விஜய்க்கு வில்லனா?
http://cinema.vikatan.com/images/art.../15jayaram.jpg'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.
'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.
ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.
'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.
சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
One more addition to Thuppakki casts... Brilliant actor, I think this is the first time Jayaram joining hands with Vijay (correct me if I am wrong)...