-
20th April 2012, 12:04 AM
#11
Bharath,
It is heartening to see people born in late 70s and early 80s coming out with their brand of admiration for NT. The enjoyable part of your write up is you were able to bring out your inner feelings quite well. Keep them coming!
Congrats Guruswamy Sir!
வாசு அவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். தனிப்பட்ட பல அலுவல்கள் காரணமாகவும் அவர் இந்த ஓய்வை விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் வருவேன் என்று உறுதி பட கூறினார். அதற்காக காத்திருப்போம்.
சுவாமி,
சாரதி சொன்னது போல் வணங்காமுடி சாதனையில் யாருக்கும் வணங்காமுடி என்று ஆவணபூர்வமான ஆதாரத்தை அள்ளி தந்ததற்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படமே நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக வருவது இங்கும் நடைபெற்றது. மதுரை தங்கத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வணங்காமுடி 78 நாட்களை நிறைவு செய்த போது திரையரங்க நிர்வாகம் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம் வெளியானது. இல்லையென்றால் மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது நடிகர் திலகத்தின் படமாக வணங்காமுடி மாறியிருக்கும்.
அன்புடன்
-
20th April 2012 12:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks