-
9th August 2014, 04:58 AM
#3241
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.
வெங்கி ராம்,
என்னை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு ஏற்பில்லாமல் போகலாம். ஆனால் என் மனதுக்கு நேர்மையானவை."politically correct " என்று நான் நினைத்து எதையும் செய்வதில்லை. அது உண்டாக்கும் எதிர் விளைவுகளால், பிரபலமாகும் அரிப்பும் எனக்கில்லை.
நீங்கள் இளைய ராஜா திரியில் நான் கூறியவற்றை தவறாக quote செய்கிறீர்கள்.வெறும் song composition என்று பார்த்தால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி (இருவரும் இணைந்து மட்டுமே), ரகுமான்,இளைய ராஜா என்று வரிசை படுத்தினாலும், Re -Recording ,Back Ground music ,Harmony இவற்றில் இளைய ராஜாவை முதல்வராக சொல்லியிருந்ததை எப்படி புறக்கணிக்கிறீர்கள்?நான் படம் எடுத்தால் ,எனது தேர்வு இளைய ராஜாவே என்று சொன்னதை ,எப்படி உதாசீனம் செய்கிறீர்கள்?
என்னதான் சொன்னாலும் ,குரலில் இனிமையோ,வித்தியாச தன்மையோ இல்லாமல் இருக்கும் ஜானகி என்னை கவரவே இல்லை.இவர் வலிந்து பாடுவதில் ,ஒரு strain இருப்பது போல ,உணர்ச்சிகளில் ஒரு authenticity இருக்காது.ஆனால் ஜானகி பாடிய சிங்கார வேலனே, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி ,தூக்கம் உன் கண்களை போன்ற பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும்.
Last edited by Gopal.s; 9th August 2014 at 05:06 AM.
-
9th August 2014 04:58 AM
# ADS
Circuit advertisement
-
9th August 2014, 05:02 AM
#3242
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
ஆனந்த விகடன் என்ன இன்னும் பல பத்திரிக்கைகளில் சுசீலாவையும் சிலாகித்து நிறைய நிறைய எழுதியிருக்கிறார்கள் அதை படிக்காமல் கண்ணை நீங்கள் மூடிக்கொண்டிருக்கலாம் அத்னால அதுவெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது. கோபால் அவரது கருத்துக்களை சொல்கிறார். நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் என்று எப்படி கேட்க முடியும். இது என் கருத்து என்று உங்கள் பதிவை வைத்தால் போதுமே ... “உங்கள் இந்த ஒரு பாட்டு போதும் வேறு எந்த பாட்டும் பாடவில்லை என்றாலும் அவர் எனக்கு சிறந்த பாடகி” என்று நீங்கள் சொன்னது சாதாரண தொனியா.. .. நான் யாருக்கும் வக்காளத்து வாங்கி கொண்டு வரவில்லை .. உங்கள் ரசனை உங்களுடன் எங்கள் ரசனை எங்கள் உரிமை .. ராஜா ரசிகர்கள் எம்.எஸ்.வியின் பாட்டை கேட்காமல் ராஜாவே தெய்வம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. அவர்களை ஒருவர் ஒருவராய் பார்த்து புரிய வைக்கவா முடியும்... .. இந்த திரி இனிதே தொடரவேண்டு .. இத்துடன் இது சம்பந்தபட்ட என் கருத்துக்களை நிறுத்திக்கொள்கிறேன். என்னை பொருத்தவரை மற்றவர்கள் பாடகிகள் அவ்வளவுதான்.. சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே ..
ஆனந்தவிகடன் என நான் பதிவிடும்போது இந்த இமேஜைத் தான் பதிய நினைத்தேன். மறந்தே விட்டேன்.

"சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே .." தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள். இதுபோன்ற அபிப்ராய ஒற்றுமைதான் திரு கோபால் அவர்களுடன் நான் புரியும் எதிர்வினைக்கு உங்களை "உள்ளேன் ஐயா!" போட வைத்தது என எடுத்துக் கொள்கிறேன். "கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு" என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்.
Last edited by venkkiram; 9th August 2014 at 05:04 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th August 2014, 05:11 AM
#3243
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
ஆனந்தவிகடன் என நான் பதிவிடும்போது இந்த இமேஜைத் தான் பதிய நினைத்தேன். மறந்தே விட்டேன்.
"
சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே .." தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள். இதுபோன்ற அபிப்ராய ஒற்றுமைதான் திரு கோபால் அவர்களுடன் நான் புரியும் எதிர்வினைக்கு உங்களை "உள்ளேன் ஐயா!" போட வைத்தது என எடுத்துக் கொள்கிறேன். "கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு" என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்.
இது என்ன வம்பா போயிற்று. இருவரது கருத்துக்கள் ஒன்று படக்கூடாது என்று ஒன்றுமில்லையே.. உங்களுக்கு நான் கோபால் சாரின் கருத்தை வழிமொழிந்ததில் என்ன அவ்வளவு வருத்தம் .. நீங்கள் சொல்வதை வழிமொழிந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பீர்களா
உணர்ச்சிகளின் நாயகியாகவே இருக்கட்டுமே யார் வேண்டாம் என்றார்கள் .. நீங்கள் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்திருக்கிறீர்கள் என்பது உண்மை தானே.. எப்பொழுதும் வராதவர் எதிர்வாதம் மட்டும் செய்ய வந்தால் அதை என்ன சொல்வது.. இனி பேசி பயனில்லை .. உங்கள் கருத்து உங்களுக்கு
எங்கள் கருத்து ...
மது அண்ணா 3 நாட்கள் முன்னாடி தான் சொன்னீர்கள் திரி அழகாக போய்க்கொண்டிருக்கிறது என்று ,
அதற்குள் திருஷ்டி பட்டு விட்டது ....
-
9th August 2014, 05:19 AM
#3244
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
நீங்கள் சொல்வதை வழிமொழிந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பீர்களா
இல்லையே! ஒத்த கருத்தை பதிவிட்ருந்த திரு ராகவேந்தரைநான் ஒன்றும் வானுக்கும் பூமிக்கும் குதித்து புகழ வில்லையே! அணி சேர்த்துதான் ஒரு மிகப்பெரிய ஆளுமைக்காக வக்காலத்து வாங்கனும் என்ற நிலையை நான் என்றைக்குமே எடுத்ததில்லை. முன்பு p_rஐக் கூட வாங்க என அழைத்தது இதையொட்டிய விவாதம் இன்னும் ஆரோக்யமான வழியில் செல்லலாமே என்ற விருப்பத்தினால்தான்.
"எப்பொழுதும் வராதவர் எதிர்வாதம் மட்டும் செய்ய வந்தால் அதை என்ன சொல்வது.." - அதைக் கூட இனி செய்யப் போவதில்லை. முன்பே சொன்னதுபோல அதற்கான இடம் இதுவல்ல என்றே கருதுகிறேன்! தாராளமா நடத்துங்க கச்சேரியை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th August 2014, 05:28 AM
#3245
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
இல்லையே! ஒத்த கருத்தை பதிவிட்ருந்த திரு ராகவேந்தரைநான் ஒன்றும் வானுக்கும் பூமிக்கும் குதித்து புகழ வில்லையே! அணி சேர்த்துதான் ஒரு மிகப்பெரிய ஆளுமைக்காக வக்காலத்து வாங்கனும் என்ற நிலையை நான் என்றைக்குமே எடுத்ததில்லை. முன்பு p_rஐக் கூட வாங்க என அழைத்தது இதையொட்டிய விவாதம் இன்னும் ஆரோக்யமான வழியில் செல்லலாமே என்ற விருப்பத்தினால்தான்.
"எப்பொழுதும் வராதவர் எதிர்வாதம் மட்டும் செய்ய வந்தால் அதை என்ன சொல்வது.." - அதைக் கூட இனி செய்யப் போவதில்லை. முன்பே சொன்னதுபோல அதற்கான இடம் இதுவல்ல என்றே கருதுகிறேன்! தாராளமா நடத்துங்க கச்சேரியை.
யாரும் அணி சேரவும் இல்லை சேர வேண்டிய அவசியமும் இல்லை .. ராகவ் ஜி உங்களை ஒத்த கருத்தை தெரிவித்திருந்தால் நீங்கள் புகழ்ந்திருக்க வேண்டியதுதானே .. நீங்களே ஒன்றை யூகித்து கொண்டு நடத்துங்கள் கச்சேரியை என்றால் .. நாங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்...
-
9th August 2014, 06:15 AM
#3246
Junior Member
Newbie Hubber
Venkkiram,
Pl.Let us not bring in politics and grouping. you would have noticed that i voiced my true opinions even on my idols when it comes to dissection.I am not in any group. I am among friends who agree with my views sometimes and differ with me at times.That's it.
Infact ,I never fail to follow your postings as I respect your views and writings. You are one of the few with powerful writing skills with appropriate expressions on your views.
Last edited by Gopal.s; 9th August 2014 at 06:38 AM.
-
9th August 2014, 06:19 AM
#3247
Junior Member
Newbie Hubber
ஜானகியின் பாடல்களில் எனக்கு மிக பிடித்த அன்னையும் பிதாவும் படத்தில் 1970 இல் என் பிரிய அழகி வாணிஸ்ரீ, மெல்லிசை மன்னர்,கவியரசர் இணைந்த அழகிய பாடல்.சரணம் ,பல்லவி இணையும் போது ஹ் ஹா,ஹ் ஹா,ஹ் ஹா,ஹ் ஹா,ஹா ஹா ஹா ஹா கேட்டு திளையுங்கள்.
ஜானகியின் சௌகரியமான pitch range இல் பயணிக்கும் மோதிரம் போட்டது .
நண்பர் வெங்கி ராமுக்காக.
http://raretfm.mayyam.com/stream/pow11/mothiram_ap.rm
-
9th August 2014, 06:27 AM
#3248
Senior Member
Seasoned Hubber
கோபால் ஜி
அதே அன்னையும் பிதாவுமில் இசையரசியின் அருமையான பாடல்
இறைவா உனக்கொரு கேள்வி
-
9th August 2014, 07:15 AM
#3249
Senior Member
Seasoned Hubber
பாரதி ரசிகர்களுக்காக
இதோ ரவி -பாரதி இணையில்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th August 2014, 08:14 AM
#3250
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks