கோவையில் நீதி படம் வெளியீட்டு புகைப்படங்கள் அருமை
நன்றி முரளி சார்
Printable View
கோவையில் நீதி படம் வெளியீட்டு புகைப்படங்கள் அருமை
நன்றி முரளி சார்
நீதி
இந்த படம் தான் அவன் தான் மனிதன் படத்துக்கு பிறகு வர போகும் படம் என்பது இந்த திரியின் மூலமாக தெரிய வந்த உடன் வீட்டில் என் தாயிடம் தெரிவித்தேன் , என் தாயார் , மற்றும் தந்தை சிவாஜி ரசிகர்கள் (என் தந்தை MGR படங்களும் பார்க்க செய்வார் , ஆனால் எங்கள் அம்மா நோ chance )
நான் எல்லா படங்களும் பார்ப்பேன்
எனக்கு ஆரம்பம் முதலே நீதி படம் பிடிக்காது , காரணம் ராஜா என்ற ஸ்டைல் படம் பார்த்த பின் , வித விதமாக டிரஸ் போட்டு கொண்டு கலக்கிய சிவாஜி சார் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்பதே என் கேள்வி
என் சாய்ஸ் NT ராஜா படத்துக்கு பிறகு jewel thief என்ற படத்தில் அல்லது sacha joota என்ற படத்தில் நடித்து இருக்கலாம்
இப்படி பட்ட நான் நீதிக்கு போவதில்லை என்று சொன்ன உடன் என் அம்மா உடன் ஒரு argument , நான் பெரிய தப்பு செய்வது போலே என் தாய் argue செய்வதை பார்த்த உடன் எனக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லை
இந்த படத்தின் DVD வாங்கி பார் என்று பல வருடம் முன்பே என்னை நச்சரித்து வாங்க வைத்தவரும் அவரே
சரி படத்துக்கு போலாம் என்று முடிவு செய்து கிளம்பும் நேரத்தில் , என் தாய் ஒரு வேலை விஷயமாக வெளியே சென்று விட நான் மட்டும் சென்றேன்
ஒரு பக்கம் ஒரு புதிய படத்தை பார்க்க போகும் எண்ணம் , காரணம் கதை மட்டுமே ஞாபகம் இருந்தது , மற்றும் எதுவுமே நினைவில் இல்லை
திரை அரங்கை அடைந்த நேரம் மாலை 5.30 , அதற்குள் நம் நண்பர்கள் கலக்கி கொண்டு இருந்தார்கள் , ஆட்டம் , பட்டம் , மாலை , தரை தப்பட்டை , அவன் தான் மனிதன் படத்தின் ரிசல்ட் பற்றிய பேச்சு , அடுத்து வர போகும் படம் என்ன என்பதை பற்றிய சம்பாஷனை (அவர்களுக்கு பிடித்த படம் வர வேண்டும் என்ற ஆசை )
இப்படி பார்த்து கொண்டே டிக்கெட் எடுக்க மறந்து விட்டேன் , கடைசியாக ஒரு டிக்கெட் எடுத்து விட்டேன் , (நண்பர்கள் ROBOCOP சென்று விட்டார்கள் )
டிக்கெட் எடுத்த உடன் உள்ளே இருக்கும் போஸ்டர்கள் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்
மணி அடிக்க 5 நிமிடம் முன்பு , யானையை பார்த்து விட்டு உள்ளே சென்றேன் (எப்போ இந்த திரை அரங்கத்துக்கு சென்றாலும் இப்படி செய்வது என் வழக்கம் )
நம் இருக்கை கிழே என்பதனால் மெதுவாக சென்றேன்
உள்ளே திரும்பி பார்த்தேன் - சில இருக்கைகள் காலி (பாசமலர் போலே இல்லை ) அப்பாடா என்று அமர்தேன் . உள்ளே ஒரு vibrant atmosphere .
censor certificate தெரிந்தது
சிங்கம் வந்தது (titles )
நீதி
ஆஹா நம் தலைவர் என்ட்ரி - freeze ஷாட் என்ன applause
என் மனசாட்சி அமைதி ஆனது - படத்தை bias இல்லாமல் பாரு என்று சொன்னது
அப்புறம் என்ன நீதி பார்க்க ஆரம்பித்தேன் , பிரிண்ட் மோசம் இல்லை அதனால் நன்றாக பார்க்க முடிந்தது
நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற பாடல் response terrific
court காட்சி நன்றாக ரசிக்க பட்டது, அவர் கழுதை உடன் , பேசும் காட்சி , மனோரமா வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாக receive செய்ய பட்டது
இடைவேளை முடிந்து படம் intense mode க்கு சென்றது , நடிகர் திலகம் அந்த வீட்டின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும் காட்சிகளில் , அவர் வயலில் வேலை செய்யும் காட்சி , மற்றும் கல்யாணத்தை நடத்தி வைக்கும் காட்சியில் கிளாப்ஸ்
படம் முடிந்து படம் எப்படி என்ற கேள்வி வீட்டில் , என்ன பதில் சொல்ல
வெறுக்க வில்லை இந்த படத்தை என்பதை தவிர
Attachment 3132Attachment 3133Attachment 3134
அன்புள்ள ராகுல்ராம் - உங்கள் நீதி பதிவை படித்தேன் - நன்றாகவே எழுதி உள்ளீர்கள் - பாராட்டுக்கள் .
ஒரு விஷயத்தை கவனித்தீர்களா ?? இந்த திரியில் தான் நமக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - நம் தலைவரை எவ்வளுவு வேண்டுமானாலும் திட்டலாம் , படங்கள் சரியில்லை என்று தயிரியமாக சொல்லலாம் , நாம் சொல்வதை பக்கம் பக்கமாக எழுதி நியாயபடுத்தலாம் - நம் எல்லா உறவினர்களையும் இழுத்துகொண்டும் வரலாம் - யாரும் தடுக்க மாட்டார்கள் - எங்கோ ஒரு வரியில் நம் தலைவரை பற்றி ஒரு வார்த்தை தப்பி தவறி புகழ்ந்து எழுதி இருந்தால் அந்த சந்தோஷத்தில் திட்டினதை விட்டு விடுவார்கள் --- பரந்த மனப்பான்மைக்கு இந்த திரி ஒரு உயரிய எடுத்துக்காட்டு !!
ஆனால் இதுவே மற்ற எந்த திரியில் நடந்திருந்தாலும் , உங்கள் ID நீக்கபட்டிருக்கும் , நீங்கள் இருக்கும் திசையை நோக்கி , பாட்டில்கள் பறந்து வந்திருக்கும் , ஆசிட் தீர்ந்து போயிருக்கும் .
ஒரே மாதிரி நடிப்பவர்கள் “நடிகர்” என்ற சொல்லிற்கே களங்கம் விளைவிப்பவர்கள் - நம் தலைவர் அப்படி பட்டவர் அல்ல - ஒவ்வுறு படத்திலும் ஒரு புதியதை தருபவர் - Box officeஇல் out of box acting இல் ஒரு புதுமையை ஏர்படுத்தினவர் - ஒரு விநாடி யோசியுங்கள் - ராஜா மாதிரி நீதி அமைந்து இருந்தால் - படம் உன்னதமான வெற்றியை அடைந்து இருக்குமா - இப்படி ஒவ்வுறு மறு வெளியீட்டிலும் வெற்றி வாகை கிடைத்திருக்குமா -
---- ஒரே மாதிரியான முக பாவம் , கதை , மசாலாக்கள் , பல கதா நாயகிகள் - ஆனால் அதில் ஒருவருக்கு மட்டுமே ஹீரோவுடன் இணைய வாய்ப்பு கிடைக்கும் - மற்ற கதாநாயகிகள் , கதா நாயகனுடன் மேல் விழுந்து , புரண்டு , கற்பனைக்கு சற்றும் இடம் தராமல் கட்டி பிடித்து - எல்லாம் முடிந்தபின் , "அண்ணா" என்று சொல்லவேண்டும் - ஹீரோ "தங்கச்சி" என்று சொல்லி மீண்டும் ஆசை தீர கட்டி பிடிப்பார் - இவர்கள் எங்கே ?? நம் தலைவர் எங்கே ?? - ஒரே மாதிரியாக அவர் நடித்திருந்தால் அவருடைய கடைசி படம் - பராசக்தி 288 என்ற பெயருடன் வெளி வந்திருக்கும் ....
"தர்மம் எங்கே ?" என்ற படம் சற்றே "சிவந்தமண்" சாயலில் இருந்ததால் அடைய வேண்டிய வெற்றியை அடைய முடியவில்லை - அந்த படமும் வெற்றி அடைந்து இருந்தால் , நினைத்து பாருங்கள் - 1972 - guinness book of world records இல் முதல் இடம் பெற்றிருக்கும்
உங்களுக்கு நீதி பிடித்துத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை - ஒரு படத்தை பிடிப்பதும் , பிடிக்காததும் அவர் அவர்களின் சொந்த விருப்பம் - ஆனால் என்ன இல்லை இந்த படத்தில் – “வெறுக்க வில்லை “ என்று மட்டும் சொல்ல ???
---- ஒரு லாரி டிரைவர் , சந்தர்ப்ப வசத்தால் கொலைகாரனாக ஆகிவிடுகிறார் - அந்த கொலைகாரனின் குடும்பமே அவனை வெறுக்கின்றது - ஒவ்வாருவரையும் , தன் அன்பால் , தியாகத்தால் தன் வசம் ஈர்க்கிறான் - அந்த வீட்டு தலைவியை தவிர - நினைத்திருந்தால் பணத்தை கட்டிவிட்டு , அவன் தன் வழியே போயிருக்கலாம் - ஆனால் அவன் அன்பை நாடினான் - அதனால் எல்லோரையும் வெல்ல முடியும் என்று நம்பினான் - அவன் நம்பிக்கை அவனை கை விட வில்லை - எவள்ளவு உயர்ந்த கருத்துக்கள் - புத்தன் , ஏசு , காந்தி சொன்னதை போல் -------------
நாம் நம் தலைவரையும் , அவரது திறமையும் சரியாக இன்னும் புரிந்து கொள்ள வில்லை - உண்மையான ஒளிவிளக்கு அவரது படங்கள் - நிஜமான கலங்கரை விளக்கம் அவருடைய பட கதைகள் - மொத்தத்தில் ஒரு விடிவெள்ளி - அவரை புரிந்து கொண்டால் - நாம் இந்த திரியில் உழைக்கவும் , அவரை பற்றி எழுதவும் எவ்வளவு அதிர்ஷ்ட்டம் செய்துள்ளோம் என்று புரியும் - உங்களை குறை சொல்லவில்லை - இன்னும் சற்று அவரையும் , அவர் படத்தையும் , நடிப்பின் சாகசங்களையும் புரிந்துகொள்ளுங்கள் என்றே உரிமையுடன் உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன் ரவி
:):smokesmile:
டியர் ராகுல்ராம்,
திரு.ரவி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி உண்மையிலேயே "என்ன இல்லை இந்த படத்தில் – “வெறுக்க வில்லை “ என்று மட்டும் சொல்ல ??? " என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், தங்களின் தாயார் இந்தப் படத்தைப் பார் என்று சொன்னதில்தான் நடிகர்திலகத்தின், நீதியின் வெற்றி இருக்கிறது.
JILLA - A BY-PRODUCT OF THANGAPADHAKKAM ? - MEDIA SPECULATES !
http://247latest.com/vijay-as-cop-mo...nga-pathakkam/
" எதிர் பார்ப்பை " படித்த , பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு ஒரு பெரிய தண்டனை தரலாம் என்று நினைக்கிறேன் - அதிகமாக பேசபடாத , அலச படாத ஆனால் அருமையான , அற்புதமான நடிப்பையும் , பாடல்களையும் கொண்டுள்ள மிக சிறந்த நான்கு படங்களை என் கண்ணோட்டத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன் - நீங்கள் மனமார திட்டும் வரை ------
கோபாலின் சுனாமி அலைகள் வேகமாக வரும் முன் என் பதிவுகளை முடித்து கொள்ள முயற்சி செய்கிறேன்
முதலில் நாம் "மூன்று தெய்வங்களை" சந்திக்க போகிறோம் , நம் உண்மையான பாசத்தினால் , பக்தியினால் அவர்களை " பேசும் தெய்வம் " ஆக்கி - அவர்களே நம்மை என்றும் " காக்கும் தெய்வமாக "இருந்து இதுதான் நமது "ப்ராப்தம்" என்று மகிழ வைக்க போகிறார்கள் -
நீண்ட பதிவுகள் - கண்டிப்பாக நெகிழ வைக்கும் பதிவுகளாக இருக்கும் - நீங்கள் ஒரு பதிவை பாராட்டுவதால் எவ்வளவு தொல்லைகள் பார்த்தீர்களா - ஒரு பெரிய தண்டனைக்கு நீங்கள் எல்லோரும் உள்ளாகிரீர்கள் !!!!!!!
அன்புடன்
ரவி
My Dear Beloved N.T. Fans,
I have been out this form for more than an year. Reason is Gauravam. This is the impact what N.T can do in everyone life. Today My results were announced and i have completed my Graduation in Law. And will be an profession as Advocate Shortly. Further I'm pursuing my Master Degree in Law.
I dedicate this Professional Degree to our God Nadigar Thilgam who was an Sole Inspiration and My Beloved Fans!. I want to reciprocate my gratitude to our Legend only by completing this Degree. Hence i was waiting for this day.
Now again i'm back in this Golden Thread to contribute.
My heartfelt thanks to all our N.T. fans who wished my success.
JAIHIND
M.Gnanaguruswamy
மூன்று தெய்வங்களை சந்திக்கும் முன் , அந்த வருடத்தில் வந்த படங்களை பற்றி சற்றே தெரிந்து கொள்வோம் . ----
மொத்தம் 10 படங்கள் - பல பேருக்கு சில படங்கள் பிடிக்காமல் இருக்கலாம் - ஆனால் சில பேர்களுக்கு பல NT படங்கள் பாடங்களாக , வெற்றியின் மறு பெயர்களாக அமைந்தது என்பது முற்றிலும் உண்மை
1. NT யின் 144வது படம் " இரு துருவங்கள் " - PSV pictures - படம் வசூலில் சோகை போகாவிட்டாலும் 100 நாட்கள் என்ற இலக்கை அடைய முடியவில்லை . ------------ தலைவர் ஒரு decoit லீடராக நடித்து அமக்கள படுத்துவார் - பாடல்கள் தேனிலும் இனிய சுவை
2. 145வதாக "தங்கைக்காக " - அருமையான படம் - வெண்ணிற ஆடை நிர்மலா ஜோடியாக நடித்த ஒரே படம் - வசூலில் ஒரு கை பார்த்தது
3. 146வதாக "அருணோதயம்" - பாடல்கள் இனிமை - படம் சோகை போகவில்லை
4. 147வதாக "குலமா குணமா " - அன்பளிப்புக்கு பிறகு ஜெய்ஷங்கர் மீண்டும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த அருமையான குடும்ப பாங்கான படம் - பெண்கள் நடுவே மிகவும் பேசப்பட்ட படம் .
5. 148வதாக " ப்ராப்தம்" - ஒரு பூர்வ ஜென்ம கதை - பல பேரால் ஏற்று கொள்ள முடியவில்லை - மனதை கசக்கி பிழியும் நடிப்பு - அருமையான பாடல்கள் நிறைந்த படம்
6. 149வதாக " சுமதி என் சுந்தரி " - எந்த படத்தை பற்றி பேச பல நாட்கள் தேவைப்படும் - அருமையான , ஒரு எதார்த்தமான படம் - SPB யை புகழின் உச்சிக்கே சென்ற படம் - பாடல்கள் அத்தனையும் தேனில் உறிய பளா ....
7. 150வதாக "சவாலே சமாளி " - வெற்றிக்கு மறு பெயர்
8. 151வதாக "தேனும் பாலும் " - இரு ஜோடிகள் - கடைசியில் ஒருவரும் " அண்ணா " என்று மற்ற படங்களில் சொல்வதுபோல சொல்லமாட்டார்கள்
9.152வது நம் "மூன்று தெய்வங்கள்" - இதைத்தான் முதலவதாக அலச போகிறேன்
10. 153வது --- "பாபு" - இந்த படம் சிறப்பு என்று சொல்வது சக்கரை தித்திக்கும் என்று சொல்வதுபோல - படம் கண்ட வெற்றி திரை உலகையே ஒரு திருப்பி போடா வைத்தது -" ரிக்க்ஷாகாரன் " மதிப்பை வானளாவ கொண்டு சென்ற படம்
அன்புடன் ரவி
தொடரும்
:):smokesmile:
Welcome and hearty congratulations - you exhibited not only sheer perseverance but also a commitment to complete your degree - NT remains an inspiration to many - a few acknowledges , the rest shy away in confessing that - all the best and looking forward to strength this thread lawfully and legitimately - all the best
:):smokesmile:
எனது சகோதரரை இழந்தேன் !
எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது அந்த நாள் - தொடர்ந்து இரண்டு நாள் கூட்டத்தில் வரிசையில் நின்றுதான் டிக்கெட் கிடைத்தது - அது பராசக்தி திரைப்படம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படம். அவருடைய பிரமாதமான ஒரு நடிப்பு ...பிரமிக்கும்படியான அவரது நடிப்பை பற்றிதான் அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் பேச்சு...! எங்கு பார்த்தாலும் சிவாஜி craze தான் .
அப்போது நான் நரசு ஸ்டுடியோவில் தயாரிப்பு உதவியாளனாக பணியாற்றிய நேரம் . என் முதலாளி சிவாஜியை தன்னுடைய துளிவிஷம் படத்திற்கு புக் செய்த விஷயம் கேள்விப்பட்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! பராசக்தியில் அவரை பார்த்த நாளிலிருந்து அவரை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்ற இனம் புரியாத ஒரு ஆவல் என்னில் ஆட்கொண்டிருந்தது .
சிவாஜி ஸ்டுடியோவிற்குள் வந்தவுடன் நரசு எங்களை அவரிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தவிஷயம் அவர் ஒரு திரை நட்சத்திரமாகவே நடந்துகொள்ளவில்லை. ஸ்டுடியோவில் வந்த பிறகு எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்ததை அறிந்து, எனக்கும் படத்தில் ஒரு நல்ல வேஷம் கொடுக்க சொன்னார். அப்படிதான் நான் சினிமாவிற்கு அறிமுகமானேன்.
சிவாஜி அவர்கள் என்னதான் பிரபலமான நடிகராக கிட்டத்தட்ட எல்லா தயாரிப்பு நிறுவனங்களுடனும் நாயகனாக அப்போது நடித்துகொண்டிருந்தாலும், அனைவரிடமும் மிகுந்த நட்புடன் பழகுவார்.
என் வாழ்கையில் நான் சிறிது சாதித்திருக்கிறேன் என்றால் அதற்க்கு இந்த மூவருக்குதான் நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். 1) சுப்பராமன் (என்னை பள்ளியில் நாடகத்தில் நடிப்பு சொல்லி நடிக்க வைத்தவர் ) 2) திரு.ஜெமினி கணேசன் ( என்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தியவர். கோட் பாதர் என்று கூட சொல்ல்வேன் ) 3) திரு. சிவாஜி கணேசன்
1954 முதல் 1960 வரை எனக்கும் திரு சிவாஜிக்கும் சிறிது தொடர்பில்லாமல் இருந்தது. 1960இல் சிவாஜிக்கு சஹோதரனாக திரு ஜெமினி நடிப்பதாக இருந்தது படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. அவர் என்னை அந்த கதாபாத்திரம் செய்ய சொன்னார். பிறகு அவர் என்னை சிவாஜியிடம் (மீண்டும்) அறிமுகம் செய்து வைக்கையில், " என்னமோ எனக்கு பாலாஜியை தெரியாதது போல அறிமுகம் செய்து வைக்கிறாயே. எனக்கு நல்லா தெரியுமே அவன " என்றார்.
என்னுடையது மிக பெரிய வேடம் அந்த படத்தில். தமிழகம் முழுவதும் படித்தால் மட்டும் போதுமா மிக பெரிய வெற்றி பெற்றது. அதற்க்கு பிறகு, சிவாஜி, திரைப்படத்தில் இரெண்டாவது கதாநாயகன் பாத்திரங்களுக்கு என்னை சிபாரிசு செய்ய தொடங்கினார் .
எங்களுடைய நட்பு அப்படி தொடங்கி மென் மேலும் வளர்ந்தது. நான் திரைப்படம் தயாரிக்கும்போது அந்த நட்பு மேலும் பலம் வாய்ந்ததாக அமைந்தது.
1965இல் திரு ஜெமினி அவர்களை வைத்து முதல் படம் தயாரித்தேன். எனது நன்றியை அவருக்கு உரிதாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தயாரித்த திரைப்படம் அது.
என்னுடைய இரெண்டாவது படம் தங்கை. அதில் எப்படி சிவாஜியை நடிக்க அணுகினேன் தெரியுமா ? ஒரு நாள் நான் ஜெமினி ஸ்டுடியோவில் அவரை சந்தித்தேன்...பிறகு " அண்ணே நான் ஒரு படம் தயாரிக்கரேன். அதில் நீங்க நடிக்கணும் என்றேன்.
அதற்க்கு அவர்...போடா..நீயாவது தயாரிகரதாவது..தமாஷ் பண்ணாதே ..என்றார். அவர் அப்போது நான் கூறியதை நம்பவில்லை. பிறகு நான் உறுதியான ஒரு முடிவுடன் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டு, என்னையே உற்று பார்த்தார். பிறகு " நல்ல கதை, இயக்குனரை தயார் செய்..நான் படம் செய்கிறேன் உனக்கு என்றார்.
இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்..தங்கை சண்டைகாட்சிகள் கொண்ட படம். அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் மிகசிறந்த ஒரு குணசித்திர நாயகனாக இருந்தார் . அந்த சமயத்தில் M G ராமசந்திரன் அவர்கள் தான் சண்டைகாட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.
சிவாஜிக்கு சண்டைகாட்சிகள் உள்ளதால் சிறிது சந்தேகமாக இருந்தது, இது தனக்குள்ள இமேஜிற்கு சரியாக வருமா என்று . மக்கள் இதை விரும்பாமல் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் பாதிக்கபடுவார்களே என்று கருதினார்.
ஆனால் நான் விடவில்லை அவரை, அவருக்கு புதிய ஒரு இமேஜ் இதன் மூலம் நிச்சயம் உருவாகும் என்று உறுதியளித்தேன் ...இருந்தாலும் பாதி மனதுடன் தான் நான் கூறியதை ஒத்துகொண்டார். அவருக்கு, மக்கள் நிச்சயம் தன்னை ஒரு சண்டை போட தெரிந்த நாயகனாக ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று பலமாக நம்பினார்.
அதிர்ஷ்டவசமாக தங்கை மிக பெரிய வெற்றி பெற்றது. தங்கை வரும் வரை MGR மட்டுமே சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல் பெற்றார். தங்கைக்கு பிறகு சிவாஜிக்கும் சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல்கள் பாராட்டுக்கள் கிடைத்தன. அதற்க்கு பிறகு அவரது படங்களில் ஒரு சண்டைகாட்சியாவது இருக்கும்.
அதியற்புதம் நிறைந்த நடிகர் அவர். ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் காட்சி நன்றாக வந்துள்ளதா என்று கேட்பார். அவர் இருக்கும் நிலையில் அவர் அந்த கேள்வி கேட்கவேண்டிய அவசியமே இல்லை அதுவும் நடிப்பை பொறுத்த வரையில். இருந்தாலும் அவர் கேட்பார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உத்தரவாதம் அவருக்கு மிகவும் அவசியம்.
சில சமயங்களில் நான் இது சரியில்லை என்று கூறியதுண்டு. இன்னொரு டேக் போகலாம் என்பேன். உடனே அவர் "பாலாஜிக்கு இந்த ஷாட் பிடிக்கவில்லை . நான் திரும்பவும் நடிக்கிறேன், எடுங்கள் " என்பார். சரியாக எதுவும் செய்யவேண்டும் என்பது அவருக்கு மிக முக்கியம்..........
தயாரிப்பாளர் பாலாஜியின் நினைவலைகள் தொடரும்...!
இந்த பாடலை கேளுங்கள் - நகைச்சுவைக்கே சிகரம் வைத்தால்போல ! எத்தனை உணர்ச்சிகள் , எவ்வளவு முக பாவங்கள் - சிலர் நடிக்கும் சமயத்தில் , அவர்கள் சிரிக்கும் போது , நமக்கு அழுகை வரும் - அவர்கள் அழும்போது ( முகத்தை கைகளால் மூடிகொள்வார்கள் என்பது வேறு விஷயம்) நமக்கு சிரிப்புதான் வரும் - உணர்சிகளை தேட வேண்டியிருக்கும் - அவர்கள் நடிக்கும் எல்லா படங்களும் நகைச்சுவைதான் - எதிரிகள் சூழும்போது தனியாக நின்று கொண்டு சிரிப்பது , அவர்கள் துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருக்கும் என்று ஹீரோவுக்கு மட்டுமே தெரியும் - எத்தனை வில்லன்கள் வந்தாலும் , அவர்களை இன்முகத்துடன் அடித்து விரட்டி, நேரம் இருந்தால் அவர்களை திருத்தி , அவர்களை காந்திய
தலைமுறைகள் தாண்டி அத்துணை இளைஞர்களையும் தன் நடிப்பாலும் முக பாவத்தாலும் மிக உயர்ந்த வாயசைப்பாலும் கவர்ந்திழுத்த சகல கலை வேந்தன் உலக தமிழ்ர்கள் வேண்டிப்பெற்ற கலை கடவுள் சிவாஜி அவர்களின் நடிப்பில் உருவான இந்தப்பாடலை you tube ல் எண்ணற்ற இந்த கால இளைஞர்கள் மனமுவந்து பாராட்டி பார்த்து ரசித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் AIRTEL SUPER SINGER ல் இந்த பாடலை பாடியதற்காக மட்டுமே திரு. திவாகர் அவர்களுக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார்.
எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே பாடங்களாக இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி
இப்பாடலை பதிவு செய்து சிறப்பித்த திரு.ரவி அவர்களுக்கு நன்றி
Jilla - a by-product of thangapadhakkam ? - media speculates !
திரு.ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு
இது போன்ற பதிவுகள் போட்டு தேவையற்ற சர்ச்சை எற்பட வழி வகுக்க வேண்டாம். மேலும் எண்ணற்ற விஜய் ரகிகர்கள் நமது நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவும் பேனர் வைக்கும் அளவுக்கு தீவிரமாகவும் இருக்கிறார்கள்.
So dont put message like by product --- sub product
அன்புள்ள ரவிகிரண் - பாலாஜியின் இந்த பேட்டி இந்த திரிக்கு புதியது அல்ல - அவரின் நட்பும் , சிவாஜியின் மீது வைத்திருந்த மரியாதையும் - உலகம் அறியும் - சில வாக்கியங்கள் அவரே சொன்னது தானா என்று சந்தேகம் வருகின்றது - உதாரணத்திற்கு அவருடைய " தங்கை" படம் மூலம் தான் சண்டை காட்சிகளில் கைத்தட்டல் வாங்கினார் என்பது மிகவும் நகைச்சுவை கலந்த கற்பனை -
NTயின் மல்யுத்த சண்டை - கார்த்தவராயன் படத்தின் மூலம் உலக பிரசித்தி பெற்றது - நமது திரியிலேயே இந்த சண்டையை பற்றி புகழாதவர்கள் யாரும் இருக்க முடியாது - அதே போல உத்தம புத்திரன் கத்திச்சண்டையை யாருமே மறுக்கவோ , மறக்கவோ முடியாது - இப்படி பல படங்களை சொல்லிகொண்டே போகலாம் - என்னவோ தெரியவில்லை யாருடைய பேட்டியும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கின்றது - யாரோ சிலர் பல கற்பனைகளையும் சேர்த்து விட்டு பேட்டியை கெடுத்து விடுகிண்டார்கள்
நீங்களும் உண்மையில் சில வாக்கியங்களை ( சொல்லாத ????) ரசித்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்
அன்புடன் ரவி
:):smokesmile:
Dear Mr.SP
If you do not understand what I had put ...please ask...! Do not conclude by yourself and give a new direction to whatever I have put !
I know what am doing ! I had mentioned Media Speculates ! Further there is nothing wrong in sharing the news where NT is part of it.
Convey your views absolutely no issues ....BUT, don't try to command me OK !
Dear Sir,
I think what Mr.Balaji referred was something like Social themed film fights ( Dishyum...Dishyum..)
Ofcourse, the malyudham and sword fight there were many pictures...nothing to deny.
Further, whatever being mentioned here in this thread, nothing is new but old wine in new bottle only. It was published long back in English, this is a translated version which I had put for the benefit of few of our friends from salem and mannargudi.
Rgds,
RKS
மூன்று தெய்வங்கள்
:)
இந்த படம் - சிவாஜி என்ற சிங்கத்திற்கு தயிர் சாதம் கொடுத்த படங்களில் ஒன்று - ஆனாலும் தனது முத்திரையால் , படத்தை தூக்கி நிறுத்திருப்பார் - பாடல்கள் மிகவும் அருமை - இந்த படத்தை நான்கு வகைகளில் அலச ஆசைபடுகிறேன்
1. படத்தின் சிறப்புக்கள்
2. சில ஆவணங்கள் / சிறந்த பாடல்கள் - அதன் சிறப்புக்கள்
3. சில சிறந்த காட்சிகள்
4. கதை/ நடிப்பு - கண்ணோட்டம்
தொடரும்
அன்புடன் ரவி
அதுமட்டுமல்ல ரவி சார்
பாபு திரைப்படம் வரும் சமயத்தில் சில படங்கள், பல நட்சத்திர பட்டாளம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்டகாசமான சண்டைகாட்சிகள், ஒரு படத்தில் பல வில்லன்கள், ஈஸ்ட்மன் கலர், இப்படி பல POSITIVE அம்சங்களுடன் திரைக்கு வந்தது.
பாபு வரும் பொழுது தேவி பாரடைஸ் திரையரங்கில் நீரும் நெருப்பும், KS கோபாலகிருஷ்ணன் அவர்களின் பக்தி படம், மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் நடிப்பில் ராஜ வீடு பிள்ளை ஆகியவை ரிலீஸ் செய்யப்பட்டன.
இதில் பாபு கருப்பு வெள்ளை மற்றும் ரொம்ப சோக ரசம் பிழியும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டன. மீண்டும் ஒருமுறை 70 வயது முதியவர் கெட் அப். ஜோடி வேறு கிடையாது. நம் ரசிகர்களுக்கு ஏக வருத்தம் போங்கள் !
சாந்தியில் பாபு ...அந்தபக்கம் நீரும் நெருப்பும்..! மறுமுனையில் KSG படம் ..இப்படி சுத்தி ஒரே positive நமக்கு மட்டும் கருப்பு வெள்ளை பாபு..!
இங்கு தான் திறமை என்பது எவ்வளவு பெரிய சொத்து நமது நடிகர் திலகத்திற்கு என்பதை உணரவேண்டும். இத்துனை விஷயங்களுக்கு மத்தியில் பாபு மிக பெரிய வெற்றி பெற்றது.
படத்தை தனது நடிப்பு என்ற ஒரு விஷயத்தை வைத்து அப்படி தூக்கி நிறுத்தியிருப்பார் பாருங்கள் ! அடேயப்பா நினைத்தாலே சிலிர்க்கும் !
தமிழகம் எங்கும் பட்டி தொட்டி எங்கும் " வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்ப " மற்றும் " இதோ எந்தன் தெய்வம் முன்னாலே " ஆட்சிதான் !
தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான பட்டம் கிடைக்கவேண்டிய படம். அப்போதைய திமுக அபிமானி சௌந்தரா கைலாசம் என்கிற பெண்மணியின் அரசியல் சித்து வேலைகளால் ஒரிஜினல் ரிக்க்ஷா ஓட்டுனருக்கு கிடைக்கவில்லை. !
திரை உலகில் அனைவருமே இவருக்கு கொடுக்காதது மிக பெரிய கேவலம் என்று இன்றும் கருதுவதுண்டு.
இதன் தாக்கம் கெளரவம் படத்தில் திரு வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு காட்சியாகவே வைத்திருப்பார் "திறமைக்கு இந்த ஊர்ல மதிப்பே இல்லையா. பட்டம் பதவி எல்லாம் POLITICS WITH RECOMMENDATION உக்கு தானா ? " !
Attachment 3136
Hearty welcome to mr goruswamy and also best wishes for your compeltion of LAW sudies, all the very best,
Ethirparathatu 1954 movie very well discussed un a simple manner please keep it up and go for some more 50-60 movies, I remember vert well having seen in early sixties sunday morn shows at MAHARANI north madras perhaps our kartik knows well.
Ravi sir COUWDRY SIR and as usual our kiran doing neat job regularly THREE CNEERS,CHEERS,
Any updates MR kc sir, reg pending case.
Nostalgia
A sample: That was the time when Kannadasan and actor Sivaji Ganesan were not on friendly terms.
Hence Kannadasan was not called upon to pen lyrics for Ganesan's films. But when a producer was keen to have the inimitable lyricist work in the Ganesan film he was making, Ganesan agreed.
Composing had begun and Sivaji Ganesan was also present. He was just staring at the poet, because they had still not made up. The friction was palpable.
M. S. Viswanathan was waiting with his harmonium for Kannadasan to spell out the words. Generally the poet would dictate and his assistants would note down the lyric.
But that day Kannadasan took the writing pad and pen in his hands, jotted down the lines and gave them to MSV. One glance at the pad and MSV got tense.
He judiciously returned it telling Kannadasan to read it out himself. The words read: `Ennai Yaar Endru Enni Nee Paarkiraai ... ' Sivaji Ganesan burst out laughing, walked up to Kannadasan, hugged him and said, "Muthaiah (Kannadasan's actual name)! You've not changed at all!"
Reproduced Article
A lion in his own lifetime - Ramanujam Sridhar
``SHOULD we go home?'' asked the father anxiously of his 9-year-old son who was sobbing hysterically in the darkened theatre hall. The theatre (I guess) was Chitra. The film (I am sure) was Pasa Malar and the boy in question (I am certain) was me. Sivaji Ganesan, who for the best part of four decades made eyes moist without batting an eyelid plunged millions into tears when he breathed his last.
It is perhaps not fashionable to proclaim oneself an unabashed admirer of a film maker, particularly a Tamil one at that. But then, one cannot forget the range of emotions which one experienced, first as a growing boy and then as a maturing (?) adult by watching, analysing and discussing the same films over and over again for several years.
It is difficult to pin down the precise nature of Sivaji Ganesan's influence on the post-Independence-born Tamilian. Being one of those, let me put down a few things which we experienced as children and young adults. We most certainly would have been better students had it not been for the great man's films. We bunked class more often than not. Even a theatre in Tambaram (easier to get tickets) was more interesting than the college in Nungambakkam (which, incidentally, was the best college of its time). It was easier to remember Kattabomman's interactions with Jackson, word for word, than it was to remember the theorem of Pythagoras angle to angle.
We all believed that we were elder brothers born to love, protect and sacrifice (for) their younger sisters. We all believed that families are meant to be united (hence joint) and brothers meant to be forgiven when they were in the wrong. We believed (conveniently) that education wasn't everything. We saw likeminded emotional youngsters burn their terylene shirts after being influenced by Kappalottiya Thamizhan. We assumed that Bharati looked like Sivaji Ganesan in Kai Kodutha Deivam.
Yes, we were young, impressionable perhaps gullible even. But, honestly, the actor was a great influence on our lives, perhaps more so in the life of my friend who saw Nenjirukkum Varai 27 times! I think the influence of being a good son, loving brother and a preventer of the disintegration of the joint family was very profound on us. More so in the context of the Chithis and the Vazhkais of today, where people urge their own children to kill, maim or jail their loved ones. Thankfully, we were spared these heinous influences. For however villainous M.R. Radha was, he at least made you smile.
Sivaji Ganesan was good and very often a great actor. Good actors are good because of the things they can tell us without talking. When they are talking, they are the servants of the dramatist. ``It is what they can show the audience when they are not talking that reveals the fine actor,'' said Cedric Hardwicke.
Early in his career, Villupuram Chinnaiah Ganesan came under the influence of arguably the best dramatist of that time, Karunanidhi, whose radical dialogues he brought to life. His dialogue delivery revolutionised the way films were made in the fifties. Films, which had 60 songs suddenly, gave way to films which had six minutes of dialogue delivery in one stretch.
Sivaji (one knows) had a phenomenal capacity to absorb and memorise his lines, which were invariably read out to him. He also had the distressing habit of knowing the lines of his co-actors, sometimes even better than they did, causing embarrassment. In fact, his dialogue delivery showed a whole generation of people how Tamil was to be spoken. Directors cashed in on this and realised perhaps much later that his ability extended beyond mere dialogue delivery. And yet, it is very often the voice of the lion which is at the top of mind when we recall the great man.
Perhaps it' is also important to remember the times Sivaji lived in. This was before teleprompters, slow motion replays and ready availability of DVD cassettes of the best imported films that one could watch time and time again to borrow a look or a gesture. I would see him come on Friday night to Rajakumari theatre in Pondy Bazaar to watch Marlon Brando in The Ugly American. He was a great observer, always seeking inspiration. Rumour has it that barrister Rajnikanth in Gowravam was a famous, pipe-smoking industrialist whom Sivaji had observed and subsequently portrayed, to win hearts, if not awards. In fact, that was a major disappointment for the thespian.
Lesser mortals (and actors) than him won more awards and he found to his chagrin that it was easier to get recognition at Cairo and France than at New Delhi. Such is the way of jurists and politicians. Sivaji faced equal if not greater disappointments in politics where he was marginalised. To cap it all, on the personal front, the travails of his grandson-in-law were perhaps the most difficult of blows to face.
Sivaji was an actor's actor. There was hardly anyone who wasn't influenced by his acting style, whether it was a schoolboy acting as Othello on Parents' Day, an amateur artist mourning his mother's death in a play or unabashed admirers of him such as Sivakumar and Y. G. Mahendran who took pride in aping him.
In fact, it is no exaggeration to say that all Tamil actors found Sivaji's style, mannerisms, range of emotions and dialogue delivery having an influence on them as individuals and actors. A lot of people (myself included) felt that Sivaji had a tendency to overact. Sivaji himself was aware of this criticism and he once said something very relevant. He said Tamilians in particular and Indians in general were warm, effusive, expressive of emotions, prone to laugh loudly and sob openly at funerals. Even the men. Not stiff upper lip like the British who ruled us but open, sunny, emotional, like the Italians. Perhaps the actor knew the pulse of the audience. He knew his consumer.
`I am not a poet' is a famous line from a song in a Sivaji Ganesan starrer, Padithal Mattum Podhuma. It needs a poet of Kannadasan's stature to pay tribute to the lion-hearted actor who perhaps missed out in not venturing on to the small screen. But his contribution to Tamil cinema and life is not a small one. He leaves behind a race that is devastated and only just realising the value of the great actor who had made them laugh, made them cry and made them feel. Today every Tamilian feels the void.
(Ramanujam Sridhar is CEO, brand.comm, a communications consultancy.)
Thanks
http://www.hinduonnet.com/businessli...s/183044sa.htm
SAI VIGNESH - AIRTEL SUPER SINGER TRIES HIS HANDS ON THE SONG
http://www.youtube.com/watch?v=1Ayo5htdeg8
விரைவில் கோவை ராயலில் நடிக சக்ரவர்த்தியின் 142வது காவியம் "சொர்க்கம் " - ( Thanks to Ravi for correcting the number)
- பொன்மகள் வருகிறாள் ...சொல்லாதே யாரும் கேட்டால்.எல்லோரும் தாங்கமாட்டார் !
Attachment 3138
Attachment 3139
Attachment 3140
Attachment 3141
அன்பு நண்பர் ரவி,
நாட்கள் செல்ல செல்ல உங்கள் எழுத்துக்களில் மெருகேறி பழுதுகள் [தமிழ் ஸ்பெல்லிங் mistakes] நீங்கி படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, உங்கள் உதாரணங்களும் சற்றே கேலி கலந்த சொற்றொடர்களுமாய் ரசிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.
Hearty Congrats Mr. Guruswamy! Hope you continue to taste success in Masters also!
அன்புடன்
தினத்தந்தியில் வெளிவரும் ஆரூர்தாஸின் சினிமாவின் மறுபக்கம் தொடரை படித்து வருகிறேன். நான் தினத்தந்தி வாங்குவதில்லை என்பதால் அதை ரெகுலராக படிக்க முடிவதில்லை. அதை வாங்கும் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்ல நேரிடும் போது விட்டுப் போனவற்றை எடுத்து வைத்து படிப்பது வழக்கம். அந்த வழக்கப்படியே அண்மையில் 5,6 வார இணைப்பை படித்தேன். இந்த தொடர் வெளிவரும் முத்துச்சரம் என்ற இணைப்பில் டெலிவிஷன் விருந்து என்று ஒரு பக்க செய்தி மலரும் இருக்கும். TV-யில் வரும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள் இடம் பெறும்.
3,4 வாரங்களுக்கு முந்தைய முத்துச்சரம் இணைப்பை பார்த்துக் கொண்டிருந்த போது கட்டம் கட்டி வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தி கவனத்தை கவர்ந்தது. அதில் என்ன எழுதியிருந்தது என்றால் "சென்ற வாரம் சன் லைஃப் தொலைக்காட்சியில் தங்கமலை ரகசியம் திரைப்படம் ஒளிப்பரப்பாகியது. அதில் சிவாஜி பி.எஸ்.வீரப்பா கத்தி சண்டைக் காட்சியில் நடிகர் திலகத்தின் வாள் வீச்சு சண்டை ஆச்சரியப்படுத்தியது. பின்னாட்களில் குடும்பக் கதைகள் அவரை இழுத்துக் கொண்டதன் காரணமாகவோ என்னவோ அவரின் இந்த திறமையை பெரிய அளவில் நம்மால் காண முடியாமல் போனது".
இதை எழுதியவர் ஒரு neutral நபர். ஒரு வாரத்தில் எத்தனையோ படங்கள் பல் வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பபடுகிறது.99.9% படங்களைப் பற்றி விமாசனங்கள் எதுவும் வருவதில்லை. அப்படியிருக்க இதப் படத்தை பற்றியும் அதில் வரும் நடிகர் திலகம் அவர்களின் சண்டைக் காட்சியை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்றால் அதுதான் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பொது மக்களுக்குகிடையே கிடைக்கும் வரவேற்பு. மேலும் அவர் அனைத்து வகைப் பயிற்சிகளையும் தெரிந்து வைத்திருந்தார் என்பதும் தெரிகிறது.
அன்புடன்
அருமை நண்பர் திவ்யா சொக்கலிங்கம் அவர்கள் பாராட்டுக்குரிய ஒரு செயலை நேற்று செய்திருக்கிறார். தன் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள. பெரியாம்பட்டியில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பள்ளியின் 75- ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவர்களை நல்வழிப்படுத்த தன் கர்ணன் திரைபடத்தை இலவசமாக் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறார். இந்த நல்ல செயலுக்கு நன்றி சொக்கலிங்கம் சார்!
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...93743950_n.jpg
அன்புடன்
உண்மை முரளி - சிவாஜி படங்கள் தான் நல்ல வழியை கட்ட கூடியவை - நல்ல பாடங்களை சொல்ல கூடியவை - நீதியை பார்த்து , குடிப்பதையே நான் இருந்த பேட்டையில் பலர் நிருத்திகொண்டனர் - பெண்களை எவ்வளவு கண்ணியமாக நடத்தவேண்டும் என்று அவர் படங்கள் தான் எடுத்துகாட்டாக இன்னும் உள்ளன - இதை பலர் உண்மையில் உணர்ந்து உள்ளனர் . அதில் திவ்யா சொக்கலிங்கமும் ஒருவர் .
அன்புடன் ரவி
அன்புள்ள ரவிகிரண் - நீங்கள் என்னதான் சொன்னாலும் - பேட்டி என்ற பெயரில் சிலர் நம் தலைவரை மட்டம் தட்டும் போது மனது அந்த பேட்டியை பாராட்ட மறுக்கின்றது - முதலில் ஒருவர் சிவாஜியே தன்னை " அழு மூஞ்சி " என்று சொன்னதாக குறிப்பிட்டார் - இன்னொருவர் " தங்கை" க்கு பிறகு தான் அவருடைய டிஷ்யும் டிஷ்யும் பெருத்த பாராட்டுதல்களை பெற்றது என்று சொல்லியுள்ளார் - இவர்கள் nt யின் நெருங்கிய நண்பர்கள் வேறு !
அவர் எந்த வேடத்தையும் ஏற்க தயங்கினதில்லை - அதில் சோடை போனதும் இல்லை - அவரை சரியாக பயன் படுத்திக்கொள்ள நாமும் தவறி விட்டோம் , பல தயாரிபாளர்களும் தவறி விட்டனர் - தயிர் சாதத்தின் அளவு அதிகமாக ஆனதிற்க்கு சில தயாரிபாளர்களும் , திரை கதையுமே காரணம் -- அவர் அல்ல
அன்புடன் ரவி
கோபாலின் சுனாமிக்காக பயந்து கொண்டே மூன்று தெய்வகளை அலச ஆரம்பித்தேன் - ரவி கிரணை சற்றே மறந்து விட்டேன் - அவர் போடும் பதிவுகளின் வேகத்தை பார்க்கும் போது , " எப்பொழுது என் அலசல்களை முடிக்க போகிறேன் " என்ற பயம் வந்து விட்டது - சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன - ஆனால் மற்றவர்கள் போடும் பதிவுகளின் வேகத்திற்க்கு ஈடு கொடுக்க முடியவில்லை --- எல்லோரும் இந்த நான்கு படங்களை பற்றிய தகவல்களை , அனுபவங்களை என்னுடன் இந்த திரியில் பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்குமே !!!!
அன்புடன் ரவி
:):smokesmile:
டியர் ரவி சார்,
தாங்கள் எடுத்துக்கொண்ட 10 படங்களும் முத்தான படங்கள்தான். முதலாவதாக எடுத்துக்கொண்ட மூன்று தெய்வங்கள் - தாங்கள் குறிப்பிட்டபடி நடிகர்திலகத்திற்கு வேண்டுமானால் தயிர்சாதமாக இருக்கலாம். ஆனால் அந்த ரோலை வேறு யாரும் செய்திருந்தால், முத்துராமனையாவது விட்டுவிடுவோம், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன் போன்றவர்கள் முன்னாள் காணாமல் போயிருப்பார்கள். நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் எக்காலத்திலும் பார்த்து ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படத்தில் இதுவும் ஒன்று.
ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு..
இரெண்டுமே உணவுவகைதான்.
அறுசுவை பிரியாணி என்று உண்பவர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பிரியாணி உணவு அறுசுவை என்று நாம் கேள்விப்பட்டதுண்ட என்று தெரியவில்லை.
நல்ல தரமான குடும்ப படங்கள் இரண்டு வகைப்படும்.
ஒன்று ஒரு மனிதனுடைய வாழ்கையில் நடக்கும் கஷ்டங்கள் ..அதை அந்த மனிதன் எப்படி சந்திக்கிறான் ...எப்படி அதிலிருந்து மீள்கிறான் எப்படி அவனால் அவன் குடும்பம் பலன் அடைகிறது என்பதை கொண்டு தயாரிக்கப்படும் படங்கள் - இதில் நாயகன் மற்றும் குடும்பத்தார் ஒன்று செல்வந்தர்களாக அல்லது lower middle class வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
மற்றொன்று - கஷ்டமே இல்லாத குடும்பம் ..(எங்குமே நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயம்) ஒரு குடும்பம் என்றால் அதில் ஏதாவது பொருளாதார மற்றும் உறவினர் வகை துன்பங்கள் அல்லது குடும்பத்தினர் நல்வாழ்வுக்கு வழி இல்லாத கஷ்டம் இப்படி இருக்கதான் செய்யும்.
ஆனால் இந்த வகை படங்களில் நாயகன் கஷ்டமே படமாட்டான். குடும்பத்திலும் பெரிதாக ஒரு சவால் விடும் கஷ்டம் முக்கால்வாசி இருக்காது. ஏதோ ஒரு சின்ன வருத்தம் இருக்கும் அவ்வளவே.
ஆனால் இது போன்ற கதைகளில் நடைமுறையில் ஒத்துவராத, நடக்கவே நடக்காத வில்லன் அவன் அடியாட்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுடன் நாயகன் 4 அல்லது 5 முறை கைகலப்பது போன்ற காட்சிகள், மற்றும் போலீஸ் நாயகனை வானளாவ புகழ்வது என்னமோ நாயகன் காவல் துறையை விட சாதுர்யமானவன் என்ற வகையில் புகழ்ச்சி இருக்கும். இது போன்ற கதைகளங்கள் சில காட்சிகளை தவிர பெரும்பாலும் சினிமாத்தனம் நிறைந்து இருக்கும்.
வாழ்கையில் ஒரு சாதாரண மனிதன் என்னெவெல்லாம் சந்திக்க மாட்டானோ அவற்றை எல்லாம் சந்திப்பது போல எடுத்திருப்பார்கள்.
நான் குறிப்பிட்டதில் , முந்தையது ஹைதராபாத் பிரியாணி ரகம். பிந்தையது அறுசுவை.
முன்னதால் ஒரு தனிமனிதனுக்கு நிறைய பலன்கள் உண்டு. வாழ்கையில் நாம் நடைமுறையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் ...அவற்றை எப்படி கையாளவேண்டும்...தவறான முடிவு, கய்யாளளால் என்னென்ன விபரீத விளைவுகள் இப்படி பல விஷயங்களை அழுத்தமாக கையாண்டிருப்பார்கள்.
திரைப்படத்தை பார்பவர்களுக்கு சோகமாக இருப்பது மன உளைச்சல் சிறிது ஏற்படுவது ஆகியவை ஒரு சிறந்த நடிகனின் வெற்றியை குறிப்பதாகும், நல்ல வசனகர்த்தாவின் வெற்றியை குறிப்பதாகும் ஒரு நல்ல இயக்குனரின் வெற்றியை குறிப்பதாகும். மரக்கட்டை போன்ற மனிதன் இருப்பனாகில் எந்த சோகமும் அவனை பாதிக்காது. அல்லது எதை பற்றியும் ஏன் தன்னை பற்றியும் தன குடும்பத்தை பற்றியும் கூட சிறிதும் கவலை இல்லாத மனிதர்களுக்கு இது போன்ற படங்கள் துளி கூட பிடிக்காது...என்னப்பா இவ்வளவு அழுவை என்று கூறுவார்கள்.
ஆனால் ஒரு குடும்ப பொறுப்பு உள்ள குடும்ப தலைவர்கள் நல்ல நெறிகொண்ட மனிதர்கள் இது போன்ற படங்களை மிகவும் விரும்புவார்கள். காரணம் அவர்களுக்கு இந்த படங்களில் இருந்து நல்ல ஒரு LEARNING கிடைக்க வாய்பிருப்பதால் ! சோகம் வரும்போது நாம் சோகமாக தான் இருக்கிறோம் என்பது உண்மை. சோகம், கஷ்டம், துன்பம் சிறிதும் இல்லாமல் மனித வாழ்கை இல்லை !
பின்னது - அறுசுவை உணவு - நடைமுறைக்கு ஒத்துவராத வாழ்கையில் மிக மிக குறைவாக நாம் சந்திக்கின்ற காட்சியமைப்புகள், நீங்களே கூறுங்கள்...நாம் நம் வாழ்கையில் தினமும் வில்லனும் 10-15 அடியாளும் என்றாவது சந்தித்ததுண்ட அல்லது அவர்களுடன் நாம் தன்னந்தனியாக சண்டயிட்டதுண்டா ? ஒரு தனிமனிதன் கோர்ட்டில் போய் ஜட்ஜ் அவர்களயே தாறு மாறாக தனிஷ்டப்படி கேள்வி கேட்க முடியுமா ? அல்லது ஒரு காவல் துறை உயர் அதிகாரியை அடிக்கதான் முடியுமா ? இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராத விஷயம் மட்டுமல்ல , ஒரு சில சந்தர்பங்களில் தனிமனிதனை தவறான நினைப்பு வாழ்கையை பற்றி நினைக்கவைக்கும் வகையில், ENTERTAINMENT என்பதற்காக மட்டுமே எடுக்கப்படும் படங்கள் - இதில் யதார்த்தம் பதார்த்தம் அளவிற்கு கூட இருக்காது ! ஆனால் பார்பதற்கு அழகாக இருக்கும்...-மனதிற்கு பிடித்ததாக இருக்கும்.. இது அறுசுவை உணவு !
இதில் இரெண்டுமே அதிகம் உண்டால் ஆபத்துதான்.
ஆகையால்தான் மக்கள் இரெண்டுக்கும் சம வாய்ப்பு அளித்தாலும் பிரியாணியை அதிகம் விரும்புகின்றனர் !
உலகளவில் நாம் பார்த்தால் அறுசுவை உணவை விட, பிரியாணி விரும்பி உண்பவர்கள் அதிக அளவில் உள்ளார்கள் !
அறுசுவை உணவு தினமும் உட்கொள்ள முடியாது. திகட்டிவிடும். அதே போல தான் பிரியாணியும்...தினமும் வயிறு நிறைய பிரியாநியயே சாப்பிடமுடியாது ...
ஆனால் ஓரிரு கரண்டி வேண்டுமானால் தினமும் உண்ணலாம் ! திகட்டாது !
Dear Ravi sir, Ravi kiran Surya sir,
you both are doing a great job of posting articles in a frenetic pace , especially ethirpaarathathu was too good
Moondru Deivangal is one of my favourite movie of NT reason light hearted subject, It is a perfect entry point for starters to watch NT movies
Thanks for acknowledging my article on Needhi KC sekar sir & ravi sir
One of the NT movies which I did not understand its significance reason being stupendous Raja effect
thanks for your comments , will look deeply into NT movies rather than blindly seeing it
Babu - மறு வெளியீடு அடிக்கடி..அடிக்கடி வரவில்லை என்றாலும் அவ்வப்போது தலைநீட்டும் திரைப்படம். அதாவது முதல் தர ஹைதராபாத் பிரியாணி ரகம் என்று வைத்துகொள்ளுங்களேன் !
தயாரிபாளருக்கும், ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து இடங்களில் உள்ள விநியோகஸ்தர்களுக்கும் மிகபெரிய லாபத்தை முதல் வெளியீடிலயே ஏற்படுத்தி கொடுத்த படம் தமிழகத்தின் பெருமையாம் நடிகர் திலகத்தின் "பாபு"
ஒரு சில நடிகர்கள் படங்கள் போல் பாபுவோ மற்றும் நடிகர் திலகத்தின் நல்ல தரமுள்ள படங்களோ அடிக்கடி அடிக்கடி வருவதில்லை என்றொரு சொற்றொடர் நிலவி வருகிறது !
தலைனீட்டும்பொது எப்போதும் பல அரங்கு நிறைவு விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படம். சில வருடங்களுக்கு முன்னர் மறுவெளியீடு கண்டபோது வெள்ளி மாலை, சனிகிழமை இரவு, ஞாயிறு மேட்டுணீ மற்றும் மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !
நடிகர் திலகத்தின் படங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப technology transformation செய்ய விநியோகஸ்தர்களால் விரும்பப்படும் முதல் முதன்மையான படங்களாகும்.
காரணம் பல ...நல்ல குடும்பகதைகள். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்ககூடிய பல படங்கள் நடிகர் திலகத்துடயது மட்டுமே என்றால் அது மிகையாகாது ! மேலும், தமிழக கலாசாரம், பண்பு, அன்பு, பாசம், பக்தி, இப்படி பல விஷயங்கள் அவர் படங்களில் உள்ளதுதான் காரணம். தை சிறந்த முறையில் மக்களிடம் வெளிபடுத்தும் திறன் அவர் ஒருவரை தவிர மற்ற எவருக்கும் இருக்குமா என்றால் இருக்காது என்பது தான் பெரும்பான்மையானவர்கள் பதிலாக இருக்கும்.
முதல் வெளியீடிலயே பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்கள் விநியோகஸ்தர்களையும் தயாரிபாலர்கலயும் வசூல் மழையில் நனைய செய்வதனால்...அவர் படங்கள் பல ஆட்களுக்கு கை மாற்றம் செய்யபடுகிறது. அவர்களும் ஒரு சில வெளியீடு செய்து மிகுந்த பணம் சம்பாதித்தவுடன், அதை மற்றவர்களுக்கு விற்காமல் மற்றவர்களும் பலன் அடையவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அப்படியே வைத்திருந்து கமுக்கமாக உள்ளனர்.
வாங்கியவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தால் அதற்க்கு நடிகர் திலகம் பொறுப்பேற்க முடியுமா ?
இவர்கள் அனைவரும் சமீப காலமாக..QUBE செய்யபோகிறேன் என்று வேறு படையெடுக்க உள்ளனர் ...இன்றைய நிலவரத்தில் நடிகர் திலகத்தின் 19 (படங்கள் கருப்பு வெள்ளை மற்றும் கலர் )QUBE முறையில் வெளியிடும் முயற்சியில் விநியோகத்தர்கள் உள்ளனர்.
என்னதான் புத்தம் புது படங்கள் தினமும் திரை அரங்கங்களை ஆக்ரமித்த வண்ணம் வந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் திலகம் படங்கள் என்றால் மிகுந்த உற்சாகத்துடன், உடனே தேதி குடுக்கவும் தயாராக உள்ளனர் என்பதை நாம் சமீப காலமாக பார்கின்ற ஒரு உண்மை.
குறைந்தபட்சம் 65 திரையரங்குகள் இன்றைய தேதியில் ஒரே சமயத்தில் புத்தம் புது படங்களுடன் நடிகர் திலகம் படங்களை வெளியிட திரை அரங்கு உரிமையாளர்கள் , விநியோகஸ்தர்கள் நான் நீ என்று போட்டி போடுவது மிகவும் உற்சாகமான செய்திமட்டும் அல்ல, பாக்ஸ் ஆபீஸ் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு எல்லா காலத்திலும் ஒரு ஆதாரம் !
BABU PADAM RERELESE VERY LESS NUMBER IF TIMES REMARK ABSILUTELY FALSE The so called mega movie never made any show not only in first run but also subsequent runs that too when compared to babu it has no show at all. every one knows very well.thanks kiran sir.
அன்புள்ள ரவிகிரண் - உங்கள் ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு --- இரண்டுமே திகட்டவில்லை - ஹைதராபாதில் இருந்தும் அதிகமாக பிரியாணியை சாப்பிட்டதில்லை - உங்கள் உவமானம் அருமை - இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள தமிழ் பதிவை பார்த்து மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன - நன்றி .
:):smokesmile: