http://i58.tinypic.com/348owad.jpg
Printable View
சாந்தி - பொன் விழா நிகழ்ச்சி - 1965- 2015 – Part II
என்னுடைய வரவேற்புரையில் மேலும் ஓரிரண்டு சுவையான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. சென்ற பதிவில் அவை விட்டுப் போய்விட்டன.
தனித்தனியாக இருந்த மெல்லிசை மன்னர்கள் இருவரும் இணைந்து முதன் முதலில் இசையமைத்த படம் பணம். அதுவும் நடிகர் திலகம் நடிக்க AL S புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்தான்.
நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ப அல்லது பா வரிசை தலைப்புகளைக் கொண்டதாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. அவற்றில் விதிவிலக்காக அமைந்தவை மூன்று. ராஜா ராணி, செந்தாமரை மற்றும் சாந்தி. இந்த மூன்றில் இரண்டு படங்கள் AL S புரொடக்ஷன்ஸ் தயாரித்த படங்கள்தான்.
AL S புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் தன் உரையை தொடங்கினார். தங்களின் நிறுவனம் பழம்பெருமை வாய்ந்த நிறுவனம் என்பதை சுட்டிக்காட்டிய அவர் 1948-ம் ஆண்டே தங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது என்ற தகவலை சொன்னார். 1952- ம் ஆண்டு தங்களின் முதல் தயாரிப்பான பணம் வெளிவந்தது என்பதை பகிர்ந்துக் கொண்டார். தமிழ் தெலுகு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தங்கள் நிறுவனம் சுமார் 50,60 படங்களை தயாரித்திருப்பதையும் பெருமையோடு குறிப்பிட்டார்.
திரு கருணாநிதி அவர்கள், திரு எம்ஜிஆர் அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர் அவர்கள் ஆகிய நான்கு முதல்வர்கள் தங்கள் படங்களில் பணியாற்றிருப்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார் திருமதி ஜெயந்தி.
அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளம் கொடுத்த நிறுவனம் தங்களுடைய நிறுவனம் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டார். அதே போன்று நடிகர் திலகம் அவர்களுக்கும் தன் மாமனார் ஏஎல்எஸ் அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பு நிலவியதை சுட்டிக் காட்டிய அவர் அதன் காரணமாக பணம் திரைப்படம் முதல் சினிமா பைத்தியம் வரை தங்கள் நிறுவனம் எடுத்த படங்களிலெல்லாம் நடிகர் திலகம் பங்கு பெற்றிருப்பதை தாங்கள் செய்த பாக்கியமாக கருதுவதாக சொன்னார்.
ஏஎல்எஸ் மாமாவிற்கும் சிவாஜிப்பாவுக்கும் [பெரும்பான்மையான நேரங்களில் இப்படித்தான் குறிப்பிட்டார்] இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் எடுக்கப் போகும் படத்தின் நாயகன் நடிகர் திலகம் என்று முடிவு செய்து விட்டால் அவரை தொலைபேசியில் அழைத்து அடுத்த வாரம் பூஜை என்று மட்டும்தான் தகவல் சொல்லுவாராம் ஏஎல்எஸ். அதற்கு நடிகர் திலகம் இதற்கு நீங்கள் பேச வேண்டுமா? வீரய்யா (production manager) என்ன ஆனார்? என்று கேட்பாராம். அந்தளவிற்கு கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களும் இடையே நல்லுறவு நிலவி வந்த காலம்.என்று சொன்ன திருமதி ஜெயந்தி இன்றைய காலத்தைப் பற்றி பேசவே விரும்பவில்லை என்றார்.
தங்கள் குடும்பத்திற்கும் நடிகர் திலகம் குடும்பத்திற்கும் இப்போதும் நல்ல உறவுமுறை இருப்பதாகவும் இந்த விழாவிற்கு முதல் நாள் கூட தன் மகளுக்கு பிறந்திருக்கின்ற இரட்டை பெண் குழைந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றதாகவும் அந்நேரத்தில் தான் வாங்கி கொண்டு வரும் கவுனைத்தான் பேத்திகளுக்கு முதல் முதலில் அணிவிக்க வேண்டும் என்று சொல்லி சாந்தி அக்கா வாங்கிக் கொண்டுவந்து அணிவித்தார் என நெகிழ்ச்சியுடன் சொன்னார் திருமதி ஜெயந்தி.
தாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களின் அனைத்து உரிமைகளையும் தங்களிடமே வைத்திருப்பதாகவும் சாந்தி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் உரிமைக்கு இப்போதும் டிவி சானல்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதாகவும் இப்போதும் நல்ல தொகைக்கு சானல்கள் வாங்குவதாகவும் குறிப்பிட்ட திருமதி ஜெயந்தி அந்த விஷயத்தில் எங்களைப் பொறுத்தவரை சாந்தி ஒரு வற்றாத ஜீவநதி என்று குறிப்பிட்டார். ஒருவர் மறைந்து விட்டால் அவர் நினைவுகளும் மறைந்துவிடக்கூடிய காலத்தில் தமிழ் மக்கள் மனதில் நிரந்தரமாக நினைவில் நிற்பவர்கள் என்று சொன்னால் ஒருவர் நடிகர் திலகம் மற்றொருவர் என சிறிய மாமனார் கவியரசு கண்ணதாசன் என்று சொல்லி உரையை முடித்தார் திருமதி ஜெயந்தி.
அடுத்து பேச வந்தவர் ஆனந்த் தியேட்டர் உமாபதியின் மகன் திரு கருணாகரன். வெஸ்டேர்ன் ஸ்டைலில் உடையணிந்து வந்திருந்த அவர் அழகான தமிழில் அடுக்கு மொழி பேச கூட்டம் அதை மிகவும் ரசித்தது. பேச்சு தமிழிலும் மிக இயல்பாக பேசிய அவர் உண்மைகளை மிக தைரியமாக எடுத்துரைத்தார். நகைச்சுவை கலந்த அவர் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. தாங்கள் தயாரித்த ராஜ ராஜ சோழன் படத்திற்கு தான் உதவியாளராக பணிபுரிந்ததையும் நடிகர் திலகதிற்கே காட்சியின் வசனத்தை படித்து காண்பிக்கும் பணியை செய்தது தன் வாழ்நாள் பரிசு என்று சொன்னார்.
முதல் நாள் படப்பிடிப்பில் படத்தின் முதல் காட்சியான சிற்பி சிலை வடித்துக் கொண்டிருக்க அவருக்கு வெற்றிலை எச்சில் துப்பும் பேழையை ராஜ ராஜ் சோழனே பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்படுகிறது. இந்த காட்சியை விவரித்தவுடன் "என்னடா உங்கப்பன் லட்சக்கணக்கிலே செலவழிச்சு பிரமாண்டாமாய் படமெடுக்கிறேன்னு சொல்லிட்டு முதல் நாளே எச்சில் பாத்திரத்தை தூக்கச் சொல்றான்?" என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தாராம் நடிகர் திலகம். அந்தக் காட்சியின் முழு வசனத்தையும் அதே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் காண்பித்து கைதட்டலை அள்ளினார் கருணாகரன்.
அதற்கு பிறகு சாந்தி தியேட்டரை விலைக்கு வாங்க நடிகர் திலகம் முயற்சித்ததையும் தன் தந்தையார் உமாபதி அதற்கு தயங்கியதையும் (கணேசா, உன் படத்தையெல்லாம் போட்டுக்கிறேன். ஆனால் தியேட்டர் என்கிட்டேயே இருக்கட்டும்) சொன்னவர் இறுதியில் பிரம்மாஸ்த்ரமாய் நடிகர் திலகம், பெருந்தலைவரை அணுகியதையும் அவர் உமாபதியிடம் சொல்ல பெருந்தலைவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத உமாபதி இந்த தியேட்டரை கொடுத்துவிட்டு ஆனந்த தியேட்டர் கட்டியதையும் நினைவு கூர்ந்தார்.
தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவர் நடிகர் திலகம் என்று சொன்ன கருணாகரன் இன்றைய கால் நடிகர்களையெல்லாம் வெறும் அரிதாரம் பூசிய கூத்தாடிகள் என்று கோவத்தில் சாடினார். கோடிகள் சம்பளமாக வாங்கியும் பார்க்கப் போகிறவர்களுக்கு குடிக்க ஒரு டீ, காபி கூட கொடுக்காதவர்கள் இன்றைய நடிகர்கள் என்று சொன்ன அவர் இன்றைக்கும் சிவாஜி வீட்டில் தினம் வெளியாட்கள் 25 பேர் சாப்பிடுகிறார்கள் என்றார். யார் யாரையோ தெய்வம் என்று சொல்கிறீர்களே இவர்தானையா தெய்வம் என்று உணர்ச்சிப்பூர்வமாக உரையை முடிக்க கூட்டமும் உணர்ச்சிப்பூர்வமாக ஆரவாரித்தது.
அடுத்துப் பேசிய நடிகையர் திலகம் சாவித்திரியின் மகள் திருமதி விஜயசாமுண்டீஸ்வரி விழாவிற்கு அழைத்தற்கு நன்றி தெரிவித்துவிட்டு மனம் ஒருமுகப்பட மனக்கவலைகள் மறக்க யோகா தியானம் (meditation) போன்றவற்றை செய்யும்படி சொல்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது போன்ற படங்களுடன் அந்த படங்களில் வரும் பாடல்களோடும் பயணிப்பதுதான் தனக்கு மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் reliever ஆக விளங்குகிறது என்று சொல்லி சுருக்கமாக உரையை நிறைவு செய்தார்.
எஸ்எஸ்ஆர் அவர்களின் துணைவியாரை பேச அழைக்க அவர் தன்னுடன் வந்திருந்த தன் மகன் கண்ணனை பேச அழைக்குமாறு வேண்டினார். மேடையேறிய கண்ணன் 5,6 மாதங்களுக்கு முன்பு இந்த விழா நடைபெற்றிருக்குமேயானால் தன் தந்தையார் கலந்துக் கொண்டிருப்பார் என கூறிவிட்டு சிவாஜி பெரியப்பா வீட்டில் நானும் ஒரு மகனைப் போல என்னை நடத்துவார்கள். அதேபோல் ராமு அண்ணனும் பிரபு அண்ணனும் ராஜூ சித்தப்பா என்று எங்கள் வீட்டில் உரிமையோடு வருவார்கள். 60 ஆண்டுகளையும் தாண்டிய உறவு இரண்டு குடும்பத்திற்கும் என்று சொன்ன அவர் தன் தந்தையார் எப்போதும் குறிப்பிடும் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். அது என்னவென்றால் ஒரு காட்சி படமாக்கும்போது எத்தனை சிறிய ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தாலும் அவர் நன்றாக நடித்தால் அவரை அழைத்து பாராட்டுவாராம் சிவாஜி பெரியப்பா. இது தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரிடமும் காண முடியாத பண்பு என்று தன் தந்தையார் அடிக்கடி குறிப்பிடுவார் என்று சொன்ன கண்ணன் தங்களை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.
அதன் பிறகு சாந்தி 50 வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் நினைவாக NT FANS சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் கீழே இறங்க திருமதி ஜெயந்தி கண்ணப்பன் தயாரித்துக் கொண்டு வந்திருந்த 10 நிமிட காணொளிக் காட்சிகள் திரையிடபப்ட்டன. AL S புரொடக்ஷன்ஸ் இதுவரை தயாரித்த அனைத்துப் படங்களின் ஸ்டில்ஸ், நடிகர் திலகமும் AL S அவர்களும் கலந்துக் கொண்ட பல்வேறு விழாக்களில் எடுக்கபப்ட்ட புகைப்படங்கள், நாட்டின் மிக உயர்ந்த பதவி வகித்திருந்த தலைவர்களோடு நடிகர் திலமும் ஏஎல்எஸ் அவர்களும் இணைந்த புகைப்படங்கள் என்று மிகப் பிரமாதமாக உருவாக்கப்பட்டிருந்தது அந்த டிவிடி. அது முடிந்ததும் சாந்தி திரைப்படம் திரையிடபப்ட்டது.
சுருக்கமாக சொன்னால் மிகப் பிரமாதமான விழா. கலந்துக் கொண்ட யாராலும் மறக்க முடியாத விழா என்ற சிறப்பை பெற்றது. மிக கடுமையான வேலைப்பளுவிலும் இந்த விழாவிற்கு வேண்டி மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து தந்த திருமதி ஜெயந்தி அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்கி இனியும் வர இருக்கின்ற அவர்களின் தயாரிப்புகளான கந்தன் கருணை லட்சுமி கல்யாணம் விழாக்களையும் சிறப்பாக நடத்துவோம் என கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினோம்.
அன்புடன்
பாவமன்னிப்பு 51 - பாகம் - 2
8. பீம்சிங் இக்கதையை சிவாஜியிடம் கூறும்போதே ரஹீம் பாத்திரம் நடிகர் திலகத்தை கட்டிப்போட்டு விட்டது. ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகளை கிட்டத்தட்ட 40 பக்கங்களில் முதலிலேயே சிவாஜிக்கு பீம்சிங் எழுதிக் கொடுத்துவிட்டார். ரஹீம் பாத்திரத்தை மிகுந்த சிரத்தையோடு செய்ய திட்டமிட்டார் சிவாஜி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு வரும் போதும் Fully Prepared ஆக வருவார். செவ்வனே செய்வார். அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும். அன்றைய படப்பிடிப்பு இரவு எந்நேரத்தில் முடிந்தாலும், மறுநாள் படப்பிடிப்பில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை பீம்சிங்குடன் கலந்து ஆலோசிதத பின்னரே வீட்டிற்குச் செல்வார். மறுநாள், எப்பொழுதும் போல் Prepared ஆக மேக்கப்புடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார்.
9. இஸ்லாமிய சமூகத்தினர் இறைவனை வேண்டித் தரையில் மண்டியிட்டுத் தொழும் போது, அவர்களது நெற்றிமுனை தரையில் தட்டித்தட்டி அந்த இடம் கருப்பாகி விடும், அதாவது நெற்றிமுனையில் ஒரு கருப்புத் தழும்பு காணப்படும். இதையறிந்த நடிகர் திலகம் தனது நெற்றிமுனைக்கு மட்டும் சற்று கருப்பாக ஒப்பனை செய்து கொண்டார்.
10. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தின் மிக முக்கிய காட்சி, நடிகவேள் நடிகர் திலகத்தின் மீது திராவகத்தை வீசும் காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் எப்பொழுதும் போல் அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் பீம்சிங்கிடம் அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றி ஆலோசித்து விட்டு வீட்டிற்குச் சென்றார் நடிகர் திலகம். அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்தநாள் எடுக்கப் போகும் திராவக வீச்சு காட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பீம்சிங்கிற்கும் அவரது இல்லத்தில் உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் இயக்கப் போகும் காட்சி குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, நள்ளிரவில் சிவாஜிக்கு ஃபோன் செய்தார் பீம்சிங். கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அடுத்த நாள் காட்சியைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்துடன் ஃபோனில் நீண்ட நேரம் உரையாடினார் பீம்சிங்.
11. மறுநாள் திராவகம் வீசும் காட்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. சிவாஜியின் முகத்தில் எதிர்பாராத விதமாக திராவகம் வீசப்பட்டு அவர் துடிதுடித்து தரையில் இங்குமங்கும் உருண்டு புரளும் காட்சி ஒரே ஷாட்டாக ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. ஷாட் பிரித்தோ, இரண்டாவது டேக் போனாலோ மிக முக்கிய காட்சியின் அழுத்தம் குறைந்து விடும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்ததாலேயே ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் அக்காட்சியை படமாக்கினர் சிவாஜியும், பீம்சிங்கும். இதற்காகவே இரவெல்லாம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.
12. "பாவமன்னிப்பு" படப்பாடல்கள் காலத்தை வென்றவை. இப்பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான, ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளுக்கு அற்புதமான, இனிமையான மெல்லிசை மெட்டுகள் என ஒரு புதிய திரை இசை அலையையே உருவாக்கினார்கள் மெல்லிசை மாமன்ன்ர்கள். பாடல்களின் ஒலிப்பதிவை மட்டும் ஒலிப்பதிவு மாமேதை முகுல்போஸ் செய்து கொடுத்தார்.
13. "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலை நடிகர் திலகம் குழுவினருடன் பாடி நடிக்க சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார் டி.எம்.எஸ். குழுவினரில் ஒருவருக்கு நாகூர் ஹனீஃபா குரல் கொடுத்திருப்பார். இன்றளவும் இஸ்லாமிய பண்டிகை தினங்களில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. நாகூர் ஹனீஃபா தனது பக்தி இசைக் கச்சேரிகளிலும் இப்பாடலை மறவாமல் பாடுவதுண்டு. நடிகர் திலகம் இப்பாடலுக்கு 'டேப்'பை வாசித்துக் கொண்டே பாடுவது இப்பாடலின் சிறப்பம்சம்.
14. "காலங்களில் அவள் வசந்தம்" பாடல் இன்றளவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்த பாடல். பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் எத்தனையோ மெலடிகளை பாடியிருக்கிறார். எனினும் அவரது சிகர மெலடி இது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னர் பல படங்களில் பல நல்ல மெலடிகளை அவர் இசைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தின் இந்தப்பாடல்தான் அவரை Limelightற்கு கொண்டு வந்தது. ஜெமினிக்கு பிபிஎஸ் என்ற மியூசிகல் ஃபார்முலாவும் உருவாகக் காரணமாயிற்று. [காதல் மன்னனுக்கு ஹிட்ஸாங்ஸுகளுக்கு எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. 1950களில் ஏஎம்ராஜா, கண்டசாலா குரல்களிலும், 1960களில் பிபிஎஸ்ஸின் வாய்ஸிலும், 1970களில் எஸ்பிபியின் குரல்ஜாலத்திலும் அவருக்கு பற்பல சிறந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. டி.எம்.எஸ். குரலிலும் அவருக்கு சில சிகர பாடல்கள் இருக்கின்றன.]
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
எச்சரிக்கை [துக்ளக் பாணியில்...]
திலக சங்கமம்
http://www.tollywoodsingers.com/kvm.bmp
திரை இசைத் திலகம் நடிகர் திலகம்.... தோல்வியே காணாத கூட்டணி... இவர்கள் இணைந்த பாடல்கள் சோடை போனதாக சரித்திரமே இல்லை... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஒரு புறம் என்றால் திரை இசைத் திலகம் அவர்களின் பங்கு மறுபுறம் என நடிகர் திலகத்தின் படங்களில் கோலோச்சியவர் கே.வி.மகாதேவன்.
இவர்கள் இணையில் உருவான பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அமரகாவியங்களாய்த் திகழ்பவை.
பாடல்கள் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் கே.வி.எம். அவர்களின் பணி சிறப்பானது. அதுவும் அவ்வப்போது இடம் பெறலாம்..
இவற்றைப் பற்றிய ஒரு குறுந்தொடர்....தொடங்க உத்தேசம்...
Sivaji Ganesan - Deinition of Style - அதுவும் தொடரும்...
அவ்வப்போது வந்து போகும் சிலருள் ஒருவனாக அடியேனின் இந்த சிறிய காணிக்கை.
திலக சங்கமம்
http://i1146.photobucket.com/albums/...ps3adeb9f2.jpg
1954ம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளியில் உருவானது நடிகர் திலகம் கே.வி.எம். இணை.. கொஞ்சும் கிளியான பெண்ணை என்ற இந்தப் பாடலின் மூலம் டி.எம்.எஸ். அவர்கள் மிகப் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. தூக்குத்தூக்கியின் சுனாமியில் இந்தப் பாடல் சற்றே பின்தங்கி விட்டாலும் பின்னாளில் இதற்கான வரவேற்பினைப் பெறத் தவறவில்லை. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமய்யா தாஸ் என ராகா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விந்தன் அவர்கள் எழுதியதாக அந்நாளைய பாட்டுப்புத்தகத்தில் படித்த நினைவு. தகவல் சரிபார்த்து பின்னர் கூறப்படும்.
கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாக்கி விட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா தப்பா எனப் பாடலின் பல்லவி இசைத்தட்டில் அமைந்திருக்க, திரைப்படத்தில் கூண்டுக்கிளி கூட்டுக்கிளியாகவும், கெட்டி மேளமம் கொட்டுவது என்ற வரி காலமெல்லாம் சுற்றுவது எனவும் மாறியுள்ளது, தணிக்கையின் கைங்கரியமாயிருந்திருக்க வேண்டும்.
பாடலைப் பார்ப்போம்... டி.எம்.எஸ். ரசிகர் இப்பாடலைத் தரவேற்றியுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த நன்றி.
https://www.youtube.com/watch?v=7z_zAZpyUtg
இப்பாடலின் இசைத்தட்டு வடிவம்...
பல்லவியில் மட்டுமின்றி, அங்கங்கே சில வார்த்தைகளும் படத்தில் மாறியுள்ளதை கவனிக்கலாம்.
http://play.raaga.com/tamil/album/Ko...songs-T0001656
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாவமன்னிப்பு திரைப்பட கோலாகலம் ஆரம்பம்.
மதுரை மத்திய பகுதி சமூகநலப் பேரவை சார்பில் தலைவர் பாண்டி அவர்கள் சென்ற முறை தர்மம் எங்கே திரைப்படத்திற்கு 40 அடிக்கு 4 அடி ராட்சத போஸ்டர் அடித்திருந்தார். தற்போது பாவம்ன்னிப்பு படத்திற்கு அதற்கும் மேலாக 50 அடிக்கு 4 அடி என்ற மிகப் பிரமாண்டமான ராட்சத போஸ்டர் அடித்துள்ளார். திரு.பாண்டி அவர்களுக்கு நன்றி.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...30898968_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...95260290_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......
https://scontent-sin.xx.fbcdn.net/hp...85041814_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...62173905_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
தனிப்பட்ட நபர்கள் குறிப்பாக இந்த மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிட்டு எதிர்மறை விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தன்னை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத ஒருவரை விமர்சிப்பது அதிலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.
அன்புடன்
முரளி
__________________________________________________ __________________________________________________ ________
ராகவேந்திரரே எப்பவாவது வந்து போகும் ஆள்னா நான்லாம் எந்த மூலை? பேசாம நாமளும் பேஸ் புக் தொடங்கலாமா? கோபாலய்யா மாதிரி எனக்கும், மத்தவங்களுக்கும் எழுத வேற தெரியாது. முடி வெட்டத் தெரியாதவனுக்கு ஆலமரத்துக்குக் கீழே என்ன வேலை? என்ன நான் சொல்றது?
அவன் ஒரு சரித்திரம் 007.
கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன் செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா"
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...c40afe98d83b9a
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...b372f7899343c9
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
விரும்பத்தகாத அந்த நிகழ்வுக்கு நானும் வருந்துகிறேன்.
ஒரு வகையில் நேரடியாக இனிக்க இனிக்க பேசிக்கொண்டு முதுக்கு பின்னர் வஞ்சகம் செய்வோரை விட நினைப்பதை கடுமையாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுபவர்களை நான் விரும்புவேன் என்ற வகையில் நேருக்கு நேர் எதிர் கொண்டமைக்கு பாராட்டுகிறேன்.
இந்த நேரத்தில் மற்றவர்க்கு உவப்பானதோ இல்லையோ ,மனதில் பட்ட சில விடயங்களை பதியலாம் என நினைக்கிறேன்.
பொதுவாக ஒரு கலைஞன் மீது அபிமானம் கொள்வதற்கு அவனின் ரசிகனாக இருப்பதற்கு அவனின் கலைத்திறமை மட்டுமே அளவுகோல் என்பது என் தனிப்பட்ட கொள்கை . நானறிந்த வகையில் நமது சமூகத்தில் ஒரு கலைஞனின் ரசிகர்களாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் நீங்கள் ஏன் இவரின் ரசிகராக்க இருக்கிறீர்கள் என வினவும் போது ..அவர் நல்லவர் , பண்பாளர் , அடக்கமானவர் , இந்த அரசியல் கருத்தை கொண்டவர் , நல்ல குடும்பஸ்தன் போன்ற புறக்காரணிகளையே அதிகம் குறிப்பிடுகிறார்கள் என்பது என் அனுபவம் .
என்னைப் பொறுத்தவரை , இந்த புறக்காரணிகள் சாதகமாக இருந்தால் நல்லது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் , ஒரு கலைஞனை மதிப்பிடும் போது இந்த புறக்காரணிகள் கலைஞன் என்ற மதிப்பீட்டை கூடுதலாகவோ குறைவாகவோ மாற்றுவதில்லை.
விபரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை நான் சிவாஜி ரசிகனாக இருக்கிறேன் என்றால் அது முழுக்க முழுக்க அவர் கலைத்திறமை மீது நான் கொண்டுள்ள அபிமான்னம் மட்டுமே . அவர் ரசிகன் என்பதால் அவர் சார்ந்துள்ள கட்சியை ஆதரிக்க வேண்டியது கடமையாக நான் கொள்வதில்லை . நான் சார்ர்ந்திருக்கும் அரசியல் கட்சியை அவர் சாராததால் அவர் ரசிகன் என்பதில் கிஞ்சித்தும் குறை ஏற்பட்டதில்லை .
இன்றைக்கு கூட முன்னணி நடிகர்கள் பலரின் ரசிகர்கள் போர்டுகளுக்கு பின்னர் ஒரு நுண்ணிய சாதி அரசியல் பின்னணி உண்டு என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும் .ஆக இங்கே ஒரு நடிகனின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் சாதி உள்ளிட்ட புறக்காரணிகளை கவனத்தில் கொள்வது யதார்த்தத்தில் உண்மை.
நாமெல்லாம் சாதி , மதங்களை கடந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருப்பவர்கள் .ஆனால் பல முறை பலரோடு விவாதித்தலில் பல அதிர்ச்சிகரமான சமூக எதார்த்தங்கள் வெளிப்பட்டதை மறுப்பதற்கில்லை. சிவாஜி என்னும் தமிழ் சமூகத்தின் மாபெரும் கலைஞன் , திரைக்கு வெளியே பலரால் சாதிய பார்வையில் பார்க்கப்பட்டார் என்பது நிதர்சனம் . ஒரு பக்கம் தமிழகத்தில் மிகப்பெரும் சமூகத்தில் அவர் பிறந்ததால் ஒரு சாராரால் அவர் அந்த சமூகத்தினராக பார்க்கப் பட்டார் . அதே நேரத்தில் அவர் ஏற்றுக்கொண்ட தலைவர் வேறெரு பெரிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் , தன் சொந்த சமூகத்தாலேயே அந்நியமாக பார்க்கப்பட்டார் .
திரையுலகில் மிகச்சமமாக செல்வாக்கு பெற்றவர்களாக மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் திகழ்ந்தாலும் , பின்னர் அரசியல் களத்தில் மக்கள் திலகம் அடைந்த உயர்வை நடிகர் திலகம் அடைய முடியாமைக்கு அரசியல் காரணங்களைத் தாண்டி சாதிய மனப்பான்மையும் முக்கிய காரணம் என நான் நம்புகிறேன் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க சமூகத்தையும் சார்ந்தவரல்ல .அதுவே அவரின் பலமாக அமைந்தது . அவரை யாரும் எந்த சாதியோடும் தொடர்பு படுத்தி ஆதரிக்கவோ , அதனால் இன்னொரு சமூகம் தள்ளி வைக்கவோ நிகழவில்லை . இப்படி பல்ல உண்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம் (இங்கிருக்கும் பலருக்கு அவை பிடிக்காது என்றாலும்)
ஆக என்னைப் பொறுத்தவரை , சிவாஜி என்னும் கலைஞன் சாதி , மதம் , அரசியல் சார்புகளைத் தாண்டி ஒரு தமிழ் சமூகக் கலைஞன் என போற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு .. அதற்கு எதிராக ஒரு குறிபிட்ட அரசியல் சித்தாந்தத்துக்கோ அல்ல்லது எந்த குழுவுக்குமோ சொந்தக்காரராக அவர் அடையாளப்படுத்துவது .. வந்து சேர்பவர்களை விட தள்ளிச் செல்பவர்களையே அதிகப்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு .
என்னுடைய கருத்துக்கள் எப்போதும் இதன் அடிப்படையில் தான் இருக்கும் .அதனால் நான் தவறாக புரிந்து கொள்ளப்படுவது குறித்து என்றைக்கும் நான் இம்மியும் பொருட்படுத்துவதில்லை . அதன் அடிப்படையில் வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவதை நான் வரவேற்கிறேன்.
உண்மை ஜோ. அற்புதமான பதிவு. மலையாளத்தில் வீட்டில் சம்சாரித்தவர்கள்,கன்னடத்தில் மாத்தாடியவர்கள்,தெலுங்கில் செப்பியவர்கள் அனைவரும் கொண்டாட பட்ட தமிழ் சமூகத்தால் ,நமது கலைஞர்கள்,கவிஞர்கள்,அரசியல் தலைவர்கள் ஜாதி சார்ந்த புறக்கணிப்புக்கு ஆளானார்கள். இதில் ,வு.வே.சா வும் ,பாரதியும், சிவாஜியும் கூட தப்பவில்லை என்பது கசப்பான உண்மை.
இன்றும் கூட கண்ணதாசனை கொண்டாடுபவர்கள் நகரத்தார் சமூகத்தினர். ஆனால் இரண்டாம் கம்பன் வாலி அவரை விட அதிகம் சாதித்தும் புறக்கணிக்க பட காரணம் அவர் சாதியே.
இதில் மிக அதிகம் பாதிக்க பட்டவர் நமது நடிகர்திலகம் என்ற உலக மேதையே. சொந்த சமூகத்தாரேலேயே கூட புறக்கணிக்க பட்ட அவலம் சொல்லி மாளாது.(இதற்கு பசும் பொன்-காமராஜ் ஊடல் முக்கிய காரணி)
கலைஞர் கூட இதில் விலக்கில்லை.தமிழ்த்தாத்தா வு.வே.சா பற்றியோ, பாரதி பற்றியோ மூச்சு விட மாட்டார். எம்.எஸ். இறந்த போது பத்தி எழுதும் இவர் எம்.எல்.வீ, டீ .கே.பீ (தமிழிசை பிரபலமாக உழைத்தவர்) பற்றி கண்டு கொள்ள மாட்டார்.
என்னை பொறுத்த வரை திருவள்ளுவர், கம்பர்,பாரதி,பெரியார்,புதுமை பித்தன்,சிவாஜி, காமராஜ்,கலைஞர் ,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,பாலசந்தர்,மகேந்திரன்,சோ, கமல் ஹாசன்,அசோகமித்திரன் போன்ற மேதைகள் ஜாதி வித்தியாசமின்றி ,தமிழறிந்த ,தமிழை மதமாகவும்,மொழியாகவும் பார்க்கும் அனைவராலும் கொண்டாட பட வேண்டிய உலக மேதைகள்.
இவ்வளவு சொல்லி இவ்வளவு தமிழ் எழுதி தமிழை தவிர வேறு மொழி அறியாத நானே தமிழனாக திராவிடம் அங்கீகரிக்கவில்லையே?வீட்டில் கன்னடமும்,தெலுங்கும் பேசும் நண்பர்கள்தான் உண்மை தமிழர்களாம்.
இந்த சாதி வெறிக்கு வித்திட்டது ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சிகள்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற குறுகிய நோக்கம் கொண்டவையே.எல்லோரையும் சாதியை சொல்லி பழிக்கும் நவீன தீண்டாமை இவர்களால் உருவானது.(மனுவின் பெரும் கொடுமை தீர்ந்து படும் நாளில் வெறுப்பு சார்ந்த இந்த திருப்பணி அரசியல் காரணங்களுக்காக நடந்தேறி நிறுவன மயமாக்க பட்டு சாதி கட்சிகள் கொடி கட்டி பறக்கின்றன)
பூணல் மறுத்து, மக்களை கலப்பு மணம் செய்வித்து பெரியாரை கொண்டாடும் எங்கள் போன்றோர் மூலையில் வேடிக்கை பார்க்கின்றோம்.என்ன ஒரு இழிவு. தமிழர்கள் இப்படியா பிரிந்து நிற்பது?கற்றறிந்தோர் இன்னும் அழ்ழமாக இந்த வெறியில் திளைப்பது இன்னும் ஆபத்தான போக்கு .(கல்யாண மாலை கண்டதில்லை?)
நான்... எனது.... என்ற அகந்தை கலந்த சுயகௌரவம் பாரிஸ்டரையே சாய்த்தது. நான்தான் சட்டம்... நான்தான் எல்லாம் என்று மூச்சுக்கு முன்னூறு தரம் தனக்கு 'இணை'யில்லை என்று பெருமைப்படுத்திகொள்ளும் கௌரவப்பித்து பிடித்த ஆணவக்காரர்களின் ஒட்டுமொத்தத் திமிரையும் ஒரே ஒரு சிவாஜி ரஜினிகாந்தாக எப்போதோ நமக்குக் காட்டிவிட்டார் சுந்தரராஜன். அதையெல்லாம் பார்த்துவிட்டுத்தானே இப்போது சிலர் போடும் 'அறிவாளி' ஆட்டங்களையும் பார்க்கிறோம்.
வெறுப்பு கொள்ள வைக்கும் கேரக்டரின் மீது அனைவரையும் வெறி கொள்ள வைக்க நம் வேங்கை சிவாஜியால் மட்டும்தானே முடியும்?
தங்கள் பணி போற்றத்தகுந்தது. தொடருங்கள் சுந்தர்.
Unprecedented audience turnedup for the occasion of Shanthi 50 Golden Years function. Inspite of ill health on that day I have
attended the function and witnessed the celebration. In one way this movie broke the record of PP in terms of attendance of the
audiences.
நடிகர் திலகம் சிவாஜி திரி நண்பர் திரு. கோபால் அவர்களுக்கு வணக்கம்.
தங்களது ஒன்று விட்ட அண்ணன், அக்கா, மற்றும் உறவினர்கள் சாலையில் நடந்த
கார் விபத்தில் அகால மரணம் அடைந்த செய்தி நண்பர் திரு. கலைவேந்தன் அவர்கள் மூலமாக அறிந்து மிக்க துயர் உற்றேன்.
இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களை இழந்து வாடும் தங்களுக்கு
சக்தியையும், மன வலிமையையும் எல்லாம் வல்ல இறைவன் கிடைக்கச் செய்வார்
என்கிற நம்பிக்கையில் பிரார்த்திக்கிறேன்.
மிகவும் தாமதமாக இரங்கல் தெரிவிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தங்களுக்கு
ஆறுதல் அளிக்கும் என்று நம்புகிறேன்.
நட்புடன்
ஆர். லோகநாதன்.