WHICH MOVIE ?
http://i1170.photobucket.com/albums/...ps2bd366d8.jpg
Printable View
WHICH MOVIE ?
http://i1170.photobucket.com/albums/...ps2bd366d8.jpg
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
மந்திரச் சொல் எம்.ஜி.ஆர். மாதவச் சொல் எம்.ஜி.ஆர். உயர் ஞானச் சொல் எம்.ஜி.ஆர்.
உயர் வேதச் சொல் எம்.ஜி.ஆர். சத்யச் சொல் எம்.ஜி.ஆர். சாதனைச் சொல் எம்.ஜி.ஆர்.
உயர் சரித்திரச் சொல் எம்.ஜி.ஆர். உயர் சிகரச் சொல் எம்.ஜி.ஆர். தத்துவச் சொல் எம்.ஜி.ஆர்.
உத்தமச் சொல் எம்.ஜி.ஆர். நல்அன்புச் சொல் எம்.ஜி.ஆர். நல்லபண்புச் சொல் எம்.ஜி.ஆர்.
அமுதச் சொல் எம்.ஜி.ஆர். அபூர்வச் சொல் எம்.ஜி.ஆர். இனிமைச் சொல் எம்.ஜி.ஆர்.
ஈகைச் சொல் எம்.ஜி.ஆர். உழைக்கும் மக்களின் சொல் எம்.ஜி.ஆர். ஊக்கத்தின் சொல் எம்.ஜி.ஆர்.
தர்மச் சொல் எம்.ஜி.ஆர். ஏழை மக்களின் சொல் எம்.ஜி.ஆர். புனிதச் சொல் எம்.ஜி.ஆர்.
வீரச் சொல் எம்.ஜி.ஆர். மங்கலச் சொல் எம்.ஜி.ஆர். ஆலயச் சொல் எம்.ஜி.ஆர்
யோகச் சொல் எம்.ஜி.ஆர். உயர்யாகச் சொல் எம்.ஜி.ஆர். ஜீவச் சொல் எம்.ஜி.ஆர்
தெய்வச் சொல் எம்.ஜி.ஆர். மகத்துவச் சொல் எம்.ஜி.ஆர். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.
18.2.1966
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''முகராசி '' படத்தின் சிறப்புக்கள் .
மிக குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட படம் .
ஜெமினி கணேசன் மக்கள் திலகத்துடன் நடித்த முதல் படம் .
சென்னை கெயிட்டி அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
உண்டாக்கி விட்டவர்கள் - இரண்டு பேரு ...அருமையான தத்துவ பாடல் .
மக்கள் திலகம் இன்ஸ்பெக்டராக நடித்த படம் .
http://youtu.be/jHdtDCQtgJQ
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
நீங்கள் பதிவிட்டுள்ள புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தை பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் உண்மைக்கு புறம்பானவை . ஒரு போதும் எம்ஜிஆரை பற்றி பாரதிதாசன் கூறாத கருத்தை ஒருவர் மேடையில் தவறாக பேசியதை , நீங்களும் அதை கவனிக்காமல் திரியில் பதிவிட்டது வருந்ததக்கது .இனி மேல் ஒரு பதிவை போடுவதற்கு முன் சரி பார்த்து பதிவிடவும் .
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு தீர்க்கதரசி . தவறு செய்தவர்களை , செய்து கொண்டு வருபவர்களை நேரம் பார்த்து தண்டிப்பார் .பதவியில் இருந்தவர்கள் - இருப்பவர்கள் செய்த தவறுகளுக்கு உரிய பலனை அனுபவிக்க போகிறார்கள் .
ஸ்டாலின், (தி.மு.க.,) : ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது.
இந்து "ஐந்து" உங்கள் காட்சி வெகு பொருத்தம். 1972இல் ஐந்து ரூபாய், 1977இல் ஐம்பது ரூபாய், 2015இல் ஐந்து ஆயிரம் ரூபாய். தங்களது காட்சி சின்னத்தை கூட "ஐந்து" என்றுதான் பிரச்சாரம்.
என்ன தளபதி, இந்து தங்களுக்கு தேவைதானா?
People know all the facts, please do not give such statements Sir.
நம் புரட்சித்தலைவர் தோற்றுவித்த அ.இ.அ .தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் சார்பாக செல்வி ஜெயலலிதா முதல்வராக ஆட்சி செய்திருந்தாலும், தற்போது திரு. பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பிலிருந்தாலும், மேலும் சிலர் இனி எதிர்காலத்தில் அ.இ.அ .தி.மு.க சார்பில் முதல்வராக பொறுப்பேற்கவிருந்தாலும், நம் இதயதெய்வம் டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் படைத்த, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாதனைகளையும், அவர் பெற்றிருக்கும் பெருமைகளையும் இனி எவரும் அடைய முடியாது.
1. அசைக்க முடியாத " அ.இ.அ .தி.மு.க. " என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த இயக்கத்தை தோற்றுவித்தவர்தான் நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்.
2. தமிழகத்தின் முதல் அ.இ.அ .தி.மு.க.முதல்வராக திகழ்ந்தவரும், நம் ஒப்பற்ற இதய தெய்வம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்தான் !
3. அ.இ.அ .தி.மு.க சார்பில் தமிழகத்தை தொடர்ந்து 3 முறை ஆண்டவரும், சத்துணவு தந்த நம் சரித்திர நாயகனே !
4. அ.இ.அ .தி.மு.க சார்பில் முதன் முதலில் புதுவையில் ஆட்சியை அமைக்க காரணமாயிருந்தவரும் நம் புரட்சித்தலைவர் அவர்களே !
5. வாழ்நாளின் இறுதி வரை முதல்வர் பதவியை வகித்தவரும் நம் பாரத ரத்னா அவர்களே !
6. தனது தலைமையிலான அ.இ.அ .தி.மு.க.வை சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறச் செய்தவரும் வரலாறு படைத்த வள்ளல் நம் எம். ஜி. ஆர். அவர்களே !
7. பிரச்சரத்துக்கு செல்லாமலேயே, (1967 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தல்களில்) படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமையும், உலகத் தமிழர்களின் உண்மைத்தலைவராகிய நம் மன்னவனுக்கு மட்டுமே உண்டு.
இந்த புகழை, இனி அ.இ.அ .தி.மு.க. சார்பில் எந்த தலைமையும் பெற முடியாது என்பது திண்ணம்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட முடியுமா என்ன ?
அது போல்தான் நம் புரட்சித்தலைவரின் புகழை எவராலும் அழிக்க முடியாது, மறைக்கவும் முடியாது. அவரது புகழை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அரசியலில், மக்களால் அப்புறப்படுத்தப்பட்டதை இந்த நாடே அறியும்.
தி. மு. க. ஆதரவு நாளேட்டிற்கு தீனியை கொடுத்த திரு. ராஜேந்திர பாலாஜியின் செயல் வருந்த தக்கது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நூல் வெளியீட்டு விழா
-------------------------------------------------------------
திரு.மணிகண்டன் : இந்த அரங்கத்தில் உள்ள நாமெல்லாம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
ஆனால் கவிஞர் திரு. முத்துலிங்கம் அவர்கள் எம்.ஜி.ஆர். பித்தர் . ஏனெனில்,
திரு. முத்துலிங்கம் அவர்களிடம் ரூ.10000/- கொடுத்து உதவிக்கு வைத்து கொள்ளுங்கள் என்று கூறினால், மறு வினாடியே , அந்த பணத்தை ஒரு ஓரமாக
வைத்துவிட்டு , நன்றி, வணக்கம் என்று கூறி விடைபெற்று விடுவார்.. அதாவது
உழைக்காமல் எந்த ரீதியிலும் பணம் வாங்கக் கூடாது என்பது அவருடைய கொள்கை. இது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் கற்ற பாடம்.
நாங்களெல்லாம் மின் விளக்குகள். ஆனால் திரு. முத்துலிங்கம் அவர்கள் அகல் விளக்கு. எப்போதுமே அகல் விளக்குகளுக்கு தனி மரியாதை உண்டு. அவரிடம்
1000 அகல் விளக்குகள் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. காரணம், புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் வைத்திருந்த தொடர்பு. புரட்சி தலைவரும் கவிஞர்
முத்துலிங்கம் பால் அன்பு கொண்டவர்.
பூமியில் மண்ணைத் தோண்டித்தான் தங்கத்தை எடுப்பார்கள் என்பது வரலாறு.
ஆனால் வங்கக் கடலோரம், மண்ணைத் தோண்டி, தங்கத்தைப் புதைத்தார்கள்
என்பது சரித்திரம்.
இலங்கை தமிழர்கள் அரசியலை, இன்றுவரை அரசியல்வாதிகள் அரசியலாகத் தான்
பார்த்தார்கள் . ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ வேண்டும் என்று நினைத்த ஒரே தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான் என்று இந்த நூலில் பதிவாகியுள்ளது.
கேட்டதும் கொடுப்பவர் கலியுலக கர்ணன். கேட்காமலேயே, ஒருவர் நிலையறிந்து
கொடுக்கும் ஒரே கலையுலக கர்ணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மேல் உண்மையான பற்றுள்ள பக்தர்களைத்தான்
இந்த அரங்கில் நான் காண்கிறேன். திரையுலகிலும், அரசியல் உலகிலும் பல மாற்றங்களை நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
இலங்கை தமிழர்க்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உதவியது பற்றி பலர் செவி வாயிலாக சொன்னார்கள். ஆனால், ஆசிரியர் இந்த நூலில் ஆதாரபூர்வமாக
பதிவு செய்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கலைஞர் கருணாநிதி கூட்டு சேர்ந்து
வெற்றிபெற்று, புரட்சி தலைவரின் ஆட்சியை கலைக்க தூண்டுகோளாக
இருந்தார். ஆனால் அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அசுர பலத்துடன் வெற்றி பெற்று , மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
உலகிலேயே, பெற்ற தாயை வணங்கி வழிபடவேண்டும் என தான் ஏற்ற பாத்திரங்களில் நடித்து, மக்களுக்கு பாடமாக உணர்த்தியவர் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். ஒருவரே.
பேரறிஞர் அண்ணாவை நேசித்தார். தி.மு.க.வில் இருந்தபோது, கட்சி, சின்னம் ,
கொள்கை, வண்ணங்கள் ஆகியவற்றை துணிச்சலாகவும், தைரியமாகவும்,
ஆக்கபூர்வமாகவும் திரைப்படங்களில் புகுத்தினார்.
புரட்சி தலைவரைப் பற்றிய பல அரிய தகவல்கள், வெளிவராத செய்திகள் நிறைந்த புத்தகம் இது. எழுத்துப் பிழை இல்லாத புத்தகம் இது.
தொடரும்.......!!!
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றிகள் - சாதனைகள் பற்றிய உங்களின் பதிவு மிகவும் அருமை .
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிக்கு வருகை புரிந்துள்ள திரு எம்ஜிஆர் பாஸ்கரன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் . தொடர்ந்து பதிவுகள் வழங்கிட வேண்டுகிறேன் .
பறக்கும் பாவை பட ஸ்டில்ஸ் - படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது .நன்றி திரு முத்தையன் .
தின இதழ் - மக்கள் திலகம் கட்டுரை மிகவும் அருமை -நன்றி திரு லோகநாதன் .
திரு யுகேஷ் பாபு வின் -மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற் படங்கள் பதிவுகள் அருமை .
திரு குமார் அவர்களின் கண்டன பதிவுகள் சூப்பர் .
மக்கள் திலகத்தின் ''முகராசி '' 100வது நாள் தினத்தந்தி விளம்பரம் - இது வரை யாரும் பார்க்காத ஆவணத்தை
வேலூர் திரு ராமமூர்த்தி இன்று வழங்குவார் என்று எதிர் பார்க்கிறேன் .
திரு தெனாலி ராஜனின் கவிதைகள் மிகவும் இனிமை .''காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான் ''வைர வரிகள் .
ஒரு நடிகரின் திரை உலக வெற்றிக்கு பல் வேறு அம்சங்கள் இருந்தாலும் ''ரசிகன்'' என்ற மாபெரும் தனி நபரின் ரசிப்பு தன்மை ஒரு ஆவலாக , பிரமிப்பாக மாறும் போது ,பல ரசிகர்கள் உருவாகிறார்கள் .அந்த ரசிகர்களின் ஆதரவுதான் ஒரு நடிகரை மாபெரும் நடிகராக உருவாக்குகிறது .
ரசிகனின் ஆவலை பூர்த்தி செய்து படத்திற்கு படம் பல வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து எல்லோரின் ஆதரவிற்கு தன்னை முன்னிலை படுத்தி வெற்றி மேல் வெற்றி காணும் ஒரு நடிகரின் சரித்திர சான்றை கூற வேண்டுமானால் அது திரு எம்ஜிஆர் என்ற ஒரு நடிகருக்கு மாத்திரம் கிடைத்த வெற்றி .
திரு எம்ஜிஆர் 30 ஆண்டு காலம் திரை உலகை தன வசம் வைத்து முடி சூடா மன்னனாக வலம் வந்தார் . அவர் நடித்தது 134 படங்களே . அதிலும் கதாநாயகனாக 115 படங்கள் மட்டுமே .''ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' வரை ஒவ்வொரு ஆண்டிலும் [1947-1977] வந்த இவர் படங்கள் அடைந்த வெற்றிகள் வரலாறு பேசும் .சில படங்கள் வர்த்தக ரீதியாக தோல்வியாக இருந்தாலும் மறு வெளியீடுகளில் லாபத்தை தந்துவிடும் அளவிற்கு அவருடைய படங்கள் தொடர்ந்து ஓடிகொண்டே இருக்கும் என்பது உண்மை .
தமிழ் முன்னணி தயாரிப்பளர்கள் - இயக்குனர்கள் எம்ஜிஆரை வைத்து படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகள் கண்டார்கள் . எம்ஜிஆரின் வெற்றிக்கு முழு காரணம் அவருடைய படங்களின் ''தலைப்புகள் ''- அருமையான நடிப்பு - புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் - சமூக சிந்தனை கொண்ட சீர் திருத்த காட்சிகள் கொண்ட இவரின் படங்கள் ரசிகர்களுக்கும் , திரைப்பட உலகிற்கும் , மக்களுக்கும் மன மகிழ்வை தந்து அவர் மீது தனிப்பட்ட அன்பை பொழியும் அளவிற்கு உருவெடுத்தார் எம்ஜிஆர் .
எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகளை தொடர்ந்து அரசியலிலும் வெற்றி கொடி ஈட்டினார் .30 ஆண்டுகள் திரை உலக பயணத்தை முடித்து 1977-1987 வரை தமிழக நிரந்தர் முதல்வராக மக்கள் முதல்வராக வாழ்ந்து ,இன்னும்
மக்கள் முதல்வராக மக்கள் மனதிலும் , ஊடகங்களிலும் எம்ஜிஆர் தினமும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
உலகில் எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு மொழியிலும் ஒரு நடிகருக்கு கிடைக்காத மக்கள் செல்வாக்கு எம்ஜிஆர்
என்ற ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை ஒவ்வொரு எம்ஜிஆர் ரசிகருக்கும் கிடைத்த பெருமை .கோடிக்கணக்கான ரசிகர்களுடன் எம்ஜிஆர் இன்றும் வாழ்ந்து வருகிறார் .- இது தமிழன்னை செய்த பாக்கியம் .
நன்றி திரு -ஸ்டீபன் - முக நூல் .
கால் முறிந்த போதும் -1959
குரல் இழந்த போதும் - 1967
தலைமை தூக்கியபோதும் -1972
துரோகம் நடந்த போதும் -1979
தேர்தலை சந்தித்த போதும் -1980
உடன் இருந்தோரின் துரோகங்கள் நினைத்த போதும் -1984
கால தேவன் அழைத்த போதும் -1984
மன்னாதி மன்னனே ..நீ கலங்கவில்லை .
ரசிகர்கள் - மக்கள் உன்னை அரவணைத்தார்கள் .
மீண்டு வந்தாய் .. 1985
வரலாறாய் வாழ்ந்து - விண்ணுலகம் சென்றாலும்
இந்த மண்ணுலகம் உன்னை மறக்க வில்லை .
உன்னால் உயர்ந்தோர் ...உன்னை மறைத்து ....மறைக்க பார்த்தார்கள்
உங்கள் அருள் பார்வையால் அவர்கள் இன்று ''கூண்டுக்கிளி '' யானார்கள் .