மிகமிக நன்றி, அடிகளாரே..!
Printable View
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
"ராஜா" மெகா ஆல்பம் அடியேன் சொன்னதுபோல் செமரகளைதான்..! நிழற்படங்களை வாரி வழங்குவதே பெருஞ்சேவை..! அத்தோடு நில்லாமல் ஃப்ரேம் போட்டு வேறு தருகிறீர்கள்..! தங்களின் மாபெரும் தொண்டுக்கு ஈடு இணை இல்லை..!
நாளை [ஜூன் 24] கவியரசரின் பிறந்த நாள். "ஞான ஒளி"யின் கதையை தாங்கள் கவிதையாக பதித்தபோது அக்கவியரசரே தங்கள் நாவில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார். 'ஆண்டனி' ஆல்பம் ஆல்டைம் ஃபேவரைட்..!
அன்புடன்,
பம்மலார்.
நன்றி, ராகவேந்திரன் சார்..!
Thank You, Gnanaguruswamy Sir..!
டியர் mr_karthik,
மிகக் குறுகிய காலத்தில் தங்களின் இணையதள இணைப்பு சீரானது மகிழ்ச்சியளிக்கின்றது..!
தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை பெற்றது என் பாக்கியம்..!
ஒரு மஹாபண்டிதரிடமிருந்து பாராட்டு பெறும்போது எத்துணை மகிழ்ச்சி ஏற்படுமோ, அதனினும் மேலான மகிழ்ச்சி தாங்கள் பாராட்டும்போது ஏற்படுகின்றது..!
தங்களின் பாராட்டு, அடுத்தடுத்த பதிவுகளை அடியேன் சிறந்த முறையில் அளிப்பதற்கு, ஒரு உற்சாக டானிக்காகவும் திகழ்கின்றது..!
மனமாரப் பாராட்டுதல் எனும் உயர்ந்த பண்பை குணநலனாகக் கொண்டுள்ள புண்ணிய புருஷரே, நீவீர் நீடூழி வாழ்க..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தமிழகத் தலைநகரில், கலைத்தாயின் தலைமகனின் "கர்ணன்" [டிஜிட்டல்] காவியத்தினுடைய 100வது நாள் கொண்டாட்டங்கள் திருவிழாக் கோலம் பூண்டு விட்டதை தாங்கள் பதித்துள்ள நிழற்படங்கள் பறைசாற்றுகின்றன. இடுகைகளுக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
திரு. பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்களுக்கு,
உங்களின் இருவரின் பொற்கால ஆட்சி தொடரட்டும். தலைசிறந்த மன்னர்கள் தரணியை ஆட்சி புரியும் போது மக்களுக்கு குறையேது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியங்களாம் ராஜாவையும், ஞான ஒளியையும் பதிவிட்டு எல்லையில்லா ஆனந்தத்தை அளித்த தங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் இப்பெறும் சேவைகளுக்கு வெறும் நன்றி ஈடாகிவிடாதுதான். எனினும் அதற்கு ஈடாக உலகில் வார்த்தையில்லை என்கிற காரணத்தினால் அதையே தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
ராஜா
ஸ்டைல் என்றால் என்னவென்று உலக நடிகர்களுக்கு கற்றுத் தந்த படம் அல்ல, அல்ல, பாடம்.
ஞான ஒளி
கருவுற்று மனைவி பிரசவத்திற்காக மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது, நடிகர் திலகம் வீட்டைப் பூட்டிக்கொண்டு புற்ப்படும்போது ஒரு பெரியவர் வந்து அவசரமா ஒரு பெட்டி செய்யனும்பா. சூசை ஆயா இழுத்துக்குனு இருக்குதுபா. முன்னூறுபா தரேன் என்று சொல்லுகிற போது. முன்னூறுபாயா! என் மனைவிக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு என்னா பண்றதுன்னு இருந்தேன். நல்ல வேளை! ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணி தரேன். இந்த ஊர்லேயே யாரும் செய்யாத அளவுக்கு first classஆ ஒரு பொட்டி செஞ்சு தரேன் என்று நடக்கப் போவதை அறியாமல் நடிகர் திலகம் சொல்லுகிறபோதே நெஞ்சு அடைக்க ஆரம்பித்துவிடும். (இருங்க கொஞ்சம் அழுதுக்குறேன்) அப்போ ஆரம்பித்த அந்த நெஞ்சடைப்பு, பொறக்குறத காப்பாத்துரப்போ இருக்குறத கர்த்தர் எடுத்துக்கிட்டாருடா என்று பாதரியார் சொல்லூகிறபோது கண்களில் கண்ணீர் குலமாக மாறி ஓடியிருக்கும். அதோடு நில்லாமல், அடுத்த படம் பார்க்கிறவரை இந்த காட்சியையும், இன்னபிற காட்சிகளையும் நினைவு படுத்தி, நினைவு படுத்தி எத்தனையோ முறை அழுது இருக்கிறேன். இன்றும் அதே நிலைதான். ஒவ்வொறு ஸ்டில்களையும் பார்க்கிறபோது அந்த ஸ்டில்லுக்கு பின்னால் இருக்கும் காட்சி நினைவுக்கு வராமல் இல்லை.
நட்புடன்
டியர் சிவாஜிதாசன் சார்,
ராஜமரியாதையுடன் கூடிய தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!
தங்களின் பதிவு (குறிப்பாக "ஞான ஒளி" பகுதி), என்னை உணர்ச்சிப்பிழம்பாக்கிவிட்டது..!
உணர்ச்சிப்பெருக்கில்,
பம்மலார்.
"கர்ணன்" [டிஜிட்டல்] 100வது வெற்றித்திருநாள்
சர்ப்ரைஸ் சிறப்புப்பதிவு
பொக்கிஷாதி பொக்கிஷம்
THE MAKING OF KARNAN
"கர்ணன்" செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட வரலாறு
"கர்ணன்" துணைத் தயாரிப்பாளர் திரு.'சித்ரா' கிருஷ்ணசாமி அவர்களின் வாக்குமூலம்
மகாமெகா கட்டுரை : மொத்தம் பத்து பக்கங்கள்
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1964
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5960-1.jpg
இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5961-1.jpg
மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5962-1.jpg
நான்காவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5963-1.jpg
ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5964-1.jpg
ஆறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5968-1.jpg
ஏழாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5969-1.jpg
எட்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5970-1.jpg
ஒன்பதாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5971-1.jpg
பத்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5972-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
fantastic presentation dear Pammalar Sir. The seed sown is not wasted, it has now become an ever expanding Banyan Tree with NT as the main root. We normally initiate all our duties with a prayer to Lord Ganesan, Same way, The Tamil Cinema has now seen its dawn after more than 80 years of its history, the one and the only Karnan epotomized by the doyen of Indian Cinema, NT. If properly presented with a sequence of carefully selected and edited versions of NTmovies, no doubt, NT will always be with generations to come as the true legend of all times! We NT fans are grateful to you, sir.