Page 112 of 400 FirstFirst ... 1262102110111112113114122162212 ... LastLast
Results 1,111 to 1,120 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1111
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் ஜாலியான திரியில் கரடியாய் புகுந்து ராகம் பாடுகிறோமோ என்று சந்தேகம் கொண்டிருந்த போது ,இந்த திரிக்கு பதிவாளனாய் என்னை ஓடி வர செய்த கார்த்திக்,முரளியின் உற்சாக வார்த்தைகள் எனக்கு உரம். நன்றி வாசு.(எனக்கு நானே போல ).ராகவேந்தர் சார், நீங்கள் ரசித்தால் எனக்கு அது ரிப்போர்ட் கார்ட் போல .நன்றி. திரியின் டெண்டுல்கர் கிருஷ்ணாஜியின் ஊக்கத்துக்கு நன்றி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1112
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இசையும் ,நம் சினிமாக்களும் பின்னி பிணைந்தவை. நடிகர்களுக்கும்,கதை,இயக்குனர் அடுத்து முக்கிய பங்கு இசையமைப்பாளர்களுக்கே. அந்நாட்களில் இருந்து ,இந்நாட்கள் வரை ஒரு மூன்று பாடல்களாவது popular ஆகி விட்டால் ,அந்த படங்களின் வீச்சே தனி. இசை பற்றிய திரி என்பதால்,61 முதல் 72 வரையான ,தமிழின் பொற்காலம் என்று நான் கருதும் காலத்தின் ,வசூலில் வருட வாரியாக முதலிடம் பெற்ற படங்களையும் அவற்றின் இசையமைப்பாளர்களையும் ,மற்றும் முக்கிய பாடல்களையும் பார்ப்போம்.


    1961- பாவ மன்னிப்பு- விஸ்வநாதன் -ராமமூர்த்தி
    .- காலங்களில்,அத்தான் என்னத்தான்,பாலிருக்கும்,எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,சிலர் சிரிப்பார்.

    1962- ஆலயமணி-விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    .-கல்லெல்லாம்,சட்டி சுட்டதடா,தூக்கம் உன் கண்களை ,பொன்னை விரும்பும்,கண்ணான கண்ணனுக்கு,மானாட்டம்.

    1963- கற்பகம்- விஸ்வநாதன் -ராமமூர்த்தி
    - மன்னவனே, ஆயிரம் இரவுகள்,அத்தை மடி,பக்கத்து வீட்டு.

    1964- காதலிக்க நேரமில்லை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி-நாளாம் நாளாம்,நெஞ்சத்தை அள்ளி ,மலரென்ற முகமின்று, அனுபவம் புதுமை,உங்க பொன்னான, விஸ்வநாதன் வேலை வேண்டும்,
    என்ன பார்வை.

    1965- எங்க வீட்டு பிள்ளை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி-நான் ஆணையிட்டால் ,குமரி பெண்ணின்,நான் மாந்தோப்பில்,பெண் போனால்,மலருக்கு தென்றல்.

    1966-சரஸ்வதி சபதம்- கே.வீ.மகாதேவன்-கோமாதா, தெய்வம் இருப்பது,அகர முதல எழுத்தெல்லாம்,தாய் தந்த,கல்வியா செல்வமா,ராணி மகாராணி,உருவத்தை காட்டிடும்.

    1967- நான்- டி.கே.ராமமூர்த்தி
    - போதுமோ இந்த இடம்,அட பாதங்களே,அம்மனோ சாமியோ,வந்தால் என்னோடு,க்வாக் க்வாக்.

    1968- பணமா பாசமா-கே.வீ.மகாதேவன்-எலந்த பயம்,அலேக் வாழைத்தண்டு போல,மெல்ல மெல்ல,மாறியது நெஞ்சம்,சின்னஞ்சிறு வீடு.

    1969-அடிமை பெண்- கே.வீ.மகாதேவன்-ஆயிரம் நிலவே,தாயில்லாமல்,அம்மா என்றால்,ஏமாற்றாதே,உன்னை பார்த்து.

    1970- மாட்டுக்கார வேலன்-கே.வீ.மகாதேவன்
    -ஒரு பக்கம் பாக்கிறா,பட்டிக்காடா பட்டணமா,பூ வைத்த, சத்தியம் நீயே,தொட்டு கொள்ளவா.

    1971- ஆதி பராசக்தி-கே.வீ.மகாதேவன்- மாயீ மகமாயி, சொல்லடி அபிராமி,ஆத்தாடி மாரியம்மா,நானாட்சி செய்து வரும்,வருகவே வருவே.

    1972- வசந்த மாளிகை-கே.வீ.மகாதேவன்-மயக்கம் என்ன,குடிமகனே,ஏன் ஏன் ஏன்,இரண்டு மனம்,யாருக்காக,கலைமகள்,ஒ மானிட ஜாதியே.
    Last edited by Gopal.s; 29th June 2014 at 07:08 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1113
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கீரவாணி.

    ஒரு ராகம் ,உங்கள் அறியாத உள்மன அடுக்குகளில் புகுந்து, நீங்கள் அறியாத உணர்வுகளை கிண்டி ,இன்ப விகசிப்பை தந்து ,இன்னும் தேடு தேடு என்று உங்கள் கண்களை சொக்க வைக்கிறதா?

    இந்த ராகத்தை நினைக்கும் போது ,இளையராஜாவை எண்ணாமல் இருக்க முடியாது.இந்த ராகத்துக்கே புது பரிமாணம் கொடுத்தவர்.அவருக்கு பட்டமே கொடுக்கலாம் கீரவாணி ராஜா என்று.

    இது ஒரு அசல் கர்நாடக மேளகர்த்தா ராகம். இதற்கு மிக நெருங்கிய இன்னொரு மேளகர்த்தா சிம்மேந்திர மத்யமம்.இதன் ஜன்ய ராகம் கல்யாண வசந்தம் ஒரு அபூர்வ ராகமாகும்.இது ஹிந்துஸ்தானிக்கும் இங்கிருந்து சென்றது.(நம் மேளகர்த்தாவை அவர்கள் thaat என்பார்கள்)மேற்கத்திய இசையில் மிக பிரபல ராகம் இது (harmonic Minor Scale ).மேளகர்த்தா ராகம் 12 சக்கரமாக ஆறு ஆறாக பிரிக்க பட்டுள்ளது.இது நாலாவது சக்கரம் 4 வேதத்தையும் குறிக்கும் பகுப்பில் வரும்.

    என்னுடைய மிக மிக நெருங்கிய குடும்ப நண்பரும் ,பிரபல இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் land mark commercial படமாக வந்த ஜானி.(எனக்கு அவ்வளவு பிடிக்காவிட்டாலும் ,அற்புதமான சில அழகுணர்ச்சி காட்சிகள் கொண்டது)காதலனை ,காதலை காற்றில் தேடும் அந்த பாடக காதலியின் மழையில் ,ரசிகரின்றி பாடும் மேடை பாடலின் ,ஜானகியின் தேடும் குரலில் ,ராஜாவின் அபூர்வ உன்னத இசையமைப்பு. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ".இது வரை இந்த மாதிரி பாடல் எங்கே தேடினாலும் காணவில்லை.

    அந்த அபூர்வ இரட்டையர் தமிழின் இசை பொற்காலத்தை நிர்ணயித்த ,தமிழின் மிக சிறந்த பாடல்களை தந்த இணை.அவர்களையே ஒரு பாடல் composition படுத்தி எடுத்ததாம்.முற்பிறவி சூழ்ந்த ,இப்பிறவி ஜோடி பாட வேண்டிய இதயத்தை பல பிறவிகளுக்கு அலைய விட வேண்டிய haunting melody .பல மாதங்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவர்களை சோதித்து குதித்தோடி வந்த அதிசயம் "நெஞ்சம் மறப்பதில்லை".

    தமிழுக்கு புதிதான ஹிந்துஸ்தானி-கர்நாடக-மேற்கத்திய பாணிகளில் புகுந்து புறப்பட்டு trend -setter ஆக சாதித்த அந்த பாடக-இசையமைப்பாளரின் , இசைக்காகவே இன்றும் பேச படும் அபூர்வ தேனிலவின் ,இன்றும் உங்கள் மனதை குதிரையேற்றி ,வானுக்கு அனுப்பும் "பாட்டு பாடவா".(boogey boogey rhythm என்ற மேற்கத்திய இணைப்பில்)

    கீரவாணியில் என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.


    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்.

    எனை காணவில்லையே நேற்றோடு-காதல் தேசம்.

    பூங்காற்றிலே - உயிரே.

    என்னை தாலாட்ட வருவாளோ- காதலுக்கு மரியாதை.

    பாடி பறந்த கிளி- கிழக்கு வாசல்.

    போவோமா ஊர் கோலம்- சின்ன தம்பி.

    இன்பமே உந்தன் பேர் - இதய கனி.

    மன்றம் வந்த தென்றலுக்கு- மௌன ராகம்.

    மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி.

    நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு -பொன்னு மணி.

    மனிதா மனிதா இனி உன் விழிகள்-கண் சிவந்தால் மண் சிவக்கும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1114
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கோபால் சார்

    இன்னா சாத்து சாத்துறீங்க. டெண்டுல்கரை ஒப்பு நோக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி உங்கள் வாழ்த்து மிக சிறந்த உரம் .நடிகர் திலகத்தால் இணைந்தோம். இசையில் கலந்தோம் . இசைபட வாழ்வோம்

    மெல்லிசை இர ட்டயர்கள்,திரை இசை திலகம் ,மெல்லிசை மாமன்னர் ராமமூர்த்தி paadalgalil சிறந்த வற்றை தேர்ந்துடுத்து லிஸ்ட் கொடுத்து
    உள்ளீர்கள் .எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

    கீரவாணி ராகம் அருமை அலசல் .

    வேந்தர் சார்

    பஞ்சமி பாடல்கள் அனைத்தும் அருமை . வெளி வராத படங்களில் இது போன்று நல்ல நல்ல பாடல்கள் எல்லாம் உள்ளன கேட்டு மகிழ்வோம்

    வாசு சார்

    மிக்க நன்றி . காதல் கிளிகள் பாடல்கள்
    செவ்வானமே சீர்கொண்டு வா ,நதி கரை ஓரத்து நாணல்களே இரண்டும்
    ஜேசுதாஸ் - சைலஜா என்று நினவு
    நம்ம திருலோக் அண்ணா direction என்றும் நினவு
    சுஜாதாவின் கல்கி இதழில் இதை ஒத்த கதை ஒன்று வெளி வந்தது
    p c ஸ்ரீராம் இயக்கிய வானம் வசப்படும் திரைப்படமும் இதே கதை என்று . நினவு . 3 அல்லது 4 ரௌடிகள் சிவகுமாரை அடித்து விட்டு ரதியை பலாத்காரம் செய்து விடுவார்கள் . கணவன் மனைவி இருவரும் இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பார்கள்

    ரதி அன்றே மாவு அரைத்து அன்றே வார்த்த தோசை போன்ற வெழுமுன வெள்ளிகட்டி தோசை போன்று இருப்பார்
    gkrishna

  6. #1115
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் கிருஷ்ணா சார்,

    காலையிலிருந்து இணைய இணைப்பு படு ஸ்லோ. அதுதான் வரமுடிய வில்லை.
    Last edited by vasudevan31355; 29th June 2014 at 01:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1116
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (16)

    இன்றைய ஸ்பெஷலாக அழகான, அரிதான ஒரு தத்துவப் பாடல்.



    'டெல்லி மாப்பிள்ளை' என்றொரு படம்.

    அனைவருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத படம். 1968-ல் வெளிவந்த இப்படத்தில் ஹீரோ ரவிச்சந்திரன், ஹீரோயின் ராஜஸ்ரீ. இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். அற்புதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல் இப்படத்திலுண்டு. 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடியவர் திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மிகச் சிறந்த கற்பனை வளம் கொண்ட இப்பாடலை இயற்றிய கவிஞருக்கு இப்படிப்பட்ட சிந்தனை எப்படித் தோன்றியது என்பதை இன்றளவும் நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யம் குறைந்தபாடில்லை.

    அன்பை பிரதானமாக விளக்கும் இப்பாடலின் வரிகளைப் பாருங்கள்.

    ஆண்டவன் ஒருநாள் கடை வைத்து பல பொருள்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும், பல்வேறு மக்கள் அவரவர்களுக்கு விருப்பப்பட்ட, சுயநலம் கொண்ட, பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்வதாகவும், ஆனால் யாருமே அன்பை மட்டும் வாங்க மறந்து விட்டதாகவும் கவிஞர் அருமையான சங்கதிகள் கூறுகிறார். என்ன ஒரு கற்பனை!




    ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
    அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

    ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
    அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

    பெண்களோ அழகை வாங்க வந்தார்
    ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
    தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
    புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்

    ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
    அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

    குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
    ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
    உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
    ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்

    எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
    விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
    இதயம் என்பதை விலையாய்த் தந்து
    அன்பை வாங்கிட எவரும் இல்லை

    அன்பை வாங்கிட எவரும் இல்லை


    படித்தீர்களா? எப்படி? ஆண்டவன் விரித்து வைத்த கடையில்

    பெண்கள் அழகை மட்டுமே வாங்கி,

    ஆண்கள் ஆசையை மட்டுமே வாங்கி,

    தலைவர்கள் புகழை மட்டுமே வாங்கி,

    புலவர்கள் பொய்களை மட்டுமே வாங்கி,

    குருடர்கள் விழிகளை கேட்டு,

    ஊமைகள் மொழியை கேட்டு,

    உறவினர் இறந்தவரின் உயிரைக் கேட்டு,

    வேறு சிலர் சும்மா ஒப்புக்கு மேலுக்கு விலை கேட்டார்கள்.

    ஆனால் 'இதயம்' என்ற செல்வத்தைத் தந்து 'அன்பு' என்னும் அரிய பொருளை வாங்கத்தான் எவரும் மறந்து விட்டார்கள்.


    என்ன ஒரு படிப்பினையை உணர்த்தும் பாடல்! உண்மைதானே! அன்பு அரை கிலோ விலை என்னவென்று கேட்கும் காலமல்லவோ இது!

    அருமையான மனதை மயக்கும் அமைதியான இசை. தென்றலாய் நம் மனதை வருடும் பாடல். நடுவில் கவர்ச்சிப் பாவையாய் ராஜஸ்ரீ. அழகான ரவிச்சந்திரன்.

    அருமையான விசில் சப்தத்துடன் தொடங்கும் இப்பாடல் என் மனதில் மட்டுமல்ல. உங்கள் அனைவர் மனதிலும் இனி நீங்கா இடம் பெறட்டும். பெறத்தான் வேண்டும்.

    இப்போது பாடலைப் பார்க்கலாமா?


    Last edited by vasudevan31355; 29th June 2014 at 01:21 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1117
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிம்மேந்திர மத்யமம்.

    சிறு வயதில், ஒரு படம் வெளியாகும் செய்தி தெரிந்து, அந்த படம் போகும் நாளை எண்ணியே 20 நாள் கழித்த அனுபவம் உண்டா?(மாசம் முதல் பத்தில் ரிலீஸ் ஆவது ,அப்பாவிடம் டிக்கெட் சில்லறை வாங்குவதை சுளு வாக்கும்)

    ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்து ,அவள் வாங்கி சென்றும் ,ஒரு பத்து நாட்கள் reaction இல்லாத,இன்ப எதிர்பார்ப்பில் மிதந்திருக்கிறீர்களா?

    கல்யாணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள். கல்யாண நாளை எண்ணி எண்ணி காலம் கடத்தியதுண்டா?கல்யாணம் முடிந்த பிறகு ,குல தெய்வம் காவடி எடுத்த பின்பே முதலிரவு.காவடிக்கு இன்னும் ஐந்து நாட்கள் . துடித்திருக்கீர்களா வர போகும் இன்பத்தை எதிர்பார்த்து?

    இந்த ராகம் ஒரு anxiety (positive ) என்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
    காத்திருப்பு,எதிர்பார்ப்பு ஒரு இன்ப காரியத்துக்காக என்று இந்த ராகம் எல்லாம் இன்பமயம் என்ற உணர்வை கொடுக்கும்.

    ஐயோ, இந்த ஜோடி வாழ்க்கையில் இணைந்திருக்க கூடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கு அளித்த ஒரு all time pair சிவாஜி-பத்மினி.(நடிகர்திலகமும் ,நண்பர் சிதம்பரத்திடம் வெளியிட்டுள்ளார். பத்மினி ,இலங்கை எழுத்தாளர் முத்து லிங்கத்திடம் ) பின்னால் வர போகும் இந்த ஜோடியின் சீனியர் அறிமுகம் பப்பிம்மாவிற்கு.என்.எஸ்.கே தயவில் மணமகள் படத்தில்.பின்னால் பணத்தில் (1952) இந்த ஜோடி இணைந்தது. பப்பி வேடிக்கையாக எனக்கு தாலி கட்டிய(ஷூட்டிங் ) பின்பே மனைவிக்கு(நிஜத்தில்) என்பார்.அந்த அறிமுக படத்தில் பிரபல நடன பாடல் "எல்லாம் இன்ப மயம்."

    தான் காதலித்த பெண்,தன் நண்பனை விரும்புவது அறிந்து ,தன் ஆசை துறந்து ,நண்பனுக்கே அவளை மணமுடிக்கிறான்.(மிரட்டி)ஒரு சகோதர ஸ்தானத்தில் நின்று. அவள் பூமுடிக்கும் நாளை கற்பனை கண்டு ,ரகு ராமன் வரவேற்க சிவராமன்-ராஜேஸ்வரி திருமணம் இனிதே நிறைவுற்று விடை பெறுகிறான்.(எங்கே விடை பெற விட்டார் நண்பர்?ஒரேயடியாகவல்லவா விடை கொடுத்து விடுவார்?) அந்த Epic Song "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி".

    டீன் ஏஜில் இருக்கும் போது நான் நினைப்பதுண்டு. இயக்குனர் ஆனால் இந்த வாழ்கையை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று. அப்போது வாழ்க்கையில் இரண்டே பருவம். குழந்தை(கல்யாணம் வரை)-வாலிபன்(கல்யாணம் ஆனதும்).இரண்டுங்கெட்டான் பருவத்திற்கு மதிப்பே இல்லை. நண்பன் ஒரு நாள் என்னிடம் சொன்னது.... தேவிகலா சென்று பார்.உன் கனவை கோகிலா இயக்குனர் திருடி விட்டார் என்று.அழியாத கோலங்களாய் அப்படம். இதை தொடர்ந்து இன்னொரு ஸ்ரீதர் உதவியாளர்களின் (ஸ்ரீதர் ஒ மஞ்சு அரை வேக்காடு) தொடர்ந்த முயற்சி பன்னீர் புஷ்பங்கள். எனது பிரிய பாடகி உமா ரமணன் (நல்ல வேலை ராஜா புண்ணியம் வைத்து ஜானகி தவிர்த்தார்) அருமையான குரலில் "ஆனந்த ராகம் கேட்கும் காலம்".

    சிம்மேந்திர மத்யமம் மற்ற பாடல்கள்.

    தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.

    தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா-கோபுர வாசலிலே.

    தாஜ் மகால் தேவையில்லை அன்னமே-அமராவதி

    நீ பௌர்ணமி என்றும் என் வாழ்விலே-ஒருவர் வாழும் ஆலயம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1118
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்,

    தேடி தேடி ,தமிழுக்கு ஓலை சுவடி கொணர்ந்த தமிழ் தாத்தா உ .வே.சா போல ,இசை திரிக்கு அபூர்வ பாடல்களை கொணரும் நீங்கள் இசை தாத்தா. (பஞ்சமி அமர்க்களம்.நன்றிகள்)

    வாசு,

    கடவுள் கடை விரித்தால் ,அன்பை விலைக்காவது வாங்கி முழுக்க உன்னிடம் தந்து விடுவேன். (இல்லாதவர்களுக்கு கொடுப்பது என் பிறவி குணம்)
    Last edited by Gopal.s; 29th June 2014 at 01:33 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1119
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இயக்குனர்களின் பாணி.

