-
17th April 2012, 12:37 AM
#11
சுவாமி,
இங்கே நிகழ்ந்த ஒரு சில கருத்து வேறுபாடு வாக்குவாதங்களால் தங்களின் பங்களிப்பை ஒத்தி வைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். உங்களையும் உங்கள் சேவையையும் பொறுத்தவரை அவை இங்கே தடைபடக் கூடாத சேவை என்பதே அனைவரின் விருப்பம். ஒரு சில நேரங்களில் நீங்கள் எடுக்கும் பிரயத்தனத்திற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்பது போன்ற ஒரு தோற்றம் உருவானாலும் கூட எனக்கு தெரிந்த வரை நமது திரியின் வழக்கமான பங்களிப்பாளர்கள் அனைவரும் [அவர்கள் தினசரி பதிவிடவில்லை என்றாலும் கூட] உங்கள் பங்களிப்பை பெரிதும் விரும்புபவர்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பலருடனும் நான் பல நேரம் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலம் எனக்கு அது நிச்சயமாக தெரியும். நண்பர் வாசு எழுதியது போல் ஒவ்வொரு ஆவண சேகரிப்புக்கு பின்னால் எத்தனை பெரிய உடல் உழைப்பும் கதையும் இருக்கிறது என்பதை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட நாள் முதலே உணர்ந்தவன் நான். அனைத்து தியாகங்களுக்கும் காரணம் நடிகர் திலகம் என்ற மனிதன் மேல் நீங்கள் வைத்துள்ள பற்று.
இங்கே உள்ள அனைவருக்கும் அதுதான் கோல் போஸ்ட் எனும்போது உங்கள் பங்களிப்பு அவசியமாகிறது. இன்றைய தினம் உலகெங்கும் உள்ள எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றிய மிக சரியான வரலாற்று உண்மைகள் கிடைக்குமிடம் என்று சொன்னால் அது நமது திரிதான் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை. அந்த தகுதியை இந்த திரி அடைவதற்கு உங்களின் ஆவணபூர்வமான ஆதாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆகவே ஏப்ரல் ஏஞ்சலின் பட வரிசை தொடரட்டும். நடிகர் திலகத்தை தவிர வேறு யாருக்கும் தலை "வணங்காமுடி"யே, தொடருங்கள்.
அன்புடன்
விரைவில் வீடியோ வேந்தர் வாசுவும் நம்முடன் வந்து இணைந்து கொள்வார்.
-
17th April 2012 12:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks