-
7th August 2014, 09:42 AM
#3081
மாலைமலர் 06/08/14 வாலி


கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
'தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?' என்று கேட்டார், கண்ணதாசன்.
அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.
'நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்' என்று வாலி கூற, 'நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்' என்றார், கண்ணதாசன்.
வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.
'காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.
'நாம் அடிக்கடி சந்திக்கலாம்...' என்று கண்ணதாசன் கூறினார்.
ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.
இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான 'தீதார்' படத்தின் கதையை 'நீங்காத நினைவு' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.
இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.
வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா 'மா.ரா.'வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், 'நீங்காத நினைவு' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.
(ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)
இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.
முக்தா பிலிம்சார் அப்போது 'இதயத்தில் நீ' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் 'நீங்காத நினைவு' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா 'மா.ரா.'வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:
'என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!
1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.
நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.
'நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.
'ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.
உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.
'பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?
பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?'
- என்பதுதான் அந்தப் பல்லவி.
'பூவைக்கு என்பதெல்லாம், டினுக்கு சரியாக வராதே...' என்றார் எம்.எஸ்.வி.
உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.
நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.
'சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.
விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.
சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.
பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:
'இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?' என்பதுதான் அந்த கேள்வி.
நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.
சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.
'சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...' என்றார் விசு.
சொன்னார் சீனிவாசன்.
உடனே நான் எழுதினேன்:
`ஒடிவது போல் இடையிருக்கும்
இருக்கட்டுமே! - அது
ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே!
சுடுவது போல் கண் சிவக்கும்
சிவக்கட்டுமே! - அது
சுட்டுவிட்டால் கவி பிறக்கும்
பிறக்கட்டுமே!
விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.
பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.
விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.
`என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!
'உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது' என்றார் முக்தா.
எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.
முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை'
இவ்வாறு வாலி கூறினார்.

Last edited by gkrishna; 7th August 2014 at 09:49 AM.
gkrishna
-
7th August 2014 09:42 AM
# ADS
Circuit advertisement
-
7th August 2014, 09:49 AM
#3082
Senior Member
Diamond Hubber
ராகவ் ஜி..
மென்மையான இனிமை என்றால் என்னவென்று விளக்கம் சொல்ல வேண்டாம். சின்ன சின்ன இதழ் விரிக்கும் பாடலைக் கேட்டாலே போதும்.
-
7th August 2014, 09:55 AM
#3083
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
முதல் முறையாக எல்லோரும் அன்பாக விஷயங்களை பரிமாறிக் கொண்டு ஜாலியாக கலாய்க்கும் திரியை இங்கேதான் பார்க்கிறேன்.
நாளைக்கு ஆடி வெள்ளி. அத்தனை நண்பர்களுக்கும் அவர்களின் அன்பான மனங்களுக்கும் திருஷ்டி சுத்தி போடணும்.
மிக அருமையாக சொன்னீர்கள் மது சார். மதுர கானத்திற்கு மட்டுமல்ல. மனமுவந்த நட்புக்கும் வலுவான அடித்தளம் இட்டுள்ளது நம் திரி. இதைவிட சந்தோஷம் வேறன்ன வேண்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th August 2014, 10:00 AM
#3084
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
மிக அருமையாக சொன்னீர்கள் மது சார். மதுர கானத்திற்கு மட்டுமல்ல. மனமுவந்த நட்புக்கும் வலுவான அடித்தளம் இட்டுள்ளது நம் திரி. இதைவிட சந்தோஷம் வேறன்ன வேண்டும்.
சில திரிகளில் சண்டை பூசல் .. அங்கேயெல்லாம் செல்வதே இல்லை. இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் திரி.. இது மேலும் மேலும் வளரட்டும் .. மது அண்ணா மாதிரி பண்பானவர்கள் இத்திரியில் இணையட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2014, 10:06 AM
#3085
prem chopra - thanks dailythanthi -03/08/14




இந்திய பெண்கள் இப்போதும் பிரேம் சோப்ராவை திரையில் பார்த்துவிட்டால், திட்டத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கொடூரத்தின் உச் சத்தைதொட்ட வில்லன் நடிகர், அவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகைப் பெற்றிருந்தது, அவரை நடிப்பில் உயரத்துக்கு கொண்டு சென்றது. தான் வில்லனாக நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்துக்கே பிரேம்சோப்ரா என்ற பெயரை சூட்டிக் கொண்டவர் இவர்.
அவர் பெண்களிடம் வாங்கிய திட்டு பற்றி அவரிடம் பேசுவோமா..!
பெண்களிடம் திட்டு வாங்கிய நீங்கள் சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கிறீர்களாமே! உங்கள் சுயசரிதை எப்படி இருக்கும்?
இதுவரை நான் எந்த நடிகரின் சுயசரிதத்தையும் படித்ததில்லை. என்னுடைய சுயசரிதத்தில் என் வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்கள் எல்லாம் இடம்பெறும். நான் சந்தித்த மனிதர்களும் அதில் வருவார்கள்.
அப்படியானால் முழுக்க முழுக்க எல்லா உண்மைகளையும் எழுதிவிடுவீர்களா?
ஆமாம். அதை என் மகள் ரத்திகா நந்தா எழுதுகிறாள். என்னைப் பற்றிய நிறைய விஷயங்கள் அவளுக்குத் தெரியும். தெரியாதவற்றை கேட்டு தெரிந்துகொள்கிறாள். எனது பழைய நண்பர்களிடமிருந்தும் நிறைய தகவல்களை பெற்றிருக்கிறாள். அதனால் நான் எதிர்
பார்ப்பதை விட அற்புதமாக வெளிவரும் என நினைக்கிறேன்.
சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்தான் சுயசரிதம் எழுதுவார்கள் என்று சொல்வார்களே..?
இல்லை. நான் இன்னமும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களை இளைய தலைமுறையோடு பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். நானும் அப்படித்தான். புத்தகத்தில் இடம்பெறும் பல இனிமையான விஷயங்கள் மீண்டும் மீண்டும் பேசி மகிழக் கூடியது.
ஆனால் அதில் பல உண்மைகளை மறைத்துவிடுவீர்களே?
சிலவற்றை மறைக்கத்தான் வேண்டும். புத்தகத்தில் எதைத்தான் எழுதவேண்டும் என்ற வரைமுறையிருக்கிறது. தேவையில்லாத விஷயங்களை ஏன் எழுதி வம்பில் மாட்டிக் கொள்ளவேண்டும். இளம் பருவத்தில் யார் யாருடனோ ஆட்டம் போட்டிருப்பார்கள். எத்தனையோ பெண்களோடு சுற்றியிருப்பார்கள். இப்போது வீடு, வாசல், குடும்பம், பேரன், பேத்தி என்று சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் தேவையில்லாத விஷயங்களை எழுதி நம்மை நாமே அலங்கோலப்படுத்திக்கொள்ள வேண்டுமா! நல்ல விஷயங்களை மட்டும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம். தேவையில்லாதவற்றை மறந்துவிடுவோம்.
சிலர் உள்ளதை உள்ளபடியே எழுதுகிறார்களே?
அது அவர்கள் விருப்பம். மற்றவர்கள் விஷயத்தில் நான் தலையிட முடியாது. குஷ்வந்த் சிங், தேவ் ஆனந்த் ஆகியோர் நடந்ததை எல்லாம் எழுதினார்கள். சிலர் தேவையானதை மட்டும் எழுதியிருக்காங்க. நான் எல்லா உண்மைகளையும் எழுதினால், மக்களுக்கு அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது! நான் என்ன கல்லூரி மாணவர்களுக்கு சரித்திர பாடமா எழுதப்போகிறேன்.
தர்மேந்திராவைப் பற்றி சொல்லுங்கள்?
அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல கவிஞர். எல்லோருக்கும் இலக்கிய ரசனையோடு ஒரு புனைப்பெயர் சூட்டிவிடுவார். நான், தர்மேந்திரா, ஜீதேந்திரா மூவரும் கூட்டாளிகள். அவர் ஹேமமாலினியை காதலித்தார். ஆனால் அவருடைய தாயார் அவர்கள் காதலை ஏற்கவில்லை. என்னிடம் வந்து மன வருத்தத்துடன் புலம்பினார். பாவம் அவருக்கு குழந்தை மனது. அவருக்காக நான் ஹேமாவின் அம்மாவிடம் பேசி அவர்களது திருமணத்தை நடத்திவைத்தேன்.
நீங்கள் ஒருவர்தான் கபூர் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரோடும் இணைந்து நடித்திருக்கிறீர்கள். அது பெரிய சாதனைதானே?
ஆமாம். அது பெரிய சாதனைதான். பிருத்விராஜ் கபூரிலிருந்து ரண்வீர்கபூர் வரை கபூர் தலைமுறையோடு இணைந்து நடித்திருக்கிறேன்.
உங்களது 50 வருட சினிமா வாழ்க்கை அலுப்பாக இருந்ததா? ஆனந்தமாக இருந்ததா?
சினிமாதான் வாழ்க்கை என்று ஆனபின்பு அலுத்து என்ன பயன்! ஆனால் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்தது பெரிய விஷயம். நடிகர்களுடைய வாழ்க்கை மிகவும் ஜாலியானது என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் இறங்கி, எங்கள் சுய உருவத்தை விட்டு வேறு ஒருவராக மாறவேண்டும். ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறுபிறவி எடுப்பது போன்றது. சுற்றியிருப்பவர்களின் விமர்சனம், டைரக்டரின் கோபம், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் தாக்குப்பிடித்தாகவேண்டும். மொத்தத்தில் டென்ஷனான வேலை இந்த சினிமா. இதனால் பல நட்சத்திரங்கள் குடிபோதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். நல்லவேளை நான் அப்படியில்லை.
சுயசரிதம் பற்றி உங்கள் கருத்து என்ன?
சுயசரிதம் பற்றி சார்லி சாப்ளின் நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்ளும் பொய் என்றார். பெரிய நட்சத்திரங்களைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல்தான் ஒருவரை சுயசரிதம் எழுத தூண்டுகிறது. மேலும் நம்மோடு வாழ்ந்தவர்கள் படித்து மகிழவும் உதவுகிறது. அந்த வகையில் திலீப்குமார், சசிகபூர் ஆகியோர் என்னுடைய பழைய நண்பர்கள். நிச்சயம் என் சுய சரித்திரத்தைப் படித்து அவர்கள் பரவசப்படுவார்கள்
-
7th August 2014, 10:18 AM
#3086
Senior Member
Seasoned Hubber
prem chopra .. smart villain .. more than ranjeet & others i've always enjoyed prem chopra "chopra prem chopra naam hai mera"
-
7th August 2014, 10:25 AM
#3087

Originally Posted by
rajeshkrv
சில திரிகளில் சண்டை பூசல் .. அங்கேயெல்லாம் செல்வதே இல்லை. இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் திரி.. இது மேலும் மேலும் வளரட்டும் .. மது அண்ணா மாதிரி பண்பானவர்கள் இத்திரியில் இணையட்டும்
உங்கள் பதில் மிக அருமை ராஜேஷ் சார் .
நீங்கள் மற்றும் மது சார் சொன்னது போல் இத்திரி மனதிற்கு இதம் தரும் தகவல்கள்
இத்திரி ஆரம்பித்த வாசு சார் அவர்களுக்கும் சேர்த்தே தான்
-
7th August 2014, 10:29 AM
#3088
Senior Member
Devoted Hubber
வாசு சார் என்னுடைய pm பார்க்கவும்
பதில் எதிர்பார்க்கின்றேன்
-
7th August 2014, 10:30 AM
#3089
Senior Member
Diamond Hubber
கோ,
அருமை! நான் என்ன மனதில் நினைத்தேனோ அதை நீங்கள் அளித்து விட்டீர்கள்.
இசையமைப்பாளர்களின் குரல்கள் இனிமையாக இல்லாவிட்டாலும் அவர்கள் பாடிய சில பாடல்கள் நம்மை காந்தமாய் இழுப்பது உண்மை. இதில் ஊரறிந்த ஹிட் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ரசிக்கும் பாடல்கள் உண்டு.
எனக்கு
மெல்லிசை மன்னர் பாடிய பாடல்களில்
ரொம்ப ரொம்ப நான் அடிமை ஆனது
'நேரான நெடுஞ்சாலை'
காவியத் தலைவியில். அழாமல் இருக்க முடியாது என்னால் இப்பாடலைக் கேட்டால்.
அடுத்து
'மிஸ்டர் சம்பத்'தில் வரும்
'ஒரே கேள்வி உனைக் கேட்டேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'
நிரம்பப் பிடிக்கும்.
அப்புறம்
'யாருக்கும் வாழ்க்கை உண்டு அதற்கொரு நேரம் உண்டு'
இளையராஜா குரல் எனக்கு அறவே பிடிக்காது. அலர்ஜி. ஆனால் 'புதுப்பாட்டு படத்தில் வரும்
'நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்' பிடிக்கும்.
கணேஷை எடுத்துக் கொண்டால்
'கை நிறையக் காசு பை நிறைய நோட்டு'
கலக்கல்.
எஸ்.டி. பரமன் விஷயத்தில் நான் உங்க கட்சி. அதுக்கு முன்னாடி தனி க்கட்சியும் கூட.
'வஹே கோன் ஹே தேரா முஸாபிர்'
என்னுடைய மிகப் பெரிய இஷ்டம்.
சி.எஸ்.ஜெயராமனை எடுத்துக் கொண்டால் பாப்புலர் தவிர ஒரு சிலது பிடிக்கும்.
'விதியா சதியா' காத்தவராயனில்.
Last edited by vasudevan31355; 7th August 2014 at 10:50 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
7th August 2014, 10:32 AM
#3090

Originally Posted by
rajeshkrv
prem chopra .. smart villain .. more than ranjeet & others i've always enjoyed prem chopra "chopra prem chopra naam hai mera"

உண்மை ராஜேஷ் சார்
பிரேம் சோப்ராவின் டயலாக் டெலிவரி சற்று மாறுபட்ட ஒன்று
சீதா ஔர் கீதா (தமிழ் வாணி ராணி ஸ்ரீகாந்த் ) இவர் தானே
Bookmarks