Originally Posted by
venkkiram
நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.