-
23rd June 2012, 07:39 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
இரண்டு நாட்களாக இண்ட்டெர்நெட் வேலை செய்யவில்லை. அய்யய்யோ... நம்ம பம்மலார் பாசமலர் ஆவணங்களை அள்ளித்தந்திருப்பாரே, அதைத்தொடர்ந்து என்னுடைய பணிவான வேண்டுகோளையேற்று (பம்மலார் அவர்கள் சொன்னதுபோல கட்டளை அல்ல) 'ராஜா'வின் வெற்றி பவனியை உலவ விட்டிருப்பாரே என்று ஆதங்கப்பட்டு இன்றைக்குத்தான் நெட் இணைப்பு சரியானதும் முதல்வேலையாக நான் செய்தது நமது நடிகர்திலகத்தின் திரிக்கு ஓடோடி வந்ததுதான்.
வந்து பார்த்தால்..... அடேயப்பா ஆவண மழையாகப்பொழிந்து தள்ளி விட்டிருக்கிறீர்கள்.
'பாசமலரின்' வாசம் கமழும் ஆவணப்பொன்னேடுகள் என்ன....
'ராஜா' வின் வெற்றி நடைக்கான சாதனைச்சரித்திரம் என்ன.....
தமிழகத்தை, குறிப்பாக சென்னையை கலங்கடித்த 'ஞான ஒளி'யின் காணக்கிடைக்காத வரலாற்று ஏடுகள் என்ன......
வாய்பிளந்து மலைத்துப்போய் நிற்பதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை. எனது வேண்டுகோளையேற்று 'ப்ரம்மாஸ்த்திரத்தை' என் கையில் தந்து, அதை மறந்து போகாமலும் இருக்க ஆசீர்வதித்த நவீன பரசுராமரே தங்களூக்கு எண்ணிலடங்கா நன்றிகள். இந்த ப்ரம்மாஸ்திரத்தில் என் நண்பரின் தவறான பிரச்சாரம் அழிந்து மண்ணாகப்போவது திண்ணம்.
சஸ்பென்ஸ் பதிவு என்றதும், என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கையில் எதிர்பாராத விதமாக 'ஞான ஒளி'யை வீசச்செய்து, திரியை ஒளிவெள்ளமாக்கி விட்டீர்கள். ஞான ஒளியின் சென்னை விநியோகஸ்தர்களான ஜெயராமன் பிக்சர்ஸார், ஏதோ கடனே என்று விளம்பரம் செய்யாமல், டிஸைன் டிஸைனாக யோசித்து, யோசித்து, ரசித்து ரசித்து புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக 'ஞான ஒளி' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஓடிக்கொண்டிருந்த படங்களின் பட்டியலை விளம்பரத்திலேயே தந்தது புதுமையான உத்தி மட்டுமல்ல, காலத்திற்கும் அழியாத ஆவணமும் ஆகும். இதுபோல எந்த நடிகரின் படங்களாவது சென்னையில் ஒரே நேரத்தில் 80 சதவீத திரையரங்குகளை ஆக்ரமித்தது உண்டா என்று சவால் விடுகிறோம். பதில் 'இல்லை'யென்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. 1972 - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் கோகினூர் வைரம் அல்லவா.
தாங்கள் தந்த பாசமலர், ராஜா, ஞான ஒளி வெற்றி ஆவணங்களில் சென்னை சாந்தி தியேட்டர் இல்லையென்பது கூடுதல் ஆனந்தம், திருப்தி, மகிழ்ச்சி.
ஒவ்வொரு நண்பரின் பதிவுகளையும் தனித்தனியே நினைவுகூர்ந்து பாராட்டுவதும், நன்றி சொல்வதும் தங்களின் தனிச்சிறப்பு. உங்கள் மந்திர ஜாடிக்குள் இன்னும் என்னென்ன அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.
நீங்கள் வாழிய பல்லாண்டு.
-
23rd June 2012 07:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks