http://i1098.photobucket.com/albums/...Selvan0005.jpghttp://i1098.photobucket.com/albums/...Selvan0007.jpg
http://i1098.photobucket.com/albums/...Selvan0010.jpghttp://i1098.photobucket.com/albums/...Selvan0011.jpg
Printable View
Mr Murali Sir,
Long time we have seen such a review from your end and once again you have not disappointed us. Hats Off to you
for the write up on SS and subsequently well supported with the superb photos by our Neyveliar.
Regards
வாசு சார்
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றிய முரளி சாரின் அற்புதமான எழுத்தாற்றலுடன் கூடிய பதிவிற்கு தங்களுடைய நிழற்படங்கள் உயிரூட்டியுள்ளன.
பாராட்டுக்கள்.
முழுப்படத்திலும் என் நெஞ்சைக் கவர்ந்த ஷாட்..
இதற்காக தங்களுக்கு தயிர்வடை தேசிகன் பாணியில்
"Double Thanks"
Murali ,
Long time we have seen such a review from your end and once again you have not disappointed us. Hats Off to you
for the write up on SS and subsequently well supported with the superb photos by our Neyveliar.
வாசு சார்
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றிய முரளி சாரின் அற்புதமான எழுத்தாற்றலுடன் கூடிய பதிவிற்கு தங்களுடைய நிழற்படங்கள் உயிரூட்டியுள்ளன.
பாராட்டுக்கள்.
Whatelse I can say? Ragavendhar and I concur on best still from SS.
NT Week in Sun Life Today Uthama Puthiran Dont miss it
சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவுகளை பாராட்டிய பெரியவர்கள் கோபு சார், ராமஜெயம் சார், சிவா சாருக்கு நன்றி!
பதிவை விரும்பி லைக் அளித்த ஆதிராம், வாசு, கோபால், சின்னகண்ணன், பரணி, சித்தூர் வாசு, ராகவேந்தர் சாருக்கு நன்றி!
பதிவை பாராட்டிய இளையதலைமுறையை சேர்ந்த mappi என்ற கார்த்திக்கிற்கு நன்றி!
அலைபேசியில் அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்த பதிவுகளை whatsapp group-லும் பகிர்ந்த கவி திலகம் ஆதவனுக்கு நன்றி!
whatsapp -ல் படித்து பாராட்டிய ஷர்மிளா மேடம் மற்றும் நண்பர் ஸ்ரீராம், ராமஜெயம் (சாந்தி) ஆகியோருக்கும் நன்றிகள் பல!
கோபால்,
நீங்கள் ஜூலையில் வரும்போது நிச்சயமாக நீங்கள் பார்க்க ஏற்பாடு செய்துவிடலாம்.
வாசு,
அருமையான ஸ்டில்- களை பதிவு செய்து அதுவும் நான் எழுதிய காட்சிகளுக்கு support-ஆக பதிவு செய்திருப்பது மிக நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக நான் குறிப்பிட்ட கோவில் காட்சிக்கு அடுத்ததாக வரும் ஜீப்பில் பயணம் செய்யும் காட்சி அதற்கு முன்னரே கோவிலில் வைத்து நடிகர் திலகம் அணிந்திருக்கும் வேட்டி சட்டையை சுட்டிக் காட்டி இந்த டிரஸ்சோடவா ஜீப் ஓட்டப் போறே என்று சகஸ்ரநாமம் கேட்க இல்லே டிரஸ் மாத்திட்டு வந்துறேன் என்று போகும் நடிகர் திலகம் யூனிபார்மிற்கு மாறி நடந்து வருவாரே! பட்டு வேட்டி சட்டையில் அவ்வளவு அம்சமாக இருப்பவர் யூனிபார்ம் அணிந்தவுடன் கம்பீரமாக மாறும் அதிசயத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை.
ஜீப் ஓட்டும்போது சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்திலே சூரக்கோட்டை என்பார். அடுத்து மற்றொன்றும் சொல்வார் கீழே இருக்கும்போதுதான் இது உன் ஊரு என் ஊரு-ங்கறதெல்லாம். வானத்திற்கு மேலே போய்ட்டா எல்லாமே நம்ம ஊருதான். இது அன்றைய நாட்களில் அரசியல் ஆதாயத்திற்காக சுயாட்சி என்றெல்லாம் வெற்று கோஷங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டும்வண்ணம் எழுதப்பட்ட ஒன்று.
மேள தாளம் பாடலில் வரும் அனைவருக்கும் பிடித்த அந்த ஸ்டில் படத்தில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அந்த காட்சியில் அழகாய் வெளிப்படும். படத்தில் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும்தான் கவியரசர் என்றபோதிலும் வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பார்.
ஆனந்த் ரோலிற்கு நீங்கள் போட்டிருக்கும் ஸ்டில்ஸும் அட்டகாசம். லதாவை அழைத்துப் போக வரும்போது விசிலடித்துக் கொண்டே வரும் அந்த நடை! விஎஸ் ராகவனிடம் ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் உட்கார்ந்து பேசிவிட்டு அவர் முறைத்தவுடன் பம்மி தன்னுடைய சீட்டிற்கு திரும்புவது என்று ஜாலியாக செய்திருப்பார்.
இப்படி எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காட்சியையும் எழுதிக் கொண்டே போக வேண்டியதுதான். அந்தளவிற்கு படத்தில் மெரிட் இருக்கிறது.
மீண்டும் அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
முரளி சார் தேதி சொன்னால் மிகவும் சந்தோசம். நானும் ஜூலையில் வருகிறேன். உங்கள் மொபைல் எண்ணை பிரைவேட் மெயிலில் அனுப்பவும், நான் உடனே பேசுகிறேன் நன்றி.
From Sudhangan FB,
1968ம் ஆண்டு வந்த முதல் சிவாஜி படம் ‘ திருமால் பெருமை’தான்! ஆனால், அந்த படத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும்! அதனால் அந்த வருடம் வந்த படங்களை வரிசைப்படுத்தாமல் எழுதுகிறேன்!
காரணம், அந்த வருடம்தான் என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் மகுடத்தில் வைத்த இன்னொரு சில வைரக் கற்கள் உருவாகின! பல வித்தியாசமான திரைப்படங்களும் வந்தன! அந்த வருடம் வந்த படங்கள் எனக்குள் சிவாஜியைப் பற்றி பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றன!
அத்தனை வித்தியாசமான படங்கள்! இப்படி ஒரு நடிகன் ஒரே வருடத்தில் இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா? உலகத்தில் எந்த நடிகனாவது இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஒரே வருடத்தில் நடித்திருக்கிறானா? ஏன் இவனது சாதனையைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள்?
காரணம், இந்த கலைஞன் கலையோடு மட்டுமே வாழ்ந்துவிட்டான்! அந்த வருடம் வந்த படம்தான் ‘உயர்ந்த மனிதன்’! இது ஏவி.எம். தயாரிப்பு! இதில் பணக்கார இள, நடுத்தர, வயோதிக வேடம்! முதலில் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்! பிறகு திருத்தி அமைக்கப்பட்ட கதைக்குத்தான் உடன்பட்டார் அவர்!
இந்தப் படத்திற்கான திரைக்கதை – வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார்! சிவாஜி ஒரு பணக்கார வீட்டு பிள்ளை! அவருடைய தந்தை எஸ்.வி. ராமதாஸ்!
சிவாஜி ஓர் ஏழைப்பெண்ணைக் காதலிப்பார்! அவளோடு உறவும் கொண்டு விடுவார்! அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவள் தனியே தந்தையுடன் வீட்டில் இருக்கும் போது சிவாஜியின் தந்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்!
குழந்தை என்ன ஆனது? குழந்தை பிழைக்கும். தாய் இறந்து போவாள்! வருடங்கள் கடக்கும்! சிவாஜி இப்போது ஒரு நடுத்தர மிகப்பெரிய தொழிலதிபர்!
அவருடைய மனைவி சவுகார் ஜானகி! திருமணமாகி வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை! இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது! இந்த சம்பவத்தை எனக்குச் சொன்னவர் சவுகார் ஜானகி! இந்தப் படத்தின் முக்கால்வாசி பகுதி முடிந்துவிட்டது!
அப்போது திடீரென்று ஏவி.எம்மில் ஒரு தொழிலாளர் போராட்டம்! ஸ்டூடியோ மூடப்பட்டுவிட்டது! இந்த இடைப்பட்ட காலத்தில் சிவாஜிக்கும், சவுகாருக்குமிடையே ஒரு பொதுமேடையில் வைத்து கருத்து வேறுபாடு!
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு! சிவாஜி-– சவுகார் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக நடிக்க உடன்படவில்லை! இருவரையும் சம்மதித்து நடிக்க வைத்தனர்! நடிப்பில் மட்டும்தான் இருவருக்கும் பேச்சுவார்த்தை!’ படப்பிடிப்பில் ஒரு‘ஹலோ’ கூட கிடையாது! மீண்டும் ஒரு வருடம் கழித்து படப்பிடிப்பு!
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சியின் தொடர்ச்சி! அதாவது முதல் வருடம் சவுகார் உள்ளே வருவது மாதிரி காட்சி! இப்போது அவர் உள்ளே வந்து கூடத்தில் வந்து உட்கார வேண்டும்! சிவாஜிக்கும் சவுகாருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது!
திடீரென்று அதற்கு முந்தைய வருடம் படப்பிடிப்பு பாதியில் நின்றதால், தொடர்ச்சி காட்சிக்கான புகைப்படங்கள் அதாவது ஸ்டில்ஸ் எடுக்கப்படவில்லை! இப்போது சவுகார் உள்ளே உடையோடு படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் வருகிறார்! சிவாஜி ஏற்கனவே தயார் நிலையில்! சவுகார் வந்த உடையை கண்டதும் சிவாஜி முகத்தில் ஒரு கலவரம்! அதை சவுகாரிடம் சொல்ல முடியாது!
காரணம், இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது! இருவருக்கும் தூது, உதவி இயக்குநர்கள்தான்! சிவாஜி உதவி இயக்குநரை அழைத்தார்! ‘அந்தம்மாவின் உடை சரியில்லை! போன முறை ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த காட்சியில் அவர் கறுப்பு சேலை அணிந்திருந்தார். இப்போது சேலை நிறம் மாறியிருக்கிறது’ என்றார் சிவாஜி! இதை உதவி இயக்குநர்கள் சவுகாரிடம் போய் சொன்னார்கள்!
சவுகார் படித்தவர்! தனக்கென ஒரு கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வைத்துக்கொண்டிருக்கும் குணாதிசயம் கொண்டவர்!
‘அதெல்லாம் கிடையாது! படம் நின்னு போய் ஒரு வருடம் ஆச்சு! இதே புடவையைத்தான் நான் கட்டியிருந்தேன். இந்த ஒரு வருடம் அவர் நடுவில் எத்தனை படங்கள் நடித்திருப்பார். வேறு படத்தின் நினைவில் சொல்கிறார்! வேணும்னா கண்டினியூடி அதாவது தொடர்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துப் பாருங்கள்’ என்றார் சவுகார்!
‘மேடம்! ஸ்டில்ஸ் எடுக்கிறதுக்குள்ள தான் படப்பிடிப்பு நின்னு போச்சே!’
‘அப்ப என்னால புடவையை மாத்த முடியாது–’ இது சவுகார்!
சிவாஜியிடம் போய் சொன்னார்கள் உதவியாளர்கள். அந்தப் படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு! இவர்கள்தான் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தை இயக்கியவர்கள்!
சிவாஜி தன் குருநாத இயக்குநர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, ‘வேண்டுமானால் நீங்கள் ‘ரஷ்’ போட்டு பாருங்கள். நான் சொல்வது சரியில்லையென்றால் நான் நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! வேறு வழியில்லாமல் ‘ரஷ்’ பார்க்க முன்பார்க்கும் ( பிரிவியூ) திரையரங்கும் தயாரானது!
படம் பார்க்க சிவாஜி – சவுகாரை அழைத்தார்கள்! சிவாஜி வர மறுத்துவிட்டார்! சொன்ன காரணம் ‘எனக்கு சந்தேகமில்லை! தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் பார்க்கட்டும்’ என்று சொல்லி தன் ஒப்பனை அறைக்குப் போய் விட்டார்! படத்தை பார்த்தார்கள்! சவுகாரும் பார்த்தார்! பார்த்த மாத்திரத்தில் அந்த அரங்கை விட்டு வெளியே ஓடினார் சிவாஜி இருந்த ஒப்பனை அறையை நோக்கி,
அப்போது இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையில்லாத சமயம்! நேராக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் சவுகார்! கண்ணீர் மல்க சிவாஜி எதிரே ஒரு வினாடி நின்று அப்படியே காலில் விழுந்தார்!
‘எப்படிங்க இது! ஒரு வருடத்திற்கு முன்னாடி நின்னு போன படம்!
நடுவிலே எத்தனை படம் நடிச்சிருப்பீங்க! எப்படி நான் இந்தக் காட்சியில நடிச்ச புடவை நிறம் கூட நினைவில் வெச்சிருக்கீங்க!! நீங்க அபாரம்! என்ன கோபமிருந்தாலும் மன்னிச்சுக்குங்க’ என்றார் சவுகார்.
அவரை கைதூக்கிவிட்டபடி சிவாஜி சொன்னார்! ‘என் சுபாவம், கவனம் எல்லாமே நடிப்புத்தானேம்மா! இந்தப்படத்துக்கு வந்தால் இந்த கதாபாத்திரம்! அடுத்த படப்பிடிப்புக்கு போய் மேக்கப் போட்டால், அடுத்த கதாபாத்திரம்! இதுதானே என் பழக்கம்?’ என்றார் சிவாஜி!
சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பும், அதை புரிந்து கொண்ட சவுகாரும் பழைய தற்காலிக கோபத்தை மறந்தார்கள். அதுதான் அந்த காலத்து நட்சத்திரங்களின் தொழில் அர்ப்பணிப்பு! அந்த காலத்தவர்களுக்கும் பணம் தேவைதான்! ஆனால் அதையும் மீறி ஒரு தொழில் அர்ப்பணிப்பு இருந்தது!
From Sudhangan FB
திருவருட்செல்வர்’ படம் வந்த அதே வருடம் சிவாஜிக்கு கிடைத்த ஒரு வித்யாசமான படம் என்பது இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கறுப்பு வெள்ளைப் படம்!
ஸ்ரீதருக்கும் முக்கோண காதல் கதைக்கும் மிகுந்த உறவு உண்டு.
அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்.
அப்படி ஸ்ரீதருக்கு ஏமாற்றம் தந்த படம்தான் சிவாஜி நடித்த ‘நெஞ்சிருக்கும் வரை.’
இந்த படத்தில் பலரும் மேக்கப் இல்லாமலேயே நடித்திருந்தார்கள்.
சிவாஜி இந்த படத்தில் ஓர் ஏழைத் தொழிலாளி!
அவருக்கு இரண்டு நண்பர்கள்.
அந்த நண்பர்கள் வேடத்தில் முத்துராமனும், வி.கோபாலகிருஷ்ணனும் நடித்திருப்பார்கள்.
தனக்கு அடைக்கலம் கொடுத்தவர் வீட்டுப்பெண்ணான கே. ஆர்.விஜயாவை விரும்புவார்.
ஆனால் கே.ஆர். விஜயாவோ முத்துராமனை விரும்புவார்.
உடனே, அனாதையாகிவிட்ட அந்த பெண்ணுக்கு ஓர் அண்ணனாகவே மாறி தன் நண்பன் முத்துராமனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்.
இந்த படம் சிவாஜிக்கும், ஸ்ரீதருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இந்த படத்தை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்த்ததற்கு காரணம் இசைதான்.
இந்தப் படத்தின் உண்மையான நாயகர்கள் எம்.எஸ். விஸ்வநாதனும், கவியரசு கண்ணதாசனும்தான்!
இசை மிஞ்சியதா அல்லது இசைத்தமிழ் மிஞ்சியதா என்கிற மாதிரி அத்தனை அற்புதமான பாடல்!
தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கும் வாழ்ந்தே திருவோம்.’
அதே போல் சிவாஜி கனவில் கே.ஆர். விஜயாவோடு பாடுவதாக அமைந்த டூயட் பாட்டான ‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம், சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ பாடலுக்கு இன்னும் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இரவு விடுதிகளில் தமிழ் மெல்லிசை கச்சேரி நடக்கும்.
அதில் தவறாமல் இந்த பாடல் இடம்பெறும்!
ஒரு நாளிதழை கொடுத்தால் அந்த செய்திக்கு கூட எம்.எஸ். விஸ்வநாதன் டியூன் போட்டு விடுவார் என்பார்கள்.
அதற்கு உதாரணம் இந்தப் படம்தான்!
ஒரு திருமண பத்திரிகைக்கு பாடல் அமைத்த ஒரே இசையமைப்பாளர் உலகத்திலேயே விஸ்வநாதனாகத்தான் இருப்பார்.
இந்த படத்தில் கே.ஆர்.விஜயா – முத்துராமனின் திருமண பத்திரிகையை வைத்துக்கொண்டு சிவாஜி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் இன்றும் பல திருமண வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம்!
அந்த பாடல்தான் ‘ பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ பாடல்!
ஓர் அழைப்பிதழில் தொடங்கி, அப்படியே திருமணத்தில் மணப்பெண் எப்படி நடந்து வருகிறாள் என்பதை வர்ணித்து, திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை வாழ்த்தி அந்த பாடல் முடியும்.
என்னவொரு கற்பனை கண்ணதாசனுக்கு?
‘மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை பெற கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர் கட்டினான் மாங்கல்யம்
மனை வாழ்க! துணை வாழ்க! குலம் வாழ்க!’ இந்த வரிகளை ரசிக்காத ரசிகர்களே அப்போது இல்லை என்றே சொல்லலாம்.
இந்த படத்தை இன்று ரசிகர்கள் நினைவில் வைத்திருந்தால் அதற்குக் காரணம் பாடல்கள்தான்.
அதே போல் சிவாஜியின் மிகையில்லாத நடிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட்!
அடுத்து அதே வருடம் வந்த இன்னொரு சிவாஜி படம் ‘பாலாடை.’
பீம்சிங் இயக்கத்தில் வந்த இன்னொரு ‘பா’ வரிசை படம் இது!
தனக்கு பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக தன் தங்கை கே.ஆர்.விஜயாவுக்கே தன் கணவர் சிவாஜியை திருமணம் செய்து வைப்பார் பத்மினி!
மிகவும் சிக்கலான கதைக் களம் இந்த படத்திலும் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக அமைந்திருந்தன!
1968–ல் பல படங்கள் வெற்றி பெற்றன. இந்த வருடம் முதலில் வந்த சிவாஜி படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வந்த ‘திருமால் பெருமை!’
இது பன்னிரண்டு ஆழ்வார்களில் சில ஆழ்வார்களை மட்டுமே எடுத்துக் கொண்டு எடுக்கப்பட்ட படம்!
முந்தைய ஆண்டு சைவர்களுக்காக ‘திருவருட்செல்வர்’ கொடுத்த நாகராஜன், அடுத்த ஆண்டு வைணவர்களுக்காக கொடுத்த படம்தான் ‘திருமால் பெருமை.’
அடுத்து வந்த படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காமெடி படம்.அதுதான் ‘கலாட்டா கல்யாணம்’.
ஒரு நட்சத்திர கலைவிழாவிற்காக சித்ராலயா கோபு எழுதிய ஒரு பதினைந்து நிமிட நாடகம்தான் ‘கலாட்டா கல்யாணம்’ கதை!
அந்த நாடகத்தின் கரு சிவாஜிக்கு பிடித்திருந்தது.
உடனே சிவாஜி பிலிம்ஸின் இன்னொரு நிறுவனமான ராம்குமார் பிலிம்ஸ் பேனரில் எடுத்த படம்தான் இது!
தன் முதல் படமான ‘அனுபவம் புதுமை’ படத்தை எடுத்திருந்து தோல்வியில் இருந்தார் இயக்குநர் சி.வி. ராஜேந்திரன்!
அவர் இயக்குநர் ஸ்ரீதரின் நெருங்கிய உறவினர்!
அதே சமயம் அவருடன் ‘வெண்ணிற ஆடை’ படக் காலத்திலிருந்து அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உண்டு!
‘வெண்ணிற ஆடை’ படம்தான் ஜெயலலிதாவின் முதல் படம்!
‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சி.வி. ராஜேந்திரன்தான் இயக்க வேண்டுமென்று சிவாஜி உறுதியாக இருந்தார்.
உடனே சி.வி. ராஜேந்திரன் சிவாஜியிடம் ‘இந்தப் படத்தில் ஏன் உங்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்கக்கூடாது ?’ என்று கேட்டவுடன் சம்மதித்தார் சிவாஜி!
இந்த படம்தான் சிவாஜி – ஜெயலலிதா ஜோடி சேர்ந்த முதல் படம்!
அதற்கு முன்பு வந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருந்தார் ஜெயலலிதா!
இந்த படத்தில், டைட்டில் வருவதற்கு முன்பே படம் ஒரு பாடலோடுதான் துவங்கும். சி.வி. ராஜேந்திரனும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். சி.வி. ராஜேந்திரன் பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிற்கு உண்டு!
அதனால் படத்தின் முதல் காட்சியே ஒரு நல்வரவு பலகையோடு கேமரா பின்னோக்கி வரும்!
கேமராவை நோக்கி ஜெயலலிதா ஓடிவந்து சாத்தனூர் அணைக்கட்டின் மேல் படிக்கட்டில் இருக்கும் சிவாஜியை நோக்கி ஓடிப்போவார்!
அவரை அப்படியே அணைத்து அவர் முதுகுக்குப்புறமாக கேமராவை பார்த்து ‘ வந்த இடம் நல்ல இடம்! வரவேண்டும் காதல் மகராணி’ என்று ஆரம்பித்தவுடன், அது ஜெயலலிதா தன்னுடன் ஜோடி சேர்ந்ததற்கான வரவேற்பு என்பதை புரிந்து கொண்டு ரசிகர்களின் விசில்கள் பறக்கும்.
இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியிருந்தவர் வாலி!
இந்த வருடம் வந்த முதல் படம் புராணம் என்றால், அடுத்த படம் முற்றிலுமாக மாறியிருந்த படம்தான் ‘கலாட்டா கல்யாணம்’!
From Sudhangan FB,
தனக்கு திருநாவுக்கரசர் பாத்திரம் கிடைத்தது கூட பரமாச்சார்யாளின் அருள்தான் என்று சிவாஜி நெகிழ்ந்து சொன்னார்.
அந்த திருநாவுக்கரசர் வேடத்தில் சிவாஜி திரையில் தோன்றிய போது எழுந்த கைதட்டல்களை எண்ணவே முடியாது.
ஒவ்வொரு நடைக்கும், ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டல்கள்தான்!
அப்பூதி அடிகள் வீட்டுக்கு வந்து அந்த வீட்டு திண்ணையில் அவர் உட்காருகிற பாணிக்கே தனியாக கைதட்டுவார்கள்.
அன்றைய இயக்குநர்களுக்கு சிவாஜி என்பவர் ஓர் அட்சய பாத்திரம்!
அந்த பாத்திரத்தில் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்!
சிவாஜி எந்த கதாசிரியரை பார்த்தாலும் முதலில் கேட்பது ‘ ஏம்பா! எனக்கெல்லாம் கதை சொல்ல மாட்டியா?’ என்பதுதான்.
அதே சமயம், சக நடிகர்களை மதிக்கும் பாங்கை அவரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார். இங்கே இன்னொன்றையும் பதிவு செய்ய வேண்டும். உலகத்திலேயே முதன்முதலாக ஒரு நடிகன் சட்டமன்றத்தில் நுழைந்தது எஸ்.எஸ். ஆர். மூலமாகத்தான். 1962ல் பெரியகுளம் தொகுதியிலிருந்து அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அதற்குப் பிறகுதான் அமெரிக்க அதிபர் ரீகன் நடிகராக இருந்து ஜனாதிபதியானார். இதே எஸ்.எஸ். ஆர். ராஜ்யசபா உறுப்பினர் ஆனதும் சிவாஜி அவருடைய வீட்டுக்குப் போனார்.
‘ ஏண்டா ராஜு! நீயெல்லாம் டில்லிக்கு போய்ட்டா நான் யார் கூட நடிக்கிறது? நீ என்னோடு நடிக்கும்போதுதாண்டா என் நடிப்புக்கே ஒரு மதிப்பு வருது’ என்று வெளிப்படையாக சொன்னவர் சிவாஜி.
இதை சிவாஜி என்னிடம் சொல்லவில்லை. எஸ்.எஸ். ஆர். ‘நான் வந்த பாதை’ என்ற அவருடைய சுயசரிதையில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் சிவாஜி ஒரு விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
‘ என்னை எல்லோரும் பெரிய நடிகன்னு சொல்றாங்க. ஆனால் நான் நடிக்க பயப்படுற பல நடிகர்கள் நம்ம தமிழ் சினிமாவில் இருக்காங்க. உதாரணமாக எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதாண்ணேன், எஸ்.வி. சுப்பையா, டி.எஸ். பாலையா, சந்திரபாபு, நாகேஷ், அதே மாதிரி நடிகைகள்ள கண்ணாம்பா, பானுமதி’ என்றார்.
மற்ற நடிகர்கள் நன்றாக நடித்தால்தான் அதை மிஞ்சி நாம் நடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தவர் சிவாஜி!
தன்னுடைய பல படங்களில் மற்றவர்களின் நடிப்பை ரசித்து பாராட்டியவர் சிவாஜி!
தமிழில் சிவாஜி நடித்த பல படங்கள் வேற்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
பல உலகப்புகழ் இந்தி நடிகர்கள் சிவாஜி நடிப்பை கண்டு வியந்து சில கதாநாயகர்கள் எங்களால் இப்படி நடிக்க முடியாது என்று சொல்லி அதனால் அந்தப் படங்களை நிராகரித்த கதாநாயகர்கள் உண்டு! சிவாஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் அவரது உச்சரிப்பு!
தமிழை அவர் உள்வாங்கிக்கொண்டு பேசும் வசனங்கள், அதே மாதிரி கரடுமுரடான தமிழ் பாடல்களை, பாசுரங்களை, தேவார பதிகங்களை அவரைப் போல் உள்வாங்கி வாயசைப்பவர்கள் உண்டா என்பது சந்தேகம் தான்.
உதாரணமாக, இந்த திருநாவுக்கரசர் வேடத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
சிவாஜி வசனம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!
ஆனால், கடினமான பாடல்களுக்கு அப்படியே ஏதோ இவரே திரையில் பாடுவதைப் போல உணர்ச்சி பொங்க வாயசைப்பதுதான் அவருடைய மிகப் பெரிய சிறப்பு என்றே சொல்லலாம்.
முதலில், பெரிய புராணத்தில் திருநாவுக்கரசர் எப்படி இருந்தார் என்பதை தெரிந்து கொண்டால்தான் சிவாஜியின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சமண மன்னனை சைவத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர்! அவர் நம் சமண மதத்தை இழித்துப் பேசுகிறார் என்றெல்லாம் பல்லவ மன்னனிடம் போய் சொல்வார்கள்!
திருநாவுக்கரசரை இழுத்து வரச்சொல்வான் மன்னன்!
மன்னனின் படைகள் திருநாவுக்கரசரை சூழ்ந்து கொள்ளும்.
ஓரமைச்சன் திருநாவுக்கரசர் அருகே சென்று, ‘நம் அரசர் உம்மை அழைத்து வருமாறு எங்களை அனுப்பினார். வாரும்’ என்றான்.
அஞ்சுதல் இல்லாத திருநாவுக்கரசு அடிகள் அரசன் ஆணை வழி வந்த அமைச்சனை நோக்கி,
‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம்
நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை
நாமார்குங் குடியல்லாத்
தன்மை யான
சங்கரனற் சங்கவெண்
குழையோர் காதிற்
கோற்கே நாமென்று
மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச்சே
வடியிணையே குறுகினோமே’
என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். இத்தனை கடினமான பாடல்களை பாடியவர் திருநாவுக்கரசர்.
இவருடைய ஒரு பாடலை, ‘திருவருட்செல்வர்’ படத்தில் வைத்திருப்பார்கள்.
அதற்கு கே.வி. மகாதேவன் அருமையாக இசையமைத்து டி.எம்.எஸ். பாடியிருப்பார்.
ஆனால் இந்த பாடல் பதிவு என்பது ரிக்கார்டிங் தியேட்டரில் நடந்தது! ஆனால், சிவாஜி விஷயம் அப்படியில்லை! வெளிப்புற படப்பிடிப்பு! பலர் பார்க்க பின்னால் வரும் பாடலுக்கு திருநாவுக்கரசரான சிவாஜி வாய் அசைக்க வேண்டும்! அதைப் படத்தில் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது மாதிரி இருக்கும்!
அந்த பாடல் இதுதான்!
‘மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலை!’
இத்தனை கடுமையான வரிகளுக்கு சிவாஜி கொடுத்த வாயசைப்பெல்லாம் பலரை அன்று பிரமிக்க வைத்தது!
திருநாவுக்கரசர் வாழ்க்கையை பெரிய புராணத்தில் படித்தால் பல சாகசங்கள் இருக்கும்!
ஆனால், அதையெல்லாம் கொண்டு வந்தால் சிவாஜிதான் தெரிவார்!
ஆனால், அப்பரான திருநாவுக்கரசர் பாத்திரம் சிவாஜி மூலமாக ரசிகர்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்பதால் ஏ.பி.நாகராஜன் அந்த சாகச சம்பவங்களை தவிர்த்து விட்டு, திருஞான சம்பந்தர், அப்பர், அப்பூதியடிகள் சம்பவங்களை மட்டுமே வைத்து படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கினார்.
சிவாஜி சொன்னார், ‘பாசமலர்’ படத்திற்கு பிறகு நானும் சாவித்திரியும் ஜோடியாக நடித்தால் எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதே போல் இந்த திருநாவுக்கரசர் பாத்திரம் ஏற்று நடித்த பின் என்னை சமூக படங்களில் ஏற்றுக்கொள்வார்களா என்று நான் பயப்படும் அளவிற்கு இந்த கதாபாத்திரத்தை அப்படி ரசித்தார்கள்.’
ஆனால் ‘ பாசமலர்’ அனுபவம் அவருக்கு ‘திருவருட்செல்வ’ரில் தொடரவில்லை.
அதற்கு பிறகு அவர் பல வித்தியாசமான வேடங்களில், சமூக படங்களில் கலக்கினார் என்பதுதான் திரை சரித்திர உண்மை.
அதற்கு சிறந்த உதாரணம் ‘திருவருட்செல்வர்’ படம் வந்த அதே வருடத்தில் வந்த இன்னொரு மிக வித்தியாசமான சிவாஜி படம்.
அது என்ன படம் ?
http://i1028.photobucket.com/albums/...psy2znymrk.jpg
பச்சை விளக்கு- எழுத்துப் பயணம் -1
அணிந்திருக்கிற கருப்புத் தொப்பி தலையோடு அழகாகப்
பொருந்தி விடுவதைப் போலவே, அந்த "சாரதி" வேடமும் நடிகர் திலகத்தோடு
"கிச்"சென்று பொருந்தி விடுகிறது.
நடிகர் திலகம் என்ற உயரிய
நடிப்புக் கலைஞனும், பீம்சிங்
என்கிற இயக்குநரும் கொண்டிருந்த புரிதல் மிகுந்த
நட்பு, திரையிலும் பார்த்துணர
முடிகிற புனிதமாயிருக்கிறது.
வைத்தியமில்லாத ஒரு கொடிய வியாதிக்கு அன்னையைப் பறிகொடுத்துப்
பரிதவித்து, தாயன்போடு
நெருங்கும் வேலைக்காரியை
அன்னையாக்கிக் கொண்டு,
அந்த வேலைக்காரியின்
சின்னஞ்சிறு மகளைத் தன்
தங்கையாக்கிக் கொண்டு,
குடும்பம் விளங்க ஒரு குணவதியைத் தன் இல்லாளாக்கிக் கொண்டு,
புத்தம் புதிய வாழ்க்கைக்குள்
நுழைகிற புது நாளில் பெற்றவளைப் போல பேணி
வளர்த்த இரண்டாம் தாயும்
இறந்துபடும் கொடுமைக்கு
கதறிக் கொண்டு,
அழுதுறங்கும் உடன்பிறவாத் தங்கையை சாவுகளைச் சாகடிக்கிற ஒரு மருத்துவராக்க வேண்டும் என்கிற இலட்சியம் கொண்டு,
தன் இலட்சியம் நிறைவேறிக்
கனியும் வரைக்கும் கட்டில்
சுகம் வேண்டாமென்று
மனைவியிடம் கெஞ்சிக் கொண்டு,
உடலாலும், உள்ளத்தாலும் தனக்கும், தன் நல்லது கெட்டதுகளுக்கும்
பக்கத்திலேயே இருக்கிற
நண்பன் ஜோசப்பிடம் உயரிய
நட்புக் கொண்டு,
வயதான தந்தை, ஒற்றைத் தம்பி, பண்பின் இருப்பிடமான மனைவி, உயிரின் உயிரான
தங்கை எல்லோரின் மீதும்
உண்மையான அன்பு கொண்டு,
நல்லவற்றிற்கும் தனக்கும்
கொள்ளை தூரம் வைத்திருக்கிற உதவாக்கரை
சித்தப்பா மேல் நிறைய கோபம்
கொண்டு,
ஒழுக்கமான வளர்ப்பு கொண்டு,
தங்கள் குடும்பத்தின் மீது
அக்கறை மிகக் கொண்ட
பெரியவர் பொன்னம்பலத்தின்
மீது மட்டற்ற மரியாதை
கொண்டு,
மருத்துவருடையில் பார்க்கத்
துடித்திருந்த தங்கையை,
மணக்கோலத்தில் பார்க்க
வேண்டிய சூழலுக்காக வருந்திக் கொண்டு,
தங்கையை மணந்தவன்
நல்லவனென்பதால் அவன்
மீது பேரன்பு கொண்டு,
தங்கை மீண்டும் படிக்க அவள்
கணவனே சம்மதித்தது கண்டு
ஆனந்தம் கொண்டு,
தங்கையின் அப்பாவிக் கணவன் பொல்லாதவர்களின்
சூழ்ச்சியால் சிறை செல்வது
கண்டு கலங்கிக் கொண்டு,
இரண்டு உயிர்களைப் பழிவாங்க, எண்ணற்ற உயிர்களைச் சுமந்து செல்லும்
ரயிலுக்கு வெடி வைக்கும்
தீயவர்களின் சதி முறிக்கும்
கடமை கொண்டு,
விரதம் முடித்து மழலைச் செல்வம் தர மனைவி வலியோடு துடித்திருக்க..
தன்னுயிரைப் பெற்றுத் தரும்
மனைவியையும் விட்டு விட்டு
ஏராளமானோரின் இன்னுயிரே
முக்கியமென்று வேகம் கொண்டு,
தீமை தடுத்து, தேசம் காக்கும்
திடம் கொண்டு,
அழிக்கச் சிதறிய வெடிக்குத்
தன் தியாகத் திருவுருத்தையே
சிதைத்துக் கொண்டு...
நொடிக்கு நொடி மாறும் ஆயிரம் பாவங்களுக்கும்
உரியதாய் தன் முகத்தை மாற்றிக் கொண்டு,
இத்தனை அற்புதமாய் எங்கள்
நடிகர் திலகம் போல் நடிக்க
யாருண்டு... ரயிலோடு எங்கள்
கவலைகளையும் ஓட்டும்
சாரதியாய் வேடங் கொண்டு?
( ...தொடரும்... )
From Sudhangan FB
திருவருட்செல்வர்’ படத்தில், அடுத்த காட்சியாக ஏ.பி. நாகராஜன் நாயன்மார் கதைகளில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரத்தில்தான் அவருடைய மேன்மைத்தனம் பளிச்சிடும்.
குழந்தையாக இருந்த போது பார்வதிதேவியிடம் ஞானப்பால் பருகிய குழந்தை, திருஞானசம்பந்தர்!! இவரை திருவிளையாடற்புராணத்தில், ஆளுடைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். அதே போல் திருவிளையாடற் புராணத்தில் இன்னொரு முக்கியமானவர், திருநாவுக்கரசர்! இவருடைய இயற்பெயர் மருனீக்கியார்! ஒரு பல்லவ மன்னனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்!
சுண்ணாம்பு கொப்பரையில் போடப்பட்டார்! யானையை விட்டு மிதிக்க சொன்னார்கள்! விஷம் கொடுத்து பார்த்தார்கள்! ஆனால் சிவனின் அருளால் அவர் உயிர் பெற்றார்.
வயதில் முதிர்ந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரையும் இணைத்தே காட்சிகளை அமைத்திருந்தார் ஏ.பி. நாகராஜன்!
இதில் நன்றாக கவனித்தால் ஏ.பி. நாகராஜன் தன் ஆரம்பகால படங்களிலிருந்தே சிவாஜி கணேசன் என்கிற ஒரு சகலகலாவல்லவ நடிகரை நம்பிய தன் திரைவாழ்க்கையை நகர்த்திச் சென்றது தெரியவரும்!
ஆரம்ப காலத்தில் சிவாஜி நடித்த படம் ‘சம்பூர்ண ராமாயணம்’. இந்த படத்தில் ராமராக நடித்தவர் என்.டி. ராமாராவ்!
ஆனால் படத்தில் பரதன் வேடத்திற்கு சிவாஜிதான் பொருத்தமானவர் என முடிவு செய்தார் ஏ.பி. நாகராஜன்!
அந்த படத்திற்கு திரைக்கதை –வசனத்தை நாகராஜன்தான் எழுதியிருந்தார். அதே போல் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்கிற சமூகபடத்தில் சிவாஜி கணேசனை கொங்கு தமிழ் பேசி நடிக்க வைத்தவரும் ஏ.பி. நாகராஜன் தான்!
அதே போல், அவர் புராணப்படங்களுக்கு கதையை யோசிக்கும் போதே சிவாஜியை வைத்துத்தான் ஆரம்பிப்பார்! அந்த சிந்தனையின் உச்சக்கட்டம்தான் ‘திருவருட்செல்வர்’ படம்.
இதில் திருகுறிப்புத் தொண்டன், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார், அப்பர் சுவாமிகள் என்று நான்கு கதாபாத்திரங்கள் சிவாஜிக்கு!
எல்லா பாத்திரங்களிலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தாலுமே, இந்த திருநாவுக்கரசர் வேடத்தை பார்த்த அந்த நாளில் வியக்காதவர்கள் இல்லை!
அந்த ஒப்பனையோடு அவரை பார்த்தவர்கள் அவரை திருநாவுக்கரசராக பார்க்கவில்லை.
காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளாகவே கண்டார்கள்.
அந்த ஒப்பனை, அவர் அந்த பாத்திரத்திற்காக எடுத்துக் கொண்ட சிரத்தை, ஒரு வயோதிகர் எப்படி நடப்பார் என்பதற்கு உதாரணம் காட்டிய ஒரு கதாபாத்திரம் அது!
கமல்ஹாசன் பின்னாளில் பத்து வேடங்கள் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார்.
கமல் காலத்தில் ஒப்பனைக்கலை நன்றாக வளர்ந்திருந்த காலம்.
மேலும், வெளிநாட்டிலிருந்து புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர்களை கொண்டு வர முடியும்.
சிவாஜி அப்பராக நடித்த காலத்தில் அந்த வசதி கிடையாது!
‘திருவருட்செல்வர்’ படத்தில் ஒரு சூரியோதய காட்சி– அதுவும் கடற்கரையில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அதிகாலையில் நிற்பதாக காட்சி!
இந்தப் படத்தைப் பற்றி 1986ம் வருடம் நான் ஜூனியர் விகடன் பத்திரிகையில் அவரை எடுத்த பேட்டியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.
இந்த திருநாவுக்கரசர் வேடத்திற்கு ஒப்பனை செய்ய 4 மணி நேரமாகுமாம்!
அப்படியானால், அந்த அதிகாலை காட்சி வருகிறதே?
‘ஆமாம், ராத்திரி ஒரு மணிக்கு மேக்கப் போட உட்காருவேன்.
முழு மேக்கப்போடு அந்த காவி துணியை கட்டிக்கிட்டு கடற்கரையில் சூரியோதயத்திற்கு முன்பாக முதல் ஆளாக இருப்பேன்’ என்றார்.
சரி, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது யார்? ‘காஞ்சி பரமாச்சாரியாள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தீர்கள்?’
‘நான் முன்பே சொல்லியிருக்கிறேன், ஒரு நடிகனுக்கு நிறைய கவனிக்கும் திறமை (observation) வேண்டும் என்று. நான் என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் சூழ்நிலை எல்லாவற்றையும் நன்கு கவனிப்பேன். நான் அப்பராக வேடம் போடும் போது ஒரு வயதான சிவனடியாருக்குரிய தோற்றம், நடையுடை பாவனை போன்றவற்றை என் நடிப்பில் காட்ட வேண்டுமல்லவா?
எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்’ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் கூப்பிட்டு அனுப்பியதாக சங்கர மடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவர் மைலாப்பூரில் இருந்த ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி, நான்கு பேரும் சென்றோம். எங்களை உள்ளே ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஓர் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறு குத்துவிளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாக பார்த்துக்கொண்டே வந்தார். மெல்ல கீழே உட்கார்ந்து, கையை புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.
‘நீதானே சிவாஜி கணேசன்?’ என்றார்.
‘ஆமாங்கய்யா! நான்தான்’ என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.
என் குடும்பத்தினரும் அவரை வணங்கினார்கள்.
அப்போது அவர் ‘உன்னை பார்த்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. ‘யானை நன்றாக இருக்கிறதே ? யாருடையது?’ என்றேன்.‘சிவாஜி கொடுத்தது’ என்றார்கள்.
திருச்சி சென்றிருந்தேன்.
அங்கு திருவானைக்கா கோயிலுக்குப் போனேன்.
அங்கும் யானை மாலை போட்டது!
‘யானை அழகாக இருக்கிறது! யாருடையது?’ என்றேன்.
‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள்.
தஞ்சை புன்னை மாரியம்மன் கோயில் சென்றிருந்தேன்.
அங்கேயும். யானை மாலை போட்டது.
‘இது யாருடையது?’ என்றேன்.
‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
அவர்கள், பப்ளிசிட்டிக்காக சில சமயம், கோயில்களுக்கு பணம்தான் நன்கொடையாக கொடுப்பார்கள்.
ஆனால் யானையை கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. அதனால் உன்னைப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானை பிரார்த்தனை செய்கிறேன்,
என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
அப்போது என் மனம் எப்படி இருந்திருக்கும்? எத்தனை அனுக்கிரகம்! நினைத்துப் பாருங்கள் (சொல்லும்போதே சிவாஜியின் கண்களில் நீர் முட்டியது.) அந்த கண்ணீரில் நடிப்பில்லை.
பொதுவாக எனக்கு வாழ்க்கையில் பயமே கிடையாது. காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற பெரிய முனிவர்களின் ஆசி எனக்கு இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்? இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்து போனது. இந்த சந்திப்பைப் பற்றியே நான் பல நாட்கள் யோசித்துக்கொண்டிருந்தேன்.
இந்த திருநாவுக்கரசர் பாத்திரத்தை என்னை நம்பி இயக்குநர் ஒப்படைத்தது கூட அவர் ஆசிதானோ?
பரணி
சுதாங்கன் அவர்களின் நடிகர் திலகம் பற்றிய தொடர்களுக்கு உளமார்ந்த நன்றி.
பரணி சார்
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ஆதவன் ரவி
உங்களை எப்படிப் பாராட்டுவது என்கிற வித்தையையும் தாங்கள் தான் எங்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
வார்த்தை முட்டுகிறது..
எனினும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவு தினம் சில தினங்களுக்கு முன் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி ஒரு நினைவுக்கட்டுரையில் நமது நடிகர் திலகத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
http://blogs.timesofindia.indiatimes...06_004_012.jpg
அதற்கான இணைப்பு - http://blogs.timesofindia.indiatimes...amil-nadu-too/
ரத்த திலகம் படத்திலிருந்து தலைவரின் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தின் காணொளி
https://www.youtube.com/watch?v=lSAcVpljPE0
அதே ஒத்தெல்லோ நாடகம் அன்பு படத்திலிருந்து
https://www.youtube.com/watch?v=QJy4pQ66Da8
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.
நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.
monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.
Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..
ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )
பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.
Agecraft skills மற்றும் stamina .
பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.
பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.
மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.
என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.
larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.
shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.
அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.
உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.
நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.
உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.
முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.
ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.
voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.
அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.
ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)
Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.
மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.
சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
பச்சை விளக்கு-
எழுத்துப் பயணம் - 2
ஒரு விஷயம் குறிப்பிடுவது
அவசியமென்று நினைக்கிறேன்.
பெரும்பாலும்
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள்,
நடிகர் திலகத்தைப் பற்றி
மிக ஆர்வமாய்
( நேரடியாகவோ, WhatsApp குழுமங்களிலோ) உரையாடுவார்கள்.
நிறைய பேசப்படும். நடிகர் திலகம் நிறைய வியக்கப்படுவார்.
அவர்களுக்குள் விஷயங்கள் தீர்ந்து,நீண்ட நேர உரையாடல்
முடிவடைகிற நிமிஷத்தில்
ஒருத்தர் ஆரம்பிப்பார்...
"அவரைப் பற்றி சொல்லிக்
கொண்டே போகலாம்.நாள்
போதாது" என்று.
"ஆமாம்" போடுவார் இரண்டாமவர்.
மூன்றாவது நபர் முடிப்பார்...
"என்ன சொல்ல...? அவர் ஒரு
பிறவி நடிகர்".
இந்த "பிறவி நடிகர் "எனும்
வார்த்தை எனக்கு அலர்ஜி.
அதிர்ச்சி.
ஆழ்ந்து ரசித்து, ஆர்வமாய்
விவாதிப்போர் நடிகர் திலகத்தின் மீது கொண்டிருக்கிற மதிப்பில்,
அதிகபட்ச வியப்பில் கிளம்பி வருகிற வார்த்தையே அந்த
"பிறவி நடிகர்" என்பதை
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
நம்மைப் போல் சாதாரண
மனிதப் பிறப்பெடுத்து, நம்மைப்
போல் இன்ப,துன்பங்களோடு
வளர்ந்து, நம்மைப் போல்
தனக்கென ஒரு தொழில் தேர்ந்து, அந்தத் தொழிலைத்
தெய்வமெனக் கருதிப் போற்றி,
நம்மாலெல்லாம் எழும்பிப்
போக முடியாத ஒரு உயரத்தை
அடைந்தவர்... அய்யா நடிகர்
திலகம்.
விடாமுயற்சி, உழைப்பு, தொழில்பக்தி, முன்னேற்றம்,
வெற்றி... எனப் போகிறது,
அய்யாவின் கலை வாழ்க்கை.
"பிறவி நடிகர்" என்கிற சோம்பலான வார்த்தை
அய்யாவுக்கு சரியானதாய்
இருக்காது.
-------------------------------
"பச்சை விளக்கு" படத்தின்
துவக்கக் காட்சி.
தன்னுடைய திருமண தினத்தன்றே தன்னை வளர்த்து
ஆளாக்கிய வளர்ப்பு அன்னை இறந்து போகிறாள். அந்த
அன்னையின் அன்பு மகளை
அநாதைப் பெண்ணாகப்
பார்க்காமல் தங்கையாகவே
வரிந்து கொள்வதும், அந்தத்
தங்கையை கொடிய மரணங்களைத் தடுக்கும் மருத்துவராக்க வேண்டும்
என்கிற உறுதியேற்பும்..
எங்கே..? மனைவியின் முன்னிலையில், முதலிரவு
அறைக்குள் நடக்கிறது.
தங்கையின் எதிர்காலம் குறித்த
தன் கனவு நனவாகும் வரை
இல்லற சுகம் வேண்டாமென்று
மனைவியைக் கேட்டுக் கொள்ளும்போதும், அவன்
சொல்லத் தயங்குவதைப் புரிந்து கொண்ட அந்த பண்பான மனைவி அதற்கிசைந்ததும் அவளது கரம் பற்றிக் கொண்டு
நன்றியுணர்வில் கசியும் போதும், நடிகர் திலகத்தின்
குரலைக் கவனியுங்கள்.
காட்சியைப் புரிந்து கொண்ட
ஒரு அற்புதக் கலைஞனின்
குரல். மென்மைக் குரல்.
மேன்மைக் குரல்.
அந்தக் குரலை அப்படியே
நினைவுகளில் சுமந்து கொண்டு
தொடர்ந்து வாருங்கள். கொஞ்ச
நேரம் கழித்து ஒரு ரயில் காட்சி. ரயிலைச் செலுத்திக்
கொண்டே, பின்னால் நிற்கும்
நண்பனின் முகம் பாராமல்,
அத்தனை போட்டிகளிலும்
வென்று பரிசு பெறப் போகும்
தங்கையின் பெருமையை,
காதடைக்கும் பேரிரைச்சல்
மீறி கத்திக் கத்திப் பேசும்
காட்சி. கத்தலிலும் கனவு
நிறைவேற்றிய தங்கைக்கான
நன்றி வைத்திருக்கும் இந்தக்
குரலையும் கவனியுங்கள்.
"பிறவி நடிகர்" விமர்சனம் மறந்து,ஒரு கதாபாத்திரத்தை, குரலைக் கொண்டே நமக்கு எளிமையாய் விளங்க வைக்கிற நடிகர் திலகத்தின் பேருழைப்பை
வணங்குங்கள்.
(...தொடரும்...)
ஆதவன் ரவி
பிறவி நடிகர் என்ற சொல்லைப் பற்றிய தங்கள் எண்ணம் புரிகிறது.
நடிப்பதற்கென்றே பிறந்தவர் என்ற பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாமே...
உருவகமாக எடுத்துக் கொள்வோம்..
சொல்பவர்கள் இலக்கணமறிந்து சொன்னாலும் எதேச்சையாகச் சொன்னாலும் நாம் அதை உருவகப்படுத்திக்கொள்வதில் தவறில்லையே..
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
பல ஊர்களிலும் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழா நடைபெற்றபோதும் சென்னையில் விழா பல காரணங்களால் தள்ளிப் போனது. தமிழகத்தின் பல இடங்களிலும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்த காரணத்தினால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையாக இருந்தது.
இந்த நேரத்தில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த ராமண்ணாவின் சக்தி லீலை தள்ளிப் போடப்படுகிறது என்ற செய்தி வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் ஆவதாக இருந்த சக்தி லீலை தள்ளிப் போடப்படுவதால் பட்டிக்காடா பட்டணமாவே தொடரும் என்ற ஒரு தகவலும் வந்தது. சக்தி லீலை தீபாவளியன்று [நவம்பர் 4] வராது எனபது உண்மைதான். ஆனால் நவம்பர் 10 வெள்ளியன்று வெளியீடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் அறிவிக்கவே, நவம்பர் 4 முதல் 9 வரை உள்ள 6 நாட்களுக்கு சென்ட்ரல் சினிமாவில் துஷ்மன் இந்திப் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
வசந்த மாளிகை தொடர்ந்து வெற்றி பேரிகையை முழங்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று நடிகர் திலகத்தின் புதிய படம் வெளிவராததால் அன்று காலை நியூசினிமாவில் கூட்டம் அலை மோதியது. 6-வது வாரம் சனிக்கிழமை காலைக்காட்சிக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டதை பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவும் தவப்புதல்வனும் ஷிப்ட் செய்யப்பட்டு ஓட சென்னையைப் பொறுத்தவரை வசந்த மாளிகையும் தவப்புதல்வனும் ரிலீஸ் தியேட்டர்களில் தொடர, பட்டிக்காடா பட்டணமா ஷிப்டிங்கில் தொடர்ந்தது.
நடிகர் திலகத்தின் அடுத்த ரிலீசாக வெளியாவதாக இருந்த நீதியின் ஒரிஜினல்தான் துஷ்மன் என்பதை தெரிந்திருந்த நானும் என் கஸினும் தீபாவளியன்று மாலை காட்சிக்கு துஷ்மன் பார்க்க சென்ட்ரல் சினிமாவிற்கு போகிறோம். நல்ல கூட்டம். ஆனால் படம் பெரிய அளவிற்கு எங்களை impress பண்ணவில்லை. இந்த கதை தமிழ் சினிமாவிற்கு எப்படி சூட் ஆகும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் நடிகர் திலகம், பாலாஜி சிவிஆர் கூட்டணி இருப்பதால் அதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. மாப்பிளையை பார்த்துகடி மைனா குட்டி பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை பத்திரிக்கையில் படித்திருந்தோம். அது போல் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டதும் செய்தியாக வந்திருந்தது.
இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.
அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!
நான் முன்பே குறிப்பிட்டது போல தமிழக அரசியல் வானிலும் பல்வேறு விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். அதன் எதிரொலியாக பல சம்பவங்கள் நடந்துக் கொண்டிருந்தன. அன்றைய ஆட்சியின் முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்களை அன்றைய ஆளுநராக இருந்த கே.கே.ஷா அவர்களிடம் எம்ஜிஆர் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சி தலைவர் M. கல்யாணசுந்தரம் அவர்களும் கொடுக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த புகார்களை நான் தமிழக அமைச்சரவையிடம்தான் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்க முடியும் என்று ஆளுநர் சொல்லிவிட அதனால் அவரிடம் கொடுத்தை திரும்பபெற்று டெல்லி சென்று அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரியிடம் அளித்தனர். ஆனால் அங்கிருந்தும் அது தமிழக அமைச்ச்சரவையிடம்தான் வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம். இதே நேரத்தில்தான் (1972 நவம்பர் மத்தியில்) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார் இதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலையால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.
இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!
(தொடரும்)
அன்புடன்
திரு முரளி சார்,
பெங்களூரில் கடந்த இரண்டு மாதமாக எங்களை வாட்டி வதைத்த வெயில் கொடுமை கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மாலை நேர மழையால் சற்று தணிந்துள்ளது .அந்த மழை தந்த சந்தோஷத்தை விட கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பிறகு தாங்கள் மீண்டும் பதிவிட்ட இந்த தொடர் .நன்றி .
டியர் முரளி சார்,
சில நாட்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தின் காரணமாக திரியைப் பார்க்கவில்லை. தற்போதுதான் பார்த்தேன். தங்களுடைய சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவு அருமை. சிறிது நாட்கள் கடந்து வந்தாலும், தங்களின் எழுத்துக்களின், வர்ணனையின் வலிமை, அப்பப்பா!!! நன்றி.
டியர் வாசு சார்,
முரளி சாரின் சிவகாமியின் விமர்சனப் பதிவுக்கு வலிவூட்டும் விதத்தில் தாங்கள் பதிவிட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் அருமையான புகைப்படப் பதிவுகள் சிறப்பு. நன்றி.
முரளி,
தங்கள் தமிழை விட ஆங்கிலம் அழகானது. ஆனாலும் தமிழில் தாங்கள் சினிமா,அரசியல் இணைத்து போடும் பதிவுகள் படிக்கும் சுகமே அலாதி.ஸ்ரீதர் என்ற கலைவேந்தன் போன்றோரின் முறையற்ற ,சார்புள்ள,உண்மைக்கு புறம்பான ,நேர்மையற்ற பதிவுகள் போல இல்லாமல், தங்கள் பதிவுகள் அச்சு அசலான உண்மை பதிவுகள். சில அறிவிலிகள் கிருஷ்ணசாமி என்பதை சாமிகிருஷ்ணா என்று எழுதி விட்டார் என்பது போன்ற குழந்தைத்தனமான குற்றசாட்டுக்களை வைத்து, வடிவேலு பாணியில் நம்மை சிரிப்பூட்டினர்.
இன்றும் சொல்கிறேன் ,என்னை திரிக்கு இழுத்து வந்தவை உங்கள் பதிவுகள்(non -linear விவரிப்புகள்,சம்பத்தப்பட்ட சுற்று வட்டார அனைத்து விவரணங்கள்),சாரதா(விமரிசன சுவாரஸ்யம்),கார்த்திக்(ரசிப்பு திலகம்,அற்புத கால விவரணை),சாரதி(பாட்டு ஸ்பெஷல் ), வாசு(விஸ்தார விவரணை),பம்மலார் (ஆவணம் மட்டும்.எழுத்து ஐயகோ) .
நம் பதிவர்கள் சுவாரஸ்யம் மிக்க திறனாளிகள் .. சவ சவ என்று இருபதாயிரமும்,முப்பதாயிரமும் தொடுவதை விட குறைந்த பதிவுகளில் நிறைவு என்றே நம் பதிவர்கள் பயணிக்கின்றனர். வாழ்த்துக்கள். ஆதவன் ரவி, கவிதைகள் போதும் ,எழுதுங்கள். உங்கள் கவனிப்பு திறன் அலாதி. சிவாஜி செந்தில்,ஒப்பீடு போதும் ,வேறு பாணி மாற்றுங்கள். ஆளில்லாத கடையில் டி ஆற்றுவது போல ஜெமினி திரியில் நேர விரயம். இங்கே சுவாரச்யமாக ஏதாவது எழுதுங்கள் டாக்டர். செந்தில்,ஆவணங்கள் தொடரட்டும். வாசு, கதாநாயகியர், ஆடை அழகர் தொடர்கள் என்னவாயின? ராகவேந்தர் ,தங்களின் வழக்கமான உபயோக பங்களிப்புகள் போதும்.
சோ சார் ஒன்றரை பக்க நாளேடுகளை மிகவும் ரசித்தவன் என்ற விதத்தில்,அதை பின்பற்றி நம் திரி நண்பர்களை வைத்து ஒரு parody பண்ணினால்?இது ஒரு உயர் ரக நகை பாணி.யார் மனதையும் புண் படுத்த வாய்ப்பே இல்லை .
நம் திரியில் தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு ,பதிவாளர்களின் பாணி ஓரளவு பரிச்சயம் என்பதால் பெயர் சொல்லாமல் பதிவிட்டு ஊகத்துக்கு விடுகிறேன்.(தயவு செய்து சிரிக்க மட்டுமே)
பதிவு எண் -1
அப்போதுதான்,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து ,வசதியான கல்லூரி கால ஜீன் ,டி.ஷர்ட் துறந்து,படவைக்கு மாறிய நேரம்(அம்மா சொல்படி).கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பழகியது.அப்போது ஹரிதாஸ் ரிலீஸ் ஆகி எம்.கே.டி.பாகவதர் சிறை சென்றிருந்த நேரம்.ஹரிதாஸ் படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு ,எனது சித்தப்பா,பெரியப்பா இருவருக்கும் இரண்டு பாஸ்கள் மட்டுமே வழங்க பட்டிருந்தது,.நான் இந்த படத்தை 20 முறைகளுக்கு மேல் பார்த்தவள் என்பதால்,பாஸை தியாகம் செய்யவே மனமில்லாத அவர்களிடம் போராடி நானும் ,என் சித்தப்பா பையன் மணியும் விழாவிற்கு கிளம்பினோம்.
அப்போது அண்ணா சாலை,மவுண்ட் ரோடு என்று அழைக்க பட்டது.இப்போது இருக்கும் l .i c கட்டிடம் அப்போது காலி மனை. அங்கேதான் பந்தல் போட்டு விழா.ஒரே தள்ளு முள்ளுதான்.என் சித்தப்பா மகன் சைக்கிளை நானே ஓட்டும் வசதிக்காக அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜீனுக்கு மாறி,சுலபமாய் இரு கால்களையும் போட்டு சீட்டில் உட்கார்ந்து பின்னாடி மணியையும் உட்கார வைத்தேன்.
பந்தலுக்குள் கூட்டமான கூட்டம்.பீ.யு.சின்னப்பா,வசந்த கோகிலம்,டி.ஆர்.ராஜகுமாரி ஜி.ராமநாதன்,பாபநாசம் சிவன்(அடுத்ததடுத்து ஹிட் படங்களை தந்த ஜோடி அசோக் குமார்,சிவகவி,ஜகதல பிரதாபன்,ஹரிதாஸ் இப்படி),அந்த நாள் கவர்ச்சி புயல் தவமணி தேவி,எம்.எஸ்.பாக்கியம் என்று அதுவரை பிரமிப்போடு திரையில் கண்டு களித்த நட்சத்திரங்கள் நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு.பாகவதரை நினைவு கூறும் விதமாக ஜெயில் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை.தம்பிக்கு ஏக பட்ட நண்பர்கள்.சமீபத்தில் வந்த வசந்த சேனா படத்தின் ரிசல்ட் திருப்தியளிக்கவில்லை என்று வருத்த பட்டனர்.நண்பர்கள் என்னை பற்றி விசாரிக்க,என் அக்கா ,இப்பதான் காலேஜ் முடிச்சா என்று அறிமுக படுத்தினான் மணி.
அப்போது ஒருவர் ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து இறங்கினார்.(அவர்தான் பட இயக்குனர் என்று காதில் முணுமுணுத்தான் மணி).என்னையும் என் தம்பியையும் பார்த்து ,அட்லஸ் சைக்கிள் நல்ல வண்டிதான் என்று தட்டி கொடுத்து விட்டு மேடையேறினார். விழா தொடங்கி களை கட்டியது.
அடுத்த பதிவில் ,நான் பள்ளியில் படிக்கும் போது ,பாவாடை சட்டையுடன் ,என் அப்பா கைப்பிடித்து அழைத்து சென்ற கல்தூண் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டங்களை பற்றி எழுத இருக்கிறேன்.
பதிவு எண் -2.
உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக
பிரம்மாண்டமாய் புதிய சகாப்தம் படைக்க,
இதுவரை அச்சிலே எழுத்து வடிவிலே மட்டுமே வந்த "சரோஜாதேவி"
பட வடிவில் (வண்ணம்),வித விதமான கோணங்களில்,போஸ்களில்....
கண்கள் பிதுங்க, இதயம் இனிக்க,
பொக்கிஷாதி பொக்கிஷம்.
இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
பிரதி ஒன்றின் விலை ரூபாய் 10,000.
பணத்தை இன்றே அனுப்பி விடவும்.
வெளிவரும் நாள்/தேதி/வருடம்-வெகு விரைவில் இந்த நூற்றாண்டு முடிவுக்குள்.
உலக விநியோக உரிமையாளர்- டி.டபுள்யு . (பெங்களூர்)
பதிவு எண் -3.
ஈந்த பாடம் எங்க ஆமா ஆப்பு கூட நேத்து காட்டில் பத்தேன் .சீவஜீ ஆந்த வாருஷாம் நலு முலு நீல படத்தில் அடித்திருந்தார் .
நல்ல தடிப்பு.கானிலூயெ தடிப்பு தரியும் .
முத்தத்தில் சுமங்கிலி ...முழ சூமங்காலி ஈல்ளை .
பதிவு எண் -4.
இஸ்கி புஸ்கியின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது டுபாகூர் பாணி.(சிஷ்யன் என்றாலும்)இஸ்கி புஸ்கி every action should have reaction and verse versa என்றதற்கு மாறாக டுபாகூர் action is behaving என்றார்.
உதாரணம் (உங்களுக்கு புரிய)நீங்கள் ஒரு குடிகாரர் என்று வைத்து கொள்ளுங்கள்.குடித்து விட்டு இரவு வீடு செல்கிறீர்கள்.உங்கள் மனைவி "இன்னாய்யா ,நீயெல்லாம் ஒரு மனுசனா "என்று திட்டிய பிறகு உதைத்தால் reaction .தூங்கி கொண்டிருக்கும் மனைவியை அப்படியே காலால் உதைத்தால் behaving .
இப்போது என்னை தொடருங்கள்.
ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றாருண்டோ பாட்டில் ஒரு முத்தம் என்றதும் ராஜகுமாரி ,பாகவதர் கையில் முத்தம் கொடுப்பது இஸ்கி புஸ்கி பள்ளி என்றாலும்,பாகவதர் மரக்கட்டை போல உட்கார்ந்து பாடுவது டுபாகூர் பள்ளி சார்ந்ததே.
இயக்குனர் ,அந்த காலத்திலேயே ,எல்லா பள்ளிகளையும் சார்ந்த நடிப்பை ,நடிகர்களிடம் வெளிக்கொண்டு வந்தது,நட்கர்னியின் சாதனையில் ஓர் மகுடம்.
Thank you Mr.Gopal for your interlude on my postings in GG thread.
Sure I will adhere to your piece of advice.
However, even though there is no other posting in GG thread except mine I take it as a privilege to glorify the contributions of Shri.Gemini Ganesan as a part and parcel of my thanks giving duty on behalf of NT in commemoration of their long time on and off screen friendship with understanding. I will sure resume my postings in our thread but presently I think it is my commitment to complete at least one full pledged thread for a second to none category of actor GG!!...of course for my personal satisfaction too!
Any way thanks again Mr Gopal!
https://www.youtube.com/watch?v=J4QC...C1AE2A472A45C1
By the by, Kalai Nilavu Ravichandran is also one of the yester years' successful silver jubilee hero for whom you are also making your postings!! I wish you may also kindly concentrate in that thread and I will also come and interact so that we can at least have one full pledged thread for him too,as part of honoring his association with our NT and our thanks giving culture!
பதிவு எண் -5.
அப்போது பாகவதருக்கும்,சின்னப்பாவிற்கும் போட்டி உச்சத்தில் இருந்த நேரம்.மகாலிங்கம்,ராமசந்திரன் போன்றோர் வளர்ந்து கொண்டிருந்தனர்.ஹொன்னப்ப பாகவதர்,கிட்டப்பா போன்றோர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்ட நிலையில்,போட்டி என்றால் முதலில் கூறிய இருவருக்குள்தான் ,நிறைய ரசிகர்களை கொண்டிருந்ததால் ,ரசிகர்களுக்கும் போட்டிதான்.(அதிலும் மதுரை மண் தனிதான்).பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.
அப்போது நாங்கள் அல்லோல கல்லோல புரத்தில் குடியிருந்தோம். ஆண்டியடியில் என்னை விட எட்டு வயது மூத்த என் கசின்.
மேல கூசி தெருவில் இருந்து,நடு ஊசி தெரு பிரியும் சந்தில் இருந்த வெள்ளி திரையரங்கில் சின்னப்பா நடித்த தர்ம வீரன் படம் 23.2.41 இல் ரிலீஸ்.பாகவதரின் திருநீலகண்டர் 14.1.41இல் (13.8.40 இல் பூஜை போட்டது)ரிலீஸ் ஆவதாக இருந்து,வெற்றிலை பாக்கு கடை வைத்திருந்த முருகேஷ் என்ற சின்னப்பா ரசிகர் ,இந்த படம் வெளியாக இருந்த அலங்கோல் தியேட்டர் அத்தனை சேர்களையும் கொளுத்தி நாசம் செய்து விட்டதால்,அந்த படமும் ரிலீஸ் தள்ளி போய் ,23.2.41 அன்று கார்னெர் தியேட்டரில் ரிலீஸ்.
ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.
அப்போதைய அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ,தெரிந்த விஷயம்,சுதந்திர போராட்டம் உச்ச நிலையில் இருந்த நேரம்.அப்போது ஆங்கிலேயரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சி சார்பாக k .முதலியாரும்,காங்கிரஸ் சார்பாக எஸ்.செட்டியாரும் தேர்தலில் போட்டியிட்டனர்.அப்போது சென்னை கன்னிமரா ஹோட்டல் அறையில் அவர்கள் தங்கியிருந்த போது , தற்செயலாய் அங்கு வந்த சின்னப்பா முதலியாருக்கு வணக்கம் சொல்ல,இன்னொரு தற்செயலாய் இன்னொரு இடத்தில் பாகவதர் செட்டியாரை தற்செயலாய் வணங்க ,வெவ்வேறு திசையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த செட்டியாரும்,முதலியாரும் ஒருவரையொருவர் பார்க்காமல் தற்செயலாக மோதி விட ,இந்த மோதல் சின்னப்பா-பாகவதர் ரசிகர்களை கொதிப்படைய செய்து ,இருவர் ரசிகர்களும் மோதி கொண்டதில் 2500 பேர் சம்பவ இடத்திலேயே மரிக்க (சின்னப்பா ரசிகர்கள் 602 பேர்,பாகவதர் ரசிகர்கள்-1898 பேர்),35008 பேருக்கு காயம். (சின்னப்பா ரசிகர்கள் முன்னணி)
இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம்,இந்த நேரத்தில் ,இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் பதட்டத்தை உண்டு பண்ணியிருந்தது.நாங்கள் உஷாராக எதற்கும் தயாராகவே இருந்தோம்.அப்போது ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள்,சனி ஞாயிறு 3 காட்சிகள்.(வாரம் 16 ஷோ,மாதம் 64 ஷோ).பின்னாளில் 27/4/1963 முதல் தினசரி 3 காட்சிகள் ,சனி ஞாயிறு 4 காட்சிகள் பழக்கத்திற்கு வந்தது.நிறைய இட்லி கடைகள் மூட பட்டு மதுரையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி விட்டதால்,1980 இல் தினசரி 4 காட்சிகள்,சனி ஞாயிறு 5 காட்சிகளாயிற்று.வெள்ளி தியேட்டரில் 861.5 இருக்கைகள்.(865 இல் 3 உடைந்தும்,ஒன்று பாதி உடைந்தும்).கார்னெர் தியேட்டரிலோ 675 இருக்கைகள். (அத்தனை சேரும் உடைந்திருக்கும்)அதனால் எல்லா வகுப்புகளும் நின்று கொண்டே பார்ப்போம்.
இந்த நிலையில்தான் ,அந்த செய்தி நம் ரசிகர்களை இடி போல தாக்கியது.
(தொடரும்)
பதிவு எண் -6
சின்னப்பா ஒரு சிறந்த internaliser என்பது என் அபிப்ராயம்.பாத்திரத்துக்குள் தன்னை நுழைத்து அதுவாகவே மாற பார்க்கும் சிறந்த கலைஞர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.எதையும் கூர்ந்து கவனித்து ,ஆராய்ந்து அணுகும் திறன் ,அவர்க்கு கலைமகள் அளித்த வரமாகும்.
சில நாட்கள் முன்பு ,நமது நண்பர் கிருஷ்ணப்பா ஒரு காட்சியை தரவேற்றி இருந்தார்.அதில் சின்னப்பாவின் அந்த காட்சியை பார்த்தவர்கள்,அவர் நெற்றியில் குங்கும பொட்டை கவனித்தார்களா என்று தெரியாது.(இந்த படம் கன்னடத்தில் ஹூவு ஹோன்ன ஹேவு ,தெலுங்கில் மீறு செப்பின காவு படங்களின் re -make )அந்த காட்சியின் ஆரம்பத்தில் அவர் பொட்டு சிறிய அளவிலும்,காட்சி நடுவில் பெரிதாகவும் இருக்கும்.பெரிய பொட்டு 46 இல் வந்த பிரித்திவிராஜன் படத்தில் வைத்தது.இதன் படி பார்த்தால் 44 இல் வெளிவந்த இந்த படத்தின் காட்சியின் ஒரு பாதியை 41 இலும் ,மீதியை 46 இலும் ஷூட் பண்ணி இருக்க வேண்டும்.சிறிய பொட்டுடன் "ஆமாம் அம்மா" என்று பேசி,பெரிய பொட்டுடன் "இல்லை அம்மா"என்பார்.5 வருட இடைவெளியில் எடுக்க பட்ட இந்த காட்சியில் எப்படி ஒரு பரிபூரணதுவத்தை அந்த மேதை காட்ட முடிந்தது.
கேதுசெந்தன் அவர்களே,அந்த காட்சியை பதித்து ,எங்கள் நெஞ்சை நிறைய செய்யுங்கள்.
பதிவு எண் -7
சின்னப்பா படங்கள் வருடத்திற்கு மூன்று. (நமக்குதான் அந்த ராசி.எதிர்முகாமை பாருங்கள் 2 வருடத்திற்கு ஒரு படம் )ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். சென்னையில் அப்போது இருந்ததோ 8 திரையரங்குகளே.அப்போது அண்ணா நகர்,கே.கே.நகர்,வேளச்சேரி,பெசன்ட் நகர் எல்லாம் கிடையாது.அபிராமி,உதயம் காம்ப்ளெக்ஸ் ,தேவி,சாந்தி இவையெல்லாம் கூட கிடையாது.சித்ரா,பிராட்வே ,அசோக் (இப்போது இடிக்க பட்டு விட்டது)இவை போல ஒரு சில திரையரங்குகளே.இப்போது போல கம்ப்யூட்டரில் ரிசர்வ் பண்ணும் வசதியெல்லாம் இல்லை.கியூவில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்க வேண்டும்.
பிரித்திவி ராஜன் பட ரிலீஸ் அன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து ,வழியில் எதிர்பட்ட பிச்சை காரர்களிடம் எல்லாம் சில்லறை வாங்கி,நோட்டாக திருப்பி கொடுப்போம்.சில்லறை நிறைய சேர்ந்ததும் சித்ரா திரையரங்கை அடைந்தோம்.அப்போது சின்னப்பா முதல் காட்சியில் தோன்றும் போது சின்னப்பா வாழ்க வாழ்க என்று கத்தி சத்தமிட்டு எழுந்து நின்று சில்லறை வாரி இறைப்போம்.
இதனால் சின்னப்பா ரசிகர்களை போலிஸ் கைது செய்வது வழக்கமான நிகழ்வாகி போனது. இரண்டு முறை சின்னப்பா போலிஸ் ஸ்டேஷன் வந்து எங்களை பார்த்து ,வீணாக இறைக்கும் சில்லறையை தன்னிடம் நேரில் கொடுத்திருக்கலாமே என்று சொன்னது எங்களுக்கு பசுமையாக நினைவிருக்கிறது.
இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது.மாட்டினி ஷோ புல் .நாங்கள் பொடி நடையாக பிராட்வே சென்று ,அங்கும் டிக்கெட் கிடைக்காமல் ,அசோக் சென்றோம்.தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராகையால்,படம் ரிசல்ட் எப்படி என்று விசாரிக்க,சூப்பர் பா என்று கட்டை விரல் உயர்த்திய பாணியிலேயே,படம் சூப்பர் ஹிட் என்று முடிவானது.பிறகு மீண்டும் சித்ரா தியேட்டருக்கே வந்து மாலை காட்சிக்கு காத்திருந்தோம்.மாட்னி முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் அனைவருமே படம் ரொம்ப ஜோர் என்று சொல்ல,ஒரு ரசிகர் எங்களிடம் வந்து முழு கதையையும் ஒவ்வொரு சீனாக விவரிக்க தொடங்கி விட்டார்.
மாலைக்காட்சிக்கு முன் துடைப்பத்துடன் பணியாளர்கள் சென்று குப்பை வாரிய பிறகு,நாதஸ்வரம் போட பட்டது.மாலை காட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரிந்தது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் காட்சி .வரிசையாக சின்னப்பாவின் மூன்று பாடல்கள்.மேலே ஒன்றுமே போடாமல் வேட்டி மட்டுமே கட்டி ஜொலிப்பார்.சின்னப்பாவை நோக்கி சில்லறைகளை வீசினோம்.
சித்ராவில்தான் அந்த படம் அதிக நாட்கள் ஓடியது.
ஆஹா ..நினைக்கும் போதே இனிக்கும் தெவிட்டாத நாட்கள்...
யாரவது எங்களை அந்த நாட்களுக்கு திருப்பி அனுப்ப மாட்டார்களா?
இந்த படத்திற்கு சகோதரி .......... அவர்களின் ஆய்வு ஒன்றின் மீள் பதிவினை இத்துடன் பதிவு செய்கிறேன்.
பதிவு எண் -8
காலையில் தூக்கம் முழித்ததும் , பல் விளக்கி விட்டு டீ சாப்பிட ,எதிரே இருந்த கடைக்கு சென்றேன் .கடை ஒனர் தெரிந்தவர் என்பதால் ,டீ கிளாசை கழுவி ,டீயை போட்டு பாலை விட்டு , என்னிடம் கொடுத்தார். சார் ,எனக்கு ஒரு காவலுக்கு வாட்ச்மேன் வேண்டுமே என்றார். எந்த மாதிரி வாட்ச்மேன் என்று கேட்டதும், பெரிய மீசை வைத்திருக்க வேண்டும்.வீரமாய் நடக்க தெரிய வேண்டும்.அரச உடைகள் அணிந்திருக்க வேண்டும்.வாள் ஒன்று உரையில் தொங்க வேண்டும்.வானம் பொழிகிறது ,பூமி விளைகிறது என்று யாரவது திருடன் வந்தால் பேச வேண்டும் என்றார்.
அவர் கேட்பது வீர பாண்டிய கட்டபொம்மனையே என்று தெரிந்து கொண்டு ,அந்த வீரனை நினைவு கூர்ந்தேன்.
மீதி பகுதிகளாக பிரித்து பழசிலிருந்து cut paste .