படைப்பாளி பாலா அவர்களே,
வருக ! வருக ! தங்களுக்கு நல்வரவு !
தங்களது வண்ணமயமான பதிவுகளால் இத்திரியை மென்மேலும் செம்மைப்படுத்துக !
அன்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
பம்மலார்.
Printable View
படைப்பாளி பாலா அவர்களே,
வருக ! வருக ! தங்களுக்கு நல்வரவு !
தங்களது வண்ணமயமான பதிவுகளால் இத்திரியை மென்மேலும் செம்மைப்படுத்துக !
அன்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
பம்மலார்.
டியர் Mr. ragulram11,
முதற்கண் தங்களது அன்பான பதிவுக்கும், பாராட்டுக்கும் எனது இனிய நன்றிகள் !
நமது நடிகர் திலகம் திரியின் அனைத்து பாகங்களுமே சிவாஜி அவர்களைப் பற்றிய ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்று கூறினால் அது மறுக்கமுடியாத உண்மை. இதனைப் புத்தக வடிவில் வெளிக்கொண்டுவர தாங்கள் விடுத்த வேண்டுகோள் இங்கே இதற்கு முன்னரும் வைக்கப்பட்டுள்ளது. நமது ஹப் நிர்வாகம் இதனைத் தக்க தருணத்தில் செய்வார்கள்.
நமது நடிகர் திலகத்துக்கு அவரது மறைவுக்குப் பின், அவரது புகழ்பாடும் வகையில், 20 சிறப்பு மலர்களை வெளியிட்டவன் என்கின்ற முறையில், அவருக்கு ஒரு மாத இதழ் வேண்டும் என்ற தங்களின் இதமான ஆசைக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இதயதெய்வம் நடிகர் திலகம் இப்பூவுலகை விட்டு மறைந்த பிறகு, 2002லிருந்து 2005-ம் ஆண்டு வரை, அவரது புகழ் பாடும்விதமாக பல சிறப்பு மலர்களையும், "வசந்த மாளிகை" என்கின்ற மாத இதழையும் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் (Editor & Publisher) இருந்து வெளியிட்டுள்ளேன். அதில் அட்டை-டு-அட்டை நடிகர் திலகம், நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட தகவல்கள்-புகைப்படங்கள் மட்டும்தான். நமது முரளி சார் குறிப்பிட்டது போல், ஒரு இதழை தொடர்ந்து நடத்துவதற்கு பொருளாதாரம் இன்றியமையாதது. அத்தகைய சிக்கல்களினால் 2006லிருந்து "வசந்த மாளிகை" இதழை தொடர்ந்து வெளியிட முடியாமல் போனது. எனினும் எதிர்காலத்தில், "வசந்த மாளிகை" இதழை மீண்டும் வெற்றியுடன் வெளிக்கொண்டு வருவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைமட்டும் எப்பொழுதும் உள்ளது. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெறும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்றும் உணர்கிறேன்.
தங்களின் அன்புக்கு மீண்டும் நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் மாடரேட்டர் Mr. NOV,
இரு பதிவாளர்கள் தங்களுக்குள் உண்டான கருத்து மாறுபாடு காரணமாக, 'திரியை விட்டு விலகுகிறேன்' என உணர்ச்சிப் பெருக்கில் பதிவுகளை அளிக்கும்போது, அவர்கள் இருவரையும் ஒருசேர 'மீண்டும் பதிவுகளை அளிக்க வாருங்கள்' என்று பதமாக அழைக்காமல், ஒருவரை மட்டும் 'உங்கள் சேவை இங்கே தேவை' என்று வருந்தி அழைப்பது, என் மனதுக்கு என்னமோ சரியாகத் தோன்றவில்லை.
அழைக்கப்படாத அன்புள்ளம் இதனால் நிச்சயம் புண்படும்.
என் மனதில்பட்டதை வெளிப்படையாக இங்கே எழுதினேன். தாங்கள் எனது இந்த கருத்தை சரியான வகையில் எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
வருத்தத்துடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
வணங்காமுடி
[12.4.1957 - 12.4.2012] : 56வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 1.3.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5679-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 5.4.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5680-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5681-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1957
[இந்த விளம்பரம் அன்று ஹிந்து நாளிதழில் முழுப்பக்க விளம்பரமாக வெளியாயிற்று]
http://i1110.photobucket.com/albums/...GEDC5678-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.5.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5682-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி : 20.7.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5683-1.jpg
குறிப்பு:
1. "வணங்காமுடி" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்: சென்னை-கிரௌன் மற்றும் திருச்சி-பிரபாத்.
2. சிங்காரச் சென்னையில், 'சித்ரா'வில் 63 நாட்களும், 'கிரௌன்' அரங்கில் 100 நாட்களும். 'காமதேனு'வில் 63 நாட்களும், 'சயானி'யில் 70 நாட்களும் ஓடி மகாஹிட்.
3. மதுரை 'தங்கம்' திரையரங்கில் 78 நாட்களும், சேலம் மற்றும் கோவையில் 70 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 63 நாட்களும் ஓடி பம்பர்ஹிட்.
4. தமிழ்த் திரையுலக வரலாற்றில், 1957-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய காவியம், "வணங்காமுடி". முதலாவது திரைப்படம் "மாயாபஜார்". இது "வணங்காமுடி" வெளியான 12.4.1957க்கு முன்தினம் அதாவது 11.4.1957 அன்று வெளியானது.
5. ஒரு திரைப்பட நடிகருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக 80 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது இக்காவியத்திற்குத்தான். வைக்கப்பட்ட இடம் : சென்னை 'சித்ரா' திரையரங்க நுழைவாயில். கட்-அவுட் கலாசாரத்துக்கு வித்திட்டவரும் கலையுலக 'வணங்காமுடி'தான்.
பக்தியுடன்,
பம்மலார்.
தவறான புரிதல் பம்மலார் அவர்களே!
திரு .கோபால் அவர்கள் இளைய தலைமுறைக்கு நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்தி ஆர்வம் கொள்ள செய்வது அவசியம் என குறிப்பிட்டதால் அதற்காக பிரத்யேகமாக இயங்கி வரும் மற்றொரு திரியில் பங்களிக்க வருமாறு nov அழைத்ததில் எந்த தவறும் அல்லது வேறு எந்த கோணமும் இல்லை என்பதை என்னால் உறுதியாக்க கூற முடியும்.
டியர் திரு ஜோ அவர்களே,
திரு பம்மலார் அவர்களுடைய மன வருத்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கு உடனடியாக பதிலளித்ததன் மூலம் தாங்கள் ஒவ்வொரு அங்கத்தினரையும் எந்த அளவிற்கு முக்கியமாக கருதுகிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். நன்றிகளும் பாராட்டுக்களும். திரு பம்மலார் அவர்களும் தங்கள் உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் சொல்லி நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதை நிரூபித்து விட்டார். மேம்போக்கான கருத்துப் பரிமாற்றமாக மட்டுமின்றி உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இது ஒரு குடும்பமாகவே மாறி வருகிறது என்பதற்கு தற்போது நடந்தவையெல்லாம் சான்றாகும்.
அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
டியர் பம்மலார்,
திரு கோபால் அவர்களுக்கு விடுத்த அழைப்பினைப் பற்றித் தங்களுடைய உள்ளத்தில் பட்டதை மறைக்காமல் எடுத்துச் சொல்லி எந்த ஒரு மாறுபட்ட கருத்தாயிருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசி தீர்த்துக் கொள்வதே சரியானது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.
வணங்காமுடியின் வணங்காமுடி கவரேஜ் சூப்பர். அதற்காக மீண்டும் பாராட்டுக்கள்.