http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg
முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. சிவாஜி கணேசனை வெச்சுத்தான் படம் எடுத்தார்.
ஒருவேளை புரட்சித் தலைவரை வெச்சு முக்த சீனிவாசன் படம் எடுத்திருந்தால் பாதி படம் இருக்கும்போது படத்தை முடிச்சுக் கொடுக்க வேண்டும் என்றால் என் படத்தின் வசூலை புகழ்ந்து பேசு என்று முக்த சீனிவாசனுக்கு எம்ஜிஆர் நெருக்கடி கொடுத்தார் என்று பொய் பிரசாரம் செய்வான்கள்.
ஆனால், முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வெச்சு ஒரு படம் கூட சொந்தமாக தயாரிக்கவோ டைரக்சன் செய்யவோ இல்லை. அதோட இதயக்கனி வெற்றி விழாவின் போது 1975-ல் புரட்சித் தலைவர் முதல் அமைச்சர் இல்லை. எதிர்க்கட்சியாகத்தான் இருந்தார். கருணாநிதிதான் அப்போது முதல் அமைச்சர்.
ஆகவே, முதல் அமைச்சர் அதிகாரத்தை வெச்சுக்கிட்டு முக்த சீனிவாசனை என் படத்தை வசூலை புகழ்ந்து பேசு என்று எம்ஜிஆர் மிரட்டினார் என்றும் பொறாமைக்காரர்கள் குற்றம் சொல்லவும் முடியாது.
ஆகவே, சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுத்த அந்த முகாம் சேர்ந்த முக்த சீனிவாசன் மனப்பூர்வமா துணிச்சலாக நேர்மையாக சொல்லி இருக்கிறார். மற்ற நடிகர்களின் 25 படங்களின் வசூலை எம்ஜிஆரின் ஒரே படம் பெற்று விடுகிறது என்று சொல்லி இரூக்கின்றார்.
மக்கள் திலகம்தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு இதவிட என்ன ஆதாரம் வேண்டும்.
இந்து பத்திரிக்கைக்கும் பதிவு போட்ட லோகநாதனுக்கும் நன்றி நண்பா.
பின்குறிப்பு; முக்த சீனிவாசன் கடைசியாக சிவாஜி கணேசனையும் பிரபுவையும் வெச்சு இரு மேதைகள் என்று படம் எடுத்து நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு அவர் சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுக்காமல் ஒதுங்கி விட்டார். எஸ்.வி. சேகர், பாண்டிய ராஜன் நடிச்சு கதாநாயகன் என்ற படம் எடுத்து லாபம் பார்த்து இரு மேதைகள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டினார்.