-
24th December 2014, 12:04 PM
#11
From One India.com
இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை. -இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது. பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்ஜிஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே பாலச்சந்தருக்கு வழங்கினார்
அதுதான் பாலச்சந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு நீர்க்குமிழி மூலம் இயக்குநராகவிட்டார் கேபி. அறுபது, எழுபதுகளில் ஏராளமான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் பாலச்சந்தர். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆரை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. காரணம் கேட்டபோது, 'எம்ஜிஆர் படத்தை நான் இயக்கினால் அது எம்ஜிஆர் படமாகத்தான் இருக்கும். அதனால்தான் நான் இயக்கவில்லை. ஆனால் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது," என்று கூறினார். பொய் படத்தின் வெளியீட்டின்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்த கேபி, "இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை,' என்றார். இன்று அமரர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாள். அவரது நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்பு கே பாலச்சந்தர் மரணத்தைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
24th December 2014 12:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks