prem chopra - thanks dailythanthi -03/08/14
http://img.dailythanthi.com/Images/A...chy_SECVPF.gifhttp://www.mahanews24.com/wp-content...rem-Chopra.jpghttps://encrypted-tbn3.gstatic.com/i...k5tRi2wNN2a56Qhttp://i1.ytimg.com/vi/vxYdwzuQ3-g/hqdefault.jpg
இந்திய பெண்கள் இப்போதும் பிரேம் சோப்ராவை திரையில் பார்த்துவிட்டால், திட்டத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கொடூரத்தின் உச் சத்தைதொட்ட வில்லன் நடிகர், அவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகைப் பெற்றிருந்தது, அவரை நடிப்பில் உயரத்துக்கு கொண்டு சென்றது. தான் வில்லனாக நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்துக்கே பிரேம்சோப்ரா என்ற பெயரை சூட்டிக் கொண்டவர் இவர்.
அவர் பெண்களிடம் வாங்கிய திட்டு பற்றி அவரிடம் பேசுவோமா..!
பெண்களிடம் திட்டு வாங்கிய நீங்கள் சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கிறீர்களாமே! உங்கள் சுயசரிதை எப்படி இருக்கும்?
இதுவரை நான் எந்த நடிகரின் சுயசரிதத்தையும் படித்ததில்லை. என்னுடைய சுயசரிதத்தில் என் வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்கள் எல்லாம் இடம்பெறும். நான் சந்தித்த மனிதர்களும் அதில் வருவார்கள்.
அப்படியானால் முழுக்க முழுக்க எல்லா உண்மைகளையும் எழுதிவிடுவீர்களா?
ஆமாம். அதை என் மகள் ரத்திகா நந்தா எழுதுகிறாள். என்னைப் பற்றிய நிறைய விஷயங்கள் அவளுக்குத் தெரியும். தெரியாதவற்றை கேட்டு தெரிந்துகொள்கிறாள். எனது பழைய நண்பர்களிடமிருந்தும் நிறைய தகவல்களை பெற்றிருக்கிறாள். அதனால் நான் எதிர்
பார்ப்பதை விட அற்புதமாக வெளிவரும் என நினைக்கிறேன்.
சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்தான் சுயசரிதம் எழுதுவார்கள் என்று சொல்வார்களே..?
இல்லை. நான் இன்னமும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களை இளைய தலைமுறையோடு பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். நானும் அப்படித்தான். புத்தகத்தில் இடம்பெறும் பல இனிமையான விஷயங்கள் மீண்டும் மீண்டும் பேசி மகிழக் கூடியது.
ஆனால் அதில் பல உண்மைகளை மறைத்துவிடுவீர்களே?
சிலவற்றை மறைக்கத்தான் வேண்டும். புத்தகத்தில் எதைத்தான் எழுதவேண்டும் என்ற வரைமுறையிருக்கிறது. தேவையில்லாத விஷயங்களை ஏன் எழுதி வம்பில் மாட்டிக் கொள்ளவேண்டும். இளம் பருவத்தில் யார் யாருடனோ ஆட்டம் போட்டிருப்பார்கள். எத்தனையோ பெண்களோடு சுற்றியிருப்பார்கள். இப்போது வீடு, வாசல், குடும்பம், பேரன், பேத்தி என்று சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் தேவையில்லாத விஷயங்களை எழுதி நம்மை நாமே அலங்கோலப்படுத்திக்கொள்ள வேண்டுமா! நல்ல விஷயங்களை மட்டும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம். தேவையில்லாதவற்றை மறந்துவிடுவோம்.
சிலர் உள்ளதை உள்ளபடியே எழுதுகிறார்களே?
அது அவர்கள் விருப்பம். மற்றவர்கள் விஷயத்தில் நான் தலையிட முடியாது. குஷ்வந்த் சிங், தேவ் ஆனந்த் ஆகியோர் நடந்ததை எல்லாம் எழுதினார்கள். சிலர் தேவையானதை மட்டும் எழுதியிருக்காங்க. நான் எல்லா உண்மைகளையும் எழுதினால், மக்களுக்கு அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது! நான் என்ன கல்லூரி மாணவர்களுக்கு சரித்திர பாடமா எழுதப்போகிறேன்.
தர்மேந்திராவைப் பற்றி சொல்லுங்கள்?
அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல கவிஞர். எல்லோருக்கும் இலக்கிய ரசனையோடு ஒரு புனைப்பெயர் சூட்டிவிடுவார். நான், தர்மேந்திரா, ஜீதேந்திரா மூவரும் கூட்டாளிகள். அவர் ஹேமமாலினியை காதலித்தார். ஆனால் அவருடைய தாயார் அவர்கள் காதலை ஏற்கவில்லை. என்னிடம் வந்து மன வருத்தத்துடன் புலம்பினார். பாவம் அவருக்கு குழந்தை மனது. அவருக்காக நான் ஹேமாவின் அம்மாவிடம் பேசி அவர்களது திருமணத்தை நடத்திவைத்தேன்.
நீங்கள் ஒருவர்தான் கபூர் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரோடும் இணைந்து நடித்திருக்கிறீர்கள். அது பெரிய சாதனைதானே?
ஆமாம். அது பெரிய சாதனைதான். பிருத்விராஜ் கபூரிலிருந்து ரண்வீர்கபூர் வரை கபூர் தலைமுறையோடு இணைந்து நடித்திருக்கிறேன்.
உங்களது 50 வருட சினிமா வாழ்க்கை அலுப்பாக இருந்ததா? ஆனந்தமாக இருந்ததா?
சினிமாதான் வாழ்க்கை என்று ஆனபின்பு அலுத்து என்ன பயன்! ஆனால் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்தது பெரிய விஷயம். நடிகர்களுடைய வாழ்க்கை மிகவும் ஜாலியானது என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் இறங்கி, எங்கள் சுய உருவத்தை விட்டு வேறு ஒருவராக மாறவேண்டும். ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறுபிறவி எடுப்பது போன்றது. சுற்றியிருப்பவர்களின் விமர்சனம், டைரக்டரின் கோபம், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் தாக்குப்பிடித்தாகவேண்டும். மொத்தத்தில் டென்ஷனான வேலை இந்த சினிமா. இதனால் பல நட்சத்திரங்கள் குடிபோதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். நல்லவேளை நான் அப்படியில்லை.
சுயசரிதம் பற்றி உங்கள் கருத்து என்ன?
சுயசரிதம் பற்றி சார்லி சாப்ளின் ‘‘நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்ளும் பொய்’’ என்றார். பெரிய நட்சத்திரங்களைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல்தான் ஒருவரை சுயசரிதம் எழுத தூண்டுகிறது. மேலும் நம்மோடு வாழ்ந்தவர்கள் படித்து மகிழவும் உதவுகிறது. அந்த வகையில் திலீப்குமார், சசிகபூர் ஆகியோர் என்னுடைய பழைய நண்பர்கள். நிச்சயம் என் சுய சரித்திரத்தைப் படித்து அவர்கள் பரவசப்படுவார்கள்
http://www.youtube.com/watch?v=vxYdwzuQ3-g