http://i58.tinypic.com/2a0m7fn.jpg
Printable View
27–வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
http://i62.tinypic.com/2uszg1v.jpg
சென்னை, டிச.24–
மறைந்த முதல்– அமைச்சர் எம்.ஜி. ஆரின் 27–வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு பல்வேறு கட்சி தலைவர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சமாதியில் அவைத் தலைவர் இ.மது சூதனன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து கட்சியின் பொருளாளர் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழி வாசிக்க அங்கே கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் திரும்ப வாசித்து உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுனம் காத்தனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதில் நிர்வாகிகள் மல்லை சத்யா, இமயம் ஜெபராஜ், வக்கீல் தேவதாஸ், மாவட்டச் செயலாளர்கள் செங்குட்டுவன், ஜீவன், ரெட்சன் அம்பிகாபதி, டி.டி.சி.சேரன், ஈசுவரன், ராஜேந்திரன், வக்கீல் நன்மாறன், கழக குமார், தென்றல் நிசார், வேளச்சேரி செல்வபாண்டியன், பாலவாக்கம் தாயகம் தங்கத்துரை, துரைப்பாக்கம் மைக்கேல்ராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரது திருஉருவ படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் முருகேசன், ஜாகீர்உசேன், இளைஞரணி செயலாளர் எல்.கே.சதீஷ், இளைஞரணி துணை செயலாளர் கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் வேணுராம், மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் உள்பட அனைத்து பிரிவு சார்பு அணி, மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.
முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோரும் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் துரை, வைத்தியநாதன், சுரேஷ், தென்றல் தியாகு, கணேசன், தமிழ் கருணா, முத்து, பூஞ்சோலை ரமேஷ், கஜேந்திரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் பொதுச் செயலாளர் க.இசக்கிமுத்து முன்னிலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் துணை பொதுச் செயலாளர் இரா.பிரபு, நிர்வாக குழு உறுப்பினர் பெரியசாமி பாண்டியன், மண்டல செயலாளர் பெரியதுரை, ஜாக்குவார் நாதன், கே.எம்.சங்கர பாண்டியன், அல்லிதுரை, சின்னதுரை, சேப்பாக்கம் இளைஞரணி செயலாளர் சுரேஷ், கார்த்திகேயன், சிவக்குமார், முருகேசன் கலந்து கொண்டனர்.
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர். திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி, செயல் தலைவர் ரவிக்குமார், எஸ்.ஏ.ராஜாராம், எஸ்.பழனி, ஏ.சி.எஸ். பேரவை தலைவர் சுதர்சன், எஸ்.ஜே.பிரகாஷ் செல்வம் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், தமிழ் மாநில திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் மணிமாறன், பொதுச் செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Director K Balachander, who started his career with theatre, was introduced to the world of films by former Tamil Nadu Chief Minister late M G Ramachandran. During one of his interviews a few years ago, the legendary director, who passed away on December 23, 2014, had said MGR had had watched all his plays.
It was matinee idol MGR who gave this ace director a break in films. He decided to give K Balachander an opportunity as a scriptwriter in his film 'Deivath Thai'. Within a year, he established himself as a successful scriptwriter and took most of his plays to the big screen. By 1970, after converting most of his plays to screens, he began his search for new themes and had come out with 'Arangetram' in 1973, which told the story of a young woman who supports her conservative and extremely poor family.
http://timesofindia.indiatimes.com/e...w/45626531.cms
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரும் கோவை நகரை சேர்ந்தவருமான பொறியாளர்திரு துரைசாமி அவருடைய இல்லத்தின் முன் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலை திறக்கபடுகிறது . விழா பற்றிய அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ் தகவல்கள் இங்கு தெரிவிக்கப்படும் .
http://i62.tinypic.com/15cbvyx.jpg
பெங்களுர் ''உரிமைக்குரல் '' எம்ஜிஆர் மன்றம் சார்பாக இன்று மாலை பெங்களுர் தமிழ் சங்கத்தில்
மக்கள் திலகம் எம்ஜிஆர் 27வது நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது .
மனிதநேயம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம்
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் நற்பணி மன்றம் - இணைந்து நடத்தும் விழாவில் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் .
சென்னை ''தர்மம் தலை காக்கும் '' மன்ற நிறுவனர் திரு மின்னல் பிரியன் சிறப்பு அழைப்பாளராககலந்து கொள்கிறார் .
MALAI SUDAR
எம்ஜிஆருக்கு அதிமுகவினர் அஞ்சலி
.
Wednesday, 24 December, 2014 03:18 PM
.
சென்னை, டிச.24:அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் நினைவு நாள் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள், தலைவர்கள், அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
.
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 27-வது நினைவு நாள் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முக்கிய இடங்களில் எம்ஜிஆர் திருவுருவ படத்தை அலங்கரித்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை நகரில் பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர் படங்களை வைத்து ஊதுபத்தி ஏற்றி வைத்து, மாலை அணிவித்து, ஆங்காங்கே ஒலிபெருக்கி வைத்து, எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களை அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா, எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் எம்ஜிஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட் டிருந்த சிறிய மேடையில் எம்ஜிஆர் நினைவு தின உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுகவின் பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க, அங்கு திரளாக கூடியிருந்த அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும், தொண்டர்களும் திரும்ப கூறி உறுதி ஏற்றனர். அதிமுக தொழிற்சங்கத்தினர், இளைஞர் அணி, மாணவர் அணி , மகளிர் அணி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் கைகளில் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Remembering MGR on his 27th death anniversary
It is 27 years today (24/12/2014) since the Tamil film industry lost its greatest actor MGR. Today is the 27th death anniversary of MGR and we at iluvcinema.in remember MGR on his 27th death anniversary by paying rich musical tributes to the immortal actor.
Marudhur Gopalan Ramachandran (MGR) was a popular actor, director, producer and politician and also served as a Chief Minister of Tamil Nadu for three successive terms. Born in 1917, he turned to be the third Chief Minister of Tamil Nadu to be rewarded with Bharat Ratna Award following his death in 1987. MGR, who was a member of the Congress Party was rewarded the Filmfare Best Actor Award for the movie ‘Enga Veetu Pillai’, National Film Award for Best Actor for the movie “Rickshawkaran”, also received Honorary doctorate from University of Madras and The World University.
MGR born in Nawalapitiya, Sri Lanka entered the world of cinema and became an actor, director, producer and editor. He married to Sathanandavathhi but after her expiry he married a Tamil actor, V.N. Janaki.
He touched the hearts of millions of fans by his fantabulous performance in movies like ‘Anbe Vaa’, ‘Adimai Penn’ and won the National Film Award for Best Actor in 1972 for the film ‘Richshawkaran’. The charismatic actor’s few movies were even filmed abroad and also had been shot in Singapore, Malaysia, Thailand which are considered to be ‘Rarest of The Rare’ of that era. MGR ended his acting career in 1977 and continued as a politician. His films appealed to the direct sentiments of the common man as well as the rich ones which played a crucial role in enabling him to become a great politician. People were very influenced by his films and so by his dialogues.
This multi-talented actor, director, producer, editor and politician will undoubtedly be loved by all.
COURTESY : Sandeep Kumar