-
10th May 2016, 07:07 AM
#1101
Senior Member
Seasoned Hubber
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவு தினம் சில தினங்களுக்கு முன் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி ஒரு நினைவுக்கட்டுரையில் நமது நடிகர் திலகத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான இணைப்பு - http://blogs.timesofindia.indiatimes...amil-nadu-too/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
mappi thanked for this post
-
10th May 2016 07:07 AM
# ADS
Circuit advertisement
-
10th May 2016, 07:08 AM
#1102
Senior Member
Seasoned Hubber
ரத்த திலகம் படத்திலிருந்து தலைவரின் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தின் காணொளி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
10th May 2016, 07:09 AM
#1103
Senior Member
Seasoned Hubber
அதே ஒத்தெல்லோ நாடகம் அன்பு படத்திலிருந்து
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
10th May 2016, 08:00 AM
#1104
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.
நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.
monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.
Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..
ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )
பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.
Agecraft skills மற்றும் stamina .
பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.
பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.
மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.
என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.
larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.
shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.
அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.
உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.
நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.
உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.
முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.
ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.
voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.
Last edited by Gopal.s; 10th May 2016 at 08:02 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
10th May 2016, 08:04 AM
#1105
Junior Member
Newbie Hubber
அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.
ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)
Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.
மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.
சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
10th May 2016, 08:56 AM
#1106
Junior Member
Senior Hubber
பச்சை விளக்கு-
எழுத்துப் பயணம் - 2
ஒரு விஷயம் குறிப்பிடுவது
அவசியமென்று நினைக்கிறேன்.
பெரும்பாலும்
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள்,
நடிகர் திலகத்தைப் பற்றி
மிக ஆர்வமாய்
( நேரடியாகவோ, WhatsApp குழுமங்களிலோ) உரையாடுவார்கள்.
நிறைய பேசப்படும். நடிகர் திலகம் நிறைய வியக்கப்படுவார்.
அவர்களுக்குள் விஷயங்கள் தீர்ந்து,நீண்ட நேர உரையாடல்
முடிவடைகிற நிமிஷத்தில்
ஒருத்தர் ஆரம்பிப்பார்...
"அவரைப் பற்றி சொல்லிக்
கொண்டே போகலாம்.நாள்
போதாது" என்று.
"ஆமாம்" போடுவார் இரண்டாமவர்.
மூன்றாவது நபர் முடிப்பார்...
"என்ன சொல்ல...? அவர் ஒரு
பிறவி நடிகர்".
இந்த "பிறவி நடிகர் "எனும்
வார்த்தை எனக்கு அலர்ஜி.
அதிர்ச்சி.
ஆழ்ந்து ரசித்து, ஆர்வமாய்
விவாதிப்போர் நடிகர் திலகத்தின் மீது கொண்டிருக்கிற மதிப்பில்,
அதிகபட்ச வியப்பில் கிளம்பி வருகிற வார்த்தையே அந்த
"பிறவி நடிகர்" என்பதை
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
நம்மைப் போல் சாதாரண
மனிதப் பிறப்பெடுத்து, நம்மைப்
போல் இன்ப,துன்பங்களோடு
வளர்ந்து, நம்மைப் போல்
தனக்கென ஒரு தொழில் தேர்ந்து, அந்தத் தொழிலைத்
தெய்வமெனக் கருதிப் போற்றி,
நம்மாலெல்லாம் எழும்பிப்
போக முடியாத ஒரு உயரத்தை
அடைந்தவர்... அய்யா நடிகர்
திலகம்.
விடாமுயற்சி, உழைப்பு, தொழில்பக்தி, முன்னேற்றம்,
வெற்றி... எனப் போகிறது,
அய்யாவின் கலை வாழ்க்கை.
"பிறவி நடிகர்" என்கிற சோம்பலான வார்த்தை
அய்யாவுக்கு சரியானதாய்
இருக்காது.
-------------------------------
"பச்சை விளக்கு" படத்தின்
துவக்கக் காட்சி.
தன்னுடைய திருமண தினத்தன்றே தன்னை வளர்த்து
ஆளாக்கிய வளர்ப்பு அன்னை இறந்து போகிறாள். அந்த
அன்னையின் அன்பு மகளை
அநாதைப் பெண்ணாகப்
பார்க்காமல் தங்கையாகவே
வரிந்து கொள்வதும், அந்தத்
தங்கையை கொடிய மரணங்களைத் தடுக்கும் மருத்துவராக்க வேண்டும்
என்கிற உறுதியேற்பும்..
எங்கே..? மனைவியின் முன்னிலையில், முதலிரவு
அறைக்குள் நடக்கிறது.
தங்கையின் எதிர்காலம் குறித்த
தன் கனவு நனவாகும் வரை
இல்லற சுகம் வேண்டாமென்று
மனைவியைக் கேட்டுக் கொள்ளும்போதும், அவன்
சொல்லத் தயங்குவதைப் புரிந்து கொண்ட அந்த பண்பான மனைவி அதற்கிசைந்ததும் அவளது கரம் பற்றிக் கொண்டு
நன்றியுணர்வில் கசியும் போதும், நடிகர் திலகத்தின்
குரலைக் கவனியுங்கள்.
காட்சியைப் புரிந்து கொண்ட
ஒரு அற்புதக் கலைஞனின்
குரல். மென்மைக் குரல்.
மேன்மைக் குரல்.
அந்தக் குரலை அப்படியே
நினைவுகளில் சுமந்து கொண்டு
தொடர்ந்து வாருங்கள். கொஞ்ச
நேரம் கழித்து ஒரு ரயில் காட்சி. ரயிலைச் செலுத்திக்
கொண்டே, பின்னால் நிற்கும்
நண்பனின் முகம் பாராமல்,
அத்தனை போட்டிகளிலும்
வென்று பரிசு பெறப் போகும்
தங்கையின் பெருமையை,
காதடைக்கும் பேரிரைச்சல்
மீறி கத்திக் கத்திப் பேசும்
காட்சி. கத்தலிலும் கனவு
நிறைவேற்றிய தங்கைக்கான
நன்றி வைத்திருக்கும் இந்தக்
குரலையும் கவனியுங்கள்.
"பிறவி நடிகர்" விமர்சனம் மறந்து,ஒரு கதாபாத்திரத்தை, குரலைக் கொண்டே நமக்கு எளிமையாய் விளங்க வைக்கிற நடிகர் திலகத்தின் பேருழைப்பை
வணங்குங்கள்.
(...தொடரும்...)
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
10th May 2016, 09:27 AM
#1107
Senior Member
Seasoned Hubber
ஆதவன் ரவி
பிறவி நடிகர் என்ற சொல்லைப் பற்றிய தங்கள் எண்ணம் புரிகிறது.
நடிப்பதற்கென்றே பிறந்தவர் என்ற பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாமே...
உருவகமாக எடுத்துக் கொள்வோம்..
சொல்பவர்கள் இலக்கணமறிந்து சொன்னாலும் எதேச்சையாகச் சொன்னாலும் நாம் அதை உருவகப்படுத்திக்கொள்வதில் தவறில்லையே..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th May 2016, 10:39 AM
#1108
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
பல ஊர்களிலும் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழா நடைபெற்றபோதும் சென்னையில் விழா பல காரணங்களால் தள்ளிப் போனது. தமிழகத்தின் பல இடங்களிலும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்த காரணத்தினால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையாக இருந்தது.
இந்த நேரத்தில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த ராமண்ணாவின் சக்தி லீலை தள்ளிப் போடப்படுகிறது என்ற செய்தி வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் ஆவதாக இருந்த சக்தி லீலை தள்ளிப் போடப்படுவதால் பட்டிக்காடா பட்டணமாவே தொடரும் என்ற ஒரு தகவலும் வந்தது. சக்தி லீலை தீபாவளியன்று [நவம்பர் 4] வராது எனபது உண்மைதான். ஆனால் நவம்பர் 10 வெள்ளியன்று வெளியீடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் அறிவிக்கவே, நவம்பர் 4 முதல் 9 வரை உள்ள 6 நாட்களுக்கு சென்ட்ரல் சினிமாவில் துஷ்மன் இந்திப் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
வசந்த மாளிகை தொடர்ந்து வெற்றி பேரிகையை முழங்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று நடிகர் திலகத்தின் புதிய படம் வெளிவராததால் அன்று காலை நியூசினிமாவில் கூட்டம் அலை மோதியது. 6-வது வாரம் சனிக்கிழமை காலைக்காட்சிக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டதை பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவும் தவப்புதல்வனும் ஷிப்ட் செய்யப்பட்டு ஓட சென்னையைப் பொறுத்தவரை வசந்த மாளிகையும் தவப்புதல்வனும் ரிலீஸ் தியேட்டர்களில் தொடர, பட்டிக்காடா பட்டணமா ஷிப்டிங்கில் தொடர்ந்தது.
நடிகர் திலகத்தின் அடுத்த ரிலீசாக வெளியாவதாக இருந்த நீதியின் ஒரிஜினல்தான் துஷ்மன் என்பதை தெரிந்திருந்த நானும் என் கஸினும் தீபாவளியன்று மாலை காட்சிக்கு துஷ்மன் பார்க்க சென்ட்ரல் சினிமாவிற்கு போகிறோம். நல்ல கூட்டம். ஆனால் படம் பெரிய அளவிற்கு எங்களை impress பண்ணவில்லை. இந்த கதை தமிழ் சினிமாவிற்கு எப்படி சூட் ஆகும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் நடிகர் திலகம், பாலாஜி சிவிஆர் கூட்டணி இருப்பதால் அதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. மாப்பிளையை பார்த்துகடி மைனா குட்டி பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை பத்திரிக்கையில் படித்திருந்தோம். அது போல் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டதும் செய்தியாக வந்திருந்தது.
இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.
அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!
நான் முன்பே குறிப்பிட்டது போல தமிழக அரசியல் வானிலும் பல்வேறு விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். அதன் எதிரொலியாக பல சம்பவங்கள் நடந்துக் கொண்டிருந்தன. அன்றைய ஆட்சியின் முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்களை அன்றைய ஆளுநராக இருந்த கே.கே.ஷா அவர்களிடம் எம்ஜிஆர் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சி தலைவர் M. கல்யாணசுந்தரம் அவர்களும் கொடுக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த புகார்களை நான் தமிழக அமைச்சரவையிடம்தான் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்க முடியும் என்று ஆளுநர் சொல்லிவிட அதனால் அவரிடம் கொடுத்தை திரும்பபெற்று டெல்லி சென்று அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரியிடம் அளித்தனர். ஆனால் அங்கிருந்தும் அது தமிழக அமைச்ச்சரவையிடம்தான் வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம். இதே நேரத்தில்தான் (1972 நவம்பர் மத்தியில்) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார் இதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலையால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.
இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 4 Thanks, 7 Likes
-
10th May 2016, 01:01 PM
#1109
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
10th May 2016, 01:31 PM
#1110
Senior Member
Devoted Hubber
திரு முரளி சார்,
பெங்களூரில் கடந்த இரண்டு மாதமாக எங்களை வாட்டி வதைத்த வெயில் கொடுமை கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மாலை நேர மழையால் சற்று தணிந்துள்ளது .அந்த மழை தந்த சந்தோஷத்தை விட கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பிறகு தாங்கள் மீண்டும் பதிவிட்ட இந்த தொடர் .நன்றி .
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks