Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரையுலக வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் வெற்றிக்காவியங்களில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருக்கும் நமது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" பற்றி சில சாதனைத்தகவல்கள் :

    1. 1973ம் வருடம் மே மாதம் 11ம் தேதி வெளியான இந்த மகத்தான காவியத்துக்கு விளம்பரம் ஏதும் செய்யப்படவில்லை.

    2. அன்றைய ஆளும் கட்சியின் மிரட்டல்களை சந்தித்து, கட்சி ஆரம்பித்த மிக மிக குறுகிய காலத்தில், திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், இக்கட்டான சமயத்தில் வெளியானது. .

    2. மூன்று நாட்கள் முன்னதாகத்தான் முன்பதிவு தொடங்கிற்று.

    3. முன்பதிவிலேயே, 100 காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்று தீர்ந்தன.

    4. முன்பதிவுக்கான கூட்டம் சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடங்கி வளைந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு வரை நீடித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    5. பிற தயாரிப்பாளரின் செலவில் வெளிநாடுகளுக்கு செல்லாமல், தன் சொந்த படமாகிய இக்காவியத்துக்கான படப்பிடிப்பிற்கு, மக்கள் திலகம் வெளி நாடு சென்றார்.

    6. தூங்கா நகரம், தமிழ் சங்கம் வளர்ந்த நான் மாடக்கூடல் மதுரை மாநகர வரலாற்றிலேயே அதற்கு சற்று முன்பு வெளியான ஏனைய படங்களின் வெற்றியை தாண்டி, பிரம்மாண்டமான வெற்றி அடைந்து, அவைகள் பெற்ற வசூலையும் முறியடித்து, தனிப்பெரும் சாதனை படைத்தது.

    6. மறு வெளியீடுகளில், விநியோகஸ்தர்களுக்கு வைரச் சுரங்கமாகவே விளங்கியது.

    7. பூஜை போடப்பட்ட அன்று, ஒரு காட்சி கூட எடுக்காத சூழ்நிலையில், தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்கப்பட்ட அதிசயத்தை முதன் முதலில் நிகழ்த்திய காவியம்.

    8. தமிழ் திரையுலகில், 30 அரங்குகளில் 100 நாட்கள் கண்ட காவியம் என்ற பெருமையை பெற்று 2வது இடத்தில் அங்கம் வகிக்கிறது. முதலிடத்தை வகிப்பதும் நம் மக்கள் திலகம் நடித்த "மதுரை வீரன்" காவியமே (மக்கள் திலகத்தின் ஒரு பட சாதனையை முறியடிக்க அவரது இன்னொரு படத்தால் மட்டுமே முடியும் என்பதற்கு சிறந்த சான்று இது.)

    10. பதினைந்தே நாட்களில் 10 பாடல்கள் பதிவு செய்யப்பட காவியம் என்ற பெருமையையும் "உலகம் சுற்றும் வாலிபன்" , பெறுகிறது.

    11. தமிழகத்தில் 4 திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்ட காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்"

    12. மதுரை மீனாட்சி அரங்கில் தொடர்ந்து 301 காட்சிகள் அரங்கு நிறைந்து (அதாவது 100 நாட்கள் கொட்டகை நிறைந்த வரலாற்று சாதனை) மொத்தம் 217 நாட்கள் ஓடி, அந்த கால கட்டத்திலேயே சுமார் 6 லட்சத்து 85 ஆயிரத்து பதினெட்டு ரூபாய் வசூல் புரிந்து ஒரு புதிய புரட்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது.






    13. மதுரை மாநகரில் இரண்டாம் வெளியீட்டில் மட்டும் மூவிலாண்ட் அரங்கில் 4 வாரம், மிட்லண்ட் அரங்கில் 4 வாரம், கணேசா 3 வாரம், சிட்டி சினிமா 5 வாரம் என்று மொ த்தம் 112 நாட்கள் ஓடி மற்றோர் புதிய அத்தியாயம் உருவாக்கியது. இரண்டாவதாக திகழ்ந்ததும் நம் பொன்மனச்செம்மல் நடித்த "உரிமைக்குரல்" காவியமே. இங்கும் நம் இதய தெய்வத்தின் ஒரு காவிய சாதனையை நெருங்கியது அவரது இன்னொரு காவியமாகிய "உரிமைக்குரல்".



    இவ்வாறு சாதனைகளை அடுக்கிகொண்டே போகலாம். இந்த தகவல்கள் இப்போதைக்கு போதுமென்று கருதுகிறேன்.

    ஒண்ணாயிருக்க கத்துக்கணும், உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ! .



    அடுத்து தொடர்வது, நம் காவிய நாயகனின் "உரிமைக்குரல்" சாதனைகள் !
    Last edited by makkal thilagam mgr; 12th June 2015 at 08:18 PM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •