https://fbcdn-sphotos-a.akamaihd.net...00474231_n.jpg
Printable View
Nice Snap Buddy.
Pammalar Sir,Vasu Sir,
If both of you are absent,thread is suffering as you two are the back bones.Atleast one of you should be active as I don't want the repeat of Jan-March'2012.
Pammalar,Vasu Sir,
You didn't take care of our NT's Galatta Kalyanam in all our Galatta?
என் உயிர் நண்பா,
உனக்கான பதிவு இது.நட்புக்கு நான் கொடுக்கும் உச்ச பட்ச மரியாதை.
ஹரிச்சந்திரா-1968
கலாட்டா கல்யாணத்துடன் சேர்ந்து வந்த பருவம் தவறி வந்த பயிர்.ஜி.வரலக்ஷ்மி தயாரிப்பில் அவரது கணவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் (ஆமாம் -வசந்த மாளிகை,அவன் ஒரு சரித்திரம் ,கருடா சௌக்யமா படங்களின் இயக்குனர்.)இயக்கத்தில்,கே.வீ.மகாதேவன் இசையில்,ஏ.கே.வேலன் வசனம்(வணங்கா முடி?),ஆர்.ஆர்.சந்திரன்(மகாகவி காளிதாஸ் பட இயக்குனர்)மஸ்தான்(ராஜா பட காமெரா)சேர்ந்து காமெரா,கோபிக்ரிஷ்ணா குழுவினரின் அற்புத நடனம் என்று வந்தும் வெற்றி எல்லையை தொடாத படம்.
நான் இந்த படத்தை அனாதையை (மற்ற நண்பர்கள் வர மறுத்து விட்டனர்)போல் எழுபதுகளின் ஆரம்பத்தில் கீத்து கொட்டாய் ஒன்றில் பார்த்த ஞாபகம்.அந்த ஞாபகத்தில் எழுதுகிறேன்.
எனக்கு அந்த வயதில் சடேரென்று பொட்டில் அடித்தது,நடிகர் திலகத்தின் ஆரம்ப சூரிய வணக்க பாடல்.கர்ணன் வந்து ,மூன்றே வருடங்கள்.ஆனால் எவ்வளவு வித்யாசமான வணக்கம்.மிதமான கம்பீரம்,சாந்தி தவழும் முகம்,சாத்வீக,சத்திய மன்னனாக வித்யாசமான வணக்கம்.(ஒரே மாதிரி போலீஸ் அதிகாரி,மன்னன் என்று பாத்திரங்கள் அமைந்தாலும் ,நடிப்பு கடவுள் காட்டும் வித்தியாசம் அபாரம்.)வாசு சார் சொன்ன படி தேஜஸ் பொலிந்த முகத்தோடு,அளவான கம்பீரம கொண்டு,மிதமாக குரல் கொண்டு,சத்திய திரு உருவாக வளம் வருவார்.பிறகு,ஒரு காட்சியில் (காட்டில்)
ஒரு அந்தணர் தூங்க இவர் காவலுக்காக முழித்து இருந்து ,அடுத்த காட்சியில் அந்த களைப்பை கண்களில் கொண்டு வருவார்.சுடுகாட்டு தத்துவ காட்சி ஒன்றில் வசனம் என்னை கவர்ந்தது.(அந்த வயதில்).இளைத்து ,இளமை கூடிய முதல் மன்னர் படம் .ஆனால் ஒரு குழந்தையின் தந்தையாக நடிப்பில் முதிர்ச்சி காட்டி வயதை காட்டுவார்.(பின்னாட்களில் துஷ்யந்த மன்னனாக எங்கிருந்தோ வந்தாளில் எவ்வளவு இளமையாக ,அழகாக ஜொலிப்பார் நம் கடவுள்?)உருக்கம்,பிரிவு இதெல்லாம் தலைவருக்கு மீன் குஞ்சு நீந்துவது போல்.
படம் தோற்றதற்கு காரணங்கள் -ஹரி சந்திரன் கதையிலே லாஜிக் இருக்காது.இவ்வளவு பொன் கொடுத்து ஒரு வேலை காரியையும்,வெட்டியானையும் யாராவது வாங்குவார்களா? ஹரி சந்திர மன்னருக்கான ஆரம்ப காட்சிகளில் மனைவி ,மகன் உடன் நெருக்கம் காண்பித்து உறவு மனதில் தங்காததால் ,பின்னாட்களின் பிரிவின் சோகம் நம்மை உறுத்தாது.ஜி.வரலக்ஷ்மி(அஞ்சலி உருவம்,சந்த்யா குரல்)பொருந்தாத மனைவி(அம்பிகாபதி போல்).சுமார் இசை(உலகம் அறியாத,காசியில் வாழும்).அந்த வயதில் நான் ஆச்சர்ய பட்டது காவல் காரன் படத்தில் வரும் ஓறாம் மாதம் உடலது பாடல் சோகமாக ஒலிக்கும்.பின் பகுதி கொஞ்சம் இழுக்கும்.
ஆனால் நமது கடவுளுக்காக இதை பார்க்கலாம்.
Shankar bharath,
Great going.we enjoy every bit of your writing.As soon as I open the thread ,I search for your postings as the first option.Pl.Keep it up.
Regards
Gopal
Sri Raghavender/sailasri Chandra sekar,
One of you Please.Download the video of Jaya TV Madhan parvai discussing success of Karnan.
நடிகர் திலகத்தின் அனைத்து விஷயங்களையும் தொகுத்து வீடியோ ஆக்க முடியுமா?பிரபலங்களின் பார்வையில் நடிகர்திலகம்- சன் டி.வீ.
செவாலியர் பாராட்டு நிகழ்ச்சி(உரிமை ஜெ.ஜெ.டி.வீ)நடிப்பு சூரியன் -தூர் தர்ஷன் -இந்த மாதிரி பல விஷயங்களின் தொகுப்பு.
ராகவேந்தர் (அ) சந்திரசேகர் சார் பதில் சொல்லவும்.
நடிகர் திலகம் நாட்டின் செல்வம்
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்துக்கும் உரிய அருமை nt யின் உயிரோடு கலந்து விட்ட சகோதரர்களே
நீண்ட நாட்கள் கழித்து திரியில் நுழைகிறேன் எத்தனை புதிய வரவுகள் நெஞ்சம் இனிக்கிறது
தொடர வேண்டும் நம் அனைவரின் உறவும் பங்களிப்பும்
என்றும் அன்புடன்
கிருஷ்ணா