My heartiest birthday wishes to Mr.Joe.
Welcome to Mr.Parthasarathy.
Thanks
Printable View
My heartiest birthday wishes to Mr.Joe.
Welcome to Mr.Parthasarathy.
Thanks
Dear TFMLover
Thanks for your glittering 'Kadhan Karunai' ad. It is so nice to watch.
Once you promissed that you will post ad for Pesum Dheivam too, we are expecting.
Mr. Parthasarathy,
Welcome to the Fans world of the great NT. Your first two posts itself are excellent.
Happy to know you are NT fan from your childhood.
Please post your sweet and interesting memories about NT's movies
Dear Friends,
Haa.. it happened again. Just how I lost my precious thesis document on NT, I lost a long posting on NT just a while ago. I don’t know certain rules of this website. I just logged in and started writing my posting. It took almost 45 minutes and when I gave command for posting, it bounced back saying, you have not logged in. I think there is some time out rules.
Anyway, I write it again:-
God has given me two golden opportunities to seek NT very closely during the making of a film.
In 1982, I first saw NT during the making of Thyaagi – a remake of an Ambareesh Super Hit Kannada Movie. The movie almost ran for 100 days but still, not accepted by Fans due to a particular scene in which, NT would be given mind blowing torture – in fact, Censor authorities too cut some scenes.
My Periyappa was a Chief Storekeeper in AVM Studios who knows my craze for NT (in fact, his second son who is 2 years older than me is also an NT Fan! His eldest son is a fan of Jai Shanker). NT was having torn dresses with blood stains all over the body and I didn’t know the concept of that scene being shot. He was sitting on a sofa casually talking to Major “Majaraa……..” with a puff of 555. He at once comes to the grip of shot immediately when Director CVR called “TAKE”. In fact, it was the climax of the movie in which, NT would appear in front of the court – saptha naadiyum odungiya nilayil. He has to stand and SHOULD NOT STAND! Wow! The way he did that shot.. immediately after that shot the entire crew including Director CVR, Major, co-Artistes, Cinamatographer and the general visitors (normally, few people would be allowed to watch the shooting) rushed to him with so much of emotions – some hugged him..some fell at his feet..some cried (including me of course). I wept at that time and now after death, am continuing to weep whenever I happen to see great performances – only due to the thinking that Oh! What an Actor!!.
In 1987, when Jallikkattu was in the making, again I went to AVM Studios – this time with my younger brother (who too is an ardent NT fan). My brother was studying in an Engg. College at Erode and just arrived at our home in Chennai. It was about 6.45 a.m. on a Saturday on which, I was on a weekly off. My Periyappa also arrived at the same time and asked me and my brother to come to AVM Studies saying that Jallikkattu was being shot with NT in the lead role. We were thrilled and my brother just had a Kaakka Kuliyal and we arrived at AVM Studios sharp at 7.15 a.m. We were residing at Virugambakkam at that time and hence, we just took 10 minutes to reach AVM. NT was majestically sitting at the Judge’s cabin with a Court Set erected. He was sitting alone as usual observing everybody/everything around him. He got a heart attack sometime during late 1986 and in some of the movies, he was rather thin like a patient that no NT fan was able to take it. It was in this movie, that one started seeing a much fresh NT slowly getting back to normal looks but with a slim look of course. My Periyappa then took us to NT and NT started talking to us exactly like my Periyappa in his own slang. He asked me kindly as to where I was working. When I told the Co. in which I was working, he immediately gave certain key info about the Co. and its Promoters (he was having all details in his finger tips!) and I got stunned. I couldn’t speak anything as I got the opportunity to converse with my Idol. Then he turned to my brother and the moment he told NT that he is studying in Erode and has come on vacation, he asked my brother “enna avasarama kaakka kuliyal pottuttu odi vandhutteengalaa!”
Regards,
Partha
Dear Murali Sir,
Nalla idam neengal vandha idam. In fact, this song was sung by NT inviting JJ in Galatta Kalyaanam. It was the first movie in which NT was pairing JJ and Vaalee (I think so I am not sure), wrote it appropriately. Oh the roar and applause in theatres those days, when he says these lines to JJ.
Thank you.
Regards,
Partha
அடியேனை வாழ்த்திய அனைத்து நடிகர் திலகத்தின் ரசிக உள்ளங்களுக்கும் உளம் கனிந்த நன்றி!
பாசமலர் ,அன்னை இல்லம் போன்ற படங்களின் தயாரிப்பாளரும் நடிகருமான திரு. சந்தானத்தின் புதல்வர் திரு .சிவாஜி சந்தானம் தன்னுடைய facebook பக்கத்தில் நடிகர் திலகத்தின் அரிய புகைப்படங்களை வலையேற்றி வருகிறார்.. உதாரணமாக ..
கட்டபொம்மன் நாடகத்தில்
http://a6.sphotos.ak.fbcdn.net/hphot..._7655874_n.jpg
கட்டபொம்மன் திரைப்படத்தில் கர்ஜிக்கும் நடிகர் திலகம்
http://a2.sphotos.ak.fbcdn.net/hphot..._4007507_n.jpg
Dear Sir,
Thank you. It really requires monumental and dedicated efforts to do so many activities to remember NT, which you have been doing. I cannot imagine such dedication from my side. I can only enjoy / recollect / share various performances/moments.
Regards,
Partha
M.R. Santhanam acted in various movies like Adutha Veettu Penn. As for NT, he acted in Vide Velli (Father in law to T.R. Ramachandran. In Bale Pandiyaa, as father of Vasanthi. An effortless and a casual performer, who was a great friend of NT while his sons are Director-cum-Actor Santhana Bharathy and R.S. Sivaji (who acted as side kick to Janagaraj in Aboorva Sahodharargal (anne.....neenga engiyo poiteenga). Both are constants in most of Prabhu's films.
Regards,
Partha
அட்டகாசமாய்க் கலக்கி வரும் பார்த்த சாரதி அவர்களுக்கு,
தங்களுடைய பதிவுகள் என்னைப் போன்ற பழைய ரசிகர்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பாராட்டுக்கள். குறிப்பாக ஜல்லிக்கட்டு, தியாகி படப்பிடிப்பு சம்பவங்கள் தங்களுக்கு என்றென்றும் பசுமரத்தாணி போல் நினைவிருக்கும். குறிப்பாக அந்தக் காக்கா குளியல் ....
தங்களுடைய பதிவுகளை ஹப்பில் இடுமுன் வேர்டு தொகுப்பில் ஒரு கோப்பில் தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு அதன்பின் ஹப்பில் நுழைந்து பதியவும். அப்படியில்லை என்றால் ஹப்பில் தட்டச்சு செய்த உடனே பிழை செய்தி வந்தால் முன் பக்கத்திற்கான அம்புக்குறியின் மூலம் தாங்கள் தட்டச்சு செய்த பக்கத்தை மீண்டும் வரவழைத்து அதில் தாங்கள் ஏற்றிய பதிவினை கண்ட்ரோல் சி மூலம் காப்பி செய்து வைத்துக் கொண்டு அதன் பின் பதியலாம்.
மேலும் பல தகவல்களை தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நேரம் கிடைக்கும் போது நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தையும் மற்றும் சகோதரி சாரதா அவர்களின் வலைப் பதிவுகளையும் சகோதரி கிரிஜா அவர்களின் இணைய தளத்தினையும் மற்றும் பம்மலார் அவர்களின் வலைப்பதிவுகளையும் பார்வையிடவும்.
www.nadigarthilagam.com
http://ennangalezuththukkal.blogspot.com/
www.nadigarthilagamsivaji.com
www.pammalar.webs.com
அன்புடன்
ராகவேந்திரன்
Dear Parthsarathy,
Superb posts! Your posts have an attractive flow and the language is lucid. Infact, I was telling the same things to Swami yesterday, while we were talking. No wonder, being a literature student [combined with your passion for NT],it brings out your true feelings in style. Keep them coming!
Regarding typing in Tamil, either you can use any soft ware or use the google transliteration window. The URL is http://www.google.com/transliterate/Tamil. You will get the window, where you have to type the Tamil words with English spelling. For example if you type Anbulla and press space bar you will get அன்புள்ள. You have to type the words with phonetic spelling. If you want மாளிகை, the spelling should be Maaligai. Once you are done you can cut paste the Tamil post into the thread and submit. Once you get used to it, things will be more easier.
Regards
அன்புள்ள திரு ராகவேந்தர் மற்றும் திரு முரளி அவர்களுக்கு,
உங்களது மறுமொழி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. திரு முரளி அவர்களின் பதிலும் திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, திரு Goldstar (தங்களது பெயர்?) திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால் மன்னிக்கவும்) அனைவரது வாழ்த்துகளும் இனிமையான ஊக்கமும் என்னை மேலும் எழுத வைக்கும்.
அன்புடன்,
பார்த்தசாரதி
திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, <b>திரு Goldstar (தங்களது பெயர்?) </b>திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால்
Dear Partha,
My name is Sathish, native of Madurai. Goldstar is our NT student wing name. We had Goldstar NT student wing on my school time (1986 to 1993) and Goldstar is very popular among Madurai NT fans group, because we used to carry out big big posters on NT re-release movies.
Cheers,
Sathish
Dear Sathish,
Thank you. I am born and brought up in Chennai but; my native is near Chingleput.
Even though I have never been part of a Rasigar Manram, we (about 10) from our area (Virugambakkam in Chennai) were (are too!) ardent fans of NT.
Cheers to you too,
Partha
நடிகர் திலகம் - சில எண்ணங்கள்
என்னுடைய முதல் ஏழு இடுகைகள் என்னுடைய நினைவுகளை அசை போடுவதாக அமைந்தது. இது மேலும் தொடரும். அந்த அளவிற்கு நடிகர் திலகம் எனது வாழ்வில் ஊனும் உணர்வுமாக (எனது வாழ்வில் மட்டும்தானா?) கலந்து விட்டிருக்கிறார். என் தாயார் நான் அவரின் ரசிகராக சரஸ்வதி சபதம் படத்தில் இருந்தே ஆகி விட்டதாகக் கூறினாலும், எனக்கு நினைவு தெரிந்தபிறகு, அதாவது, ஓரளவு புத்தி தெரிந்த பிறகு சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு, நான் அவருடைய ரசிகனானது, முதலில், ராஜா. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அவரது ரசிகர்கர் கூட்டம் - படை என்று கூட சொல்லலாம் - ஏராளமாகப் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. முக்கியமாக, சுமதி என் சுந்தரி அவருக்கு நிறைய காலேஜ் Students ரசிகர்களாக வழி வகுத்தது என சொல்லுவர்.
அவருடைய பல அற்புத நடிப்பில் உருவான கணங்களைப் பற்றி அனேக அன்பர்கள் ஏராளமான இடுகைகளை பதிவிறக்கம் செய்து விட்டீர்கள். ஒரு ஒற்றுமை அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் என்னவென்றால் (நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்) எல்லோரும் ஒரே மாதிரியாகத் தான் சிந்திப்போம். அவருடைய ஒவ்வொரு படத்திலும் சிறந்த பல/சில காட்சிகள் ஒரே மாதிரியாக அனைவரும் நினைவு கூர்வதுதான். அதனால்தான், ஒவ்வொரு படமும் திரை அரங்கில் பார்க்கப் படும் பொழுதும், குறிப்பிட்ட சில கட்சிகளில் ஆரவாரம் மொத்த அரங்கில் இருந்தும் இந்த நிமிடம் (இனி எப்பொழுதும் கூடத்தான்) வரை இருக்கிறது. இனி வரும் இடுகைகளில், நான் ரசித்த பல தருணங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
இது வரை ஆறு திரிகள் முடிந்து ஏழாவது திரியின் நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது திரியின் ஆரம்பத்தில் இருந்து நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்களைப் பற்றி பெரிய கருத்துக் கணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்கள் என்று அடக்குவதைக் காட்டிலும் இந்த முறை சரியாக இருக்குமா என்று பாருங்களேன்.
முதலில், நடிகர் திலகத்தின் பங்களிப்பை ஒரு பத்து படங்களில் அடக்குவது என்பது மிகச் சிரமம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இருப்பினும், இந்த முறை சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் உருவான பத்து படங்கள்
நடிகர் திலகம் நடித்த படங்களில் பத்து அற்புதமான படங்கள்
உதாரணத்திற்கு, முதல் வகையில், தெய்வ மகன் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, gauravam, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.
இரண்டாவது வகையில், தில்லானா மோகனாம்பாள் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, கை கொடுத்த தெய்வம் (நாங்கள் இந்த படத்தை போர்வை படம் என்று சொல்லுவோம் - ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மயிர் கூச்செறியும் அளவிற்கு நடிப்பும் காட்சி அமைப்புகளும் ஒருங்கே அமைந்த மிகச் சிறந்த படம் - இன்று எத்தனையோ பேர் காமெடி track இல்லாத படம் என்று ஏதோ கூருகிகார்கள், இந்த படத்தில் தனி காமெடி track இல்லை. In fact அவருடைய ஏராளமான படங்கள் தனி காமெடி track இல்லாமல் வெற்றியும் அடைந்திருக்கிறது.), பாச மலர், படிக்காத மேதை, அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.
மூன்றாவது வகை ஒன்று உண்டு. அது, நடிகர் திலகத்தின் பிரத்யேக ரசிகர்ளின் நினைவில் நீங்காத படங்கள் - அதாவது அவருடைய ஸ்டைல் தூக்கலாக அமைந்து - அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்த படங்கள்.
இந்த மூன்றாவது வகையில் முதல் இடம் எப்போதும் வசந்த மாளிகை (இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?), ராஜா, என் தம்பி போன்ற படங்கள் வரலாம்.
நடிகர் திலகம் என்ற அந்த அற்புதக் கலைஞனை இப்படி வரிசைப் படுத்தி ஒன்று இரண்டு கூண்டுகளுக்குள் அடைத்து விட முயல்வது முடிகிற காரியம் இல்லை. அப்படி முயன்றால், அது என்னைப் பொறுத்த வரையில் தவறாகக் கூட இருக்கலாம்.
இப்படி முயலும் பொழுதே, அவருடைய சிறந்த படங்கள் குறைந்தபட்சம் ஐம்பதைத் தாண்டும் என்றால் இது மலைக்க வைக்கும் விஷயம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி,
தங்களின் முதல் ஆராய்ச்சிக்கட்டுரையே அட்டகாசமாக அமைந்துள்ளது. இதுவரை அவரது சிறந்த பது படங்கள் / 25 படங்கள் என்ற அளவிலேதான் அலசப்பட்டு வந்திருக்கிறது. முதன்முறையாக அவற்றை பலவகைப்படுத்தி, வகைக்கு பத்து படங்களாக அல்லது 20 படங்களாக அலசும் முறை சற்றே புதுமையானது மட்டுமல்ல, சிறப்புக்குரியதும் கூட.
அந்த வகையில் என்னைப்பொறுத்தவரை முதலிரண்டு பிரிவுப்படங்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் மூன்றாவது வகைப்படங்களுக்கும் உண்டு என்பது எனது பதிவுகளைப்படித்த அனைவருக்கும் தெரியும். காரணம் நடிகர்திலகத்தின் பொழுதுபோக்குப் படங்கள் மற்ற எந்தப்படங்களுக்கும் குறைவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
உங்கள் பதிவுகளின் துவக்கமே, இனிவரும் அற்புத ஆய்வுகளின் அச்சாரமாக விளங்குகிறது. உங்கள் பதிவுகள் எங்களை அசத்தப்போவது நிச்சயம்.
அசரக் காத்திருக்கிறோம்.
டியர் ஜோ,
கட்டபொம்மன் நாடக / மற்றும் திரைப்படத்தின் புகைப்படங்கள் அருமை. அதிலும் நாடகக் காட்சி கிடைத்தற்கரியது. நன்றி.
திருமதி சாரதா மேடம் அவர்களுக்கு,
நன்றிகள் பல. நடிகர் திலகத்தின் படங்களை பலவகைப்படுத்தி ஏற்கனவே திரு முரளி அவர்கள் கட்டுரை எழுதியதாக நினைவு. இருப்பினும், இது சற்றே வித்தியாசமான முயற்சி.
இதற்க்கு தீவிர சிந்தனை அவசியமில்லை. ஏனெனில், நடிகர் திலகத்தைப் பற்றி நினைத்தவுடன் எண்ணங்கள் அவைகளாக வந்து விழும். நேரம் மற்றும் தமிழ் தட்டச்சு தான் தேவைப்படுகிறது. எனக்கு பொதுவாக ஏதோ ஒரு பாட்டின் முணுமுணுப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அது போல எப்போதும் நடிகர் திலகத்தின் ஏதோ ஒரு படம் அல்லது காட்சி எப்போதும் என் சிந்தனையில் இருந்து கொண்டே இருக்கும். நான் என் துறை நிமித்தமாக திடீர் திடீர் என்று ஏதோ ஒரு டீம்-க்கு எதாவது ஒரு சுப்ஜெக்ட்-ஐ பெற்றி பேச வேண்டி உள்ளது. அதற்கு எப்போதும் நடிகர் திலகத்தின் வெவ்வேறு திறமையான காட்சிகளையும் கவியரசு (ஒருவன்தான்) கண்ணதாசன் பாடல்களையும் பயன்படுத்துவது வழக்கம். அதனால், சுலபமாக என்னால் எழுத முடியும் என்றே தோன்றுகிறது. ஏழு திரிகளில் எக்கச்சக்கமாக எழுதிவிட்டதால் சிறிது மலைப்பாக இருந்தாலும், நடிகர் திலகத்தின் படங்களைப் போருதுவரையில், ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிய புதிய பல எண்ணங்களும் மலைப்பும் மேலோங்கிக்கொண்டே போவதால், சுலபமாக எழுதி விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நன்றி,
பார்த்தசாரதி
டியர் பார்த்த சாரதி,
அருமையான அலசல்கள். சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் இந்த மூன்றாவது வகை தான் முதல் இரண்டு வகைகளிடம் நம்மை ஈர்த்தது என்றால் மிகையில்லை. இதில் ஒரு சிறப்பென்ன வென்றால், இந்த மூன்றையுமே அவர் தன் முதல் படத்திலேயே சித்தரித்து விட்டார் என்பது தான். மற்ற 304 படங்களும் நமக்கு போனஸ்.
இப்படி 304 படங்களை ரசிகர்களுக்கு போனஸாகத் தந்து அதிலும் சாதனை படைத்துள்ளார். எப்படிப் பட்ட தொய்வான படமாயிருந்தாலும் அவருடைய நடிப்பு நம்மை அமர வைத்து விடும். அப்படிப் பட்ட படங்களை ஒரு வகைப் படுத்தினால் நான்காக ஒரு வகை உருவாகும்.
சமீபத்தில் வசந்த் தொலைக்காட்சியில் மகேந்திரா அவர்கள் கூறியிருப்பது எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றி மிகவும் சிலாகித்து அவர் கூறியது. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், அல்லது எவ்வளவு சுமாரான படமாயிருந்தாலும் ஏற்றுக் கொண்ட தொழிலில் பாகுபாடு காட்டாது ஒரே மாதிரி தன் உழைப்பை கொடுத்தவர் என்று கூறினார். சிலர் கூறலாம் அவர் இப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கக் கூடாதோ என்று, ஆனால் எனக்குத் தெரிந்த வரை, அதிலும் தன்னுடைய உழைப்பை 100 சதவீதம் சிரத்தையுடன் தந்தவர் என்று மகேந்திரா அவர்கள் கூறினார்.
தாங்கள் கூறிய மூன்றாவது வகையை மட்டுமே அவர் அதிகம் செய்திருந்தால், பலர் இந்தத் தொழிலில் மிகப் பெரிய விளம்பரத்தையும் பெயரையும் அடைந்திருக்க முடியாது. வர்த்தக நோக்கிலான கதைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து சமுதாய பிரச்சினைகளை அலசும் படங்களை அதிகம் தந்ததனால் தான் அவருடைய படங்கள் காலங்கடந்து நிற்கின்றன.
தங்களுடைய தொடர்ந்த பதிவுகளுக்காக காத்திருக்கும்
ராகவேந்திரன்
டியர் திரு ராகவேந்தர்,
நன்றி. உங்கள் அனைவரது ஆதரவான பதில்கள் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது. உண்மையில், நேற்று முன்தினம்தான் நான் பராசக்தி படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என்னுடைய சக NT ரசிக நண்பர்களுக்கும் எப்போதும் நடக்கும் விவாதம் - நான் எப்போதும் சொல்வது அவர் முதல் படத்திலேயே முழுவதும் திறமையை காண்பித்து விட்டார் மற்ற எல்லா படங்களும் கொசுறு என்று. அந்த மறக்க முடியாத கோர்ட் சீன் வசனக் காட்சியில் - வெறுமனே வசனம் பேசுவதோடு மட்டுமில்லாமல் - அவர் கைகளை அந்த பிடிகளில் வைத்துக் கொண்டு பேசும் அந்த casual way அந்த கோர்ட் சிப்பந்தி (?) அவர்தான் பின்னாளில் அவருடைய பல படங்களிலும் மற்றும் நாடகங்களிலும் கூட நடித்தவர் - மற்றும் பல நாடகங்களின் இயக்குனர் - ஏன்- சத்யம் திரைப்பட இயக்குனரும் கூட - திரு S A கண்ணன் அவர்கள். (இது உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக தெரியும்) - அவர் நடுவில் குறுக்கிடும் பொழுது - கிண்டலாக narration - ஐ தொடரும் லாகவம். ஒவ்வொரு வசனத்திற்கும் அதற்கேற்றார்போன்ற முக பாவனை மாற்றங்கள். எந்த நடிகனால் இது முதல் படத்திலேயே சாத்தியம். அவர் ஒரு வற்றாத நீரூற்று மற்றும் எப்போதும் தன் கலையையும் அதன் மூலம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்களும் அடையும் மகிழ்ச்சி இது ஒன்றே தன் வாழ்க்கையாக நினைத்து கடைசி நிமிடம் வரையிலும் இருந்த அந்த அர்ப்பணிப்பு. நீங்கள் சொன்னதுபோல் எந்த படத்திலேயும் - regardless of his importance in the movie - அவரின் பங்களிப்பு இம்மி கூட குறைந்ததில்லை. மேம்போக்காக அவர் எந்த படத்தையும் எடுத்துக் கொண்டதில்லை தான்.
நன்றி,
Parthasarathy
Hi All
Was muthal Mariyathai Shivaji Sir's last movie as a 'hero' ?
ராமன் எத்தனை ராமனடி - கடைசி இருபது நிமிடங்கள்
இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தது. குறைந்தது முப்பது தடவையாவது (தியேட்டரில் மட்டும் இருபது!) பார்த்திருப்பேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. படத்தின் டைட்டில் காட்சி (அது மட்டும் தான்) எங்களது ஊரில் எடுத்தார்கள். இன்னொரு காரணம் - அவர் நடிகனான பின்னர் - முக்கியமாக - அவர் நம்பியார் வீட்டில் - செந்தாமரை (அவர் முதலில் நடிகர் திலகத்தின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து அழுதும் போது - நாங்கள் அலறிய அலறல்! - மற்றும் இன்னும் இரு நடிகர்கள் (அதில் ஒருவர் எப்போதும் எதிர் அணி படங்களில் வருவார் - மற்றவர் நடிகர் திலகத்தின் பல படங்களில் நடிப்பார் - திரு Joe அவர்கள் பதிவிறக்கம் செய்த வீர பாண்டிய கட்டபொம்மன் - நாடக ஸ்டில் - ஐ கவனித்தால் அவரது வலது பக்கம் ஓரமாக நிற்பவர் - அவர் தான் அவர்). நம்பியார் வீட்டில் அவர் செய்யும் ஸ்டைல் - கள் - அப்பப்பா. The way he takes on them with his inimitable style - சவுக்கை ஓங்குவார் - ஆனால் நம்பியாரை அடிக்க மாட்டார் - அவர் கோபம் மற்றும் லாகவத்துடன் - செய்யும் அந்த பாவனை - நூறு அடி அடித்ததற்கு சமம் - மற்ற கலைஞர்கள் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு காண்பிக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை - வெறும் முக பாவனைகளால் காண்பிப்பவராயிற்றே!.
இப்பொழுது ராமன் எத்தனை ராமனடி படத்தின் கடைசி இருபது நிமிடங்களுக்கு வருவோம்.
இந்த கடைசி இருபது நிமிடங்கள் ஒரு அற்புதமான கோர்வையுடன் ஓடும். அதாவது காட்சி அமைப்புகள் அந்த படத்தின் முடிவை அழகாக ஆனால் சரளமாக இழுத்து செல்லும். அவரது வளர்ப்புப் பெண் dinner பார்ட்டி ஒன்றில் எக்குத் தப்பாக ஒருவனிடம் மாடிக் கொண்டு கடைசி நேரத்தில் - நடிகர் திலகம் வந்து விடுவார். அப்போது ஆரம்பமாகும் இந்த கோர்வையான காட்சி அமைப்பு. நடிகர் திலகம் கோபத்துடன் அந்த வெறியனை அடித்து ஒரு நேரத்தில் காகா வலிப்பு வந்த பிறகு தன்னை அறியாமல் அவனை ஆணியில் அறைந்து - அவனைத் தொடுவார். தொட்டவுடன் அவன் பிணமாக விழுவான் - உடனே அவர் காட்டும் முக பாவம் - அதன் பின்னர் - அவர் காரில் வந்து அமர்ந்து சிறிது நேரம் வரையில் - ப்ரமை பிடிதார்ப் போல் இருப்பார். இங்கு ஒரு விஷயம் - எல்லோரும் வியக்கும் விஷயம் - அதாவது நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் கூறுகிறோமே - அது. ஒருவர் திடீரென்று ப்ரமை பிடித்து விட்டால் எப்படி ஆவானோ - மிகச் சரியாக அந்த பாவனையை - காண்பிப்பார். சிறிது நேரம் காரில் பயணம் செய்தவுடன் - கார் டிரைவர் - முத்துராமன் - அவரை "சார், நான் யார் என்று தெரிகிறதா?" மிக மிக லேசாக கண்ணை திறந்து பார்த்து "ம். " என்று சொல்லுவார். ஆனால் அவருக்கு தெரியும் முத்துராமன் தான் KR விஜயா - வின் கணவர் என்று. அவர் வீடு வரும். உள்ளே வந்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். இது தான் சரியான தருணம் - அனைவரும் (அவரைத் தவிர!) ஒன்று சேர்வதற்கு என்று. உடனே யாருக்கும் தெரியாமல் போலீஸ் - க்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு ஹால் - க்கு வந்து. பேச ஆரம்பிப்பார். திடீரென்று நினைவுக்கு வந்து முத்துராமன்- ஐ அழைப்பார். அப்போது அவரது குரலில் இருக்கும் ஒரு வகையான ஒரு இறுக்கம் நிறைந்த ஒரு குரல். உள்ளே வந்தவுடன் அவர் முத்துராமன்-ஐ எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு மற்றும் அந்த கம்பீரம் நிறைந்த லாகவம். உடனே போலீஸ் வந்து விடும் - இப்போழோது ஒவ்வொருவரிடமும் விடை பெறும் கட்டம். முதலில், கோபி (ஒரு மலையாள நடிகர்) அவரிடம் ஒரு வகையான நடிப்பு, அடுத்து முத்துராமன் - இப்பொழுது ஒரு கடமை உணர்வுடன் - அடுத்து ஆயா (ஆப்பக்கார ஆயா!........), அடுத்து KR விஜயா - "தேவகி ...." அவர் தேவகி என்ற பெயரை உச்சரிக்கும் விதம் - உணர்ந்து பாருங்கள்! ஆஹா! இப்பொழுது - மகள். இப்பொழுது இரண்டு கைகளை ஒரு மாதிரி தூக்கி - மெல்ல நெருங்கி - மகள் அழுவார் - இவர் - சைடு pose - இல் நமக்கு வலது பக்க முகம் தெரியும். அந்த வலது புருவத்தை - அவரது characteristic /inimitable ஸ்டைல்-இல். இந்த ஸ்டைல் அந்த இடத்துக்கு மெருகை மேலும் ஊட்டுமே தவிர சிதைக்காது. புருவத்தை உயற்றி - "போகட்டுமா" என்று கேட்பார். இப்பொழுது தந்தை மகளிடம் எப்படி பேசுவானோ - அதுவும் மிகவும் செல்லம் கொடுத்தபிறகு எப்படி பேசுவானோ - அப்படி - அதாவது ஒவ்வொரு கேரக்டர்-இடம் விடை பெறும் பொழுதும் அந்தந்த உறவுக்கு ஏற்றார்ப் போல் - நடிப்பு - பிரியாவிடைக்காக. கடைசியில் - யாரும் அழைக்க கூடாது - No cry - என்று அப்பொழுதும் தவறாக - ஆங்கில உச்சரிப்பு - அந்த characterisation - அந்த கடைசி காட்சியில் கூட - அதையும் maintain செய்து. ஒத். Don 't cry என்று சிரித்துக் கொண்டே அழுது நம் எல்லோரையும் - அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து - அவர் வாயில் இருந்து - வணக்கம் என்று வரும்.
இந்தக் கடைசி இருபது நிமிடங்கள் நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும் மற்ற அனைத்து முக்கியப் பாத்திரங்களையும் சுற்றி நிகழும். ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால், அந்த முடிவை நோக்கி நடிகர் திலகம் தான் இழுத்துச் செல்வார். அதுவும் எப்படி - சரளமாக மற்றும் ரொம்ப casual - ஆக ஆனால் மிக மிக அழகாக மற்றும் ஆழமாக.
இப்போதெல்லாம், இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது மறக்காமல் அந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் - ஐ பார்த்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறேன்.
நன்றி,
Parthasarathy
கலக்கறீங்க சாரதி! நடிகர் திலகத்தின் படங்களை இப்படி இனம் பிரித்து ரசிப்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தொடருங்கள். ராமன் எத்தனை ராமனடி கிளைமாக்ஸ் பற்றிய அலசல் நன்றாக வந்திருக்கிறது. அண்மையில் நானும் அதைப் பற்றி எழுதியிருந்ததால் வெகுவாக ரசிக்க முடிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் channel surfing செய்துக் கொண்டிருந்த போது ஒரு இந்தி சானலில் சட்டென்று நிறுத்தினேன்.காரணம் அப்போது அங்கே oh o meri raja பாட்டு ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. ஜானி மேரா நாம் திரைப்பட பாடல் காட்சி.நமது ராஜாவின் மூலப்படம். தேவ் ஆனந்த் மற்றும் ஹேமா. அதைப் பார்த்த போது நமது நடிகர் திலகம் எவ்வளவு ஸ்டைலாக செய்திருப்பார் என்ற ஏக்கமே விஞ்சியது. பாடல் காட்சியை கிட்டத்தட்ட அதே போல் எடுத்திருப்பார் சி.வி.ஆர். இந்தி பாடலில் மூன்றாவது சரணத்தில் கேபிள் காரில் [ரோப் கார்?] போவதாக எடுத்திருப்பார்கள். அது ஹிமாச்சல் பிரதேஷ் என்று நினைக்கிறேன். அப்போது தமிழகம்/கேரளத்தில் கேபிள் கார் இல்லாததால் அதை தமிழில் கொண்டு வரவில்லை. அது போல் தன் தந்தையை தேடி ரங்காராவ் மாளிகைக்கு போகும் நாயகி சித்தாள் வேடத்தில் உள்ளே நுழைவதாக வரும். இந்தியில் பாடல் உண்டு. அது தமிழில் இல்லை. இரண்டில் ஒன்று பாடல் முடிந்தவுடன் உடனே வரும் காட்சி என்பதாலும் படத்தின் நீளம் கருதியும் அந்த பாடலை தவிர்த்து விட்டார்கள்.
டி.வியில் பாடலை பார்த்துக் கொண்டிருந்தபோது என் நினைவுகள் பின்னோக்கி போனது. நான் ஜானி மேரா நாம் பார்த்த நினைவுகள். 1971 அக்டோபர் 18 தீபாவளி தினம். பாபு வெளியான நாள். மதுரையில் ஸ்ரீதேவியில் படம் வெளியாகி இருக்கிறது. தியேட்டருக்கு காலையில் நானும் என் கசினும் அவன் நண்பர்கள் சிலரும் செல்கிறோம். கூட்டம் அலை மோதுகிறது. மன்ற டிக்கெட், இல்லை வேறு ஏதாவது டிக்கெட் கிடைக்காதா என்று எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. அன்று 5 காட்சிகள். சரி மாலையில் பார்த்துக் கொள்வோம் என திரும்பி வருகிறோம். தியேட்டரிலிருந்து எங்கள் வீட்டிற்கு மேல மாசி வீதி வழியாக வரும் போது ஜானி மேரா நாம் மீனாட்சியில் வெளியாகி இருக்கிறது என்ற பேச்சு வருகிறது. அதைதான் பாலாஜி தமிழில் ராஜா என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியும் என்பதால் நேராக மீனாட்சி டாக்கிஸ் செல்கிறோம்.
அங்கும் ஓரளவிற்கு நல்ல கூட்டம். டிக்கெட் கிடைத்து உள்ளே செல்லும் போது கஸினின் நண்பர் ஒருவரை உள்ளே பார்க்கிறோம். என்ன உங்க படத்திற்கு போகவில்லையா என்று என் கஸின் கேட்க நண்பர் நான் ரசிகன்தான் வெறியன் இல்லை என்று பதில் சொன்னார். அதே கேள்வியை நானும் உங்களை கேட்கிறேன் என்று நண்பர் சொல்ல அதே பதிலை நானும் சொல்கிறேன் என்று என் கஸின் சொல்ல ஒரே சிரிப்பு. சந்தித்த நண்பர் எம்.ஜி.ஆர். ரசிகர். அன்று எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் வெளியாகி இருக்கிறது. முன்பே இங்கே சொன்னது போல் அந்த தீபாவளி நாள்தான் சிவாஜி படமும் எம்.ஜி.ஆர். படமும் கடைசி முறையாக ஒரே நாளில் வெளியானது. அதன் பிறகு இரண்டு பேரின் படங்களும் ஒரே நாள் ரிலீஸ் நடக்கவில்லை.
ஜானி மேரா நாம் படம் பிடித்திருந்தது. தமிழில் படம் நன்றாக போகும் என்று தோன்றியது. படம் முடிந்து வீட்டிற்கு வருகிறோம். கஸினின் நண்பன் ஒருவன் காத்திருக்கிறான். 3 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியிருந்ததாகவும் அதில் ஒருவர் வராததால் என் கசினை கூட்டி போக வந்ததாக சொல்லி அவனை மட்டும் கூட்டிக் கொண்டு போனார். நான் அன்று பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்தே பார்க்க முடிந்து. இந்த நினைவுகளெல்லாம் அந்த பாடல காட்சி முடிவதற்குள் மனதில் மின்னலாக ஓட அதை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது!
அன்புடன்
திரு. பார்த்தசாரதி,
பல புதிய கோணங்களில் நம் நடிகர் திலகத்தின் பெருமையை மேலும் மேலும் பரவ உங்களுடைய பங்களிப்பும் பதிவுகளுமே சாட்சி. தொடரட்டும் உங்களுடைய சேவை.
டியர் முரளி,
உள்ள உணர்வுகளின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).
முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).
படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.
அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்விடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.
அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............
(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே)
டியர் பார்த்தசாரதி,
'ராமன் எத்தனை ராமனடி' கிளைமாக்ஸ் காட்சியின் அலசல் வெகு அருமை. சீன் பை சீன் மிக அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். ஒரே காட்சி ஒவ்வொருவர் கோணத்திலும் எப்படி பரிணமிக்கிறது என்பதற்கு உங்கள் ஆய்வு சிறந்த உதாரணம். ஒவ்வொருவரும் காட்சிகளை பார்க்கும்போது, ஒவ்வொரு உத்தி மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும்... அதுதான் நடிகர்திலகதின் தனிப்பெருமை.
உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்... இன்னும்.... இன்னும்...
திருமதி சாரதா அவர்களுக்கு,
நன்றி. நாம் மட்டுமல்ல கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நடிகர் திலகம் ரசிகர்கள் மூன்றாவது வகைப் படங்களின் மூலம்தான் அவரது ரசிகர்களாயினர் என்று கூறினால் அது மிகையாகாது. அறுபதுகளுக்குப் பின்னர் பிறந்தவர்கள் அவர்களுக்கு புத்தி தெரியும்போது பார்க்க ஆரம்பித்த படங்கள் தங்கை-யில் இருந்துதான் தொடங்கும். முன்னர் ராகவேந்திரன் சார் அவர்கள் குறிப்பிட்டது போல் இந்தப் படங்கள் தான் நம் அனைவரையும் அவரது முந்தைய படங்களுக்கு ஈர்த்தது.
ராஜா படத்தைப் பொறுத்தவரை, ஒரிஜினல்-ஐ விட நூறு பங்கு அமர்க்களமாகவும் சுவாரஸ்யமாகவும் CVR - NT - பாலாஜி கூட்டணி செய்திருப்பார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
நீ வரவேண்டும் பாடலில் முதலில் JJ ஒ ராஜா ... என்றவுடன் படிகளின் மேல் நின்று கொண்டு நடிகர் திலகம் அந்த கோட் டை பறக்க "ராஜா" என்று அவருக்கே உரித்தான ஸ்டைல்- இல் சொல்லுவார். உன்னிப்பாக ஒரிஜினல் ஜானி மேரா நாம் - ஐயும் ராஜா-வையும் கவனித்தால், ராஜா-வில் ஒவ்வொரு இடத்திலும் - ஒரு இடம் விடாமல் நடிகர் திலகம் வேறு விதமான ஸ்டைல்-இல் உணர்வு பூர்வமாகவும் (ஆம். அந்த கடைசி காட்சியிலும் தான் - ஒரு மாதிரி சிரிப்பாரே - பண்டரிபாய் -ஐ மனோகர் சவுக்கால் அடிக்கும் போது. எத்தனை சில்லறை எறிந்திருப்போம் அந்தக் காட்சிக்கு மட்டும்!) கலக்கி இருப்பார். இதற்கு முக்கியமான காரணம் அநேகமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ரீமேக் படங்கள் மற்றவர்கள் நடிக்கும்போது அநேகமாக ஒரிஜினல் படத்தைப் பார்க்க தயங்குவார்கள் காரணம் ஒரிஜினல்- in சாயல் வந்துவிடக்கூடாதே என்று. ஆஅனால் நடிகர் திலகமோ ஒரிஜினல்-ஐ குறைந்தது பத்து முறையாவது பார்ப்பாராம். அப்படிதான் மேஜர்-in ஞான ஒளி நாடகத்தை பத்து முறை வந்து பார்த்தாராம். மேஜர் கேட்டதற்கு நடிகர் திலகம் சொன்ன பதில் "ஒரிஜினல்-in சாயல் கொஞ்சம் கூட வராமல் பார்க்கத்தான் குறைந்தது பத்து முறை பார்க்கிறேன்" என்று.
நடிகர் திலகம் & ரீமேக் படங்கள் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பதிய முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் Abkhlabhi (தங்களின் பெயர்?),
நன்றி. நடிகர் திலகத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் மேலும் பல ஆயிரம் பேர் வித்தியாசமான கோணங்களில் அலசிக்கொண்டே போகலாம். அவரது வீச்சு அந்த அளவிற்கு காலம் கடந்து நிற்கிறது. இல்லையென்றால், எனது காலேஜ் படிக்கும் மகள்களும் அவரது மோட்டார் சுந்தரம் பிள்ளை-ஐயும், வியட்நாம் வீடையும், தில்லானா மோகனாம்பாளையும், ஏன், உத்தம புத்திரனையும் ரசிப்பார்களா. இந்த நான்கு படங்களின் வித்தியாசம் மட்டும் போதும், நடிகர் திலகம் யாரென்று சொல்ல, (நாங்கள் சொல்லுவோம் நடிப்புலக மன்னர் மன்னன் என்று - செல்லமாக - கணேசா என்றும் கூட)
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் முரளி சார்,
நன்றி. ஜானி மேரா நாம் படத்தை நானும் சில முறை பார்த்திருக்கிறேன். அண்மையில் கூட ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். வட இந்தியாவில் அவரை ஸ்டைல் மன்னன் என்று கூறுவர் - மற்றும் எவர்க்ரீன் ஹீரோ என்றும் debonair என்றும் கூட. ஆனால், நம் நடிகர் திலகம் அவரை விட வித்தியாசமாக ஆனால் அழகாக மற்றும் ஆழமாக ராஜா படத்தில் நடித்திருப்பார். எங்களது குரூப் ராஜா படத்தை முதல் நாள் ஓபனிங் ஷோ தேவி பாரடைஸ் திரை அரங்கத்தில் பார்த்தோம். இரண்டு விதங்களில் நாங்கள் (நாங்கள் மட்டுமா) அரங்கத்தில் அமர்க்களம் செய்து கொண்டிருந்தோம். ஒன்றும் நடிகர் திலகம் மறுபடியும் james bond type படத்தில் நடிக்கிறார் என்று. இன்னொன்று, அவர் சண்டை காட்சிகளில் காட்டிய ஸ்டைல் கலந்த வேகம். முதலில் தாரா சிங்க் (தானே?) ஆனால், எங்களின் அலப்பறை விண்ணை முட்டியது அவர் கே. கண்ணனுடன் மூடும் போது (எல்லோருக்கம் தெரியும் ஏன் என்று). மூன்றாவது, நடிகர் திலகத்தின் படம் மறுபடியும் தேவி பாரடைஸ்-இல் ரிலீஸ் ஆகிறது என்று. தேவி பாரடைஸ் அரங்கில் முதலில் ரிலீஸ் ஆன படம் சொர்க்கம். நடுவில், ரிக்ஷாக்காரன் மறுபடியும். இப்போது ராஜா. என்ன ஆகும் எங்கள் கலாட்டா.
அன்புடன்,
பார்த்தசாரதி
சாரதி,
பயில்வான் தாரா சிங் அல்ல, அவரது தம்பி 'ரந்தாவா' (என் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்).
கதையை மட்டுமல்ல, ரந்தாவா மற்றும் பத்மா கன்னா இருவரையும் கூட ஜானி மேரா நாம் படத்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி.
இன்னொரு விஷயம், தேவி பாரடஸில் நாலாவது தமிழ்ப்படம் ராஜா. ஏற்கெனவே சொர்க்கம், ரிக்ஷாக்காரன் மட்டுமல்லாது 71 தீபாவளிக்கு 'நீரும் நெருப்பும்' படமும் அங்குதான் ரிலீஸானது.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனிக்கின்றன. நடிப்புலக களஞ்சியம் குறித்த ஆய்வுக்களஞ்சியங்கள் இவை என்றால் அது மிகையன்று. தாங்கள் தங்களது நினைவுகளை அசைபோடும் விதம் அற்புதம். மேலும் மேலும் தங்களின் நினைவு நதிகள், இத்திரி என்னும் கடலில் சங்கமிக்கட்டும். ஒரு படத்தின் ஒரு காட்சியில் நடிப்புச் சக்கரவர்த்தி எப்படியெல்லாம் நடித்திருப்பாரோ, அதனைக் கனக்கச்சிதமாக அப்படியே ஆராய்ந்து அலசி அள்ளி அளிக்கும் விதம் அதியற்புதம். 'ஆய்வரசர்' எனும் பட்டத்தையே தங்களுக்கு வழங்கலாம்.
"ஞான ஒளி"க் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு கண்கள் குளங்கள் ஆன பதிவு என்ன,
கறை படியாத கரங்களைக் கொண்ட, கலையுலகினில் கரை கண்ட நவரசத்திலகத்தின் "நவராத்திரி"யை அமைந்தகரை 'முரளிகிருஷ்ணா'வில், அந்த முரளிகிருஷ்ணணின் இன்னொரு நாமகரணத்தையே திருப்பெயாராகக் கொண்டுள்ள 'பார்த்தசாரதி'யாகிய தாங்கள், சுயமரியாதைச் சிங்கமான சிங்கத்தமிழனின் அன்புள்ளத்தோடு பார்த்து ரசித்த அனுபவப்பதிவு என்ன,
'கவரிமான்', 'வணங்காமுடி' காட்சிகள் குறித்த 'நறுக் சுருக்' அலசல்கள் என்ன,
'தியாகி', 'ஜல்லிக்கட்டு' பற்றிய ஷூட்டிங் ஸ்பாட் செய்திகள் என்ன,
நடிப்புலக மகானின் திரைக்காவியங்களை மூன்று வகைகளில் பிரித்து வகுக்க - ஒவ்வொரு வகையிலும் விஷயங்களைத் தொகுக்க - கலைப்பிளளையாரின் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பதிவு என்ன,
"ராமன் எத்தனை ராமனடி" கிளைமாக்ஸை Sony Maxல் பார்க்கும் கிரிக்கெட் மாட்ச்சைப் போல் லைவ் ஆக கொடுத்த லாவகம் என்ன,
"ராஜா" பதிவுகள் என்ன,
எதைச் சொல்வது எதை சொல்லாமலிருப்பது,
தீபாவளியன்று கொடுக்கப்படும் விதவிதமான ஸ்வீட்டுகள் போலல்லலவா இனிக்கின்றன இவையாவும்.
தங்களின் பதிவு/பதிவுகள் வெளியாகும் ஒவ்வொரு நாளும் இத்திரிக்கு தீபாவளித் திருநாள் தான் !
தங்களின் திருத்தொண்டு தொய்வின்றித் தொடரட்டும் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார் & சகோதரி சாரதா,
26.1.1972லிருந்து தங்களது 'பஞ்ச்' பதிவுகள் வெளியான இன்றைய காலகட்டம் வரை "ராஜா ராஜா தான்". என்றென்றும் RAJA RULES SUPREME என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.
For a short & smart comparison :
'O Mere Raja' Song from Johny Mera Naam(1970)
(Dev Anand-Hema Malini / Kishore-Asha / Kalyanji-Anandji / Rajinder Krishnan)
http://www.youtube.com/watch?v=o8mXtLk-LOY
'O Raja' Number from Raja(1972)
(NT-JJ / TMS-PS / MSV / Kannadhasan)
http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
IMHO, NT is incomparable, HM & JJ - equally good, TMS-PS edge over Kishore-Asha, MSV Miles ahead.
"ராஜா"வை இன்றளவிலும் ஹிந்தி ரீமேக் அல்ல, தமிழில் வெளிவந்த ஒரு ஒரிஜினல் படம் என்கின்ற ரீதியில் பார்ப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?! அதற்கு ஒரே காரணம் நமது நடிகர் திலகம் தான் !
அன்புடன்,
பம்மலார்.
It's RAJA all the way
கும்பகோணத்துக்கு அருகாமையில் தாராசுரத்தில் உள்ள 'சூரியகாந்தி' டூரிங்கில், 18.2.2011 வெள்ளி முதல் இன்று 20.2.2011 ஞாயிறு வரை, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது. இன்றைய[20.2.2011] மாலைக் காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 200 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்திருக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். மாலைக் காட்சி வசூல் மட்டும் சற்றேறக்குறைய ரூ.2,000/-. இன்றைய காலகட்டத்தில், டூரிங் டாக்கீஸுகளை பொறுத்தமட்டில், இது சிகர சாதனை.
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு. ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
'மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ'
'தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே'
'யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா'
'பூங்காற்று திரும்புமா'
'சந்தன நிலவொளி'
'சின்னஞ்சிறு அன்னம் ஒன்று'
இன்னும் இது போன்ற சிறந்த பாடல்களையெல்லாம் நமது நடிகர் திலகத்துக்கு பின்னணியில் பாடிய கள்ளத்தொண்டை கலக்காத கம்பீரக் குரலோன் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி. நடிகர் திலகம் முதற்கொண்ட முன்னணி ஹீரோக்களுக்கும், ஏனைய நடிகர்களுக்கும் அவர் பாடிய பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 175
கே: நடிகர் திலகத்தின் "அவன் தான் மனிதன்" வெள்ளிவிழாக் கொண்டாடுமா? (பத்மா ராதாகிருஷ்ணன், விம்கோ நகர்)
ப: கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அப்படித்தானே?! நானும் அதையே விரும்புகிறேன்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1975)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 176
கே: 'சிக்கல் தம்பி'யின் வாசிப்பு நீண்ட நாட்களுக்கு ஒலிக்கும் போலிருக்கிறதே? (டி.எஸ்.சுப்பிரமணியன், மாயூரம்)
ப: நிச்சயமாக. சிக்கல் தம்பியும் அவர் வாசிப்பும் லக்ஷக்கணக்கானவர்களை திரும்பத் திரும்ப இழுக்கக் கூடியவையாயிற்றே !
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்,
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. உங்களின், மற்றும், திரு முரளி, திரு ராகவேந்தர், திருமதி சாரதா போன்றோரின் பங்களிப்புக்கு முன் என்னுடையது மிகச் சிறியதுதான். உங்கள் அனைவரது ஆய்வும் அலசலும் பெரிய அளவில் நடந்தேறியாகி விட்ட பின்னமும், நானும் முயற்சி செய்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் நமது நடிகர் திலகம் தான். அவரது, கற்பனைக்கடங்காத, அவரது கற்பனை வளமும் திறமையும் தான் அவரது பங்களிப்பை என்னைப் போன்ற இன்னும் எத்தனையோ லட்சக்கணக்கான ரசிகர்களை இன்னமும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி கலந்த அன்புடன்,
பார்த்தசாரதி
டெல்லி டூ மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டு கிட்டத் தட்ட 40 ஆண்டுகள் தன் குரலால் தமிழ் மக்களை வசீகரித்த வாசுதேவன் அவர்களின் மறப்பு பின்னணிப் பாடகர் சரித்திரத்தில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நடிகர் திலகத்திற்கு அவர் பாடியுள்ள பாடல்கள் என்றும் இனிமை, குறிப்பாக பூங்காற்று திரும்புமா பாடல்.
அவர் மறைவுக்கு நம் அஞ்சலி.
அவருடைய முதல் பாடல்.
பாலு விக்கிற பத்துமா
இசை - வி.குமார்
குரல்கள் - வாசுதேவ், ஸ்வர்ணா
பாடல் - மாயவநாதன்
மலேசியா வாசுதேவனின் முதல் படம் மாயவநாதனின் கடைசிப் படமாய் அமைந்தது.
பழனியில் உள்ள 'சந்தானகிருஷ்ணா' திரையரங்கில், கடந்த 28.1.2011 வெள்ளி முதல் 31.1.2011 திங்கள் வரை நான்கு நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, தங்கத்திருமகனின் தன்னிரகற்ற திரைக்காவியமான "திரிசூலம்" திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இச்செய்தியை வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.