Appears as though not even one soul has seen my post(s) mmmm... :'(
Appears as though not even one soul has seen my post(s) mmmm... :'(
அன்பு நண்பர்கள் ஆதிராம் மற்றும் முத்ராமன் அவர்களுக்கு,
ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களில் இயங்குவது ஒன்றும் எங்கும் புதிதில்லை. சொல்ல வரும் கருத்து தான் மிகவும் முக்கியம். ரா.கி.ரங்கராஜன் "கிருஷ்ணகுமார்" என்ற பெயர் மற்றும் பல பெயர்களிலும், ஜ.ரா.சுந்தரேசன் "பாக்கியம் ராமசாமி" என்ற மற்றொரு பெயரிலும், புஷ்பா தங்கதுரை "ஸ்ரீவேணுகோபாலன்" என்ற மற்றொரு பெயரிலும் இன்னும் இது போல் பல எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் ஏற்கனவே பல வருடங்கள் எழுதி வந்துள்ளார்கள்.
இனி, இந்த விஷயத்தை பெரிதாக்காமல், நாம் அனைவரும், நடிகர் திலகத்தின் மேன்மையை இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லப் பாடு படுவோம்.
தொடர்ந்து எழுதி, தாங்களும் இன்புற்று, எல்லோரையும் மகிழ்வியுங்கள்.
அனைத்து நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
nandri -dinamani kaadhir.
இன்றைய ஆரம்பம் இனிதே உள்ளது .[ஆதி யின் கோபம் மட்டும் ஏனோ தொடர்கிறது ]
ok .
இனி நாகி ரெட்டி அவர்களின் நடிகர் திலகத்தின் கட்டுரை பார்ப்போமா நண்பர்களே
நடிகர் திலகத்தைப் பற்றி என் தந்தையார் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்:
""இது பொன்னாள்... இதைப்போலே வருமா இனிமேலே... இப்படி ஒரு பாடல் வரி "பூம்புகார்' திரைப்படத்தில் வரும். இந்த வரியை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. காரணம், நான் என் கூட்டாளி சக்கரபாணியும் இன்னும் சில நண்பர்களும் அடிக்கடி அந்த இல்லத்தில் ஒன்றாகக்கூடி மணிக்கணக்கில் மனம் விட்டுப் பேசுவோம். அரசியல் தொடங்கி சினிமா வரை அலசுவோம். இடையிடையே சிற்றுண்டிகளும் அங்கே பந்தி வைக்கப்படும். சுவைகளுக்குக் கேட்கவா வேண்டும்? அந்தச் சுவைகளை வழங்கிய அழகிய இல்லம், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அன்னை இல்லம்... அது பொன்னாள்... அதைப் போலவே வருமா இனிமேலே.... நினைக்கும்போதே மனமெல்லாம் மகிழ்ச்சி மல்லிகைகள் மணக்கின்றன. அதே நேரத்தில் சில நினைவுத் தாமரைகளும் மொட்டு அவிழ்க்கின்றன.
சிறந்த நடிகரான சிவாஜியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் பழகி வந்தபோதும் இன்னும் நமது படத்தில் அவர் நடிக்காமல் இருக்கிறாரே என்ற ஏக்கம் என் நெஞ்சத்தில் இருந்தது. அந்த உணர்வின் விளைவாக உருவான, என் பிள்ளைகள் டி.ராமா நாயுடுவுடன் இணைந்து தயாரித்த "வசந்த மாளிகை' சாதாரணப் படங்களுக்கு மத்தியில் சரித்திரப் படமாக அமைந்தது. அடுத்து சிவாஜியையும் முத்துராமனையும் நடிக்க வைத்து "வாணி ராணி' என்ற படத்தையும் எடுத்தோம். அதில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடம். நடிகர் திலகத்திற்கோ ஹீரோ வேடம் அல்ல. அந்த வேடத்திற்கு அவரை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்தோம். ஆனால் நேரில், என் மகன் விஸ்வம் வாயிலாக அவரிடத்தில் விவரத்தைக் கூறியபோது சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஒப்புக் கொண்டு தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி எங்களை மகிழ்வித்தார்.
சிவாஜி நடித்த ஒவ்வொரு படமுமே ஒரு காவியம் என்று சொன்னால், அது மிகையில்லை. அவர் நடித்த படங்களில் சில, சில காரணங்களால் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நடிப்பில் தோற்ற படம் என்று நம்மால் ஒன்றையாவது சுட்டிக் காட்ட முடியுமா? முடியவே முடியாது. அதற்கெல்லாம் காரணம் அந்தக் காலகட்டம்.
மணிமணியான இயக்குநர்கள், அந்தத் தங்கத்தைப் புடம்போட்டுப் படம் எடுத்தனர். சாதனைத் தடம் பதித்தனர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏ.பி. நாகராஜன், ஸ்ரீதர், பி.ஆர். பந்துலு, ஏ.சி. திருலோகசந்தர், பி.மாதவன்... இப்படிப் பல பேரைப் பட்டியலிடலாம். அந்தச் சிறப்பு மட்டுமா? அன்று சிவாஜியுடன் நடித்த பலரும் மிகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. ரங்காராவ் போன்ற பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு துருவ நட்சத்திரமாக மின்னினார் நடிகர் திலகம்.
உருக உருக நடித்த அந்தத் திறமை மட்டுமல்ல, அவரிடத்தில் வேறு சில பண்புகளைப் பார்த்துகூட நான் சிலிர்த்திருக்கிறேன். ஷூட்டிங் எட்டு மணிக்குத் தொடங்குகிறது என்றால் 7.55 மணிக்கே அந்த இடத்தில் இருக்கும் நேரந்தவறாமை என்ற அந்தப் பண்பைக் கண்டு வியந்திருக்கிறேன். அதைப்போல படப்பிடிப்பு நடக்கின்ற நேரங்களில், அவர் செட்டைவிட்டு வெளியே வரமாட்டார். அந்த அளவுக்கு தொழில் பக்தி, ஈடுபாடு. இளைய தலைமுறை அவரிடத்தில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
கலை உலகிலும், இல்லற வாழ்விலும் சிறந்து விளங்கியவர்கள் ஒரு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவாஜி. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பதற்கேற்ப மனைவி, மக்கள், பேரக் குழந்தைகளுடன் ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு. ஆம். இத்தனை புகழ், வசதி வந்த போதும் அவர் விரும்பி உடுத்தியது கதர் வேஷ்டி, கதர் சட்டைதான். அதற்குக் காரணம் அவரது உதிரத்தில் கலந்திருந்த தேசிய உணர்வுதான்.
சுதந்திரத் தியாகிகளைத் தம் படங்களின்மூலம் நினைவூட்டிய அந்த வித்தக நடிகருக்கு, அன்று அவர் ஆசியா ஆப்ரிக்க நாடுகளில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டது நம் நாட்டிற்குப் பெருமை.
தேசிய உணர்வுள்ள அந்த நடிகரை தேசத்திற்காக உழைத்த கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், பாரதியார், பகத்சிங் , திருப்பூர் குமரன் எனப் பல தலைவர்களின் தேசப்பற்றை தனது நடிப்பினால் நமக்கு எடுத்துரைத்த அந்த நடிகரை தேசிய அரசு உரிய முறையில் கெüரவிக்கவில்லையே என்று பலமுறை வருந்தியிருக்கிறேன்.
1981ஆம் ஆண்டு நான் பால்கே விருதை வாங்கினேன். அதற்கு பிறகு, இந்த விருதை யாருக்குக் கொடுக்கலாம் என்று என்னிடத்தில் மூன்று முறை கேட்டார்கள். இவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாருமில்லை என்று சிவாஜி அவர்களைக் கூறினேன். ஆனால் டெல்லியிலிருந்து அடுத்து விருதுபெற்றோர் அறிவிப்பு வரும்போது வேறு யாருடைய பெயராவது அறிவிக்கப்படும். அப்பொழுது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
எப்பொழுதோ அவருக்குக் கொடுத்திருக்க வேண்டிய, இந்திய அரசின் உயர்ந்த திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது காலந்தாழ்ந்து வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்திய திரைப்பட உலகுக்கு பெருமை''
திரு. Ganpat அவர்களே,
மிகவும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள். உமது தமிழ் நடைக்கு நான் அடிமை. தயை கூர்ந்து நிறைய எழுதி எல்லோரையும் மகிழ்வியுங்கள்!
திருவிளையாடல் படத்தில் வரும் "சிவபெருமான்-நக்கீரர்-தருமி" எபிசோட், இன்று தமிழ்நாட்டில், நிர்வாகத்தைப் பற்றிய training ப்ரோக்ராம்களில், "Assertiveness" பற்றிய பிரிவில், காட்டப்படுகிறது. "சிவபெருமான் - Aggressive", "தருமி - Submissive" & "நக்கீரர் - Assertive".
ஆனாலும், இந்த எபிசோடை, எப்போது காண்பித்தாலும், எல்லோரும் நாகேஷின் நகைச்சுவைக்கு சிரித்து (நாகேஷ் ஏற்கனவே சொல்லியிருக்கிறார், இதற்கு முழு முதல் காரணம், நடிகர் திலகத்தின் பெருந்தன்மை, ஒரு அடி கூட வெட்டாமல், அவர்தம் பகுதியை படத்தில் வைத்தனர், அவர் அன்று வளர்ந்து வரும் நடிகராயிருந்தும்!), உடனே, நடிகர் திலகத்தின் ஆர்பாட்டத்தில் அடிபணிகிறார்கள்.
மறக்க முடியாத நடிப்பல்லவா!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
என் வேண்டுகோளிற்கு செவிசாய்த்து உடனே வந்து மொய் எழுதிய வனஜா அம்மணிக்கு நன்றி.நீங்கள் தொடர்ந்து எழுதப்போவதாக கூறியுள்ளது மேலும் உற்சாகத்தைத்தருகிறது. உங்கள் பன்முக ஆற்றல் உங்கள் எழுத்து வாயிலாக அனைவருக்கும் தெரியட்டும்.வாழ்த்துக்கள்.
அன்பின் பார்த்தா ஸார்!,
தன்யனானேன்..மனமார்ந்த நன்றி.
திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.
நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).
Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.
வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.
இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.
முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.
நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.
ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.
இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.
நன்றி,வணக்கம்.
ஆஹா! அற்புதம் கண்பட் அவர்களே!
தமிழ்க் கலாசாரத்தின் அடையாளம் நடிகர் திலகம் தான் என்று எத்தனையோ முறை அனைவரும் கூறியாயிற்று. அதற்குத் தான் நடிகர் திலகம் எத்தனை எத்தனை கலைஞர்களுடன் கை கோர்த்தார். எப்பேர்ப்பட்ட கூட்டணி!
நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி