Originally Posted by
venkkiram
ஆமாங்க.. உங்களுக்கென சில காரணிகளை வைத்துக்கொண்டு நீங்க கருத்து சொல்றிங்க.. அதுபோல எனக்கென சில காரணிகளை ( கதை சொல்லிப் பாடல்கள் மற்றும் தெய்யம் கலைக்கான தாளம்-இசை ) வைத்து நான் சொல்றேன். கதை சொல்லியின் உச்சம் என நான் நினைக்கும் கருமாத்தூர் காட்டுக்குள்ளே பாடலை நான் இழுத்தேன். சரி..அதையெல்லாம் விடுங்கள். என் வாழ்நாள் அனுபவத்தில் முதல்முறை கேட்கும்போதே மனதில் பதியாத மெலடிகள் கொண்ட ஒரே கமல் ஆல்பம் உத்தமவில்லன் மட்டும்தான். தேவா, வித்யசாகர், ரஹ்மான், தேவி ஸ்ரீ பிரசாத், பரத்வாஜ், சங்கர் மகாதேவன் என ராஜா இல்லாத மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களில் கூட மெலடி இருந்தது. முதல்முறை கேட்கும்போதே ஒன்று இரண்டாவது மனதில் ஒட்டியது. உத்தமவில்லன் பாடல்கள் அந்தவகையில் பூஜ்யம்தான். போன பதிவும் சொன்னதுபோல, படம் பார்க்கும்வரை இன்னொரு முறை கேட்கப் போவதில்லை. படம் பார்த்துவிட்டு காட்சிகளோடு பொருந்தி வந்திருந்தால் இரண்டாம் முறை கேட்டு லயிப்பேன். அவ்வளவுதான்.