http://i67.tinypic.com/2utrtll.jpg
Printable View
மக்கள் திலகம்’ MGR
1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!
ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
courtesy-ஜியாவுத்தீன்.
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.
அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!
திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.
தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.
மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.
எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.
எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
courtesy-ஜியாவுத்தீன்.
ஜியாவுத்தீன்
மக்கள் திலகத்தைப் பற்றிய அருமையான உண்மையான பதிவை எங்களுக்காக தந்தமைக்கு esvee அவர்களுக்கு நன்றிகள்
மேலும்
பணத்துக்காக எப்படி வேணுமானாலும் நடிக்கலாம்
மக்கள் என்ன ஆனால் என்ன என்று நடிக்கும் நடித்த நடிகர்களிடையே
தமிழர் பண்பாடு கொண்டு தன ரசிகர்கள் மட்டுமல்ல எல்லா மக்களும்
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையையே
திரையில் ஒளிர இட்ட எம்
ஒளிவிளக்கு , தமிழ் தாயின் தங்கப் புதல்வன்
நடிப்புப் பேரரசு மக்கள் திலகம் தவிர வேறு யார்
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் சார்
தங்களின் கருத்து மிகவும் சரியே. மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி ரசிகர்கள் கூறிய விதம் மனதை மகிழ்விக்கிறது .தொடர்ந்து உங்களின் பதிவுகளை திரியில் எதிர்பார்க்கிறேன் .
" நான் ஆணையிட்டால்..."
பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.
தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.
இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.
கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-
http://s15.postimg.org/r66pr5x4r/IMG...123_WA0022.jpg
Fwd by Mr.Saravanan - Madurai
1972 ல் இருந்து எம்ஜிஆரின் அரசியல், சினிமா வாழ்க்கையில் புதிய கணக்கு துவங்கியது. ஏகப்பட்ட எதிர்ப்புகளை எதிர்நோக்கி பயணமானார். ஒருபுறம் சிவாஜி- கண்ணதாசன் கூட்டணியையும் மறுபுறம் அதை விட அதிக மடங்கு மு.க.முத்து என்ற முகமூடியில் கருணாநிதியையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கனவே உத்திகளை வகுப்பதில் கெட்டிக்காரரான எம்ஜிஆர், தனது சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி களமிறங்கினார். வாலியை தவிர புலமைபித்தன், நா.காமராசன், முத்துலிங்கம் போன்ற புதிய இளம் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி தனக்கு பயன்படுத்திக் கொண்டார்.
எம்.ஜி.ஆர் - முதலமைச்சர் மு.க., மோதல் பற்றியெறிந்துக் கொண்டிருந்த போது மிகுந்த பரபரப்புக்கிடையே 1973ல் ரிலீஸானது உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுக்க ஆளும் கட்சி வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியது.
உ.சு.வா., மதுரையில் ரிலீஸானால் தான் சேலை கட்டிக் கொள்வதாக திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் சவால் விட்டு கடைசியில் தோற்றுப் போனதும், படம் ரிலீஸ் அன்று தியேட்டரில் சேலையை ரசிகர்கள் தொங்கவிட்டு அவரை சீண்டியதெல்லாம் தனியான சுவாரஸ்ய விஷயங்கள்.
அதற்கிடையில் சென்னையில் போஸ்டர்களுக்கான வரியை திமுக வசமிருந்த மாநகராட்சி திடீரென உயர்த்தியது. கடும் மின்வெட்டு வேறு. எதற்குமே அசராமல், சென்னையில் 3 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் எம்.ஜி.ஆர். இங்கு படத்தின் முன்பதிவுக்கு சென்னை அண்ணாசாலையில் ரசிகர்கள் நின்ற கியூ வரிசை அதற்கு முன் எந்த ஒரு படத்துக்கும் காணாத சாதனையாகும்.
வெளியூர்களுக்கு செல்லும் பிலிம் சுருள்களை கைப்பற்றி கொளுத்த விஷமிகள் சதித்
திட்டம் தீட்டியிருப்பதாக தகவலறிந்தார் எம்ஜிஆர். எனவே பிலிம் சுருள்களை சில
பெட்டிகளிலும், செங்கற்களை சில பெட்டிகளிலும் வைத்து கார், வேன் என்று மாறி மாறி அனுப்பி ஜெயித்தார்.
இப்படி பல நெருக்கடிகளை தாண்டி 25 வாரங்களையும் கடந்து ஓடி சரித்திரம் படைத்தது உ.சு.வா. எம்ஜிஆருக்கு தீவிர ரசிகர்கள் ஏராளமாக இருந்த மலேஷியாவிலும் பல நாட்கள் 'ஹவுஸ்·புல்'லாக ஓடி சாதனைப் படைத்தான் இந்த ' வாலிபன் '.
இத்தனைக்கும் இது அரசியல் நெடி இல்லாத படம் தான். ஆனால், திடீரென ஏற்பட்ட அரசியல் பரபரப்பு மாற்றத்தால் , அதிமுக நிறத்துடன் வெளியானது. 1958ல் நாடோடி மன்னனாக திமுக கொடியுடன் அறிமுகமான ' எம்ஜியார் பிக்ச்சர்ஸ் ', இந்த உ.சு.வாலிபனில் அதிமுக கொடியாக மாறியது. படத்திலும் உணர்ச்சி பொங்கும் டைட்டில் பாடலை கூடுதலாக சேர்த்தார் எம்.ஜி.ஆர். அது, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் முழங்கிய,
" நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் "
எனத் தொடங்கும் பாடல்.
" நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாதக் கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி;
அந்த இல்லாமை நீங்கி
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடுமெனும் கதை மாறும் "
அப்போதிருந்து தனது கட்சித் தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு , பொதுமக்களுக்கு எம்ஜிஆர் சொல்லும் செய்திகள், அரசுக்கு எதிரான கணைகள் திரைப்படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் 1973 மே மாதம் 20ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. கட்சித் தொடங்கி சுமார் ஆறே மாதங்களில் இந்த தேர்தலை முதன்முறையாக அதிமுக சந்தித்தது. மாயத்தேவர் என்பவரை எம்ஜிஆர்
நிறுத்தினார். சினிமாக் கூத்தாடியின் கட்சி, மலையாளி என்றெல்லாம் திமுக எதிர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.
மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, மத்தியில் ஆட்சிப்பீடத்தில் இருந்த இ.காங்கிரஸ், மக்களின் மதிப்பு மரியாதைப் பெற்றிருந்த காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் ( ஸ்தாபன காங்கிரஸ் ) என எல்லாவற்றையும் மண்ணை கவ்வ வைத்து திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
எம்ஜிஆர், தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை அடையாளம் காட்டியது இந்த திண்டுக்கல் தேர்தல். 'சினிமா மேக்கப் தலைவன்', 'அரசியல் விதூஷகன்' என்றெல்லாம் தன்னை இளக்காரம் பேசிய அரசியல் எதிரிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர்.
பின்னர் 1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-
சினிமா- அரசியல் - தனிவாழ்க்கை ஆகிய மூன்றுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து பிரித்து பார்க்க முடியாதபடிக்கு அமைந்து போனது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்.
ஒரு படத்தில் ஒரு நடிகன் சொல்லும் கருத்துகள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் சாதாரண வசனங்களாக கருதாமல், திரைக்கு வெளியே தனிமனிதனாக அந்த நடிகனே அக்கறையுடன் தங்களுக்கு தெரிவிக்கும் நற்செய்தி அல்லது போதனையாக பாமர ஜனங்கள் எடுத்துக் கொண்டு கொண்டாடியது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான். இது உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் கூட எந்த ஒரு சினிமா நடிகருக்கும் அமையாத தனிச் சிறப்பு என அடித்து சொல்லலாம்.
எம்.ஜி.ஆரின் சினிமாவும் அரசியலுமே பெரும்பாலும் மு.கருணாநிதியுடன் சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது. இவர்கள் இருவரின் இடையேயான நட்பு - பகையே தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரமித்து வந்ததெனலாம்.
எம்.ஜி.ராமச்சந்திரனின் பயாஸ்கோப் பாலிடிக்ஸை எடுத்துக் கொண்டால் அதை, இரண்டு முக்கிய காலகட்டங்களாக வகைப்படுத்தலாம் ; கி.மு- கி.பி போல.
அவை: 1) 1972க்கு முன் - 2) 1972க்கு பின்.
இதில் முதலாவது, 1947 முதல் 72 வரை கலைஞர் கருணாநிதியுடன் கூடிக்குலாவிய காலகட்டம். அடுத்தது, கடுமையாக மோதிக் கொண்ட 1972-77 வரையிலான காலகட்டம்.
ராஜகுமாரி மூலம் 1947ல் அஸ்திவாரம் போடப்பட்ட எம்.ஜி.ஆர்.- மு.க. நட்பு, அடுத்து 1950ல் வெளியான மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களின் மூலமாக வலுப்பெற்றது.
தமிழ் டாக்கியில் ராஜாராணி கதைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. வஞ்சகமான மந்திரி அல்லது ராஜகுரு ; தலையாட்டி ராஜா; அவனுக்கு அழகான, சதிகார வைப்பாட்டி; பதிவிரதையான மகாராணி; அவள் வாயும் வயிறுமாக அநியாயமாக காட்டுக்கு விரட்டப்படுவாள்; அங்கு அவளுக்குப் பிறக்கும் மகன் சத்தியசீலனாக இருப்பான்; புரட்சி வீரனாகி ஏழை அப்பாவி ஜனங்களுக்காக அரண்மனைக்காரர்களிடம் கம்யூனிசம் பேசுவான் ; கெட்டிக்காரனாய் வாள் சண்டையெல்லாம் போடுவான்; கிளைமாக்ஸில் கெட்ட மந்திரி அல்லது ராஜகுரு, மேனாமினுக்கி வைப்பாட்டி ஆகியோர் பாவத்தின் சம்பளத்தை பெறுவார்கள்; அசட்டு ராஜாவும் மனம் திருந்தி மனைவி, மகனை ஏற்பான்.
இதுவே அப்போதைய ராஜாராணி படங்களின் அடிப்படைக் கதைக் கரு. இதை மையமாக வைத்து கொண்டு அதையும் இதையும் மாற்றி மாற்றிப் போட்டு கதை பண்ணுவார்கள். இதில் திராவிட இயக்கக்காரர்கள் படமென்றாலோ உச்சந்தலை குடுமியோடு ராஜகுரு வந்து சமயச் சடங்குகள், கடவுள்கள் பெயரை சொல்லி வில்லத்தனம் செய்வார். கிளைமாக்ஸில் இளவரசனாக ஏற்கப்படும் நாயகன், "முடியாட்சி முடிந்தது. இனி மக்களாட்சி தான்" என்று டயலாக் சொல்லி முடித்து வைப்பான். (உதாரணம்- 'மருதநாட்டு இளவரசி')
திராவிட இயக்கத்தை சேர்ந்த ஆசைத்தம்பி வசனத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து 1951ல் வெளியான 'சர்வாதிகாரி' படத்தில்,
" தர்மத்துக்காகவும், நீதிக்காகவும் போராட
இந்த வாள், என்றைக்கும் தயங்காது"
- என்று எம்ஜிஆர் வீரமாக வசனம் பேசுவார். ஆசைத்தம்பியின் திராவிட இயக்கப் பேனா இங்கு வாளாக குறிப்பிட்டது திராவிட இயக்கத்தை என்று அந்த இயக்கத்தாரால் உணரப்பட்டு ரசிக்கப்பட்டது.
மேலும் அதே படத்தில்,
" பச்சைத் தண்ணீருக்காக பரிதவிப்பவர்கள்
ஏராளம் அங்கே ; பழரசம் இங்கே.
கந்தல் துணி கூட இல்லை அங்கே
பட்டு பீதாம்பரம் ஜொலிக்கிறது இங்கே.."
- என்று அரண்மனைவாசியான தனது காதலியிடம் கம்யூனிசம் பேசுவார் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
அதே ஆண்டு வந்தான் ' கரிகாலன் ' ; ஏழைப் பங்காளன் இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்டு எம்.ஜி.ராமச்சந்திரனை பின்னாளில் ' புரட்சி நடிகர்' ஆக்கிடுவதற்காக.
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-