    'ஜஸ்ட் ரிலாக்ஸ்' குறுந்தொடர் (1)



    இயக்குனர் 'ராமண்ணா'

    இவர் பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் ரொம்ப ஆடம்பரம் தெரியும்.

    கதாநாயகன் கதாநாயகியையும், கதாநாயகி கதாநாயகனையும் கிண்டல் செய்து பாடும் பாட்டு ஒன்றை பெரும்பாலும் தவறாமல் வைத்து விடுவார்.

    கதாநாயகியரை கடல், நீச்சல் குளம், பாத் டப் இவற்றில் கண்டிப்பாக குளிக்க விடுவார். கதாநாயகனும் உடன் இருப்பார்.

    கதாநாயகியர் மீது சேற்றையோ, பெயின்ட்டையோ வாரி இறைப்பதில் இவருக்கு அலாதி சுகம். பெயின்ட்டை நாயகி உடலில் முழுதுமாகப் பீச்சியடிப்பார்.

    அதே போல நாயகனையும், நாயகியையும் ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து பெட்டிக்குள்ளேயோ அல்லது காருக்குள்ளேயோ சுற்றி சுற்றி வந்து பாட விடுவார்.

    நாயகியரை எப்படியாவது ஸ்விம்மிங் டிரெஸ்சில் காண்பித்து விடுவார்.

    குத்துப்பாட்டு நிச்சயம் உண்டு. போட்டிப் பாடல்களும் வைத்து விடுவார்.

    கதாநாயகனுக்கு கிழ வேஷம் போட்டு இளசுகளை கிண்டலடித்துப் பாட வைத்துப் படமாக்குவார்.

    நாயகியரை குட்டைப் பாவையுடன் சர்க்கஸ் பொம்மை போல் காட்டுவதில் இவருக்கு அலாதி பிரியம்.

    பாடல் காட்சிகளை கொஞ்சம் அதிகமாக வைப்பார். நாயகன் உடை விஷயத்தில் மிக்க கவனம் செலுத்துவார்.

    நாயகி உடை விஷயத்தில் கொஞ்சம்தான் கவனம் செலுத்துவார்.

    மீதியை நம் கோபால் எழுதுவார்.

    சேம்பிளுக்கு ஒரு அருமையான பாடல். 'நான்' படத்தில் ரவிச்சந்திரனும், மேடமும் நீச்சல் குளத்தில் பாடும் 'குவாக் குவாக்' பாடல்.



    அதே முகம்
    அதே குணம்
    அதே மனம் என்னிடம்

    ரவியின் அம்சமான டான்ஸ்.... நீச்சல் குளம்....கலைச்செல்வியின் கொள்ளை அழகு பிளஸ் கிளாமர்.

    ராமண்ணா கமர்ஷியலாக படமெடுப்பதில் வல்லவர். பாடல்களையும் தான்.

    Last edited by vasudevan31355; 29th June 2014 at 02:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1120
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ராகவேந்திரா சார்,

    தேடி தேடி ,தமிழுக்கு ஓலை சுவடி கொணர்ந்த தமிழ் தாத்தா உ .வே.சா போல ,இசை திரிக்கு அபூர்வ பாடல்களை கொணரும் நீங்கள் இசை தாத்தா. (பஞ்சமி அமர்க்களம்.நன்றிகள்)

    வாசு,

    கடவுள் கடை விரித்தால் ,அன்பை விலைக்காவது வாங்கி முழுக்க உன்னிடம் தந்து விடுவேன். (இல்லாதவர்களுக்கு கொடுப்பது என் பிறவி குணம்)
    அடப் பாவி மனுஷா! அன்பே இல்லாமல் பேசி இப்படி வம்புக்கு அலையிறியே!

    அந்தப் பாட்டை உனக்காகத்தானே போட்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •