Thanks for your Compliments, sivajisenthil Sir..!
விண்ணுலக முதல்வர் பார்வதி புத்திரர் கணேசர்..!
கலையுலக முதல்வர் ராஜாமணி மைந்தர் கணேசர்..!
Printable View
அன்பு பம்மலார் சார்,
வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலையா என்ன..?. 1964-ல் 'கர்ணன்' மகா காவியம் உருவான வரலாற்று ஏடுகளை கொஞ்சமும் எதிர்பாராவண்ணம் கர்ணனின் 101வது நாளன்று வெளியிட்டு திகைக்க வைத்துவிட்டீர்கள். படம் உருவான வரலாறு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது.
படித்தபோது மனதில் தோன்றிய சில ஆதங்கங்கள், சில கேள்விகள், சில ஐயங்கள்....
பேசும்படம் இதழில் இந்த விவரங்கள் வெளிவந்ததை அன்றைய மக்கள் படித்துத்தானே இருப்பார்கள்?. அப்படியிருந்தும், சிறுத்தையை வைத்து வித்தை காட்டியவர் பின்னால் போனார்களே அது ஏன்?.
சென்னை, மதுரை தவிர கோவை, சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, குடந்தையின் அன்றைய ரசிகர்களுக்கு எல்லாம் என்னவாயிற்று, ஏன் இப்படத்தை 100 நாட்களைக் கடந்து ஓடச்செய்யவில்லை?. இதைவிட சாதாரண படங்களையெல்லாம் ஓடச்செய்திருக்கிறார்களே. கர்ணனின் தகுதிக்கு குறைந்த பட்சம் பதினைந்து அரங்குகளிலாவது 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டாமா?.
அப்பன் பாட்டன் பட்ட கடன்களை பிள்ளைகள் தீர்ப்பது போல, தங்கள் அப்பன் பாட்டன் செய்த தவறுக்கு பிள்ளைகள் பிராயச்சித்தம் தேடும் முகமாக இன்றைய இளைய சமுதாயம், அதே கர்ணனை (சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமில்லாத) பெரிய திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓட வைத்து, மறு வெளியீட்டில் யாருக்கும் கிடைக்காத பேரை, பேறை நடிகர்திலகத்துக்கு கிடைக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.
'கர்ணன்' மறு வெளியீட்டின் 100-வது நாள் போஸ்ட்டர்கள் கண்களையும் மனதையும் வருடுகின்றன.
கடைசியாக ஒருகேள்வி....
தற்போது கர்ணன் வெளியான மார்ச் 16 அன்று, போட்டியாக ராயப்பேட்டை தியேட்டர் ஒன்றின் முன் நின்ற 15 பேரடங்கிய சிறு கும்பலைபார்த்துவிட்டு, 'யாரோ' கர்ணனை வென்றுவிட்டதாக எழுதிய பத்திரிகைக்காரன் இருக்கிறானா, செத்தானா?.
அன்புள்ள சிவாஜிதாசன் சார்,
ஞான ஒளியின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றை உருக்கமாக பதியவைத்து, நெஞ்சை நெகிழ வைத்து விட்டீர்கள். அந்தக்குறிப்பிட்ட காட்சியில் அவருடைய கன்னத்து தசை மட்டும் துடிக்கும் காட்சியை குளோசப்பில் காட்டி நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசெல்வார் தலைவர். யாருக்காகவோ பார்த்துப்பார்த்து சிறப்பாக உருவாக்கிய சவப்பெட்டி, தன் மனைவிக்கே ஆகிப்போன கொடுமை அறிந்து, சவப்பெட்டியின் மீது வீழ்ந்து அழும்காட்சி என்றைக்கும் நம் மனதை விட்டு அகலாத ஒன்று.
தங்கள் பதிவுக்கு நன்றி.
டியர் பம்மலர் கர்ணன் uruvana vitham, porut selavu, கதை தயாரான கதை,
செட்டிங்க்ஸ், நட்சத்திரங்கள், துணை நட்சத்திரங்கள்,
எவ்வளவு சிரமங்கள் என்பது போன்ற தகவல்கள் பிரமிக்க
வைக்கின்றது. இந்த தகவல்கள் இப்போது நீங்க தந்திருப்பது
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
Dear Mr Pamallar,
Great article by Chitra. Amasing informations.
Dear M/S.Swamy/Vasu/Karthik/Murali/Raghavendar/Sivaji Dasan/Sivaji senthil/Sankar/KCS/Raghu/All other Friends,
My peak work load starts from now and too many business visitors and personal visitors in next 3-4 months. Though,I will be going thru developments of thread whenever time permits but my postings will be infrequent. Kindly excuse me for next 3-4 months and my heart is always with this thread. I was holding on with vigour because of Karnan. All of you are very very enjoyable company and I will be with you with full vigour on the next possible occasion.Thanking you all and I feel very much near to you all.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'ராஜா' திரைப்படத்துக்காக சென்னை வாலாஜா சாலையில் அண்ணா சிலைக்குப்பின்புறமாக வைக்கப்பட்டிருந்த அற்புதமான பேனர் மற்றும் கட்-அவுட் பற்றி எழுதி, நினைவுகளைப் பின்னோக்கித் தட்டி விட்டுவிட்டீர்கள்.
மஞ்சள் பேண்ட் மஞ்சள் ஃபுல்ஷர்ட், கழுத்தில் கருப்பு ஸ்கார்ப் பறக்க, இரண்டு கைகளையும் அகலவிரித்து நிற்கும் போஸ் மிக ஃபேமஸான ஒன்று. பாட்டுப்புத்தகம், பத்திரிகை விளம்பரம் அனைத்திலும் அந்த போஸ்தான் இடம்பெற்றிருக்கும். இத்தனைக்கும் பாலாஜியோடு போடும் சண்டைக்காட்சியில் சில நொடிகளில் வந்துபோகும் கட்டம் அது.
மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த கட்-அவுட், பட்டிக்காடா பட்டணமா படத்தில் மட்டுமல்ல, அப்போது எடுக்கப்பட்ட நடிகர்திலகம் அல்லாத பல படங்களிலும் இடம்பெற்றிருந்தது. மவுண்ட் ரோட்டில் வாகனம் போகும் காட்சியென்றால், நிச்சயம் அந்த பேனரைக்காட்டி ரசிகர்களின் கைதட்டலை அள்ளுவார்கள். கனிமுத்துப்பாப்பாவில் ஜெய்சங்கர் பைக்கில் பாடிக்கொண்டு போகும் 'காலங்களே.. காலங்களே' பாடலில் கூட அந்த பேனரும் கட்-அவுட்டும் இடம்பெற்றிருந்த நினைவு வருகிறது. (நாணல் படத்தில் 'விண்ணுக்கு மேலாடை' பாடலின்போது சாந்தியில் திருவிளையாடல் ஓடிக்கொண்டிருக்கும் பேனரைக்காட்டுவது போல).
நடிகர்திலகத்தின் முழு போஸில் இடுப்புக்கு கீழ்ப்பகுதி பேனரில் வரையப்பட்டு, இடுப்புக்கு மேல்பகுதி பிளைவுட் கட்-அவுட்டில் செய்யப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் கருப்புவெள்ளை கேமரா கூட இல்லாததால் அதைப்படம் எடுத்து வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. நினைவுகள் என்னும் கேமராவில் மட்டுமே பதிவாகியுள்ளது.
பல பெரிய பெரிய சாதனைகளை அசாதாரணமாகச்செய்யும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள். தேவி பாரடைஸ் திரையரங்கின் ஷீல்டு கேலரியில் இடம்பெற்றிருக்கும் 'ராஜா' 100-வது நாள் கேடயத்தை (கிரஸண்ட் மூவீஸ் வழங்கியது) தங்கள் செல்கேமராவில் எடுத்து, இங்கே பதிப்பிக்க வசதிப்படுமா?. சிரமப்பட வேண்டாம், வசதிப்படும்போது செய்யுங்கள்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
ஞான ஒளி மற்றும் ராஜா படங்களுக்கு தாங்கள் அளித்த ஸ்டில் அணிவகுப்பை மீண்டும் பார்வையிட்டேன். என்ன அழகு புகைப்படங்கள். உங்களுக்குப் பிடித்த ஞான ஒளியும் எனக்குப்பிடித்த ராஜாவும் ஒன்றாக கைகோர்த்து திரியில் வலம் வரும் காட்சி அருமை.
ராஜாவில் தலைவர் இத்தனை ட்ரெஸ் அணிகிறாரா என்பது ஸ்டில்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதிலும் லாக்கப்பில், மனோகருக்கு அடுத்த 'செல்'லில் அடைபட்டிருக்கும்போது அணிந்திருக்கும் உடை (அறிமுகக்காட்சி 'போலீஸ்காரனை விரோதம் பண்ணிக்காதே, நண்பனாகவும் பழகாதே. பொறுமையா இரு') சிம்ப்ளி தூள். படம் முழுக்க அட்டகாசமான ஒளிப்பதிவு. தாங்கள் அளித்த கடைசி ஸ்டில்லில் தலைவரும் செல்வியும் எதிரெதிரே அமர்ந்திருக்க, கேமராவை லோ ஆங்கிளில் வைத்து போலீஸாரை மேஜைக்கு கீழே காட்டியிருப்பதெல்லாம் அப்போது புதுமை.
ராஜாவுக்கு சப்போர்ட் செய்தவர்கள் வரிசையில் அந்த ஆரஞ்சு முடிக்காரரைக்கூட (அவர் பெயர் என்ன?) சேர்த்துள்ளீர்கள். மனோகரையும், கே.கண்ணனையும் சண்டைக்காட்சியைத் தரவேற்றும்போது சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டீர்களா?. அதுவும் சரிதான். 'ட்ரிப்பிள் சந்திரபாபு' மட்டுமே மிஸ்ஸிங்.
சிரமப்பட்டு தொகுத்த தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.
The movie Raja, we all know that was a remake of Hindi Johny Mera Naam starring Dev Anand and Hemamalini. But, NT has taken this movie on his shoulders with a different style and acting originality of his own. Be it the climax scene where the villains beat his mother and NT was unable to reveal but Balaji suddenly bursts out, we were spell bound on NT's acting which was not done upto the mark by Dev Anand. Besides, NT had sported a very slim, stylish, handsome and youthful look with fantastic and decent costumes in line with movies like Enga Mama, Sumathi En Sundari.... The song picturization of Kalyanapponnu and Irandil Ondru always linger in our minds. MSV's riproaring title music was on par with the James Bond theme music. The film was in toto a clean family entertainer that can be enjoyable all times. Chandrababu's tripe roles was also quite amusing and hilarious. At that time Raja was receiving accolades as a fast moving action movie with a right mix of sentiments. The supporting characters Rangarao, Manohar, Balaji.... all had done a neat job. Another movie in which NT excelled Shammi Kapoor's Brammachari was Enga Mama. What an array of sweet songs and touching narration!
Dear Pammalar Sir/Vasudevan Sir/Raghavendran Sir,
Unfortunately, due to ill-health of my father whom i discharged from Vijaya Health Center yesterday late evening, I could not come for the event today at Sathyam. I missed an opportunity to meet all of you at one venue today. I am glad my friend Mr.Anand,(Nick Name here is SPChoudry)met all of you had was sharing with me the discussion. He is lucky to have met all of you. Am not that much lucky i guess. Anyway, I am confident that one or the other day, I will be able to meet you all.
I was also told that KanDrishti Padaamal irukka oru sila Divya Filmsai patriya Kandana poster were stuck near Sathyam by the same old bunch of Jokers?