http://i1170.photobucket.com/albums/...ps4dab8576.jpg
Printable View
மக்கள் திலகம், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த இளைய தலைமுறை நடிகர் திரு சிவகார்த்திகேயன்.
http://i62.tinypic.com/oh8zer.jpg
கடந்த 29.08.2014 அன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தில் (கோடம்பாக்கம்) விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக இளம் நடிகர் திரு சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்பொழுது சங்கத்தின் தலைவர் குமுதம் மேஜர்தாசன், மக்கள் திலகம் சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளை குறிப்பாக வீட்டு வசதி மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கியது குறித்து சொன்னதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மக்கள் திலகம் எப்பொழுதும் தன்னையும் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் என்று பெருமையாக கூறி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகத்தைப்போல் சினிமாப்பத்திரிக்கையாளர்களுக்கு தானும் உதவி செய்வதாக கூறிச்சென்றுள்ளார் திரு சிவகார்த்திகேயன். வந்திருந்த அனைவரிடமும் இனிமையாக பேசி புகைப்படமும் எடுத்துள்ளார்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி : திரு மேஜர் தாசன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://i62.tinypic.com/ziu4nb.jpg
STUNT DIRECTOR MR.SANKAR WITH MAKKAL THILAGAM
http://i62.tinypic.com/2m29dmg.jpg
MAKKAL THILAGAM - JUSTIN - STUNT SANKAR
இதே சிவ கார்த்திகேயன் தலைவரை பலமுறை விஜய் டிவி நிகழ்சிகளில் தலைவரின் நடன அசைவுகளை மற்றும் அவரின் சிதலமடைந்த குரலினை கிண்டல் செய்தவர் . நங்கள் கூட்டாக விஜய் டிவி முற்றுகை இட்டு அந்த டிவி தயாரிப்பாளரை எச்சரிக்கை செய்தோம் . ஆனால் அதன் பின்னரும் அவரின் செய்கைகள் மாறவில்லை . இன்று புரட்சிதலைவர் புகழ் பாடுகிறார் இப்பொழுதாவது நமது தெய்வத்தின் மகத்துவம் புரிந்து இருக்கும்
இனி வரும் காலங்களில் அவரை சந்தித்தால் அவர் நமது தலைவரை கொச்சைபடுத்திய நடன அசைவுகளை ஞாபகம் செய்யுங்கள் .
தங்கள் பதிவிற்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார். இளைய தலைமுறை நடிகர்களுக்கு நடிப்பில் மட்டுமல்ல, அவர்கள் செய்கின்ற நற்பணிகளுக்கெல்லாம் முன்னோடி நம் மக்கள் திலகம்தான். நடிகர்கள், நடித்தோம் பணம் வாங்கினோம் என்றில்லாமல், அவர்களுக்கு என்னென்ன கடமைகள் உள்ளது என்று சொல்லிக்கொடுத்த வாத்தியார் நம் புரட்சித்தலைவர்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்