-
17th February 2014, 12:56 AM
#1241
Senior Member
Devoted Hubber
கோவையில் நீதி படம் வெளியீட்டு புகைப்படங்கள் அருமை
நன்றி முரளி சார்
-
17th February 2014 12:56 AM
# ADS
Circuit advertisement
-
17th February 2014, 08:53 AM
#1242
Junior Member
Seasoned Hubber
நீதி
இந்த படம் தான் அவன் தான் மனிதன் படத்துக்கு பிறகு வர போகும் படம் என்பது இந்த திரியின் மூலமாக தெரிய வந்த உடன் வீட்டில் என் தாயிடம் தெரிவித்தேன் , என் தாயார் , மற்றும் தந்தை சிவாஜி ரசிகர்கள் (என் தந்தை MGR படங்களும் பார்க்க செய்வார் , ஆனால் எங்கள் அம்மா நோ chance )
நான் எல்லா படங்களும் பார்ப்பேன்
எனக்கு ஆரம்பம் முதலே நீதி படம் பிடிக்காது , காரணம் ராஜா என்ற ஸ்டைல் படம் பார்த்த பின் , வித விதமாக டிரஸ் போட்டு கொண்டு கலக்கிய சிவாஜி சார் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்பதே என் கேள்வி
என் சாய்ஸ் NT ராஜா படத்துக்கு பிறகு jewel thief என்ற படத்தில் அல்லது sacha joota என்ற படத்தில் நடித்து இருக்கலாம்
இப்படி பட்ட நான் நீதிக்கு போவதில்லை என்று சொன்ன உடன் என் அம்மா உடன் ஒரு argument , நான் பெரிய தப்பு செய்வது போலே என் தாய் argue செய்வதை பார்த்த உடன் எனக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லை
இந்த படத்தின் DVD வாங்கி பார் என்று பல வருடம் முன்பே என்னை நச்சரித்து வாங்க வைத்தவரும் அவரே
சரி படத்துக்கு போலாம் என்று முடிவு செய்து கிளம்பும் நேரத்தில் , என் தாய் ஒரு வேலை விஷயமாக வெளியே சென்று விட நான் மட்டும் சென்றேன்
ஒரு பக்கம் ஒரு புதிய படத்தை பார்க்க போகும் எண்ணம் , காரணம் கதை மட்டுமே ஞாபகம் இருந்தது , மற்றும் எதுவுமே நினைவில் இல்லை
திரை அரங்கை அடைந்த நேரம் மாலை 5.30 , அதற்குள் நம் நண்பர்கள் கலக்கி கொண்டு இருந்தார்கள் , ஆட்டம் , பட்டம் , மாலை , தரை தப்பட்டை , அவன் தான் மனிதன் படத்தின் ரிசல்ட் பற்றிய பேச்சு , அடுத்து வர போகும் படம் என்ன என்பதை பற்றிய சம்பாஷனை (அவர்களுக்கு பிடித்த படம் வர வேண்டும் என்ற ஆசை )
இப்படி பார்த்து கொண்டே டிக்கெட் எடுக்க மறந்து விட்டேன் , கடைசியாக ஒரு டிக்கெட் எடுத்து விட்டேன் , (நண்பர்கள் ROBOCOP சென்று விட்டார்கள் )
டிக்கெட் எடுத்த உடன் உள்ளே இருக்கும் போஸ்டர்கள் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்
மணி அடிக்க 5 நிமிடம் முன்பு , யானையை பார்த்து விட்டு உள்ளே சென்றேன் (எப்போ இந்த திரை அரங்கத்துக்கு சென்றாலும் இப்படி செய்வது என் வழக்கம் )
நம் இருக்கை கிழே என்பதனால் மெதுவாக சென்றேன்
உள்ளே திரும்பி பார்த்தேன் - சில இருக்கைகள் காலி (பாசமலர் போலே இல்லை ) அப்பாடா என்று அமர்தேன் . உள்ளே ஒரு vibrant atmosphere .
censor certificate தெரிந்தது
சிங்கம் வந்தது (titles )
நீதி
ஆஹா நம் தலைவர் என்ட்ரி - freeze ஷாட் என்ன applause
என் மனசாட்சி அமைதி ஆனது - படத்தை bias இல்லாமல் பாரு என்று சொன்னது
அப்புறம் என்ன நீதி பார்க்க ஆரம்பித்தேன் , பிரிண்ட் மோசம் இல்லை அதனால் நன்றாக பார்க்க முடிந்தது
நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற பாடல் response terrific
court காட்சி நன்றாக ரசிக்க பட்டது, அவர் கழுதை உடன் , பேசும் காட்சி , மனோரமா வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாக receive செய்ய பட்டது
இடைவேளை முடிந்து படம் intense mode க்கு சென்றது , நடிகர் திலகம் அந்த வீட்டின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும் காட்சிகளில் , அவர் வயலில் வேலை செய்யும் காட்சி , மற்றும் கல்யாணத்தை நடத்தி வைக்கும் காட்சியில் கிளாப்ஸ்
படம் முடிந்து படம் எப்படி என்ற கேள்வி வீட்டில் , என்ன பதில் சொல்ல
வெறுக்க வில்லை இந்த படத்தை என்பதை தவிர
1798514_650513091682109_1490361802_.jpg1655967_650515205015231_1200162798_n.jpg1922131_650515175015234_139699601_n.jpg
-
17th February 2014, 04:21 PM
#1243
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
அன்புள்ள ராகுல்ராம் - உங்கள் நீதி பதிவை படித்தேன் - நன்றாகவே எழுதி உள்ளீர்கள் - பாராட்டுக்கள் .
ஒரு விஷயத்தை கவனித்தீர்களா ?? இந்த திரியில் தான் நமக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - நம் தலைவரை எவ்வளுவு வேண்டுமானாலும் திட்டலாம் , படங்கள் சரியில்லை என்று தயிரியமாக சொல்லலாம் , நாம் சொல்வதை பக்கம் பக்கமாக எழுதி நியாயபடுத்தலாம் - நம் எல்லா உறவினர்களையும் இழுத்துகொண்டும் வரலாம் - யாரும் தடுக்க மாட்டார்கள் - எங்கோ ஒரு வரியில் நம் தலைவரை பற்றி ஒரு வார்த்தை தப்பி தவறி புகழ்ந்து எழுதி இருந்தால் அந்த சந்தோஷத்தில் திட்டினதை விட்டு விடுவார்கள் --- பரந்த மனப்பான்மைக்கு இந்த திரி ஒரு உயரிய எடுத்துக்காட்டு !!
ஆனால் இதுவே மற்ற எந்த திரியில் நடந்திருந்தாலும் , உங்கள் ID நீக்கபட்டிருக்கும் , நீங்கள் இருக்கும் திசையை நோக்கி , பாட்டில்கள் பறந்து வந்திருக்கும் , ஆசிட் தீர்ந்து போயிருக்கும் .
ஒரே மாதிரி நடிப்பவர்கள் “நடிகர்” என்ற சொல்லிற்கே களங்கம் விளைவிப்பவர்கள் - நம் தலைவர் அப்படி பட்டவர் அல்ல - ஒவ்வுறு படத்திலும் ஒரு புதியதை தருபவர் - Box officeஇல் out of box acting இல் ஒரு புதுமையை ஏர்படுத்தினவர் - ஒரு விநாடி யோசியுங்கள் - ராஜா மாதிரி நீதி அமைந்து இருந்தால் - படம் உன்னதமான வெற்றியை அடைந்து இருக்குமா - இப்படி ஒவ்வுறு மறு வெளியீட்டிலும் வெற்றி வாகை கிடைத்திருக்குமா -
---- ஒரே மாதிரியான முக பாவம் , கதை , மசாலாக்கள் , பல கதா நாயகிகள் - ஆனால் அதில் ஒருவருக்கு மட்டுமே ஹீரோவுடன் இணைய வாய்ப்பு கிடைக்கும் - மற்ற கதாநாயகிகள் , கதா நாயகனுடன் மேல் விழுந்து , புரண்டு , கற்பனைக்கு சற்றும் இடம் தராமல் கட்டி பிடித்து - எல்லாம் முடிந்தபின் , "அண்ணா" என்று சொல்லவேண்டும் - ஹீரோ "தங்கச்சி" என்று சொல்லி மீண்டும் ஆசை தீர கட்டி பிடிப்பார் - இவர்கள் எங்கே ?? நம் தலைவர் எங்கே ?? - ஒரே மாதிரியாக அவர் நடித்திருந்தால் அவருடைய கடைசி படம் - பராசக்தி 288 என்ற பெயருடன் வெளி வந்திருக்கும் ....
"தர்மம் எங்கே ?" என்ற படம் சற்றே "சிவந்தமண்" சாயலில் இருந்ததால் அடைய வேண்டிய வெற்றியை அடைய முடியவில்லை - அந்த படமும் வெற்றி அடைந்து இருந்தால் , நினைத்து பாருங்கள் - 1972 - guinness book of world records இல் முதல் இடம் பெற்றிருக்கும்
உங்களுக்கு நீதி பிடித்துத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை - ஒரு படத்தை பிடிப்பதும் , பிடிக்காததும் அவர் அவர்களின் சொந்த விருப்பம் - ஆனால் என்ன இல்லை இந்த படத்தில் – “வெறுக்க வில்லை “ என்று மட்டும் சொல்ல ???
---- ஒரு லாரி டிரைவர் , சந்தர்ப்ப வசத்தால் கொலைகாரனாக ஆகிவிடுகிறார் - அந்த கொலைகாரனின் குடும்பமே அவனை வெறுக்கின்றது - ஒவ்வாருவரையும் , தன் அன்பால் , தியாகத்தால் தன் வசம் ஈர்க்கிறான் - அந்த வீட்டு தலைவியை தவிர - நினைத்திருந்தால் பணத்தை கட்டிவிட்டு , அவன் தன் வழியே போயிருக்கலாம் - ஆனால் அவன் அன்பை நாடினான் - அதனால் எல்லோரையும் வெல்ல முடியும் என்று நம்பினான் - அவன் நம்பிக்கை அவனை கை விட வில்லை - எவள்ளவு உயர்ந்த கருத்துக்கள் - புத்தன் , ஏசு , காந்தி சொன்னதை போல் -------------
நாம் நம் தலைவரையும் , அவரது திறமையும் சரியாக இன்னும் புரிந்து கொள்ள வில்லை - உண்மையான ஒளிவிளக்கு அவரது படங்கள் - நிஜமான கலங்கரை விளக்கம் அவருடைய பட கதைகள் - மொத்தத்தில் ஒரு விடிவெள்ளி - அவரை புரிந்து கொண்டால் - நாம் இந்த திரியில் உழைக்கவும் , அவரை பற்றி எழுதவும் எவ்வளவு அதிர்ஷ்ட்டம் செய்துள்ளோம் என்று புரியும் - உங்களை குறை சொல்லவில்லை - இன்னும் சற்று அவரையும் , அவர் படத்தையும் , நடிப்பின் சாகசங்களையும் புரிந்துகொள்ளுங்கள் என்றே உரிமையுடன் உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன் ரவி

-
17th February 2014, 04:29 PM
#1244
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
நீதி
படம் முடிந்து படம் எப்படி என்ற கேள்வி வீட்டில் , என்ன பதில் சொல்ல
வெறுக்க வில்லை இந்த படத்தை என்பதை தவிர
டியர் ராகுல்ராம்,
திரு.ரவி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி உண்மையிலேயே "என்ன இல்லை இந்த படத்தில் – “வெறுக்க வில்லை “ என்று மட்டும் சொல்ல ??? " என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், தங்களின் தாயார் இந்தப் படத்தைப் பார் என்று சொன்னதில்தான் நடிகர்திலகத்தின், நீதியின் வெற்றி இருக்கிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2014, 05:20 PM
#1245
Junior Member
Veteran Hubber
JILLA - A BY-PRODUCT OF THANGAPADHAKKAM ? - MEDIA SPECULATES !
http://247latest.com/vijay-as-cop-mo...nga-pathakkam/
-
17th February 2014, 05:31 PM
#1246
Junior Member
Seasoned Hubber
" எதிர் பார்ப்பை " படித்த , பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு ஒரு பெரிய தண்டனை தரலாம் என்று நினைக்கிறேன் - அதிகமாக பேசபடாத , அலச படாத ஆனால் அருமையான , அற்புதமான நடிப்பையும் , பாடல்களையும் கொண்டுள்ள மிக சிறந்த நான்கு படங்களை என் கண்ணோட்டத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன் - நீங்கள் மனமார திட்டும் வரை ------
கோபாலின் சுனாமி அலைகள் வேகமாக வரும் முன் என் பதிவுகளை முடித்து கொள்ள முயற்சி செய்கிறேன்
முதலில் நாம் "மூன்று தெய்வங்களை" சந்திக்க போகிறோம் , நம் உண்மையான பாசத்தினால் , பக்தியினால் அவர்களை " பேசும் தெய்வம் " ஆக்கி - அவர்களே நம்மை என்றும் " காக்கும் தெய்வமாக "இருந்து இதுதான் நமது "ப்ராப்தம்" என்று மகிழ வைக்க போகிறார்கள் -
நீண்ட பதிவுகள் - கண்டிப்பாக நெகிழ வைக்கும் பதிவுகளாக இருக்கும் - நீங்கள் ஒரு பதிவை பாராட்டுவதால் எவ்வளவு தொல்லைகள் பார்த்தீர்களா - ஒரு பெரிய தண்டனைக்கு நீங்கள் எல்லோரும் உள்ளாகிரீர்கள் !!!!!!!
அன்புடன்
ரவி
-
17th February 2014, 06:32 PM
#1247
Junior Member
Junior Hubber
My Dear Beloved N.T. Fans,
I have been out this form for more than an year. Reason is Gauravam. This is the impact what N.T can do in everyone life. Today My results were announced and i have completed my Graduation in Law. And will be an profession as Advocate Shortly. Further I'm pursuing my Master Degree in Law.
I dedicate this Professional Degree to our God Nadigar Thilgam who was an Sole Inspiration and My Beloved Fans!. I want to reciprocate my gratitude to our Legend only by completing this Degree. Hence i was waiting for this day.
Now again i'm back in this Golden Thread to contribute.
My heartfelt thanks to all our N.T. fans who wished my success.
JAIHIND
M.Gnanaguruswamy
-
17th February 2014, 07:14 PM
#1248
Junior Member
Seasoned Hubber
-
17th February 2014, 07:21 PM
#1249
Junior Member
Seasoned Hubber
Welcome and hearty congratulations - you exhibited not only sheer perseverance but also a commitment to complete your degree - NT remains an inspiration to many - a few acknowledges , the rest shy away in confessing that - all the best and looking forward to strength this thread lawfully and legitimately - all the best

-
17th February 2014, 09:00 PM
#1250
Junior Member
Veteran Hubber
எனது சகோதரரை இழந்தேன் !
எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது அந்த நாள் - தொடர்ந்து இரண்டு நாள் கூட்டத்தில் வரிசையில் நின்றுதான் டிக்கெட் கிடைத்தது - அது பராசக்தி திரைப்படம் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படம். அவருடைய பிரமாதமான ஒரு நடிப்பு ...பிரமிக்கும்படியான அவரது நடிப்பை பற்றிதான் அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் பேச்சு...! எங்கு பார்த்தாலும் சிவாஜி craze தான் .
அப்போது நான் நரசு ஸ்டுடியோவில் தயாரிப்பு உதவியாளனாக பணியாற்றிய நேரம் . என் முதலாளி சிவாஜியை தன்னுடைய துளிவிஷம் படத்திற்கு புக் செய்த விஷயம் கேள்விப்பட்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! பராசக்தியில் அவரை பார்த்த நாளிலிருந்து அவரை ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்ற இனம் புரியாத ஒரு ஆவல் என்னில் ஆட்கொண்டிருந்தது .
சிவாஜி ஸ்டுடியோவிற்குள் வந்தவுடன் நரசு எங்களை அவரிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தவிஷயம் அவர் ஒரு திரை நட்சத்திரமாகவே நடந்துகொள்ளவில்லை. ஸ்டுடியோவில் வந்த பிறகு எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்ததை அறிந்து, எனக்கும் படத்தில் ஒரு நல்ல வேஷம் கொடுக்க சொன்னார். அப்படிதான் நான் சினிமாவிற்கு அறிமுகமானேன்.
சிவாஜி அவர்கள் என்னதான் பிரபலமான நடிகராக கிட்டத்தட்ட எல்லா தயாரிப்பு நிறுவனங்களுடனும் நாயகனாக அப்போது நடித்துகொண்டிருந்தாலும், அனைவரிடமும் மிகுந்த நட்புடன் பழகுவார்.
என் வாழ்கையில் நான் சிறிது சாதித்திருக்கிறேன் என்றால் அதற்க்கு இந்த மூவருக்குதான் நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். 1) சுப்பராமன் (என்னை பள்ளியில் நாடகத்தில் நடிப்பு சொல்லி நடிக்க வைத்தவர் ) 2) திரு.ஜெமினி கணேசன் ( என்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தியவர். கோட் பாதர் என்று கூட சொல்ல்வேன் ) 3) திரு. சிவாஜி கணேசன்
1954 முதல் 1960 வரை எனக்கும் திரு சிவாஜிக்கும் சிறிது தொடர்பில்லாமல் இருந்தது. 1960இல் சிவாஜிக்கு சஹோதரனாக திரு ஜெமினி நடிப்பதாக இருந்தது படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. அவர் என்னை அந்த கதாபாத்திரம் செய்ய சொன்னார். பிறகு அவர் என்னை சிவாஜியிடம் (மீண்டும்) அறிமுகம் செய்து வைக்கையில், " என்னமோ எனக்கு பாலாஜியை தெரியாதது போல அறிமுகம் செய்து வைக்கிறாயே. எனக்கு நல்லா தெரியுமே அவன " என்றார்.
என்னுடையது மிக பெரிய வேடம் அந்த படத்தில். தமிழகம் முழுவதும் படித்தால் மட்டும் போதுமா மிக பெரிய வெற்றி பெற்றது. அதற்க்கு பிறகு, சிவாஜி, திரைப்படத்தில் இரெண்டாவது கதாநாயகன் பாத்திரங்களுக்கு என்னை சிபாரிசு செய்ய தொடங்கினார் .
எங்களுடைய நட்பு அப்படி தொடங்கி மென் மேலும் வளர்ந்தது. நான் திரைப்படம் தயாரிக்கும்போது அந்த நட்பு மேலும் பலம் வாய்ந்ததாக அமைந்தது.
1965இல் திரு ஜெமினி அவர்களை வைத்து முதல் படம் தயாரித்தேன். எனது நன்றியை அவருக்கு உரிதாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தயாரித்த திரைப்படம் அது.
என்னுடைய இரெண்டாவது படம் தங்கை. அதில் எப்படி சிவாஜியை நடிக்க அணுகினேன் தெரியுமா ? ஒரு நாள் நான் ஜெமினி ஸ்டுடியோவில் அவரை சந்தித்தேன்...பிறகு " அண்ணே நான் ஒரு படம் தயாரிக்கரேன். அதில் நீங்க நடிக்கணும் என்றேன்.
அதற்க்கு அவர்...போடா..நீயாவது தயாரிகரதாவது..தமாஷ் பண்ணாதே ..என்றார். அவர் அப்போது நான் கூறியதை நம்பவில்லை. பிறகு நான் உறுதியான ஒரு முடிவுடன் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டு, என்னையே உற்று பார்த்தார். பிறகு " நல்ல கதை, இயக்குனரை தயார் செய்..நான் படம் செய்கிறேன் உனக்கு என்றார்.
இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்..தங்கை சண்டைகாட்சிகள் கொண்ட படம். அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் மிகசிறந்த ஒரு குணசித்திர நாயகனாக இருந்தார் . அந்த சமயத்தில் M G ராமசந்திரன் அவர்கள் தான் சண்டைகாட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.
சிவாஜிக்கு சண்டைகாட்சிகள் உள்ளதால் சிறிது சந்தேகமாக இருந்தது, இது தனக்குள்ள இமேஜிற்கு சரியாக வருமா என்று . மக்கள் இதை விரும்பாமல் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் பாதிக்கபடுவார்களே என்று கருதினார்.
ஆனால் நான் விடவில்லை அவரை, அவருக்கு புதிய ஒரு இமேஜ் இதன் மூலம் நிச்சயம் உருவாகும் என்று உறுதியளித்தேன் ...இருந்தாலும் பாதி மனதுடன் தான் நான் கூறியதை ஒத்துகொண்டார். அவருக்கு, மக்கள் நிச்சயம் தன்னை ஒரு சண்டை போட தெரிந்த நாயகனாக ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று பலமாக நம்பினார்.
அதிர்ஷ்டவசமாக தங்கை மிக பெரிய வெற்றி பெற்றது. தங்கை வரும் வரை MGR மட்டுமே சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல் பெற்றார். தங்கைக்கு பிறகு சிவாஜிக்கும் சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல்கள் பாராட்டுக்கள் கிடைத்தன. அதற்க்கு பிறகு அவரது படங்களில் ஒரு சண்டைகாட்சியாவது இருக்கும்.
அதியற்புதம் நிறைந்த நடிகர் அவர். ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் காட்சி நன்றாக வந்துள்ளதா என்று கேட்பார். அவர் இருக்கும் நிலையில் அவர் அந்த கேள்வி கேட்கவேண்டிய அவசியமே இல்லை அதுவும் நடிப்பை பொறுத்த வரையில். இருந்தாலும் அவர் கேட்பார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உத்தரவாதம் அவருக்கு மிகவும் அவசியம்.
சில சமயங்களில் நான் இது சரியில்லை என்று கூறியதுண்டு. இன்னொரு டேக் போகலாம் என்பேன். உடனே அவர் "பாலாஜிக்கு இந்த ஷாட் பிடிக்கவில்லை . நான் திரும்பவும் நடிக்கிறேன், எடுங்கள் " என்பார். சரியாக எதுவும் செய்யவேண்டும் என்பது அவருக்கு மிக முக்கியம்..........
தயாரிப்பாளர் பாலாஜியின் நினைவலைகள் தொடரும்...!
Bookmarks