நிலாப் பாடல் 43: "ஆடை கட்டி வந்த நிலவோ"
--------------------------------------------------------------------
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
மற்றொரு T.R. மகாலிங்கம் அவர்களின் பிரபலமான பாடல். என்ன அற்புதமான மயக்கும் குரல். தஞ்சை டி.என். ராமையா தாஸ் அவர்கள்தான் இந்த பாடலையும் எழுதியிருக்கிறார். இந்த படம் விஜயா-வாஹினி சம்பந்தப்பட்டதா இல்லையாவென்று ராஜேஷ்தான் சொல்லவேண்டும். அப்படியே நாயகியின் பெயரையும் சொல்லுங்கள்.
கற்பனை பலமாகத்தான் இந்த பாடலில் உள்ளது. நிலாவே ஆடை கட்டிக் கொண்டு வந்ததாக சொல்லும் கவிஞரின் கற்பனை என்ன குறைவானதா?
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை
ஆ...ஆ..ஆ..
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?
ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?
--------------------------------------------------------------------------------
https://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y
அமுதவல்லி அழகாய் இருந்தால் இப்படிதான் ஆடை கட்டி வந்த நிலவோ என்று சொல்வார்களோ?