-
30th July 2017, 09:25 AM
#11
Junior Member
Veteran Hubber
முகநூல் மற்றும் சில ஊடகங்களில், வி.சி. கணேசன் ரசிகர்கள் சிலர் (பாராட்டுக்குரிய பலர் தங்களின் அபிமான நடிகரை பற்றி மட்டும் செய்திகள் பதிவிட்டு வருகின்றனர்) வேண்டுமென்றே, நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி தவறான செய்திகளையும், மகத்தான வெற்றிக் காவியம் "அடிமைப்பெண்" பற்றி சில தகவல்களையும் பதிவிட்டு, அற்ப சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கான பதில் தான் இது : "அடிமைப்பெண்" காவியம் திரையிடப்பட்ட அந்த வார ஞாயிற்று கிழமை அன்று அதாவது (16.7.17) அன்று சென்னையில் சுமார் 875 இருக்கைகள் கொண்ட பெரிய அரங்கான தேவி மற்றும், தி. நகர். ஏ.ஜி.எஸ். மற்றும், வில்லிவாக்கம் ஏ.ஜி. எஸ். ஆகிய அரங்குகள் நிறைந்தன. நாகர்கோவில் நகரில் "ராஜபார்ட் ரங்கதுரை" திரையிடப்பட்ட அரங்கில் எண்ணி 13 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அரங்க மேலாளரிடம் இது பற்றி குறிப்பிட்டு கேட்ட பொழுது, தங்களுக்கு முறையாக வாடகை பணம் வரும் பொழுது, கூட்டம் இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன ? என்று கூறியதாகவும் நம்பகத் தகவல். சராசரியாக 5௦ நாட்களில் ராஜபார்ட் ரங்கதுரையை கண்டவர்கள். 3 நாட்களில் அடிமைப்பெண் காவியத்தை ரசித்தவர்களில் 25 சதவிகித்தனர் இருப்பார்களா என்பது சந்தேகமே ! கடந்த ஆண்டுகளில், புதிய பரிமாணத்தில் வெளியிடப்பட்ட, வெள்ளி விழா படம் என்று கூறப்பட்ட "வசந்த மாளிகை" எந்த லட்சணத்தில் ஓடியது என்பது தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு தெரியும். அது மட்டுமா ! மற்றொரு வெள்ளி விழா படம் என்று மார் தட்டி கொண்ட வி. சி. கணேசனின் " பாச மலரின் பரிதாப கதை ஊரறிந்த உண்மை. சொர்க்கம் படம் நிலையம் இதுவே ! உட்லண்ட்ஸ் அரங்கில் "திருவிளையாடல்' படத்தை இரண்டே நாட்களில் தூக்கி விட, ஞாயிற்று கிழமை மட்டும் மாலைக் காட்சியாவது திரையிடவேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்திடம், கெஞ்சி கூத்தாடியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
எனவே அந்த குறிப்பிட்ட சில வி.சி. கணேசன் ரசிகர்கள் வீணான விவாதத்திலும், சர்ச்சயை ஏற்படுத்தும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறாம்.
Last edited by makkal thilagam mgr; 30th July 2017 at 09:28 AM.
-
30th July 2017 09:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks