-
9th January 2013, 03:22 PM
#11
Junior Member
Devoted Hubber
பல திரைப்பட வசனங்கள் பச்சென்று நம் மனதில் பதிந்து விடும்.அவற்றில் ஒன்றுதான் "திருவிளையாடல்" படத்தில் வரும் நக்கீரன் vs தருமி யின் இந்த உரையாடல்..
================================================== ====================================
நக்கீரன்: தருமியே!சரியான பாட்டிற்கு எமது மன்னர் பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான்! ஆனால் அதே சமயத்தில் இறைவனாரும், எம்பெருமான் முருகவேளும், அகத்தியரும், கட்டிக்காத்த தமிழ் சங்கத்திலே பிழையான ஒரு பாட்டிற்கு பாண்டியன் பரிசளிக்கிறார் என்றால்,அதைக்கண்டு வருத்தப்படுபவனும் அடியேன்தான்!
தருமி:ஓஹோ!இங்கே எல்லாமே நீர்தானா?
================================================== =====================================
ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என சரியாக புரிந்து கொள்ளாமல்,அவர் சொன்ன கருத்தினை குதர்க்கமாக மாற்றும் இம்மாதிரியான நிகழ்வுகள் நாம் நம் வாழ்விலும் அடிக்கடி பார்க்கலாம்.(குறிப்பாக மாமியார் -மருமகள் உரையாடல்களில்)
பி.கு:ஆஹா!!இந்த இடத்தில்,தருமி clean bowled ஆகி வெளியேற,விக்கெட் எடுத்த பெருமிதத்தில் bowler நக்கீரன் அடுத்த batsman வரவிற்காக காத்திருக்க, சிம்மம் போல நுழைவாரே அந்த மஹா கலைஞன்!சத்தியமாக சொல்கிறேன்.. இந்த ஒரு சீன் பார்ப்பதற்கே நாம் பல ஜன்மங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
-
9th January 2013 03:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks