-
1st September 2014, 11:53 AM
#11
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த இளைய தலைமுறை நடிகர் திரு சிவகார்த்திகேயன்.

கடந்த 29.08.2014 அன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தில் (கோடம்பாக்கம்) விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக இளம் நடிகர் திரு சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்பொழுது சங்கத்தின் தலைவர் குமுதம் மேஜர்தாசன், மக்கள் திலகம் சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு செய்த உதவிகளை குறிப்பாக வீட்டு வசதி மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கியது குறித்து சொன்னதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மக்கள் திலகம் எப்பொழுதும் தன்னையும் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் என்று பெருமையாக கூறி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகத்தைப்போல் சினிமாப்பத்திரிக்கையாளர்களுக்கு தானும் உதவி செய்வதாக கூறிச்சென்றுள்ளார் திரு சிவகார்த்திகேயன். வந்திருந்த அனைவரிடமும் இனிமையாக பேசி புகைப்படமும் எடுத்துள்ளார்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி : திரு மேஜர் தாசன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 1st September 2014 at 12:11 PM.
-
1st September 2014 11:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks