-
30th August 2015, 09:01 PM
#11
Junior Member
Diamond Hubber
நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....
அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ... நாங்க பேசிக்க மாட்டோம்...சண்டைக்கி நான் தான் காரணம் ரொம்ப சின்ன புள்ள மாதிரி எதுக்காச்சும் நான் சண்ட போட்டுக்கிட்டே இருப்பேன்..... ஆனா படத்துல அது தெரியாம பாத்துக்கிட்டோம்.... அதுக்கும் எம்.ஜி.ஆர் தான் காரணம் என் உதவியாளர் கிட்டே அவர் சொல்லி விட்டார்.... "
உங்க மேடத்தோட கோபத்த ஷூட்டிங் ஸ்பாட்ல காமிக்க வேணாம்னு சொல்லுங்க......" என்று சொல்லி விட்டார்.... அதே போல நானும் நடந்து கொண்டேன்.....
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...
அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....
"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....
எனக்கு அது கூட அப்போ பெருசா தெரியல...... ஆனா நான் என்னோட அடுத்த தெலுங்கு சூட்டுக்கு போய் இருக்க அங்கே இதே போல ப்ராப்லம்... அந்த ஹீரோ குழந்தையை திட்டி அந்த பேபியை மாத்த சொல்லீட்டார்..... எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,
"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....
நான் தெலுங்கு மேட்டரை சொன்னேன்..... வியப்போடு கேட்டார்.... கூடவே இன்னொரு விஷயம் சொன்னார்....
"நீ இதை எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காதே..... அப்புறம் உனக்கு பட வாய்ப்பு இல்லாம போய்டும்" னு சொன்னார்..... என்னோட பட வாய்ப்பு பற்றியும் கவலைப்பட்டார் அவர்..... அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!
Thanks to Sri. Mayil Raj
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th August 2015 09:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks