ஆமாம் அப்பா செல்வகுமார் அவர்களே.
நண்பர்கள் யாராச்சும் அனுப்பிவிடுகிறார்கள். கண்ணில் பட்டு தொலைக்கின்றது. மதுரையில் புரட்சித் தலவர் நூறாண்டு நிகழ்ச்சிக்கு கூ்ட்டமே இல்லை. காங்கயநல்லூரில் நடந்த அவர்கள் நடிகரின் சிலை திறப்பு விழாவுக்கு கூட்டம். இதனால், யாருக்கு செல்வாக்கு என்று தெரியுதா/ என்பது மாதிரி முகநூலில் ஒரு பதிவு. அதுக்கும் ஆமாம் போட ஒரு மண்டுக் கூட்டம். காங்கய நல்லூர் சின்ன ஊர். கூட்டம் நடந்ததும் சின்ன இடம். 100 பேர் சேர்ந்தாலே பெரிசாய் தெரியும்.
சரி. பரவால்ல. நமக்குத்தான் கூட்டமே வராது. அவர்கள் நடிகருக்கே செல்வாக்கு. கூட்டம் வரும். அவ்வளவு பேர் ஓட்டு போட்டால் அவர் தேர்தல்ல ஜெயிச்சிருக்கணுமே? .உடனே அவர் நல்லவர். ஏமாத்த தெரியாது. நிஜத்தில் நடிக்க தெரியாது என்று பதில் சொல்வார்கள், அப்ப தேர்தல்ல ஜெயிச்ச காமராஜ் எல்லாம் அயோக்கியர்களா? உண்மையில் அந்த நடிகரின் ரசிகர்களே அவரை கவுத்துவிட்டார்கள். அவர ரசிச்சவர்களி்ல் பாதிப்பேர் அவருக்கும் அவர் கட்சிக்கும் ஓட்டு போடவி்லை். இதில் சுயமாய் சிந்திக்கும் மேதாவிகள் என்று கூறிக் கொண்டு பாதிப்பேர் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். அதுவும் புரட்சித் தலைவர் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக. இதுங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டுத்தான் புரட்சித் தலைவர் வெற்றிபெற்றார்.
அதும் பரவால்ல. இப்பவும் அவர்கள் நடிகரின் சிலைய மெட்ராசில் எடுக்கப் போகிறார்கள்? இவர்கள் என்ன செய்கிறார்கள். ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம் உண்டா/ அவ்வளவு செல்வாக்கு உள்ள நடிகரின் ரசிகர்கள் எங்கே? புரட்சித் தலைவர் சிலையை எவனாச்சும் எடுக்க முடியுமா? ரோட்டில குடும்பத்தோட படுத்துற மாட்டோம்? அதெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள். செய்ய ஆளும் இல்லை. வெறுமே திண்ணையில் உக்காந்து பேசுவார்கள்.
ஆனால், நாம்ப லைட் போஸ்டில் ஏறி கொடி தொரணம் கட்டிருக்கோம். பட்டினியோட டீய மட்டும் குடிச்சு ராத்திரி பூரா கண் முழிச்சு போஸ்டர் ஒட்டிருக்கோம். தேர்தல் அன்று பூத்துக்கு முன்னாடி 6 மணிலேருந்து நின்னு டேபிள் போட்டு ஸ்லிப் குடுத்து ஏற்பாடுகள் பண்ணி ஓட்டு போட வர மூஞ்சி தெரியாதவன் காலில் எல்லாம் விழுந்து இரட்ட இலைக்கி ஓட்டு கேட்டுருக்கோம்.
புரட்சித் தலைவரின் ஒவ்வொரு ரசிகனும் அவருக்கே ஓட்டு போடுவான். தன் குடும்பத்தையும் ஓட்டு போட வைப்பான். அனால், அந்த நடிகரின் ரசிகர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். இதில் செல்வாக்கு கூட்டம் ரசிகர் படை என்று பேச்சு வேற. 1989-ல் திருவையாறு தொகுதியிலேயே செல்வாக்கு தெரிஞ்சு போச்சே. இவர்கள் நடிகர் கொஞ்ச நஞ்சம் இல்ல 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக காரன்கிட்ட தோத்தாரே. இன்னும் எதுக்கு இவன்களுக்கு வாய். அதும் சேகர் என்ற முட்டாளுக்கு புரட்சித் தலைவரை குறை சொல்லாமல் பதிவு போடயே தெரியாது.
இமயம் படத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சதா காட்டிக்கும் ஒரு மேதாவி எழுதி இருக்கிறது. படத்தை பத்தி எழுதினா அதப்பத்தி மட்டும் எழுத வேண்டியதுதான். அது ஒரு டப்பா படம். அதுக்கு சம்பந்தமே இல்லாமல் புரட்சித் தலைவர் அரசியல் நிலை மாற்றிவிட்டார் என்று மேல விழுந்து பிராண்டுகிறது. அந்த காலத்தை எழுதினேன் என்றால் 1975-76ல் காமராஜூக்கு இவர்கள் நடிகர் துரோகம் செய்துவிட்டு, அவர் இறந்துபோன உடனே உங்களைக் கேட்காமல் முடிவு எடுக்க மாட்டேன் என்று ரசிகர்களிடம் பொய் சொல்லிவிட்டு அவர்களையும் ஏமாற்றிவிட்டு யாருக்கும் தெரியாமல் டில்லிக்கி போய் கட்சி மாறி, இந்திரா காந்தியிடம் சேர்ந்ததையும் சொல்ல வேண்டும். அதுதான் நேர்மை. இல்லாவிட்டால் யாரயும் எழுதக் கூடாது.
இது நமக்கு தேவை இல்லாதது. ஆனால், இமயம் பட விமரிசனத்தில் தேவயில்லாமல் புரட்சித் தலைவர பற்றி சொல்லும்போது நாங்களும் சொல்ல வேண்டிஇருக்கு.ஸ்கைலாப் ராக்கெட் விழும் என்று மக்களுக்கு பயம் இருந்துதாம். கூட்டம் கூட்டமா நின்னு பேசினார்களாம். அதனால இமயம் படம் ஒடவில்லையாம். படம் வரதுக்கு பத்து நாள் முன்னாடியே ஸ்கைலாப் ராக்கெட் விழுந்துவிட்டது. நாங்களும் அப்போ அதுபற்றியே பேசிக் கொண்டிருந்தோம். அதுக்கு 10 நாளுக்கு அப்பறம்தான் படம் ரீலீஸ். இமயம் படம் 21ம் தேதி ரிலீஸ். அதுக்கு ஒரு பத்துநாள் முன்னாலே ராக்கெட் விழுந்திருக்கும். படம் வந்தபோது எல்லாம் முடிஞ்சி போச்சி. மக்கள் அதைப்பத்தி மறந்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விடட்ார்கள். இது உண்மை. யாராவுது விவரம் தெரிஞ்சவர்கள் எப்படியாவது தேதியை சரி பாருங்கள். உண்மை தெரியும். ஆனால், மக்கள் ராக்கெட் பத்தி கவலையா இருந்தாங்களாம். படம் வெற்றி பெறாததற்கு காரணங்கள் என்று நான் நினைச்சவற்றை எழுதி இருந்தேன் என்று முன்னுரை வேற.
இவன்கள் மட்டும்தான் இப்ப உயிரோட இருக்கான்கள். நாம்ப எல்லாரும் எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாரும் செத்துபோயிட்டோம். நடந்தது ஏதும் யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் முட்டாள்கள்.
போறாமை புடிச்சவங்களா. பொய்யிக்கு ஒரு அளவே இல்லியாடா.
நன்றி அப்பா செல்வகுமார் அவர்களே.

