1982-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தலைவர் சென்று பார்த்தபோது எடுக்கப்பட்ட படம். அப்போது பத்திரிகைகளில் வந்தது. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
இதுவரை நமது திரியில் இடம் பெறவில்லை என்று நினைக்கிறேன். மிக அரிய புகைப்படம். 1957ம் ஆண்டு தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணாவுக்கு கலைவாணர் பிரசாரம் செய்தார். அப்போதைய சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன். நன்றி திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
குழந்தையை மாற்று என்று தலைவர் கூறியிருக்கலாம். அந்த தாயார் கேட்டுக் கொண்டதற்கிணங்க குழந்தையுடன் நடித்தாலும், சளி ஒழுகிய குழந்தையின் மூக்கை அதன் தாயாரைக் கொண்டோ, அல்லது தனது உதவியாளர்களைக் கொண்டோ சுத்தம் செய்யச் சொல்லியிருக்கலாம். ஆனால், தானே அருவறுப்பு பார்க்காமல் குழந்தையின் மூக்கை 2, 3 முறை சுத்தம் செய்திருக்கிறார் என்றால் தாயினும் சாலப் பரியும் கருணை உள்ளம் எத்தனை பேருக்கு வரும்?
நன்றி சைலேஷ் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கைக்குட்டையை திரு. புத்தூர் நடராஜன் ஒருபுறம் இழுக்க, மறுமுனையை முழு பலத்துடன் தலைவர் இழுக்கிறார். கால்கள் மடங்கி, கொஞ்சம் விட்டால் பின்னால் விழுந்து விடுவது போன்று நிற்கும் தோற்றத்தில் இருந்தே முழு பலத்துடன் இழுப்பது தெரியும். எதிர்பாராமல் இருவரில் யாருக்காவது பிடி நழுவினால், கீழே விழாமல் இருக்க ஊன்றிக் கொள்ளவும் பேலன்சுக்காகவும் இடது கையை சற்று உயரே தூக்கியபடி இருக்கிறார். ஆனால், தலைவரின் முகத்தில் அந்த கவர்ச்சிகரமான காந்தச் சிரிப்பு மட்டும் மாறவில்லை பார்த்தீர்களா?
நன்றி வினோத் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் 2வது வரைதான் படித்தார் தலைவர். வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை. ஆனாலும், ஆங்கில செய்தித்தாளை படித்து சிம்லாவில் ஸ்நோ பால்ஸ் என்று தெரிந்து கொண்டிக்கிறார். கொண்டிருக்கிறார்.
முன்பெல்லாம், தமிழக அரசின் செய்திபிரிவு சார்பில் படம் தொடங்கும் முன் நியூஸ் ரீல் போடுவார்கள். அவற்றில் தலைவர் முதல்வராக இருந்தபோது, பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி, திரு. மொரார்ஜி தேசாய், திரு.ராஜிவ் காந்தி, ஜனாதிபதியாக இருந்த திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி, திரு. கியானி ஜயில் சிங் ஆகியோரோடு தலைவர் பேசும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களோடு தலைவர் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் தலைவர்.
மேலும் விமானம் ஏறும் முன் நாளிதழ் கிடைத்திருந்தால் சிம்லா திரும்பிப் போய் பனி மழையில் படம் எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். தொழிலில் என்ன ஒரு அக்கறை. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மாணவர்களை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கட்சிகள் மத்தியில், மாணவர்களைப் பார்த்து அரசியலுக்கு அடிமையாகாதீர்கள், கற்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறுகிறார் தலைவர்.
ஜனாதிபதியின் தமாஷைப் பார்த்தீர்களா?
நாளை ஆசிரியர் தினம். அதையொட்டி புரட்சித் தலைவர் வாழ்த்து சொல்வதைப் போல ஒரு செய்தி.
அரிய ஆவணப் பதிவுக்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
1000 பதிவுகளை கடந்த தலைவரின் பக்தர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(நான் கொஞ்சம் லேட்..)
http://i61.tinypic.com/w2fyvt.jpg
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து, அதிலும் தலைவரின் அட்டகாச ஸ்டில்லோடு வந்து, அதற்காக சிரமம் எடுத்து வடிவமைப்பு செய்து வாழ்த்து சொல்லியிருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட தலைவரின் தீவிர பக்தர் திரு.முத்தையன் அவர்களுக்கு நன்றி.
ஆஹா...முகத்தைக் காட்டினாலே போதும் 30 ஆயிரம் வாக்குகள் விழும் என்று பேரறிஞர் அண்ணா வர்ணித்த இந்த முகத்தைக் காண எவ்வளவு லேட் ஆனால்தான் என்ன?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...
அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க. "எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. "இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன். அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார். "நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார். இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம். நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம். நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... "வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை. அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறது'னு அப்ப முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன். அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்'' -இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...-1-210157.html