https://www.youtube.com/watch?t=58&v=8xPaKDCzPEg
Printable View
முகநூலில், அய்யா நடிகர் திலகத்தின் புகழ்,பெருமைகளை
எனக்குத் தெரிந்த வரை பேசும்
பொருட்டு நான் துவக்கிய
"சிவாஜி பக்கம்" (Page)
இன்றுடன் தன் ஓராண்டினை
நிறைவு செய்கிறது.
இந்த நிமிஷம் வரை 745 விருப்பங்களைப் பெற்று
நாளுக்கு நாள் முன்னேறி
வருகிறது ..."சிவாஜி பக்கம்".
அதில் நான் தொடர்ந்து எழுதி
வரும் "ஒரு விசிறியின் கவிக்காற்று" எனும் தலைப்பிலான கவிதைகளுக்கு
சிவாஜி பேரவையின் தலைவர் மதிப்பிற்குரிய திரு.சந்திரசேகரன் அவர்கள் தீவிர
ரசிகர் என்பது எனக்குப் பெருமையான விஷயம்.
அது போன்றே
நமது நடிகர் திலகம் திரிக்கும்,
முகநூலுக்கும் பொதுவான
அய்யா திரு.ராகவேந்திரா,
அய்யா.திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
திரு.சுந்தரராஜன்,திரு.செந்தில்வேல் உள்ளிட்டோரின்
பலத்த ஆதரவு சிவாஜி பக்கத்தின் பெரும் பலம்.
சிவாஜி பக்கத்தில் நானெழுதும்
"நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்" எனும் தலைப்பிலான
படைப்புகளை நம் திரியிலும்
தொடர விருப்பம்.
வாழ்த்துங்கள்..வளர்வேன்.
உங்கள் மனமென்னும்
சோலைக்குள்
மலர்வேன்.
-------
என்றும் சிவாஜி புகழ்
இருக்கும்.
எங்கும் எங்கள் கொடி
பறக்கும்.
ஆதவன் ரவி-
மணிமண்டப அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதற்கு இவ்வளவு நன்றியறிவிப்புக்கள் அதிகப்படியோ என்று தோன்றுகிறது (நன்றி சொல்வது அவரவர்கள் இஷ்டமாயினும்).
2001 முதல் 2006 வரை நாலரை ஆண்டுகள், 2011 முதல் 2015 வரை நாலரை ஆண்டுகள், மொத்தம் ஒன்பது ஆண்டுகளில் ஏன் மணிமண்டபம் கட்டப்படவில்லை என்று கேள்வி வராவண்ணம் நடிகர்சங்கத்தின் மேல் பாரத்தை போட்டாச்சு.
(இடையில் 2006 - 2011ல் கருணாநிதி புகுந்து சிலை வைத்து பெயர் தட்டிக்கொண்டார் என்ற எரிச்சல் ஒருபக்கம். அந்த சிலையை அகற்றும் ஆயுதமாக முதல்வர் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் மணிமண்டப அறிவிப்போ என்ற சந்தேகம் இன்னும் தீரவில்லை).
நடிகர்திலகம் காங்கிரஸ்காரர் என்று உரிமை கொண்டாடிய விஜயதாரணியின் வாயை அடக்க 'அவர் எல்லோருக்கும் சொந்தமானவர்' என்ற வார்த்தையை போட்டாச்சு. (காங்கிரஸ்காரர் என்று உரிமை கொண்டாடினார்களே தவிர அவருக்காக ஒரு துரும்பைக்கூட அசைத்ததில்லை, சத்யமூர்த்தி பவனில் அவர் படத்தை வைக்க காங்கிரசாருக்கு துப்பில்லை என்பது வேறு விஷயம்) . சட்டமன்றத்தில் எல்லா பெண் உறுப்பினர்களும் பொம்மைகளாய் அமர்ந்திருக்க இந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. மட்டும் தனக்கு சரிநிகராக சட்டமன்றத்தில் வாதிடுவது முதல்வருக்கு இன்னொரு எரிச்சல்.
இதுவரை 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட ரூ. 84.000 கோடிக்கான பல்வேறு திட்டங்களில் இதுவரை ரூ. 11.000 கோடிக்கான திட்டங்கள் மட்டுமே செயல்வடிவம் பெற்றிருப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆளுங்கட்சி சப்போர்ட் எம்.எல்.ஏ.வான செ.கு.தமிழரசனே ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே மணிமண்டபம் கட்டி முடிந்து நாளை திறப்புவிழா என்று வரும்போது முதல்வரை நமது பாராட்டுக்கடலில் மூழ்கடிப்போமே.
கடலா தெரண்ட சனம்
கண்ணு சொக்கி நிக்காதோ?
விரிச்ச கண்ணு அம்புட்டையும்
உம்ம மேலே வைக்காதோ?
இனிப்பு மேலே ஈ போல
கூட்டம் உம்ம மொய்க்காதோ?
கிழிஞ்சு போன மனசுகளை
ஒங்க திறமை ஊசி தைக்காதோ?
நீங்கள் கருதறுக்கும் அருவாளா
புருவத்த ஏத்துறத..
கைவீசி நடப்பதையே
நாட்டியமா மாத்துறத..
ஓங்க திறம் பாத்து
ஊர் அசந்து நிக்கிறதை..
உசுரயே அவுக எல்லாம்
ஒங்க மேலே வைக்கிறத..
எங்கனயோ ஒளிஞ்சிருந்து
எமப் பய பாத்துருக்கான்.
இந்தாளு ஆட்டத்தை
நம்மாளுகளும் பாக்கட்டும்னு
மேலே கொண்டு சேத்துருக்கான்.
-ஆதவன் ரவி-
Rks,
நீங்க ஒருத்தர் தான் இந்த ரணகளத்துலயும் வீரபாண்டிய கட்டபொம்மன் நிலவரம் குறித்து அப்பப்ப சொல்லிட்டிருந்தீங்க .. தொடர்ந்து செய்யுங்க .
"சரஸ்வதி சபதம்".
கணிசமான கால
இடைவெளிக்குப் பிறகு,
வீட்டில் போட்டுப் பார்த்தேன்.
விடுமுறை நாளின் ஓய்வு
சந்தோஷத்தை அதிகமாக்கிற்று
திரைப்படம்.
நமக்கு மிக,மிகப் பிடித்து
விட்டவிஷயங்கள் எத்தனை
காலமானாலும் நம்மை
விட்டு கொஞ்சம் கூட
விலகுவதில்லை.
தவிர, அந்த விஷயத்துடனான
நம்முடைய மகிழ்வான
ஈடுபாட்டை அந்தக் கால
இடைவெளி அதிகமாக்கிக்
கொண்டுதானிருக்கிறது.
இந்தப் படத்தின் ஒரு காட்சி
அதற்கு உதாரணம்.
பிறப்பிலிருந்தே வாய் பேச
முடியாத அப்பாவியாய்
அறிமுகமாகி,
திருடனென்று தவறாக
நினைத்த நந்தவனக்
காவலாளிகளிடம் அடிவாங்கி,
அழுது கலங்கி ஒடி வந்து,
அன்னை கலைவாணியின்
அருள் வடிவத்திற்கு
முன்னமர்ந்து,
"என் குறை போக்கு.. என்னைப்
பேச வை."-என்பதைக் கூட
பேச மொழியின்றி,
வேதனைக் குரலையும்,
விம்மலையுமே
கோரிக்கைகளாக்கி,
நடுங்கும் விரல்களால் மலர்
தூவிக் கசிந்து,
கசிந்த கண்முன்னே
கருணையுடன் கலைவாணி
தோன்றி.. குரல் தந்து, கவி
தந்து மறைந்து விட,
கருத்த முகமும், கலங்கிச்
சிவந்த விழிகளும், நெற்றியில்
திருநீற்றுப் பட்டையும்,ரத்தம்
வழியும் வலப்புறக்
கன்னமுமாய்
அலங்கோலமாயிருந்த தோற்றம் மாறி..
நிமிர்ந்த நன்னெஞ்சு, நேர்
கொண்ட பார்வையுடனொரு
ராஜகம்பீரத் திருவுருவாய்ப்
பேசத் துவங்குவாரே..
அந்தக் காட்சி உதாரணம்.
கடவுளே நேர் வந்து குறை
தீர்த்தாயிற்று.
"கொஞ்சங் கொஞ்சமாகத்தான்
உனக்குப் பேச்சு வரும்" என்று
இறைவி, நிபந்தனையெல்லாம்
விதிக்கவில்லை.
என்றாலுங் கூட..
பிறந்தது தொட்டு,
வாலிபமாய்
நிமிர்ந்திருக்கிற இந்த நிமிஷம்
வரைக்கும் பேச்சின்றிக் கிடந்த
ஒருவன், தான் பேசும் முதல்
வார்த்தையை எத்தனை
ஆசையாய், எத்தனை காதலாய்
வெளிப்படுத்துவான் என்பதற்கு,
அய்யா நடிகர் திலகம் கண்கள்
சுருக்கி, ஆழ் மனதிலிருந்து
முதல் வார்த்தை தேடி,"ம்மா"
என்று ஆர்வ ஓசையுடன்
சொல்வதற்கு எடுத்துக்
கொள்கிற கால அவகாசத்தில்
நாமுணர்கிற அவரது கலை
ஈடுபாடு, கலைவாணியை
அவர் வணங்குதல் போல்...
நாம் அவரை வணங்கத் தக்கது.
********
இன்னொன்று..
நிறையத் தடவைகள் பார்த்துப்
பார்த்துப் பழசான
காட்சிகளானாலும், அய்யா
நடிக்கையில் ஒவ்வொரு
முறையும் ஒவ்வொன்று
புதுசாய்த் தெரியும்.
இந்த முறை நான் பார்த்து
வியந்தது..இதே காட்சியில்.
காட்சியின் துவக்கத்தில், அவர்
அன்னை சரஸ்வதியின் முகம்
பார்த்து, அழுது தேம்ப
வேண்டும்.பின், அன்னையின்
முகத்திலிருந்து பார்வையை
விலக்கி, அருகிலிருக்கும்
பூக்கூடையைப் பார்த்து,
அதிலிருந்து பூக்களை அள்ளி
வீச வேண்டும்.
சொல்லும் போது சுலபமாய்த்
தெரியும்.
கடவுள் சிலை பார்த்து அழும்
போதே அதிலிருந்து
பார்வையை விலக்கி,
பூக்கூடையைப் பார்த்து,
அதிலிருந்து பூக்களை
அள்ளும் போதே மீண்டும் அன்னை சிலை பார்த்து அழுது
நடிக்கையில் கொஞ்சம்
செயற்கை இருந்தாலும் அது
மிகவும் கேலிக்குரியதாய்ப்
போகும்.
ஆனால், அய்யா கடவுள்
சிலையிலிருந்து
பார்வையை
விலக்கி, அழுகை மாறாமல்
அந்தப் பூக்கூடையைப்
பார்க்கிற யதார்த்தத்தை..
அய்யோ..
யாராவது பார்த்து விட்டு
எழுதுங்களேன்!
*********
ஆலயமொன்றில் நின்று
அழகுறப் பாடுகிறார் அய்யா..
இதே படத்தில்.
"இசையில்..
கலையில்..
கவியில்..
மழலை மொழியில்
இறைவன் உண்டு."
-இவற்றில் மட்டுந்தானா?
இவர் நடிப்பிலும்தானே?
*********
பட்டிக்காடா பட்டணமா?
http://i1065.photobucket.com/albums/...sndch2ff1.jpeg
அவன்
வேட்டி கட்டிய சிங்கம்
குணத்திலோ தங்கம்.
பிறந்தது ஒரு சிற்றூரு
சோழவந்தான் என்பதே அதன் பேரு
அந்த மண்
அவனுக்கு கண்.
ஏரை மதிப்பவன்
ஊரை காப்பவன்
ஊருசனம்
அவன் நடந்தால் நிற்கும்
பேசினால் கை கட்டும்.
மூக்கையாத் தேவன் அவன் பேரு
அவன் சொல்லை மதிக்கும் ஊரு.
தேவனுக்கு ஒரு மாமன் உண்டு
மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு
அவருக்கு ஓர் மகள் உண்டு.
மாமன் மகள் மெத்தப்படித்தவள்
மேலை நாகரீகத்தில் திளைத்தவள்
ஆனால்
தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள்.
கல்பனா என்பது அவள் நாமம்
அம்மாவே அவளுக்கு வேதம்.
மகளின் மணம்
மூக்கையாவே வேண்டும்
இதுவே மாமனின் குணம்.
முறைமாமன் தானிருக்க
வேறொருவன் தாலியெடுக்க
மாமன் மூலம்வருகிறது சேதி
மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி
முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி
ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை
எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை
கேட்கிறான் நியாயம்
செய்கின்றனர் வாதம்.
இனியும் ஆகாது தாமதம்
முடிவெடுக்கிறான் அக்கணம்.
தூக்கி வருகிறான் முறைப்பெண்ணை மாட்டுவண்டியில்
துரத்தி வருகின்றனர் எதிரிகள் பின்னால்
மூக்கையாவின் வீரம்
எதிரிகளுக்கு காரம்
அவனது கோபம் மிகவும் காட்டம்
ஆடி விடுகிறது எதிரிகள் கூட்டம்.
கல்பனாவுடன் வந்து சேர்கிறான் கிராமத்துக்கு...
சிந்தனை செய்கிறது அவள் மனம்
புரிகிறது தேவனின் குணம்
செய்து கொள்கிறாள் திருமணம்.
அவர்களின் வாழ்க்கை
ஆட்டமும் பாடமுமாய் சில காலம்
பின் ஆரம்பிக்கிறது கலி காலம்.
நகரங்களுக்கே ஆகாது சில மேல்தட்டு நாகரீகங்கள்
கிராமங்கள் தாங்குமா?
பிறந்த நாள் கொண்டாட கேட்கிறாள் சம்மதம்
விருப்புடன் இசைகிறான் அக்கணம்.
உற்சாக பானங்களுடன் ஆடல்,பாடல்கள்
தோழன்.,தோழிகளோடு கல்பனாவின்
கும்மாளங்கள்.
திகைக்கிறது மூக்கையாவின் வீடு
இதை ஏற்குமா அவன் கூடு.
தேவன் வருகிறான்
பார்த்ததும் கொதிக்கிறான்.
பின் வெடிக்கிறான்.
கல்பனாவை சாடுகிறான்
சாட்டையை சுழற்றுகிறான்.
மூக்கையாவின் சினம்
அவள் மேனியில் ரணம்.
தாய்வீடு ஓடுகிறாள்!
தனக்கு நேர்ந்ததை
தாயிடம் கூறுகிறாள்.
நல்ல தாய் தவறை எதிர்ப்பாள்.
நாகரீக தாய் அதை ஆமோதிப்பாள்.
கல்பனாவின் தாய்
நாகரீக தாய்.
கடிதம் மூலமாக கேட்கப்படுகிறது பிரிவினை
மூக்கையாவிற்கு ஏற்படுகிறது வேதனை
அவன் மறத்தமிழன் மரபு
மானமுள்ள பிரிவு
முயற்சி செய்கிறான் சேர
கல்பனாவிடம் செல்கிறான் பிரச்சினை தீர
கீதா உபதேசம் அர்ச்சுனனுக்கு
தாயின் உபதேசம் கல்பனாவுக்கு
அந்த உபதேசம் தேசத்துக்கும் ஆனது
இந்த உபதேசம் நாசத்துக்கு ஆவது
மூக்கையாவோ போராடினான் இணை சேர
அவள் தாயோ சதியாடினாள்
இணையை பிரிக்க
விதி யோசித்தது
நீதி யாசித்தது
சதி ஜெயித்தது.
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
சோடை போன மனிதன் மரணம் அடைந்த மனிதன்.
இதுவே தமிழ் கலாச்சார மாண்பு
இதை ஏற்பதில்லை மேலை பண்பு
ஊருக்கு திரும்பினான் வெறுங்கையோடு
மானம்போனதாய் நினைத்தான் அந்த
இரவோடு
ஊர் பார்த்தது
உள்ளுக்குள் சிரித்தது.
"வெட்டிவிடு மனையாளை" பஞ்சாயத்தில்கேட்டான் ஒருவன்
பெண்டாள வக்கில்லையோ என்றான் மூக்கையாத்தேவன்
கேட்டான் அவன்
"உமக்கு என்ன அருகதை"
மானமே போனது தேவன் கதை
மாமனுக்கு கொடுக்கிறான் பத்திரிக்கை
அதிலே இருக்குது
வேடிக்கை
"மூக்கையாவுக்கு கல்யாணம்"
இடையில்,
கல்பனா ஆகிறாள் தாய்
அது மூக்கையாவின் சேய்
மாமியாருக்குஅது வேப்பங்காய்
கல்பனா ஈன்றெடுக்கிறாள் மகவை
மூக்கையா எடுத்து வருகிறான் தன் சிசுவை
கன்று பிரிந்தது பசுவை
உணராவிட்டாலும் கல்பனா தமிழச்சி
உணர்த்தி விட்டது தாயின் சூழ்ச்சி
பத்துமாத பந்தம்
மறக்க முடியுமா ஒரு தாய்
சுடுமே அது தீயாய்
தாய் சேய் பிரிவு அது சொல்லொணாத் துயரம்
எழுத்தில் வடிப்பது கடினம்
உதிரம் கொதிக்கின்றது
தாய்மையை உணர்கின்றது
பாலூட்ட துடிக்கின்றது
உண்மையை அறிகின்றது
சேய் அதன் தகப்பனிடம்
கல்பனா அறிகிறாள் சேதி
புரிந்து கொண்டாள் மீதி
விரைகிறாள்தாய்மையடைந்த ஜோதி
சோழவந்தான் மூக்கையா வீடு
--------------------------------------------------------
அங்கே கல்யாண கொண்டாட்டம்
அவளுக்கு இது திண்டாட்டம்
பார்க்கிறாள் மூக்கையாச் சேர்வையை
புரிகிறான் தாய்மையடைந்த பார்வையை
பாலூட்டத் துடிக்குது அவள் நெஞ்சம்
உரிமையை தடுக்கவில்லை தமிழ்ச் சிங்கம்
கொடுக்கிறாள் சேய்க்குப் பாலை
அடைகிறாள் நிம்மதியின் எல்லை
புது மாப்பிள்ளையாய்
முக்கையா
பார்க்கிறாள் சேர்வையை
வீசுகிறாள் பார்வையை
கேட்கிறாள் தனக்கொரு தீர்வை
மாறிவிட்டது அவள் மனம்
தெளிந்துவிட்டது அவள் குணம்
ஊரார் மெச்சுகின்றனர் மறுகணம்
மூக்கையாவிற்கோ மகிழ்ச்சி இக்கணம்
இதுவே தமிழ்மண்ணின் மணம்.
கல்யாணம் ஒரு நாடகம்
அவளுக்கு புகட்டுமே பாடம்
அது
மூக்கையா போட்ட வேடம்
தாலிதான் மகத்துவம்
தாய்மைக்கு அதுதான் சிறப்பிடம்
இனிமேல் எல்லாமே புகுந்தஇடம்
கல்பனாவுக்கு மகிழ்ச்சி
எல்லோருக்கும் நெகிழ்ச்சி
*************சு ப ம்*************************
தமிழ் இசையின்
பெருமை காக்க
விறகுவெட்டியாக
வந்த இறைவன்,
தமிழ்க் கலையின்
பெருமை காக்க
சிவாஜியாக வந்தான்.
இதுவும் ஒரு
திருவிளையாடல்.
கட்டபொம்மனாக நீங்கள்
குதிரையில் வரும்
காட்சியைப் பார்க்கும் போது
தோன்றுகிறது..
வேகம் குறித்து
உங்களிடமிருந்து
நிறைய
கற்றுக்கொள்ள வேண்டும்
அந்தக் குதிரை.
செந்தில்வேல் சார்
கடமையை தான் செய்தேன். அதற்க்கு எதற்கு சார் நன்றி எல்லாம் !
ஆதாரத்துடன் எழுதினாலே "பொய்" என்றும் "தவறான தகவல்" என்றும் உண்மைகள் திசை திருப்பப்படும் முயற்சிகள் நடைபெறும் காலத்தில், கிடைத்த ஆதாரத்துடன் (போட்டோ மற்றும் இணையதள முன்பதிவு நிலவரம் )பதிவு செய்யாமல் விட்டால் எப்படி சார் ..காரணம் இது கலியுகம் அல்லவா !
எங்கோ ஒரு மூலையிலாவது உண்மை ஆதாரங்கள் இருந்துவிட்டு போகட்டுமே !
கோவையில் விரைவில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தை வரவேற்க தயாராக இருங்கள் சார் !
http://i501.photobucket.com/albums/e...psj76j3u58.jpg
டிஜிட்டல் அல்ல ...சாதாதான் !
Rks
முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது !
மதன மாளிகையில் ....பாடல்.....நம் திராவிட மன்மதனின் அழகும், இளமையும் அள்ளிக்கொண்டு போகும் பாருங்கள்.....ஆஹா !
https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo
கலைக்கு ஒரு திலகம் ! நமது நடிகர் திலகம் !
இந்த தருணத்தில் திரு முத்தையன் சார் ஞாபகம் !
முத்தையன் சார்...ஒரு விண்ணப்பம் !
மதன மாளிகையில் பாடலில் நடிகர் திலகம் தோற்றங்களை தயவு செய்து இங்கு பதிவு செய்து தர முடியுமா ?
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......
திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!
Quote:
வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில் 37 வருடங்கள் கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!
திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணைந்து மகிழ்ந்த நினைவுகளுடன்.... விடை பெறுகிறேன்!!
மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!
என்றும் உங்கள் நண்பன் செந்தில்
இன்று ரக்ஷா பந்தன் - அண்ணன் தங்கை உறவுமுறை செழித்து சகல சொவ்க்யங்களுடன் வாழ இறைவனை வேண்டி அண்ணனாக நினைப்பவரை, அண்ணனை தங்கை பாசம் கொண்ட சரடால் வலது கரத்தில் அன்பால் கட்டிபோடுவதுதான் ரக்ஷா பந்தன் .
திரை துறையில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரது படங்களிலும், தாய்மை, தங்கை பாசம் இரெண்டும் இடைவெளி இல்லாமல் இருந்துகொண்டே இருக்கும்..! இவர்கள் அளவிற்கு மற்றவர்கள் தங்கள் படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்ததுண்டா என்றால் இல்லை என்றே கூறலாம் !
என் தங்கை - 1952
https://www.youtube.com/watch?v=oIFVcdYtTic
1952 இல் வெளிவந்து தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமாம் பராசக்தி திரைப்படமும் அண்ணன் தங்கை பாசத்தை சமுதாய சிந்தனையோடு பின்னப்பட்ட கதையை கொண்ட படம் !
மறக்க முடியுமா .....பராசக்தி கோர்ட் காட்சியை ! முதல் படத்தில் இப்படி ஒரு சிம்ம கர்ஜனை, லாவக நடிப்பு, முதன் முறையாக தமிழின் உயிர்நாடி கண்டுபிடித்து அதனை முருக்க வேண்டிய இடத்தில் முறுக்கி, குருக்கவேண்டிய இடத்தில் குறுக்கி...சறுக்கவேண்டிய இடத்தில் சறுக்கி தளுக்க வேண்டிய இடத்தில் தளுக்கி - உலக திரை இதுவரை கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை !
என்ன ஒரு ஒற்றுமை இருதிலகங்களுக்கும் -
என் தங்கை 1952 & பராசக்தி 1952 வெளியீடு
https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI
இதன் தொடர்ச்சியாக
பாசமலர்,
என் அண்ணன்,
நினைத்ததை முடிப்பவன்,
விடிவெள்ளி,
அன்புக்கரங்கள்,
பச்சை விளக்கு,
தங்கை,
லட்சுமி கல்யாணம்,
தங்கைக்காக,
எங்கள் தங்கம்,
இதயவீணை ,
அண்ணன் ஒரு கோவில்,
இப்படி பல காவியங்கள் இரு திலகங்களும் அண்ணன் தங்கை பாசபினைப்பை திரையில் வாழ்ந்து காட்டினார்கள் !
https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M
https://www.youtube.com/watch?v=OJ3xtZIHFxY
https://www.youtube.com/watch?v=hJ7GdrID5LI
https://www.youtube.com/watch?v=JEHN6Beyg7A
https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k
https://www.youtube.com/watch?v=qk6Ru8lPBww
https://www.youtube.com/watch?v=08JYpCpNGfw
https://www.youtube.com/watch?v=CXtjNlLAH8E
https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos
நாஞ்சில் நாட்டில் கட்டபொம்மன் வெற்றி நடை..
நாகர்கோயில் ஸ்ரீவள்ளி திரையரங்கில் இன்றைய காட்சியில் திரளான அளவில் தாய்மார்கள் வருகை புரிந்துள்ளார்கள்.
குறிப்பாக கடந்த 21ம் தேதி திரையிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு மூதாட்டி, தினமும் படம் பார்த்துச் செல்கிறாராம். அவருக்கு நமது பாராட்டுக்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் இவரிடம் தேசபக்திக்கு முன்னுரிமை தருவதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டுக்கள் அம்மணி.
தகவல் தந்த நாகர்கோயில் நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
"நீ கூடத்தான் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்திருப்பாய்" என்று
ஊமைத்துரை எள்ளலாய்ச்
சொன்னதும், வெடிக்கும் கோபத்தோடு வெகுண்டெழும்
தேச பக்தி மிகுந்த அந்தப் பாட்டியை நினைவூட்டுகிறார்..
அந்த நாகர்கோவில் பாட்டி.
http://www.sivajiganesan.in/Images/2808_16.jpg
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...cbcd77ef49ae09
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
இன்று முதல் மதுரை
மீனாட்சியில்,
நாளை முதல்
மதுரை அண்ணாநகர் அம்பிகா ac தியேட்டரில்
வீரபாண்டிய கட்டபொம்மன்
எல்லோரும் கூடுவோம்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...1872b00da9bcbb
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய் பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.
அந்தப் பெண்
திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல்,
உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
https://youtu.be/mS_DsFaQl28
அன்பு நண்பர் சிவாஜிசெந்தில் சார் ,
தங்களின் சிறப்பான பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள் ! உடம்பில் ஆரோக்கியமும் , மனதில் ஆர்வமும் இருக்கும் வரை நமக்கு பிடித்த துறையில்
தொடர்ந்து பயணிக்கலாம்! தங்கள் பண்புக்கும், குணத்துக்கும் தாங்கள் மேலும் பல உன்னத நிலைகளை வாழ்க்கையில் நிச்சயம் அடைவீர்கள்!
தங்களின் முக்கிய வேலைகளை முடித்து கொண்டு வெகு விரைவில் மீண்டும் நம் திரியில் பங்கெடுக்க விரும்புகிறேன் ! தங்கள் இடத்தை வேறு யாராலும்
நிரப்ப முடியாது ! நீடூழி வாழ்க சிவாஜிசெந்தில் சார் !
DEAR FRIENDS,
All of you are already aware and has seen the Friday, Saturday & Sunday HOUSEFULL status at SATHYAM STUDIO 5 Matinee 3-45pm Show last Friday itself.
TODAY, 30-08-2015, SUNDAY
MATINEE SHOW 3-15pm
&
EVENING SHOW 6-45pm
@ SAI SHANTHI ,
NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN REGISTERED
"HOUSEFULL" !!!
NADIGAR THILAGAM ROCKS !!!!
Regards
RKS
******************
சிவாஜி பாட்டு-2
******************
"ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும் போது,
பெண்கள் கூட்டமொன்று வந்து
முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
******
புகைப்படத்திற்கு நன்றி...
திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு.
https://youtu.be/H8VkUxkMu8c
Sent from my GT-S6312 using Tapatalk
அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
பழைய படங்களை சிறப்பாக டிஜிட்டல் செய்து நல்ல முறையில் விளம்பரம் செய்து வெளியிட அதிக பட்சம் சுமார் 20 முதல் 22 லட்சங்கள் வரை தான் செலவாகும் ! நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை! அந்த அளவு பணத்தை செலவு செய்ய முடியாதவர்கள் அந்த காரியத்தில் ஈடுபடுவதே தவறு!
சொக்கலிங்கம் போன்றவர்கள் கையில் கட்டபொம்மன் சிக்கியிருந்தால் அதன் ரேஞ்சு எங்கோ சென்றிருக்கும்! நமக்கு கொடுப்பினை அவ்வளவு தான்!
எல்லா பழைய படங்களும் கர்ணன் போல் அமைந்து விடாது என்பதும் உண்மையே! ஆனாலும் கட்டபொம்மனை கர்ணன் போன்று எந்த குறையுமின்றி
வெளியிட்டிருந்தால் நிச்சயமாக நாம் சந்தோச படும்படியான பெரிய வெற்றியை பெற்றிருக்கும்! திருச்சி மதுரை கோவை சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நல்ல திரைஅரங்குகள் அமைய நம் ரசிகர்கள் பெரும் முயற்சி செய்து நல்லபடியாகவும் அமைந்தது! படத்தை வெளியிட்ட சாய்கணேஷ் films
திரு முரளி சிவாஜி ரசிகரும் கூட! nsc area அவர் தான் ரிலீஸ் செய்தார் ! கடலூர் , பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் கூட படத்தை வெளியிட
துப்பில்லை ! இப்படி பட்டவர்களிடம் மாட்டிகொண்டு ஆங்கிலேயர்களிடம் பட்ட கஷ்டங்களை விட அதிகமான சிரமங்களை கட்டபொம்மன் அனுபவித்தார்!
ரசிகர்கள் எவ்வளவு தான் செய்ய முடியும் ? எது எப்படி இருந்தாலும் பாசமலர் தவிர மற்ற நம் படங்கள் லாபத்தை கொடுத்தன என்பது மறுக்க முடியாத
உண்மை! பாசமலர் சென்னை கோவை தவிர மற்ற எல்லா நகரங்களிலும் மோசமான பழைய திரைஅரங்குகளில் தான் வெளியிடபட்டது! தோல்விக்கு
அதுவும் முக்கியமான காரணம் ! சென்னையில் கட்டபொம்மனுக்கு நல்ல போஸ்டர்ஸ் விளம்பரம் செய்தால் இன்னும் நன்றாக போகும்! ஆனால் நடப்பது
உங்களுக்கே தெரியும்! நாம் நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை!
நன்றி !
DEAR FRIENDS
FLASH NEWS:
BABY ALBERT 6-45pm SHOW TODAY HAS REGISTERED FULL HOUSE..
NT ROCKING !!!
RKS.
அழிவற்றவன் நானென்று
ஆர்ப்பரித்துச் சிரிக்கின்றாய்.
அன்புத் தலைவா-நீ இன்னும்
ஆற்றல் களங்களில்
இருக்கின்றாய்.
தற்போது சன் லைப் தொலைகாட்சியில் திரையுலக மன்மதனின் டாக்டர் சிவா ஒளி பரப்பாகி கொண்டிருக்கிறது
ரவி கிரண் சார் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியிடு பற்றி திரு.வைகோ அவர்கள் பேசிய வீடியோ காட்சி ஒன இந்திய இனைய தளத்தில் உள்ளது. தயவுசெய்து அதை இத்திரியில் பதிவிடவும்
சென்னையில் கட்டபொம்மன் கலக்கிகொண்டிருக்கிறார் செய்திக்கு நன்றி
திரு. சிவாஜி செந்தில் சார் தங்கள் பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள். ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் வளமான உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறேன்.
SPCHOWTRYRAM SIR உங்களுக்காக
ரவி கிரண் சார் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியிடு பற்றி திரு.வைகோ அவர்கள் பேசிய வீடியோ காட்சி ஒன இந்திய இனைய தளத்தில் உள்ளது. தயவுசெய்து அதை இத்திரியில் பதிவிடவும்
சென்னையில் கட்டபொம்மன் கலக்கிகொண்டிருக்கிறார் செய்திக்கு நன்றி [/QUOTE]
Vaiko speech after watching Veerapandiya Kattabom…: http://youtu.be/qUNYVNq3Xz0
My best wishes and blesssings for a very happy peaceful retirement SIVAJI SENTHIL SIR
also i am placing one request pl contnue your active paritcipaton in the thread as usual
திரு. செந்தில்வேல் அவர்களே
திரு.வைகோ அவர்கள் சென்னை சாந்தி திரை அரங்கில் கொடுத்த உணர்ச்சி மிக்க பேட்டியையும் நடிகர்திலகத்தின் உயர்ந்த நடிப்பு பெருமையை விவரித்த வீடியோ பதிவை இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் - சுதந்திரம் காத்த சான்றோர்களின் பெருமை காத்த மகான் எங்கள் சிவாஜி
சிவாஜி வெறும் நடிகரில்லை - தமிழகம் கண்டெடுத்த பொக்கிஷம்
இன்று மதுரையில் இரண்டு திடேர்களிலும் நல்ல கூட்டம்.விளம்பரமே அன்றி அம்பிகா வில் 160 பொதுமக்களும்
மீனாட்சியில்320 மக்களும் கட்டபொம்மனை தரிசித்து இருக்கின்றனர்
புது படங்களை விட அதிகமான் கூட்டம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சந்தோசத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
விரைவில் மதுரை சரஸ்வதியிலும்
தேனி, சிவகங்கை ,காரைக்குடி மற்றும் பழனியில்