http://i58.tinypic.com/2qnb775.jpg
விழாவில் லட்சுமண் சுருதி ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக மக்கள் திலகத்தின் விழா நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லட்சுமண் சுருதி இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதற்குக் காரணம் விழாவை ஏற்பாடு செய்பவர்கள் அந்தக் குழுவினைத் தேர்வு செய்வது மட்டுமல்ல. திரு.லட்சுமண் அவர்கள் மக்கள் திலகத்தின் மேல் கொண்டிருக்கும் மட்டற்ற அன்பே முக்கிய காரணம். விழாவில் பேசிய அவர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்த போது அவர் அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்திருந்த மக்கள் திலகம் தொடர்பான ஆவணங்களைப் பார்த்து மலைத்துப் போனதாகத் தெரிவித்தார். அவ்வளவு அரிய ஆவணங்கள் அரசாங்கத்திடமோ, அல்லது பெரும் நூலகத்திலோ கூடக் கிடைக்காது என்றும் தனி ஒருவராக அவர் செய்துள்ள இந்த சேகரிப்பு பாராட்டிற்குரியது என்றும் தெரிவித்தார். மக்கள் திலகத்தின் ஆவணக் களஞ்சியம் பேராசிரியர் செல்வகுமார் என்று போற்றினார்.