http://i1146.photobucket.com/albums/...psczf8z7ed.jpg
Printable View
Professor Sir,
மே 11 1973 மவுண்ட் ரோட்டில் காலை முதல் மின்சாரம் இருந்ததா? தங்களுக்கு தெரியாதது இல்லை - அதையும் இங்கே பதிவு செய்யுங்கள் [If I am not wrong the special show was possible with the help of Generators]. அதேபோல, Devi Paradise 182 நாள் வசூல் [அப்போது] இந்திய திரைஉலகின் ஒரு சாதனை எனபது சரியா?
Congrats Muthian Ammu Sir for crossing 5000th milestone.
அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :
நமது இதய தெய்வத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெற்றிக்காவியம்
http://i57.tinypic.com/20gisk7.jpg
திரையிடபட்ட பொழுது, அப்போதைய ஆட்சியாளர்களின் அடக்கு முறை உச்ச கட்டத்தில் இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். Film process சென்னையில் செய்ய முடியாமல் நெருக்கடிகளும், தொந்தரவுகளும், சிக்கல்களும் இருந்தன. இவற்றையெல்லாம் மீறி, தேவி பாரடைஸ் செட்டியார் அவர்கள், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை தைரியமாக தனது திரையரங்கில் திரையிட சம்மதித்தார். சீரான மின் விநியோகம் இல்லாத நிலையில், generator மூலம் சில காட்சிகள் தொடர்ந்தன. சென்னை விநியோகஸ்தர் துர்க்கா பிலிம்ஸ் நிறுவனத்தினர் உட்பட பல மாவட்டத்தில் விநியோகஸ்தர்கள் மிரட்டலுக்கு ஆளானார்கள்.
நமது புரட்சி தலைவர் அவர்கள் இந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, தமிழ் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கினார் என்று கூறினால் அது மிகையல்ல !
வசூல் சாதனையை பொறுத்த மட்டில், அப்போது இந்தியாவெங்கும் அதிக வசூலை குவித்த ஆங்கில படமான " MACKENNA's GOLD " சென்னையின் மிகப்பெரிய அரங்கமான தேவியில் நீண்ட நாட்கள் ஓடி, மொத்தம் ரூபாய் 12,85,358 வசூலித்தது. ஆனால், நம் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியம், அந்த வசூலை முறியடித்து 182 நாட்களில் 13,63,914 ரூபாய் அள்ளி குவித்தது.
1978 வரை இந்திய திரையுலகில் ஒரே திரையரங்கு மூலம் 182 நாளில் பெற்ற இந்த வசூல் சாதனை முறியடிக்கப்பட வில்லை என்பதே உண்மை.
பின் குறிப்பு : 1978 கால கட்டத்தில், நுழைவு சீட்டு கட்டணம் 1973 போல் குறைந்த கட்டணமாக இல்லை.
இனிய நண்பர்திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனை பற்றிய பதிவிற்கு பாராட்டுக்கள் .
உலகம் சுற்றும் வாலிபன் -1973
உரிமைக்குரல் - 1974
இதயக்கனி - 1975
மூன்று வருடங்கள் தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் உருவாக்கிய பல சாதனைகள் ஏராளம் . அவர் திரை உலகை விட்டு விலகும் வரை திரை உலக முதல்வராகவே திகழ்ந்தார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.
http://i58.tinypic.com/21odavn.jpg
நெல்லை மாவட்டம் .ஒரு கண்ணோட்டம் .
காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்ட் நிறைந்த இந்த மாவட்டத்தில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தால் 1967-1971 தேர்தல்களில் திமுக மாபெரும் வெற்றி கண்டது . நெல்லை மாவட்டத்தில் இடம் பெற்று இருந்த சட்ட சபை தொகுதிகள் .
விளாத்திகுளம் - தூத்துக்குடி - திருசெந்தூர் -ஸ்ரீ வைகுண்டம் -சங்கரன் கோயில் -கடையநல்லூர் -தென்காசி -ஆலங்குளம் - திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் -பாளையங்கோட்டை - நாங்குநேரி- வாசுதேவநல்லூர் -ராதாபுரம் -ஓட்டபிடாரம் -கோவில்பட்டி .
1977-1984 மூன்று முறை நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தல்களில் அதிமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றார்கள் .அதே போல் அதிமுக கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்று இருந்தார்கள் . நெல்லை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பது வரலாறு பதிவு செய்துள்ளது .
மக்கள் திலகத்தின் அதிமுக 1991.2001 ,2011 ல் நடந்த சட்ட சபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று உள்ளது .
2014ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை , தென்காசி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது மக்கள் மனங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எந்த அளவிற்கு நிலைத்து விட்டார் என்பதை அறிய முடிகிறது .
அடுத்து தொடர்வது - கோவை மாவட்டம் -மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.