருப்பர். அதைத் தவிர்த்து இன்னொரு பாடல் மலேசியா வாசுதேவன் பாடிய மாலை வெயில் சிந்து என்கிற இந்தப் பாடல். இனிமையான, நெஞ்சைத் தாலாட்டும் இப்பாடலை நீங்களும் கேளுங்கள்
http://download.tamiltunes.com/songs...ilWire.com.mp3
இதே போல பஞ்சமி திரைப்படத்தில் என்னை மிக மிக ஈர்த்த பாடல் தங்களையும் தான்... கேளுங்களேன்...
இளையராஜாவை மக்கள் ஏன் இந்த அளவிற்கு ரசிக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இப்பாடல்.
பனிக்காற்றின் குளுமை... ஜானகியின் குரல் தங்கள் மேல் கட்டி மேல் கட்டியாய் பனிக்கட்டியை வைப்பது போல் அவ்வளவு குளுமையாக இருக்கும்.
http://download.tamiltunes.com/songs...ilWire.com.mp3
அங்கிங்கெனாதபடி எங்கும் இளையராஜாவின் புகழ் பரப்பிய பாடல்களில் இதுவும் ஒன்று...
உதயகாலமே நனைந்த மேகமே...
http://download.tamiltunes.com/songs...ilWire.com.mp3
கூடவே வரும் கிடார் தங்கள் நாடி நரம்பை மீட்டுவது போல் உணர்வீர்கள்
நாம் ஜாலியான திரியில் கரடியாய் புகுந்து ராகம் பாடுகிறோமோ என்று சந்தேகம் கொண்டிருந்த போது ,இந்த திரிக்கு பதிவாளனாய் என்னை ஓடி வர செய்த கார்த்திக்,முரளியின் உற்சாக வார்த்தைகள் எனக்கு உரம். நன்றி வாசு.(எனக்கு நானே போல ).ராகவேந்தர் சார், நீங்கள் ரசித்தால் எனக்கு அது ரிப்போர்ட் கார்ட் போல .நன்றி. திரியின் டெண்டுல்கர் கிருஷ்ணாஜியின் ஊக்கத்துக்கு நன்றி.
இசையும் ,நம் சினிமாக்களும் பின்னி பிணைந்தவை. நடிகர்களுக்கும்,கதை,இயக்குனர் அடுத்து முக்கிய பங்கு இசையமைப்பாளர்களுக்கே. அந்நாட்களில் இருந்து ,இந்நாட்கள் வரை ஒரு மூன்று பாடல்களாவது popular ஆகி விட்டால் ,அந்த படங்களின் வீச்சே தனி. இசை பற்றிய திரி என்பதால்,61 முதல் 72 வரையான ,தமிழின் பொற்காலம் என்று நான் கருதும் காலத்தின் ,வசூலில் வருட வாரியாக முதலிடம் பெற்ற படங்களையும் அவற்றின் இசையமைப்பாளர்களையும் ,மற்றும் முக்கிய பாடல்களையும் பார்ப்போம்.
1961- பாவ மன்னிப்பு- விஸ்வநாதன் -ராமமூர்த்தி.- காலங்களில்,அத்தான் என்னத்தான்,பாலிருக்கும்,எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,சிலர் சிரிப்பார்.
1962- ஆலயமணி-விஸ்வநாதன்-ராமமூர்த்தி.-கல்லெல்லாம்,சட்டி சுட்டதடா,தூக்கம் உன் கண்களை ,பொன்னை விரும்பும்,கண்ணான கண்ணனுக்கு,மானாட்டம்.
1963- கற்பகம்- விஸ்வநாதன் -ராமமூர்த்தி- மன்னவனே, ஆயிரம் இரவுகள்,அத்தை மடி,பக்கத்து வீட்டு.
1964- காதலிக்க நேரமில்லை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி-நாளாம் நாளாம்,நெஞ்சத்தை அள்ளி ,மலரென்ற முகமின்று, அனுபவம் புதுமை,உங்க பொன்னான, விஸ்வநாதன் வேலை வேண்டும்,
என்ன பார்வை.
1965- எங்க வீட்டு பிள்ளை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி-நான் ஆணையிட்டால் ,குமரி பெண்ணின்,நான் மாந்தோப்பில்,பெண் போனால்,மலருக்கு தென்றல்.
1966-சரஸ்வதி சபதம்- கே.வீ.மகாதேவன்-கோமாதா, தெய்வம் இருப்பது,அகர முதல எழுத்தெல்லாம்,தாய் தந்த,கல்வியா செல்வமா,ராணி மகாராணி,உருவத்தை காட்டிடும்.
1967- நான்- டி.கே.ராமமூர்த்தி- போதுமோ இந்த இடம்,அட பாதங்களே,அம்மனோ சாமியோ,வந்தால் என்னோடு,க்வாக் க்வாக்.
1968- பணமா பாசமா-கே.வீ.மகாதேவன்-எலந்த பயம்,அலேக் வாழைத்தண்டு போல,மெல்ல மெல்ல,மாறியது நெஞ்சம்,சின்னஞ்சிறு வீடு.
1969-அடிமை பெண்- கே.வீ.மகாதேவன்-ஆயிரம் நிலவே,தாயில்லாமல்,அம்மா என்றால்,ஏமாற்றாதே,உன்னை பார்த்து.
1970- மாட்டுக்கார வேலன்-கே.வீ.மகாதேவன்-ஒரு பக்கம் பாக்கிறா,பட்டிக்காடா பட்டணமா,பூ வைத்த, சத்தியம் நீயே,தொட்டு கொள்ளவா.
1971- ஆதி பராசக்தி-கே.வீ.மகாதேவன்- மாயீ மகமாயி, சொல்லடி அபிராமி,ஆத்தாடி மாரியம்மா,நானாட்சி செய்து வரும்,வருகவே வருவே.
1972- வசந்த மாளிகை-கே.வீ.மகாதேவன்-மயக்கம் என்ன,குடிமகனே,ஏன் ஏன் ஏன்,இரண்டு மனம்,யாருக்காக,கலைமகள்,ஒ மானிட ஜாதியே.
கீரவாணி.
ஒரு ராகம் ,உங்கள் அறியாத உள்மன அடுக்குகளில் புகுந்து, நீங்கள் அறியாத உணர்வுகளை கிண்டி ,இன்ப விகசிப்பை தந்து ,இன்னும் தேடு தேடு என்று உங்கள் கண்களை சொக்க வைக்கிறதா?
இந்த ராகத்தை நினைக்கும் போது ,இளையராஜாவை எண்ணாமல் இருக்க முடியாது.இந்த ராகத்துக்கே புது பரிமாணம் கொடுத்தவர்.அவருக்கு பட்டமே கொடுக்கலாம் கீரவாணி ராஜா என்று.
இது ஒரு அசல் கர்நாடக மேளகர்த்தா ராகம். இதற்கு மிக நெருங்கிய இன்னொரு மேளகர்த்தா சிம்மேந்திர மத்யமம்.இதன் ஜன்ய ராகம் கல்யாண வசந்தம் ஒரு அபூர்வ ராகமாகும்.இது ஹிந்துஸ்தானிக்கும் இங்கிருந்து சென்றது.(நம் மேளகர்த்தாவை அவர்கள் thaat என்பார்கள்)மேற்கத்திய இசையில் மிக பிரபல ராகம் இது (harmonic Minor Scale ).மேளகர்த்தா ராகம் 12 சக்கரமாக ஆறு ஆறாக பிரிக்க பட்டுள்ளது.இது நாலாவது சக்கரம் 4 வேதத்தையும் குறிக்கும் பகுப்பில் வரும்.
என்னுடைய மிக மிக நெருங்கிய குடும்ப நண்பரும் ,பிரபல இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் land mark commercial படமாக வந்த ஜானி.(எனக்கு அவ்வளவு பிடிக்காவிட்டாலும் ,அற்புதமான சில அழகுணர்ச்சி காட்சிகள் கொண்டது)காதலனை ,காதலை காற்றில் தேடும் அந்த பாடக காதலியின் மழையில் ,ரசிகரின்றி பாடும் மேடை பாடலின் ,ஜானகியின் தேடும் குரலில் ,ராஜாவின் அபூர்வ உன்னத இசையமைப்பு. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ".இது வரை இந்த மாதிரி பாடல் எங்கே தேடினாலும் காணவில்லை.
அந்த அபூர்வ இரட்டையர் தமிழின் இசை பொற்காலத்தை நிர்ணயித்த ,தமிழின் மிக சிறந்த பாடல்களை தந்த இணை.அவர்களையே ஒரு பாடல் composition படுத்தி எடுத்ததாம்.முற்பிறவி சூழ்ந்த ,இப்பிறவி ஜோடி பாட வேண்டிய இதயத்தை பல பிறவிகளுக்கு அலைய விட வேண்டிய haunting melody .பல மாதங்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவர்களை சோதித்து குதித்தோடி வந்த அதிசயம் "நெஞ்சம் மறப்பதில்லை".
தமிழுக்கு புதிதான ஹிந்துஸ்தானி-கர்நாடக-மேற்கத்திய பாணிகளில் புகுந்து புறப்பட்டு trend -setter ஆக சாதித்த அந்த பாடக-இசையமைப்பாளரின் , இசைக்காகவே இன்றும் பேச படும் அபூர்வ தேனிலவின் ,இன்றும் உங்கள் மனதை குதிரையேற்றி ,வானுக்கு அனுப்பும் "பாட்டு பாடவா".(boogey boogey rhythm என்ற மேற்கத்திய இணைப்பில்)
கீரவாணியில் என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்.
எனை காணவில்லையே நேற்றோடு-காதல் தேசம்.
பூங்காற்றிலே - உயிரே.
என்னை தாலாட்ட வருவாளோ- காதலுக்கு மரியாதை.
பாடி பறந்த கிளி- கிழக்கு வாசல்.
போவோமா ஊர் கோலம்- சின்ன தம்பி.
இன்பமே உந்தன் பேர் - இதய கனி.
மன்றம் வந்த தென்றலுக்கு- மௌன ராகம்.
மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி.
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு -பொன்னு மணி.
மனிதா மனிதா இனி உன் விழிகள்-கண் சிவந்தால் மண் சிவக்கும்.
கோபால் சார்
இன்னா சாத்து சாத்துறீங்க. டெண்டுல்கரை ஒப்பு நோக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி உங்கள் வாழ்த்து மிக சிறந்த உரம் .நடிகர் திலகத்தால் இணைந்தோம். இசையில் கலந்தோம் . இசைபட வாழ்வோம்
மெல்லிசை இர ட்டயர்கள்,திரை இசை திலகம் ,மெல்லிசை மாமன்னர் ராமமூர்த்தி paadalgalil சிறந்த வற்றை தேர்ந்துடுத்து லிஸ்ட் கொடுத்து
உள்ளீர்கள் .எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
கீரவாணி ராகம் அருமை அலசல் .
வேந்தர் சார்
பஞ்சமி பாடல்கள் அனைத்தும் அருமை . வெளி வராத படங்களில் இது போன்று நல்ல நல்ல பாடல்கள் எல்லாம் உள்ளன கேட்டு மகிழ்வோம்
வாசு சார்
மிக்க நன்றி . காதல் கிளிகள் பாடல்கள்
செவ்வானமே சீர்கொண்டு வா ,நதி கரை ஓரத்து நாணல்களே இரண்டும்
ஜேசுதாஸ் - சைலஜா என்று நினவு
நம்ம திருலோக் அண்ணா direction என்றும் நினவு
சுஜாதாவின் கல்கி இதழில் இதை ஒத்த கதை ஒன்று வெளி வந்தது
p c ஸ்ரீராம் இயக்கிய வானம் வசப்படும் திரைப்படமும் இதே கதை என்று . நினவு . 3 அல்லது 4 ரௌடிகள் சிவகுமாரை அடித்து விட்டு ரதியை பலாத்காரம் செய்து விடுவார்கள் . கணவன் மனைவி இருவரும் இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பார்கள்
ரதி அன்றே மாவு அரைத்து அன்றே வார்த்த தோசை போன்ற வெழுமுன வெள்ளிகட்டி தோசை போன்று இருப்பார்
வணக்கம் கிருஷ்ணா சார்,
காலையிலிருந்து இணைய இணைப்பு படு ஸ்லோ. அதுதான் வரமுடிய வில்லை.
இன்றைய ஸ்பெஷல் (16)
இன்றைய ஸ்பெஷலாக அழகான, அரிதான ஒரு தத்துவப் பாடல்.
http://i1.ytimg.com/vi/H9WAspPKKeU/maxresdefault.jpg
'டெல்லி மாப்பிள்ளை' என்றொரு படம்.
அனைவருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத படம். 1968-ல் வெளிவந்த இப்படத்தில் ஹீரோ ரவிச்சந்திரன், ஹீரோயின் ராஜஸ்ரீ. இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். அற்புதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல் இப்படத்திலுண்டு. 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடியவர் திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மிகச் சிறந்த கற்பனை வளம் கொண்ட இப்பாடலை இயற்றிய கவிஞருக்கு இப்படிப்பட்ட சிந்தனை எப்படித் தோன்றியது என்பதை இன்றளவும் நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யம் குறைந்தபாடில்லை.
அன்பை பிரதானமாக விளக்கும் இப்பாடலின் வரிகளைப் பாருங்கள்.
ஆண்டவன் ஒருநாள் கடை வைத்து பல பொருள்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும், பல்வேறு மக்கள் அவரவர்களுக்கு விருப்பப்பட்ட, சுயநலம் கொண்ட, பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்வதாகவும், ஆனால் யாருமே அன்பை மட்டும் வாங்க மறந்து விட்டதாகவும் கவிஞர் அருமையான சங்கதிகள் கூறுகிறார். என்ன ஒரு கற்பனை!
http://i1.ytimg.com/vi/BGJ3GfNgZqQ/hqdefault.jpg
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்
எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை
அன்பை வாங்கிட எவரும் இல்லை
படித்தீர்களா? எப்படி? ஆண்டவன் விரித்து வைத்த கடையில்
பெண்கள் அழகை மட்டுமே வாங்கி,
ஆண்கள் ஆசையை மட்டுமே வாங்கி,
தலைவர்கள் புகழை மட்டுமே வாங்கி,
புலவர்கள் பொய்களை மட்டுமே வாங்கி,
குருடர்கள் விழிகளை கேட்டு,
ஊமைகள் மொழியை கேட்டு,
உறவினர் இறந்தவரின் உயிரைக் கேட்டு,
வேறு சிலர் சும்மா ஒப்புக்கு மேலுக்கு விலை கேட்டார்கள்.
ஆனால் 'இதயம்' என்ற செல்வத்தைத் தந்து 'அன்பு' என்னும் அரிய பொருளை வாங்கத்தான் எவரும் மறந்து விட்டார்கள்.
என்ன ஒரு படிப்பினையை உணர்த்தும் பாடல்! உண்மைதானே! அன்பு அரை கிலோ விலை என்னவென்று கேட்கும் காலமல்லவோ இது!
அருமையான மனதை மயக்கும் அமைதியான இசை. தென்றலாய் நம் மனதை வருடும் பாடல். நடுவில் கவர்ச்சிப் பாவையாய் ராஜஸ்ரீ. அழகான ரவிச்சந்திரன்.
அருமையான விசில் சப்தத்துடன் தொடங்கும் இப்பாடல் என் மனதில் மட்டுமல்ல. உங்கள் அனைவர் மனதிலும் இனி நீங்கா இடம் பெறட்டும். பெறத்தான் வேண்டும்.
இப்போது பாடலைப் பார்க்கலாமா?
http://www.youtube.com/watch?v=BGJ3GfNgZqQ&feature=player_detailpage
சிம்மேந்திர மத்யமம்.
சிறு வயதில், ஒரு படம் வெளியாகும் செய்தி தெரிந்து, அந்த படம் போகும் நாளை எண்ணியே 20 நாள் கழித்த அனுபவம் உண்டா?(மாசம் முதல் பத்தில் ரிலீஸ் ஆவது ,அப்பாவிடம் டிக்கெட் சில்லறை வாங்குவதை சுளு வாக்கும்)
ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்து ,அவள் வாங்கி சென்றும் ,ஒரு பத்து நாட்கள் reaction இல்லாத,இன்ப எதிர்பார்ப்பில் மிதந்திருக்கிறீர்களா?
கல்யாணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள். கல்யாண நாளை எண்ணி எண்ணி காலம் கடத்தியதுண்டா?கல்யாணம் முடிந்த பிறகு ,குல தெய்வம் காவடி எடுத்த பின்பே முதலிரவு.காவடிக்கு இன்னும் ஐந்து நாட்கள் . துடித்திருக்கீர்களா வர போகும் இன்பத்தை எதிர்பார்த்து?
இந்த ராகம் ஒரு anxiety (positive ) என்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
காத்திருப்பு,எதிர்பார்ப்பு ஒரு இன்ப காரியத்துக்காக என்று இந்த ராகம் எல்லாம் இன்பமயம் என்ற உணர்வை கொடுக்கும்.
ஐயோ, இந்த ஜோடி வாழ்க்கையில் இணைந்திருக்க கூடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கு அளித்த ஒரு all time pair சிவாஜி-பத்மினி.(நடிகர்திலகமும் ,நண்பர் சிதம்பரத்திடம் வெளியிட்டுள்ளார். பத்மினி ,இலங்கை எழுத்தாளர் முத்து லிங்கத்திடம் ) பின்னால் வர போகும் இந்த ஜோடியின் சீனியர் அறிமுகம் பப்பிம்மாவிற்கு.என்.எஸ்.கே தயவில் மணமகள் படத்தில்.பின்னால் பணத்தில் (1952) இந்த ஜோடி இணைந்தது. பப்பி வேடிக்கையாக எனக்கு தாலி கட்டிய(ஷூட்டிங் ) பின்பே மனைவிக்கு(நிஜத்தில்) என்பார்.அந்த அறிமுக படத்தில் பிரபல நடன பாடல் "எல்லாம் இன்ப மயம்."
தான் காதலித்த பெண்,தன் நண்பனை விரும்புவது அறிந்து ,தன் ஆசை துறந்து ,நண்பனுக்கே அவளை மணமுடிக்கிறான்.(மிரட்டி)ஒரு சகோதர ஸ்தானத்தில் நின்று. அவள் பூமுடிக்கும் நாளை கற்பனை கண்டு ,ரகு ராமன் வரவேற்க சிவராமன்-ராஜேஸ்வரி திருமணம் இனிதே நிறைவுற்று விடை பெறுகிறான்.(எங்கே விடை பெற விட்டார் நண்பர்?ஒரேயடியாகவல்லவா விடை கொடுத்து விடுவார்?) அந்த Epic Song "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி".
டீன் ஏஜில் இருக்கும் போது நான் நினைப்பதுண்டு. இயக்குனர் ஆனால் இந்த வாழ்கையை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று. அப்போது வாழ்க்கையில் இரண்டே பருவம். குழந்தை(கல்யாணம் வரை)-வாலிபன்(கல்யாணம் ஆனதும்).இரண்டுங்கெட்டான் பருவத்திற்கு மதிப்பே இல்லை. நண்பன் ஒரு நாள் என்னிடம் சொன்னது.... தேவிகலா சென்று பார்.உன் கனவை கோகிலா இயக்குனர் திருடி விட்டார் என்று.அழியாத கோலங்களாய் அப்படம். இதை தொடர்ந்து இன்னொரு ஸ்ரீதர் உதவியாளர்களின் (ஸ்ரீதர் ஒ மஞ்சு அரை வேக்காடு) தொடர்ந்த முயற்சி பன்னீர் புஷ்பங்கள். எனது பிரிய பாடகி உமா ரமணன் (நல்ல வேலை ராஜா புண்ணியம் வைத்து ஜானகி தவிர்த்தார்) அருமையான குரலில் "ஆனந்த ராகம் கேட்கும் காலம்".
சிம்மேந்திர மத்யமம் மற்ற பாடல்கள்.
தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா-கோபுர வாசலிலே.
தாஜ் மகால் தேவையில்லை அன்னமே-அமராவதி
நீ பௌர்ணமி என்றும் என் வாழ்விலே-ஒருவர் வாழும் ஆலயம்.
ராகவேந்திரா சார்,
தேடி தேடி ,தமிழுக்கு ஓலை சுவடி கொணர்ந்த தமிழ் தாத்தா உ .வே.சா போல ,இசை திரிக்கு அபூர்வ பாடல்களை கொணரும் நீங்கள் இசை தாத்தா. (பஞ்சமி அமர்க்களம்.நன்றிகள்)
வாசு,
கடவுள் கடை விரித்தால் ,அன்பை விலைக்காவது வாங்கி முழுக்க உன்னிடம் தந்து விடுவேன். (இல்லாதவர்களுக்கு கொடுப்பது என் பிறவி குணம்)
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இயக்குனர்களின் பாணி.
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' குறுந்தொடர் (1)
http://3752ph102dgl405f3e3yvdrpili.w...ust-Relax..jpg
இயக்குனர் 'ராமண்ணா'
இவர் பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் ரொம்ப ஆடம்பரம் தெரியும்.
கதாநாயகன் கதாநாயகியையும், கதாநாயகி கதாநாயகனையும் கிண்டல் செய்து பாடும் பாட்டு ஒன்றை பெரும்பாலும் தவறாமல் வைத்து விடுவார்.
கதாநாயகியரை கடல், நீச்சல் குளம், பாத் டப் இவற்றில் கண்டிப்பாக குளிக்க விடுவார். கதாநாயகனும் உடன் இருப்பார்.
கதாநாயகியர் மீது சேற்றையோ, பெயின்ட்டையோ வாரி இறைப்பதில் இவருக்கு அலாதி சுகம். பெயின்ட்டை நாயகி உடலில் முழுதுமாகப் பீச்சியடிப்பார்.
அதே போல நாயகனையும், நாயகியையும் ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து பெட்டிக்குள்ளேயோ அல்லது காருக்குள்ளேயோ சுற்றி சுற்றி வந்து பாட விடுவார்.
நாயகியரை எப்படியாவது ஸ்விம்மிங் டிரெஸ்சில் காண்பித்து விடுவார்.
குத்துப்பாட்டு நிச்சயம் உண்டு. போட்டிப் பாடல்களும் வைத்து விடுவார்.
கதாநாயகனுக்கு கிழ வேஷம் போட்டு இளசுகளை கிண்டலடித்துப் பாட வைத்துப் படமாக்குவார்.
நாயகியரை குட்டைப் பாவையுடன் சர்க்கஸ் பொம்மை போல் காட்டுவதில் இவருக்கு அலாதி பிரியம்.
பாடல் காட்சிகளை கொஞ்சம் அதிகமாக வைப்பார். நாயகன் உடை விஷயத்தில் மிக்க கவனம் செலுத்துவார்.
நாயகி உடை விஷயத்தில் கொஞ்சம்தான்:) கவனம் செலுத்துவார்.
மீதியை நம் கோபால் எழுதுவார்.
சேம்பிளுக்கு ஒரு அருமையான பாடல். 'நான்' படத்தில் ரவிச்சந்திரனும், மேடமும் நீச்சல் குளத்தில் பாடும் 'குவாக் குவாக்' பாடல்.
http://i1.ytimg.com/vi/t7KRiLQd2_c/m...jpg?v=534f7945
அதே முகம்
அதே குணம்
அதே மனம் என்னிடம்
ரவியின் அம்சமான டான்ஸ்.... நீச்சல் குளம்....கலைச்செல்வியின் கொள்ளை அழகு பிளஸ் கிளாமர்.
ராமண்ணா கமர்ஷியலாக படமெடுப்பதில் வல்லவர். பாடல்களையும் தான்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ow5kj3u0kq4